Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தச் சுவடுகளின் பின்னால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சுவடுகளின் பின்னால்

- அல்லையூர்சி.விஜயன் (இத்தாலி) அவளைப் பார்த்தால் யாரெனத் தோன்றும்! அவளுக்கு வயது பத்து. பார்த்தால் கண்கள் ஏமாந்துதான் விடுகின்றது! உணர்ச்சிகளின் கூட்டு மனித வடிவம். அப்படியாயின் அவள் யார்? வண்ணத்துப் பூச்சியின் காலங்கள் போலவே வாழவேண்டிய வயது! இந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? வீதியிலுள்ள குப்பை கூளங்களையெல்லாம்...... துருவித் துருவி பார்க்கிறாளே! இவள் மனதை யார் துருவுவார்? இவளின்று சோகங்களுக்குச் சொந்தக்காரி...... ஏக்கங்களுக்கு எஜமானி. இவள் வெளிச்சங்களை நிராகரித்தவள் அல்ல...... வெளிச்சம்தான் இவளை நிராகரித்தது! 'மனதுக்கும், நினைவுக்கும் ஒரே பாதை!" நம்புகின்றீர்களா? காற்று வழி வரும் வாசம் மாதிரி..... கால் தூண்டும் இடமெல்லாம் இவளைக் காணலாம். பசியைக் கூட....... வெளிக்கொணர முடியாத பாவி. 'யாராவது சாப்பிடுவது கண்டால்" 'எங்காவது உணவகம் பார்த்தால்" சிலவேளை உணர்ந்து கொள்வாள். பிடரியை சொறிந்துகொண்டே....... சிந்தையிழந்த மனதின் கால் உள்ளே போகுமுன்! ஓடிவந்தொருவன் 'வெளியே போ..... வெளியே போ!" தனக்கு ஆபத்து நேரும்போது புல்லுக்கூட போர்க்கோலம் பூணுமாம்! சிந்தையிழந்த மனிதன் எக்கோலம்தான் போடுவானோ? கால் கடுக்கும்வரை நீண்ட பயணம்! கண் கிறக்கும்வரை நீண்ட விழிப்பு! எப்போதேனும் குளிக்கும் பாக்கியம். நித்தம் தேனீர்க் கடைகள் குளிக்க வைத்துத்தான் விடுகின்றன. 'தோளில் தொங்கும் உரப்பையுள் என்னதான் இருக்குமோ?" வெயிலென்ன? மழையென்ன? இரண்டும் வௌ;வேறு மனிதர்களுக்குத்தான் இவளுக்கல்ல! 'இந்தச் சின்னச் சுவடுகளின் பின்னால்...... ஒரு சரித்திரக் கதையே உண்டு." வண்ணத்துப் பூச்சியினைப் போல சிறகடித்துப் பாட்டுப்பாடி....... தன் தோழியரோடு விளையாடி...... மண்கறி சோறு! மாங்கொட்டை சுரண்டி, கிளித்தட்டு, சோகி, தாயம், கொக்கான், எட்டுக்கோடு...... இப்படி கவலைகள், துன்பங்கள், துயரங்கள் எதுவுமின்றி வாழ்ந்தவள்தான்; இவளும். இறைவனின் படைப்பில் மனிதர்கள் உயர்வானவர்கள். அந்த உயரம் எத்தகையது? தமிழ்மொழி எழுதுவதைப் போன்று வலமிருந்து இடமாகவா? அரபுமொழி எழுதுவதைப் போன்று இடமிருந்து வலமாகவா? சீனமொழி எழுதுவதைப் போன்று மேலிருந்து கீழாகவா? எப்படிக் கணிப்பது? ஆப்பிரிக்கா வனவிலங்குப் பூங்காவில் சிங்கத்தின் துணையில் உயிர் வாழும் கன்றுக்குட்டியைக் கண்டிருக்கிறேன்......" மனிதர்கள் எந்த உயர்வுக்குரியவர்கள் என்பதை வெளிக்கொணரும் கதையே இது...... பொதுநலம் என்ற பெயரில் வரும் பொல்லாப்புகளின் தொகை எவ்வளவு? ஒருவனை வெட்டுவதற்காகவே கத்தி செய்கிறான். ஒருவனை கொன்று வெல்வதற்காகவே