Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்

--- --- ---

*ஈரான் பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு பதிலடியா என பிரித்தானிய ஊடகம் கேள்வி!

--- --- ---

ஈரானுடன் இணைந்து செயற்படும் யெமன் (Yemen) நாட்டின் ஹூதி (Houthis) போராளிகள், இன்று சனிக்கிழமை இஸ்ரேல் மீது முதன் முதலாக ஏவுகணைத் தாக்குதல நடத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் ஆரம்பித்து நான்காவது வாரம் நிறைவடைந்து, ஐந்தாவது வாரம் ஆரம்பித்த போது, நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என ரொய்டர்ஸ் நிறுவனம் விமர்சிக்கிறது.

சில வாரங்களுக்குள் இராணுவ நடவடிக்கைகளை முடிக்க எதிர்பார்ப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறிய நிலையில், இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொய்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, ஐந்தாவது வாரத்தில் நுழைந்துள்ள போரை ஹூதிகள், விரிவுபடுத்தி நீடிக்கும் அபாயம் தெரிகிறது.

ஏனெனில் அனைத்து முனைகளிலும் "ஆக்கிரமிப்பு" முடியும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என ஹூதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் மீதான ஹூதிகளின் தாக்குதல், ஈரான் பாடசாலை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இருக்கலாமோ என த கார்டியன் (theguardian) என்ற பிரித்தானிய ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

யேமன் கடற்கரையில் உள்ள பாப் அல்-நீரிணை (Bab al-Mandab Strait ) சூயஸ் கால்வாயை (Suez Canal) நோக்கிய பிரதான கடல் போக்குவரத்து பாதையாகும்.

ஹார்மூஸ் நீரிணைப் பகுதியை ஈரான் பலமாக வைத்திருப்பதற்கு பாப் அல்-நீரிணை பிரதான பங்கு வகிக்கிறது.

ஹர்மூஸ் நீரிணை பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டும் என்றும் பிரான்சில் நடைபெற்ற ஜீ -7 நாடுகள் கூட்டத்தில், அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார்.

குறிப்பாக, இந்த நீரிணை உலகளாவிய எண்ணெய் - இயற்கை எரிவாயு விநியோகத்தில், ஐந்தில் ஒரு பங்கிற்கு இலவச பாதையாக மாற்ற வேண்டும் என்ற தொனியில் அவர் கருதிட்டிருந்தார்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid013bcybpAeZ7cSqPCE6CP9XZHa8bcHmfY36W3FNiwibPH6yqeLdCMUM4TSCN6LzhFl&id=1457391262&mibextid=wwXIfr

இவ்வளவு காலமும் இல்லாமல் புதிதாக இந்த தாக்குதல் தொடங்கியிருப்பது

அமெரிக்க இஸ்ரேலுக்கு பெரும் தலையிடியாக அமையலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Houthis enter the Iran war with missile strike against Israel

Houthis enter war: Yemen’s Iran-backed Houthi rebels said they carried out the “first military operation” in support of Iran, after Israel’s military earlier said it detected a missile from Yemen.

https://edition.cnn.com/2026/03/28/world/live-news/iran-war-us-israel-trump

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.