Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள குஞ்சுக்கால் வயல்வெளிகளை ஆக்கிரமித்து, தென் இலங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினால் உப்பளம் அமைக்கும் பணி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை அப்பகுதி விவசாய நிலங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதைக் குறிப்பிட்டு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த முயற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு வரும் வயல்வெளிகள் உப்பளமாக மாற்றப்படுமானால், எதிர்காலத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் உவர்நிலங்களாக மாறும் அபாயம் இருப்பதாகக் கவலை வெளியிட்டனர்.

மேலும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

https://web.facebook.com/share/v/19Qg4Wn8oP/

விவசாய நிலத்தில் உப்பளம் அமைக்க அரசு எவ்வாறு அனுமதி கொடுத்தது?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாயில் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சியை தடுக்குமாறு ரவிகரன் எம்.பி அனுப்பியுள்ள கடிதத்திற்கு நடவடிக்கை மேற்கொள்க ; மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகம் வலியுறுத்து

28 Mar, 2026 | 05:58 PM

image

(இணையத்தள செய்தி பிரிவு)

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளிப்பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் பெரும்பான்மை இனத்தவரால் அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அனுப்பிவைக்கப்பட்டுள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (07) அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடிதம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் பிரதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகத்தால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் TOPO PP70 இலக்க நில அளவை வரைபடத்தின் Inset 17, 18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களின் பூர்வீக தனியார் வயல் காணிகளையும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களையும் மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் ஏற்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அத்தோடு குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாயில் தனியார்காணிகளில் அனுமதியின்றி உப்பளம் அமைக்கப்படும் செயற்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரமரின் அலுவலகத்திலிருந்து மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மக்கள் தொடர்புக்குரிய சிரேஷ்ட உதவிச் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள PMO/PRD/12/25/227448 என்னும் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயிலுள்ள தனியார் காணிகளில் அனுமதியின்றி உப்பளம் அமைப்பது தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 2026.03.07 திகதி பிரதமருக்கான பிரதியோடு தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம், தங்களின் மேலான கவனத்திற்கும் தேவையான நடவடிக்கைக்கும் அனுப்பப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர் அழுத்தத்தினையடுத்து குறித்த உப்பளம் அமைக்கப்படும் இடத்தின் நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஏற்கனவே 10.03.2026ஆம் திகதி மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242168

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.