Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1661 இல் காலி துறைமுகத்தில் புதையுண்ட ஏழு கிரேக்க வர்த்தக கப்பல்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1661 இல் காலி துறைமுகத்தில் புதையுண்ட ஏழு கிரேக்க வர்த்தக கப்பல்கள் கண்டுபிடிப்பு

[01 - December - 2007]

காலிதுறைமுகத்தில் 1661 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதையுண்ட 7 சிறிய கப்பல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைகள் தற்போது நடைபெற்று வருவதால் துறைமுகத்தின் கடல்பகுதியில் சில இடங்களில் ஆழமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது, இந்த ஏழு கப்பல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை புதைபொருள் ஆராய்ச்சி பிரிவினர் பரிசீலித்தபோது அவை 300 ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்டதாகத் தெரிவித்தனர்.

அக்காலத்தில் வர்த்தக நடவடிக்கைக்காக கிரேக்க நாட்டில் இருந்து வந்த கப்பல்களே இவையென நிபுணர் ரசிக்க முத்துக்குமாரண தெரிவித்தார்.

மூன்று கப்பல்கள் ஒரே இடத்திலும் நான்கு கப்பல்கள் வேறு இடத்திலும் ஒன்றாகக் காணப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார். இத்துறைமுகப் பகுதியில் மேலும் பல கப்பல்கள் இவ்வாறு புதையுண்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

அக்காலத்தில் காலித்துறைமுகத்தில் இருந்து கராம்பு, கறுவா, மிளகு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் மனித எச்சங்களோ, வேறு பெறுமதியான பொருட்களோ காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/12/1/...s_page41418.htm

நல்ல காலம் தாங்கள் அடிச்ச கப்பல்கள் என்று சொல்ல மறந்து போனாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலி துறைமுகத்தில் 34 பீரங்கிகள் மீட்பு

[06 - December - 2007]

காலி துறைமுகத்தில் கடற்பிரதேசத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் புதையுண்ட 34 பீரங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை போர்த்துக்கீசர் காலத்தில் அல்லது ஒல்லாந்தர் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளவையாக இருக்கலாம் என புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பீரங்கிகள்பெறுமதியானவை எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

காலி துறைமுகத்தின் அபிவிருத்தி வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சில இடங்களை ஆழமாக்கும் வேலைகளும் நடைபெறுகின்றன.

கடந்த வாரம் ஆறு பழைய கப்பல்கள் இப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1661 ஆம் ஆண்டு வந்தவை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

http://www.thinakkural.com/news/2007/12/6/...s_page41754.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.