துப்பாக்கி செய்கிறான். ஒரு நாட்டை அழித்து விடுவதற்காகவே வெடி மருந்து அணுகுண்டு செய்கிறான். இப்போ சொல்லுங்கள் யார் உயர்வானவர்களென்று.......! மனிதர்களைவிட மிருகங்கள் மேன்மையானவை. நேர்மையானவை. அங்கே வாழ்வுக்கான போராட்டம். இங்கே வல்லரசு ஆவதற்கான வாலாட்டம்! இரண்டில் எது சிறந்தது! மாதகல் வடக்குத்தான் அவளின் சொந்த ஊர். தாய் சிவலட்சுமி, தந்தை கந்தசாமி. இவளின் பெயர் சிவச்செல்வி. செல்வி என்றுதான் எல்லோரும் அழைப்பது வழமை! செல்விக்கொரு தம்பி. அவன் பெயர் செந்தூரன். அழகான சிறிய வீடு. அதற்குள் இந்தக் குருவிகள் ஆனந்தமான வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள்....... கடலின் மடியில் தவழும் இலங்கைத் தீவில் மாதகலும் ஒரு சிறப்பான கிராமம்! மீனவக் குடும்பங்கள், விவசாயக் குடும்பங்களென்று தொழிலின் அடிப்படையில் வேறுபட்டாலும் எந்தப் பிரச்சனைகளுமின்றி வாழ்க்கை நடத்தும் மக்களின் பால் அது ஒரு அழகாகவே இருக்கும். விடுதலைப் போர் தொடங்கிய காலம் தொட்டே மாதகல் மண் அந்த வேதனையைச் சுமந்ததை யாரும் மறக்கமுடியாது. ஒரு ஸ்திரமில்லாத வாழ்க்கையைத் தான் அந்த மக்கள் வாழ்ந்து வந்தார்கள்! இறுதியாகத் தொடங்கிய போரின் விளைவால் கந்தசாமி குடும்பமும் இடம்பெயரந்து நவாலி 'புனித இராயப்பர் தேவாலயத்தில்" தஞ்சமடைந்தார்கள். கடும் பொருளாதாரத் தடை! வேலை வாய்ப்பின்மை! சொந்த ஊரை விட்டு வந்த வேதனை கந்தசாமியை மிகவும் பாதித்தது! குருவிக் கூடுமாதிரித்தான் இந்தக் குடும்பம். மிகவும் அந்நியோன்யமாகவே பொழுதைக் கழிப்பர். இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு மழலைச் செல்வங்கள் மகிழ்வைப் பொழிவார்கள். எந்தக் கவலைகளையும் முகத்தில் காட்டாதவாறு எப்பொழுதும் தன் குடும்பத்தோடு அன்பாகவே கந்தசாமி நடந்துகொள்வான். அந்த நாள் அவன் வாழ்வில் மறக்கமுடியாத நாள்! அன்றுதான் செந்தூரனின் முதலாவது பிறந்தநாள்! அந்த நாளை இனி யார்தான் மறப்பார்கள்! செந்தூரனின் பிறந்தநாளை எப்படியாவது கொண்டாடி விடவேண்டும் என்ற ஆசை சிவலட்சுமியின் மனதில் ஆழப்பதிந்து நின்றது. நாட்டு நிலமை, இடம்பெயர்ந்த வாழ்வு இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பதை கந்தசாமி அறிவான். 'முன்னேறிப் பாய்ச்சல்" இராணுவ நடவடிக்கையால் யாழ் மாவட்டமே....... ஏன் உலகமே கலங்கி நின்றபோது, 'புலிப்பாய்ச்சல்" இராணுவ நடவடிக்கைதான் அதனைக் கட்டிப் போட்டது என்பது தமிழ் மக்களுக்கு வேல்பட்ட புண்ணுக்கு மருந்திட்டது மாதிரி இருந்தது! அந்தப் பீதியிலிருந்து மீள்வதற்குள் செந்தூரனின் பிறந்தநாள். நினைத்துப்பார்த்தான். சாத்தியமே இல்லை கொண்டாடுவதற்கு. ஒரு மாதிரி நிலைமையைப் புரிய வைத்தான் சிவலட்சுமிக்கு. கணவனின் நிலையையும், நாட்டு நடப்பையும் நன்குணர்ந்தவளாக..... 