Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை

Courtesy: Priyangan

நவீன இராணுவ வரலாற்றில் தரையிறக்க நடவடிக்கை (Amphibious Operation) என்பது வெற்றியை மட்டுமன்றி மிக ஆபத்தான போரியல் நகர்வையும் நோக்கமாகக் கொண்டதாகும். பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான விடுதலைப் புலிப் போராளிகள் குடாரப்பில் தரையிறங்கி ஆணையிறவில் புலிக்கொடி நாட்டும் வரை இதுவே ஒரு சித்தாந்தமாக இருந்தது.

இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஈழப்போராளிகள் பற்றிய உலகின் பார்வையை ஒரு கணம் உறைய வைத்த போரியல் அதிசயத்தைப் பிரிகேடியர் பால்ராஜ் நிகழ்த்திக் காட்டினார். அதுவரையிலான ஈழ விடுதலைப் போராட்ட வழித்தடங்களின் போக்கையே மாற்றியமைத்த அந்த மகத்தான போரியல் அதிசயம், இது எப்படிச் சாத்தியமானது ?என்று அமெரிக்கா போன்ற இராணுவ வல்லரசுகளே வியந்து நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

அன்று ஒரு மரபுசாரா படையணியாக விடுதலைப் புலிகள் நிகழ்த்திய உலகத்தரம் வாய்ந்த வியூகம் அதுவென்றால் இன்று பாரசீக வளைகுடா மற்றும் ஈரானிய எல்லைகளில் அமெரிக்கா போன்ற இராணுவ வல்லரசுகளின் படைகள் எதிர்கொள்ளும் தரையிறங்க முடியாத முட்டுக்கட்டை நிலை என்பது நவீன போரியல் வரலாற்றின் ஒரு தந்திரோபாய முரண்நகையாகும்.

🛑 குடாரப்பு பால்ராஜின் போரியல் அதிதிறனும் அசாத்திய மனோதிடமும்

குடாரப்பு என்பது வெறும் நீண்ட கடற்கரைப் பகுதி அல்ல அது சிறீலங்கா இராணுவத்தின் இதயநாடி போன்ற விநியோக வழித்தடத்தைத் துண்டிப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு மின்னல் வேகப் பின்னணித் தாக்குதல் ஆகும். அதில் வெறும் 1200 போராளிகளை மட்டும் வைத்துக்கொண்டு இன்று அமெரிக்கப் படைகளிடம் இருப்பது போன்ற எவ்வித வான்வழிப் பாதுகாப்பும் இன்றி சர்வதேச இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டமைக்கப்பட்டிருந்த ஆனையிறவு இராணுவத்தளத்தின் பின்புறத்தில் தரையிறங்கியது அன்றைய காலகட்டத்தில் ஒரு அதிசயமாவே பார்க்கப்பட்டது.

இங்குதான் பிரிகேடியர் பால்ராஜின் போரியல் பேராற்றல் வெளிப்பட்டது. வெற்றிபெற்றால் அன்றி அந்த 1200 போராளிகளும் விடுதலைப் புலிகளின் உலக இராணுவ நகர்வாளர்களுக்கெல்லாம் மணிமகுடமாக விளங்கிய பால்ராஜும் உயிரோடு திரும்பவே முடியாது என்ற நிலை இருந்தது. எதிரியால் நான்கு புறமும் சூழப்பட்டு, 34 நாட்கள் உணவு மற்றும் ஆயுதத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் அன்று அவர் காட்டிய அசைக்க முடியாத ஓர்மமே அந்த வெற்றியைத் தீர்மானித்தது.

தரையிறங்கிய வேகத்தில் முன்னேறுதல் (Deep Penetration) என்ற தத்துவத்தை அவர் கையாண்ட விதமே ஒரு தற்காப்புப் போரை எப்படித் தாக்குதல் போராக மாற்றலாம் என்பதற்கு இன்றும் ஒரு சிறந்த போரியல் பாடத்திட்டமாக உள்ளது.

