Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காகிதக்கூழ் சிலையும் புட்டினும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tilly காகிதக்கூழ் சிற்பங்களை வடிவமைப்பதில் திறமையான யேர்மனியக் கலைஞர். யேர்மனியில் நடைபெறும் ரோசன்மொண்டாக் (Rosenmontag) கார்னிவலின் அணிவகுப்புகளில் இடம்பெறும் அவரது அரசியல் கேலிச்சிற்பங்கள் பரவலாகப் பேசப்படுபவை. அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள், குறிப்பாக தீவிர வலதுசாரிகளைக் கேலிச்சித்திர வடிவில் சித்தரிப்பதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது சிற்பங்கள் பெரும்பாலும் வெளிப்படையான அரசியல் செய்திகளை வெளிப்படுத்துகின்றன.

2024 ஆம் ஆண்டு, அவர் உருவாக்கிய ஒரு காகிதக்கூழ் சிற்பம் புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் நடைபெற்ற ரோசன்மொண்டாக் கார்னிவல் ஊர்வலத்தில் இடம்பெற்ற அந்தச் சிற்பத்தில், சீருடை அணிந்த புடினும், பேட்ரியார்க் கிரில்லும் ஓரினச்சேர்க்கை சார்ந்த அசிங்கமான காட்சியில் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாஸ்கோ நீதிமன்றம் Tillyக்கு எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில், அவர் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், ரஷ்ய ஆயுதப்படைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி கான்ஸ்டன்டின் ஓசிரோவ் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், 2,000 யூரோ குற்றப் பணமும் Tillyக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு ஆண்டுகள் கலைத்துறையில் பணியாற்றுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

Tilly தற்போது யேர்மனியிலேயே இருப்பதால், ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்படுவதற்கான ஆபத்து இல்லை. இருப்பினும், ரஷ்யாவுடன் நட்பு உறவு கொண்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்யும் போது சிக்கல்கள் ஏற்படலாம். அத்தோடு மாஸ்கோ நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இன்டர்போல் மூலம் அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

யேர்மனியின் NRW மாநில முதலமைச்சர் ஹென்றிக் வூஸ்ட் இதுகுறித்து, “கலைஞர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சர்வாதிகார ஆட்சிகள் விமர்சனங்களை ஒடுக்க முயற்சிக்கின்றன. Tilly கடந்த 30 ஆண்டுகளாக தைரியமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எந்த அதிகாரத்திற்கும் அஞ்சுவதில்லை. மாநில அரசின் முழுமையான ஆதரவு அவருக்கு உள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.

காகிதக்கூழ் சிற்பத்தைப் பார்க்க விரும்பினால்,

tagesschau.de
No image preview

Moskau: Prozess gegen Karnevalswagenbauer Tilly wird fort...

"Verunglimpfung der Staatsorgane" lautet der Vorwurf der russischen Justiz gegen den Düsseldorfer Karnevalswagenbauer Tilly. Heute hätte der Prozess gegen ihn in Abwesenheit fortgesetzt werden sollen

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை திருத்தம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.