'உயிரோடிருந்தால் வாற வரு~ம் கொண்டாடினால் போச்சுது" என்றாள் ஒருவித அவநம்பிக்கையுடனே அவள். 'முன்னேறனிப் பாய்ச்சல்" இராணுவத் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத அரசு, தன் பிசாசுகளை விட்டு விமானக் குண்டுத் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது! பீதி நிறைந்த வாழ்வின் மத்தியில் நீதி கேட்க யாருமில்லாத சூழல். 'அப்பா" அன்றாள் செல்வி. 'என்ன சொல்லம்மா" என்று தலை வருடினான் கந்தசாமி. 'இஞ்ச இருக்கப் பயமாக இருக்கப்பா. வாங்கோ...... அப்பம்மா வீட்ட போவம்!" என்று வானத்தைக் கூர்ந்து பார்த்தாள் செல்வி. ஓலமிட்டு அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு. கண்களை இங்குமங்குமாக வெட்டி வெட்டி கண்ணீர் வரும்;பாதைகளை தடுக்க முயற்சி செய்தான் கந்தசாமி. அப்படியிருந்தும் ஒரு சொட்டு நீர் விழுந்துவிட்டது. விழியைத் துடைத்துவிட்டு மகளை மடிமீது இருத்தி, 'எல்லாம் கொஞ்சம் ஓய்ந்து போகட்டும், போகலாம்" என்று ஆறுதல்ப்படுத்தினான் அவளை. அன்றைய பொழுது புலர்வதற்குள் ஒரு பூகம்பத்துக்கு முன்னான பொழுதாகவே பட்டது! காகங்கள், குருவிகள் வழமைக்கு மீறி சிறகடித்தன. வெண்மேகம் அங்குமிங்கும் ஓடித்திரிந்தது! ஒருவித அமைதி. அந்த அமைதிக்குப் பெயர் என்ன? விமானக் குண்டு வீச்சு! உலங்கு வானூர்தியின் கண்காணிப்பு இவைகளுக்குப் பயந்து மக்களெல்லாம் இரவில்தான் பயணம் செய்வது வழமை! நவாலியை விட்டு புறப்பட வேணும் எனும் எண்ணம் கந்தசாமியின் மனதில் உறுதியாக இருந்தது. அதற்கு முன்னர் இங்கிருந்து எங்கு போவது எனும் கேள்வி எதிரில் நின்றது! உரும்பிராயிலுள்ள தனது தாய்வீட்டுக்கு முதலில் போய் நிலமையை அறிந்து வந்து போவதுதான் சிறந்தது எனப்பட்டது அவனுக்கு! அதன்படி அவன் போய் மீண்டும் நவாலி நோக்கி வந்து கொண்டிருந்தான், இன்று இரவு எல்லோரும் உரும்பிராய் வந்துவிட வேண்டும் எனும் எண்ணத்தில். திடீரென விமான இரைச்சல். மானிப்பாயை நெருங்கிக்கொண்;டிருந்த கநதசாமியின் மனதில் பயம் மேலிட்டது. 'சைக்கிளை" வேலியோரமாகச் சாத்திவிட்டு பூவரசம் மரத்தோடு இவனும் பூவரசானான். வீதி சுடுகாடு மாதிரி தோற்றமளித்தது! காது பிளந்தது போலிருந்தது ஓர் அதிர்வு. வீதியில் கூடிய சனங்கள் வானைப் பார்த்தது! ஒரு நொடிப் பொழுதில் சூரியனது பார்வை மங்கிப்போனது! மீண்டும் பயணம் தொடர்ந்தது! போகப்போக...... முதலில் நவாலிப் பக்கமென்ற சேதி! பின்பு இராயப்பர் தேவாலயம் என்று தோற்றம் பெற்றது! சிங்கத்தின் பிடியில் அகப்பட்ட புள்ளிமானாய்...... மக்கள் துடித்தனர். கதறினர், கதறினர், யார் வருவார் ஆறுதல் சொல்ல...... யார் வருவார்? தேற்றிட்டுப் போக! குடும்பம் குடும்பங்களாகவும், ஒருவர் விட்டு ஒருவராகவும், வௌ;வேறு வகையான துயரங்கள.; ஒரு கூண்டுப் பறவைகளாய்...... குண்டுகள் விழுந்த திசையை நோக்கி.... உறவுகள் பறந்தன. குருவிக் கூட்டைக் கலைத்த மகிழ்வில் வேடர்கள் போய்க்கொண்டிருந்தனர். அவலத்தின் குரல்கள், அவலத்தின் அலறல்கள். 