Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

arrested.jpg?resize=724%2C375&ssl=1

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டது.

இந்நிலையில் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2026/1469477

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

655539926_10241770614859429_236590476919

பேரிழப்பு! 😭
கடந்த 18ம் திகதி தனது மருமகனால் கொ*லை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தயாளினி திலீபன் அவர்கள் பற்றி யாழ் பல்கலைக்கழக இணையத்தளத்தில் இருந்து அவரின் கல்வித்தகைமைகள் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பார்த்தபோது மிகவும் கவலையாகவிருந்தது.
1999 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறையில் சகல பாடங்களிலும் சிறப்புச் சித்தி (distinction) பெற்று 1st class இல் பட்டம் பெற்றுள்ளார். பின்பு 2005 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழத்தில் முதுமானி பட்டமும், அதன் பின்பு 2016 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக ஆரம்பித்து தற்போது வரை சிரேஸ்ட விரிவுரையாளர் தரம்-1 இல் கடமையாற்றி வந்துள்ளார்.
நான்கு நூல்கள், 16 peer-reviewed journal publications, 55 மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை அவர் வெளியிட்டுள்ளார் என்று அவரின் இணையப்பக்கத்தில் இருந்து தெரியவருகின்றது.
அவரின் இழப்பு தமிழ்க் கல்விச்சமூகத்திற்கு ஒரு பேரிழப்பென்றால் மிகையாகாது.
அன்னாரின் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!

Kumar Ganesh

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-71.webp?resize=750%2C375&ssl=1

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொ*லை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது.

இக்கொ*லைச் சடலம் யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என்ற விரிவுரையாளரே இவ்வாறு படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.

கொ*லை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனது தாயையும் (விரிவுரையாளர்) தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாக விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். இதன்போது வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் யாரோ வெளியேறியதற்கான தடயங்களும், வெட்டப்பட்ட தலைமுடிகளும் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் பணம் எடுத்தமையும், திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியமையும் QR குறியீடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சி.சி.ரி.வி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், நேற்று திருகோணமலையில் வைத்து 21 வயதுடைய கணவனையும் (மருமகன்), 19 வயதுடைய அவரது மனைவியையும் (விரிவுரையாளரின் மகள்) கைது செய்தனர்.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது மாமியாரான விரிவுரையாளரைத் தான் கழுத்து நெரித்துக் கொ*லை செய்ததாக மருமகன் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், சடலத்தைத் தனங்கிளப்பு – அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் வீசியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நீண்ட தேடுதலின் பின்னர் விரிவுரையாளரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது. குறித்த பகுதி சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ளதால், பதில் நீதவான் சடலத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இக்கொ*லைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2026/1469515

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.