Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

Mar 29, 2026 - 11:30 AM

அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. 

இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்"  போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.

ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmnbcna85000f356puzf7zq5a

  • கருத்துக்கள உறவுகள்

ரம்புக்கு வந்த சோதனை😁, ஆடாதைய மனித ஆடாதே.

கேள்விப்பட்டது Bharain இனில் அமெ படைகள் தளங்களை விட்டு மக்களுடன் கலந்துள்ளார்களாம்🫠

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ட்ரம்ப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!

Published By: Digital Desk 3

29 Mar, 2026 | 12:12 PM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ட்ரம்ப் ட்ரம்ப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி, ஈரானுக்கு எதிராக நடந்து வரும் போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுமார் 70 இலட்சம் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

"ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரியைப் போல எங்களை ஆள நினைக்கிறார். ஆனால் இது அமெரிக்கா, இங்கு அதிகாரம் மக்களுக்கே உரியது; மன்னர்களுக்கோ அல்லது அவர்களின் கோடீஸ்வர நண்பர்களுக்கோ அல்ல" எனப் போராட்ட அமைப்பாளர்கள் கோசமிட்டுள்ளனர்.

இந்தப் போராட்டங்களைக் கிண்டல் செய்துள்ள வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர், இவை "ட்ரம்ப் மீதான மனநோய் சிகிச்சை அமர்வுகள்" எனச் சாடியுள்ளார்.

தேசிய நினைவிடங்கள் மற்றும் லிங்கன் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்துள்ளன. டைம்ஸ் சதுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால், மன்ஹாட்டன் பகுதியின் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் குடிவரவு அதிகாரிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கப் பிரஜைகளான ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி அங்குப் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் அங்குப் பாடல்களைப் பாடி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மட்டுமன்றி, லண்டன், பாரிஸ் மற்றும் லிஸ்பன் போன்ற உலக நாடுகளின் தலைநகரங்களிலும் புலம்பெயர் அமெரிக்கர்கள் திரண்டு ட்ரம்ப்பிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். அங்குப் ஜனாதிபதி ட்ரம்ப்பை "போர்க்குற்றவாளி" மற்றும் "பாசிசவாதி" எனப் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர்.

போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பல மாநிலங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைத் தண்டிக்க முற்படுவதாகவும், இராணுவத்தை உள்நாட்டு நகரங்களில் நிலைநிறுத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/242214

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.