09.07.1995 நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தின் வளாகம் முழுவதும் குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட 120 பேரைக் காவுகொண்டு, 150 பேர் வரை காயமடைய வைத்தது. பக்கத்து வீட்டில் 'கொக்காண்" விளையாடிக்கொண்டிருந்த செல்வி, 'அம்மா" என்று கோவிலை நோக்கி ஓடினாள். தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்த தாயின் மார்பில் பாலுக்காகத் தவித்துக் கொண்டிருந்தான், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகன். இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தாயையும், இறந்த தாயிடமே பால் குடிக்கும் தம்பியையும் கண்டதும், 'ஐயோ" 'ஐயோ" என்று தலையிலடித்து கதறி அழுதாள் செல்வி. அழாதேயம்மா என்று யாரும் சொல்லமுடியாத சோகமது! அப்படியிருந்தும் யாரோ ஒருவன் அழாதேம்மா......என்று சொன்னவனும் அழுதான். நவாலிக் கோவிலில்தான் குண்டு விழுந்தது! என்று உறுதியான செய்தி கிட்டியதும் விரைவாகவே சைக்கிளை மிதித்தான். சைக்கிள் ஓட மறுத்தது போன்ற பிரமை அவனுக்கு! எழுந்துளக்கினான். சைக்கிள் வேகமாகத்தான் ஓடியது. அது ஓடாமல் நிற்பதைப் போன்றிருந்தது அவனுக்கு! இறந்தவர்களின் உடல்களை முழுமையாகவும், பொறுக்கியெடுத்தும், முதலில் காயப்பட்டவர்களை மருத்துவமனை கொண்டு செல்வதுமாக போராளிகளும், பொதுமக்களும் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். முதல் குண்டு தாக்குதல் நடத்திய விமானம் மீண்டும் வந்து இன்னொருமுறை தாக்கக்கூடுமெனும் அச்சம்! மக்களென்ற வெள்ளம் தரிப்பிடம் தேடி ஓடிக்கொண்டிருந்தது! செல்வியும் செந்தூரனை இடுப்பில் வைத்தவாறே நடந்தாள் போகும் பாதை புரியாமலே...... நவாலித் தேவாலயம் நெருங்க நெருங்க கந்தசாமியின் மனதினுள் ஒருவித கலக்கம், பரபரப்பு, என் குடும்பமும்..... இதை நினைத்துப் பார்க்கவே! நினைவு தடுமாறியது. சைக்கிள் வீதியிலும், மனம் தடுமாற்றத்திலுமாக........ 'முருகா! நீதான் துணை" என்றவன் நம்பிக்கை தளராதவனாக மிதித்தான். தேவாலயத்தின் கோலத்தைக் கண்டதும் கடவுளே! என்று தலையில் அடித்துக் கத்தினான். அவனழுத அழுகையில் வானம் அதிர்வiதாகப் பட்டது....... அங்கு நின்றவர்களிடம் விசாரித்தான். 'யார் யாரெனத் தெரியாது, எதுக்கும் முதல்ல வேம்படி போங்கோ" என்றான் ஒருவன். வேம்படி மகளிர் கல்லூரி நோக்கிப் புறப்பட்டான் கந்தசாமி. ஏன்? எதற்காக! உயிருடன் வாழவேண்டும்? பலவகையான சிந்தனை சிலவேளை மொத்தக் குடும்பமும் அழிந்திருந்தால் விரைவாகவே ஒரு தீர்வைக் கையில் பற்றிக்கொண்டு. நவாலி தொடக்கம் வேம்படி மட்டும் கொட்டிக் கிடந்த இரத்தச் சுவடுகளின் மேல் கண்ணீர்த் துளிகளும் கலந்து கொண்டது. வேம்படி மகளிர் கல்லூரியை வந்து சேர்ந்தபோது மனதில் ஒருவித அமைதியும் ஏற்பட்டது! அந்த அமைதிக்கு காரணமாக செந்தூரனையும், செல்வியையும் நோக்கி ஓடினான். கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தான். கன்னத்தைத் தடவி ஆனந்தக் கண்ணீர் சொட்டினான். 