Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Abbas-Araqchi.jpg?resize=750%2C375&ssl=1

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும், மூன்றாம் தரப்பினர் மூலம் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்வது என்பது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அர்த்தமல்ல என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் இடைத்தரகர்களிடம் கூறியுள்ளது என, ஈரானின் நிலைப்பாட்டை அறிந்த ஆறு பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

இ‍தேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானியத் தலைவர்கள் அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதை வெளிப்படையாகக் கூற விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வொஷிங்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

அதேநேரம், பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட ட்ரம்பின் 15 அம்சத் திட்டம், ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுதல், செறிவூட்டலை நிறுத்துதல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என, இத்திட்டம் குறித்து அறிந்த மூன்று இஸ்ரேலிய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வெள்ளை மாளிகை தனது 15 திட்டத்தின் குறிப்பிட்ட விவரங்களை வெளியிட மறுத்ததுடன், தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அச்சுறுத்தியது.

ஈரான் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் என்பதில் இஸ்ரேலுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் சலுகைகளை வழங்கக்கூடும் என்று இஸ்ரேல் கவலைப்படுவதாகவும் ஒரு மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி கூறினார். 

மேலும், எந்தவொரு ஒப்பந்தமும் முன்னெச்சரிக்கை தாக்குதல்களை நடத்துவதற்கான தனது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புவதாக இரண்டாவது வட்டாரம் தெரிவித்தது.

ஈரானின் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் மத்திய கட்டளைத் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் ஒரு காணொளிக் கூட்டத்தில், அமெரிக்கா ஈரானுக்குள் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், அதன் எல்லைகளுக்கு வெளியே ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்தும் பாதையில் முன்னேறி வருவதாகவும் கூறினார்.

ஈரானின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்களில் 92% அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை ஏவுதல் விகிதங்கள் 90%-க்கும் மேல் குறைந்துவிட்டதாகவும் கூப்பர் கூறினார். 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை உற்பத்தி வசதிகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கை சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளன என்றும் கூப்பர் கூறினார்.

இருப்பினும், ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிரான ஈரானிய ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் சற்றும் குறையாமல் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈரானின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தின் மீதான தாக்குதல் உட்பட, அன்றைய தினம் ஈரான் மீது பல புதிய அலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை விவரித்தது. 

தெஹ்ரானில் ஒரு குடியிருப்புப் பகுதி தாக்கப்பட்டதாகவும், மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் தேடி வருவதாகவும் ஈரானின் அரை அதிகாரப்பூர்வ SNN செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

புதிய ஆளில்லா விமானத் தாக்குதல்களை முறியடித்ததாக குவைத்தும் சவுதி அரேபியாவும் தெரிவித்தன.

பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, எண்ணெய் விலைகள் சரிந்தன

வொஷிங்டன் ஈரானுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று உலகளாவிய பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, அதே நேரத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன. 

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து, பணவீக்கத்தைத் தூண்டும் அபாயம் உள்ள ஒரு போருக்கு முடிவு வரும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையில், தரைவழித் தாக்குதலுக்கு உத்தரவிட ட்ரம்பிற்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக, ஆயிரக்கணக்கான வான்வழிப் படைகளை வளைகுடாவிற்கு அனுப்ப பென்டகன் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இது, ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் இரண்டு கடற்படைப் பிரிவுகளுடன் கூடுதலாக அமையும். 

தன் நாட்டுப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், செங்கடல் முகத்துவாரத்தில் ஈரான் ஒரு புதிய போர்முனையைத் திறக்கக்கூடும் என்று, பெயர் குறிப்பிடப்படாத ஒரு இராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஈரானின் அரை-அரசு தஸ்னிம் செய்தி நிறுவனம் புதன்கிழமை கூறியது. 

https://athavannews.com/2026/1470018

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

657910113_1477954340454557_2616836801245

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

'பின்வாங்க வழியே இருக்காது' - இரானுக்கு டிரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை என்ன?

டிரம்ப், இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் மறுபுறம், இரான் அமெரிக்காவின் அமைதி திட்ட முன்மொழிவை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இரான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 'இரான் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும், இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும், பின்வாங்குவதற்கு வழியே இருக்காது' என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மறுபுறம், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டிரம்ப், இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

டிரம்ப் கூறியது என்ன?

'மிகவும் தாமதமாகிவிடுவதற்கு முன்பே இதை விரைவாகவும் தீவிரமாகவும் அணுகுங்கள்' என்று பேச்சுவார்த்தைகள் குறித்து இரானியத் தலைவர்களுக்கு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒரு சமூக ஊடகப் பதிவில், டிரம்ப் இரானின் பேச்சுவார்த்தையாளர்களை 'மிகவும் விசித்திரமானவர்கள்' என்று விவரித்துள்ளார்.

அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காக அமெரிக்காவிடம் 'கெஞ்சுகிறார்கள்' என்று அவர் கூறுகிறார், மேலும் இரானின் ராணுவம் 'நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது' என்றும் 'மீண்டு வருவதற்கு பூஜ்ய வாய்ப்புகளே உள்ளன' என்றும் அவர் கூறுகிறார்.

"இருந்தபோதிலும், அவர்கள் எங்கள் 'முன்மொழிவை பரிசீலிக்க மட்டுமே செய்கிறோம்' என பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்கள். அது தவறு" என்று அவர் ட்ரூத் சோஷியலில் தெரிவித்துள்ளார்.

"இரான் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும், இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும், பின்வாங்குவதற்கு வழியே இருக்காது, அது நன்றாகவும் இருக்காது" என்று டிரம்ப் கூறுகிறார்.

புதன்கிழமை (மார்ச் 25) அன்று, இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "இரானிற்கு தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை" என்றார்.

"செய்திகள் நட்பு நாடுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த தகவல் பரிமாற்றங்கள் உரையாடலோ அல்லது பேச்சுவார்த்தையோ இல்லை'' என்றும் அவர் கூறினார்.

டிரம்ப், இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Tasnim

படக்குறிப்பு,இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி

இரானின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல்

இதற்கிடையே இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "ஹோர்மூஸ் நீரிணையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் நீரிணையைத் தடுத்தது போன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு டங்சிரி நேரடியாகப் பொறுப்பானவர்" என்றும், "டங்சிரி, குண்டு வீசி கொல்லப்பட்டார்" என்றும் தெரிவித்தார்.

மேலும், இரானின் பல மூத்த கடற்படைத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.

இரான் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

அலிரேசா டங்சிரி 2018- ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் 2010 முதல் ஐஆர்ஜிசி கடற்படையின் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.

அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு எக்ஸ் தள கணக்கு இந்த ஆண்டு மார்ச் 10 முதல் செயல்பாட்டில் உள்ளது, அதில் உள்ள பதிவுகளை இரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டி வருகின்றன.

அந்தப் பதிவுகளில், அவர் ஹோர்மூஸ் நீரிணை பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

"இரானுக்கு எதிராக போர் புரியும் நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலுக்கும் இதைக் கடந்து செல்ல உரிமை இல்லை" என்று அந்த எக்ஸ் தள கணக்கின் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டங்சிரி, வெளிப்படையாகப் பேசக்கூடிய ஓர் இரானிய தளபதி ஆவார். கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில், இரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால் ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0kr55n86n1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.