🛑அமெரிக்காவின் தரையிறங்க முடியாத இயலாமை: நவீன காலச் சிக்கல்கள்

மறுபுறத்தில் இன்று உலகின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் B-1B Lancer மற்றும் F-35 போன்ற போர் விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரான் போன்ற ஒரு பிராந்திய வல்லரசுக்கு எதிராக நேரடித் தரையிறக்கத்தை மேற்கொள்ளத் தயங்குவது ஏன்?

இதற்கான முக்கியக் காரணம் ஈரானின் A2/AD (Anti-Access/Area Denial) எனப்படும் தற்காப்பு அரண் ஆகும். ஈரானின் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கான ஆளில்லா விமானங்கள், அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானந்தாங்கிக் கப்பல்களைத் தமது தளத்திற்கு அருகில் நெருங்க விடாமல் தடுக்கின்றன. அன்று பால்ராஜ் குடாரப்புவில் கையாண்ட அதே மறைந்திருந்து தாக்கும் நுட்பத்தை ஈரான் இன்று தனது நவீன தொழில்நுட்பத்தின் மூலமாகத் தனக்கேயான ஒரு தற்காப்பு வேலியாக மாற்றியுள்ளது.

இது அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல், ஈரானுக்குள் ஊடுருவி எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவது மற்றும் அணு உற்பத்தித் தளங்களைச் சிதைப்பது போன்ற டொனால்ட் ட்ரம்ப்பின் கனவுகளைச் சிதைப்பதோடு ஒரு இராணுவ வல்லரசின் நகர்வுகளையே கேள்விக்குறியாக்குகிறது.

🛑 தொழில்நுட்ப பலம் மற்றும் கள யதார்த்தம்

விடுதலைப் புலிகளின் குடாரப்பு வெற்றி என்பது தொழில்நுட்பத்தை விட ஒரு தேசத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர் கூட்டத்தின் தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதற்குச் சான்றாக அமைந்தது.

இன்று அமெரிக்கா போன்ற ஒரு இராணுவ வல்லரசு ஈரானிய எல்லைகளுக்குள் தரையிறங்கத் தவிப்பதற்கு அதன் ஆயுதக் குறைபாடு காரணமல்ல மாறாக எதிரியின் கெரில்லாப் பாணியிலான தற்காப்பு வியூகங்களை முறியடிக்கத் தேவையான துணிச்சலான கள முடிவுகளே இன்றைய தேவையாகும். அதற்கு அமெரிக்காவிற்குப் பால்ராஜைப் போன்ற ஒரு தளபதிதான் தேவைப்படுகிறார்.

அன்று களத்தில் எதிரியின் மனநிலையைச் சோதித்தது புலிகளின் போராற்றல் மட்டுமல்ல பிரிகேடியர் பால்ராஜ் என்ற பெயரும்தான். பிரபாகரன் வந்திருந்தால் கூட வென்றிருப்போம் ஆனால் வந்தது பால்ராஜ் என்ற சிங்கள இராணுவத் தளபதி ஒருவரின் கூற்றே பால்ராஜ் யார் என்பதை ஆழமாகப் பதிவுசெய்துவிட்டது.

வரலாறு கற்பிக்கும் பாடம் ஒன்றுதான், போர்க்களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பது நவீனக் கருவிகள் மட்டுமல்ல அந்தப் போரை முன்னெடுக்கும் வீரர்களின் நெஞ்சுரமும் மற்றும் தளபதியின் தீர்க்கமான முடிவுகளுமே ஆகும். ஒரு சிறிய படையணி எத்தகைய பெரிய இலக்கையும் வீழ்த்த முடியும் என்பதற்கு குடாரப்பைத் தவிர வேறு உதாரணம் தேவையில்லை.

https://ibctamil.com/article/brigadier-balraj-kudarappu-vs-iran-war-strategy-1774482259

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.