'அம்மா எங்க செல்வி" என்றான்! 'அம்மா போட்டா....... அம்மா செத்துப் போட்டா......" என்று பேயறைந்தவள் மாதிரிக் கூறினாள் செல்வி. உயிரின் துணையாக வாழ்வின் நிழலாக வந்தவள், பிரிந்துவிட்டாள். இல்லை...... பிரித்துத் தவிக்கவிட்டு விட்டாங்கள் என்று பல்லைக் கடித்து கண்ணீர் வடித்தான். சிவலட்சுமிக்கு செய்யவேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்து முடித்தான். பிள்ளைகளோடு உரும்பிராயில் குடியேறினான். அன்று ஊமையானவள் மூன்று மாதங்களின் பின்னால் கொஞ்சம் உணர்வு பெற்றாள். மனைவியின் பிரிவும், மகளின் நிலையும், அவனுக்குப் பெரும் கவலை கொடுத்து வந்தது! செல்வியின் தெளிவினால் கொஞ்சம் ஆறுதல்பட்டுக்கொண்டான். செந்தூரனை தூக்கி இடுப்பில் வைத்தாள் செல்வி. சிறிது நேரத்தால் கதறி அழுதாள். 'செல்வி" என்றான் கண்ணீர் மல்க கந்தசாமி! 'என்ன" என்பதுபோல் தகப்பனைப் பார்த்தாள். 'அம்மாவின்ர தாலிக்கொடி......." என்று நிறுத்திக்கொண்டான்;. 'யாரோ களட்டினவ......" என்று யோசித்தாள். 'இல்லையம்மா! யோசிக்காத" என்று அவளின் இந்த நிலையையும் இழந்துவிட விரும்பாத கந்தசாமி எண்ணிக்கொண்டான், 'கண்ணீருக்கு மத்தியிலும் களவுக்கு பஞ்சமில்லை" என்று! செல்வியை அணைத்து முத்தமிட்டு செந்தூரனை இனிநீதானம்மா! பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு அவன் தன் கடமைக்குச் சென்றான். தம்பி செந்தூரனென்றால் அவளுக்கு உயிர்! அவனில்லாது அவளை எங்கும் பார்க்கமுடியாது! இப்போகூட....... செல்வி நல்லாத்தான் இருப்பாளாம். வெடிச்சத்தம், விமான இரைச்சல் கேட்டாலே போதும்! வீதிக்கு வந்துவிடுவாளாம். பின்பு சரியான குணமடைய பழையபடி பத்து - பதினைந்து நாள் தேவையென்று சொல்லி முடித்தபோது கந்தசாமியின் தோள் துண்டின் ஒரு பாதி நனைந்து முடிந்திருந்தது! இந்தச் சுவடுகளின் பின்னால் உள்ள இரத்தக் கறைகளை கழுவுவதாயின்........ ஒரு யுத்தத்தின் தோற்றம் மாறினால்தான் இவள் சித்தத்தையும் மாற்றலாம்! (09.07.1995 அன்று நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் திட்;டமிட்ட நடவடிக்கையில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களின் கண்ணீர் கதைதான் இந்தச் சுவடுகளின் பின்னால் கதையாகும். இந்த உண்மைச் சம்பவத்தில் வரும் பெயர்கள் மட்டும் கதாசிரியரின் கற்பனை.)

Poikai.com, Poikai.com,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.