Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் இராணுவ வெற்றிகள் மிகைப்படுத்திய பொய்கள் - இக்பால் அத்தாஸ்

Featured Replies

புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு ரஜனி அஜித் விஜேயின்ரை பாட்டுகள் கேட்டா நல்லா ஓரம்மம் வரும் என்று தெரியும்.

பழந்தமிழர்களிற்கு சமஸ்கிருதத்தில ஓதினால் ஓர்மம் வரும்.

3 லட்சம் படையில் 30...40 ஆயிரம் தப்பி ஓடினார்கள் என்பது 15வீதம் கூட இல்லை. கூலிப்படையில் அது ஒரு அதிசயமான விடையமல்ல.

உதுகள் கிடக்க இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சு சிங்களப்படைக்கோ அரசுக்கோ தமிழின அழிப்பு நோக்கமில்லை என்று. குடித்தொகை ரீதியாக 100வீதம் அழிக்க முற்பட்டு மாட்டுப்படாமல் மோட்டுச் சிங்களவர்கள் கட்டம் கட்டமாக சந்ததி சந்ததியாக அரங்கேற்றுகிறார்கள். அதாலை தமிழர்கள் அதிகம் பயப்பிடத்தேவையில்லை. ஒட்டுண்ணியாக சீவியத்தை அப்பிடியும் இப்பிடியும் கதைச்சு ஓட்டுவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 லட்சம் படையில் 30...40 ஆயிரம் தப்பி ஓடினார்கள் என்பது 15வீதம் கூட இல்லை. கூலிப்படையில் அது ஒரு அதிசயமான விடையமல்ல.

உதுகள் கிடக்க இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சு சிங்களப்படைக்கோ அரசுக்கோ தமிழின அழிப்பு நோக்கமில்லை என்று. குடித்தொகை ரீதியாக 100வீதம் அழிக்க முற்பட்டு மாட்டுப்படாமல் மோட்டுச் சிங்களவர்கள் கட்டம் கட்டமாக சந்ததி சந்ததியாக அரங்கேற்றுகிறார்கள். அதாலை தமிழர்கள் அதிகம் பயப்பிடத்தேவையில்லை. ஒட்டுண்ணியாக சீவியத்தை அப்பிடியும் இப்பிடியும் கதைச்சு ஓட்டுவம்.

தமிழின குடித்தொகை அழிப்பு வெறியோட ஓர்மத்தோட 30 வருசமா சிங்களவன் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சு 99.99% தமிழர்கள் ( 80 ஆயிரம் பேர்) பலியாகிட்டினம். ஆனா நாங்க மட்டும் 12 இலட்சத்துக்கும் அதிகமா தமிழீழ எல்லையைத் தாண்டி சொகுசு வாழ்க்கைக்க நுழைஞ்சிட்டம்.

நாளை இதை நாங்கள் படவிளக்கத்தோட தரேக்கதான் சர்வதேசம் உணரும்.

1995 இல 1,20000 இருந்தது இராணுவம் இப்ப 3,00000 ஆக திடீர் என்று அதிகரிச்சிட்டுது.. அது ஒன்றுமில்ல மகிந்த தலைமையில் சிங்களவன் ஓர்மமாப் புறப்பட்டு இருக்கிறதுதான் காரணம். இதைப் புரிஞ்சுக்காம அஜித்தின் றீமேக் பில்லா பார்த்திட்டு இருக்கினம்... பனங்கொட்டையள்.

வெள்ளவத்தையில கூல் பார் நடத்திற தெமிழ கெட்டிகள் எல்லாம் சிங்கள வாரிசுகளாம். 30 வருசத்துக்க இனமாற்றம் பெற்றவையாம்..!

12 வருசமா குடாநாட்டுக்க தமிழ் குடித்தொகை அழிப்புச் செய்ததில சுமார் 4,00000 பேர் பலியாகிட்டினம். 90இல் இருந்து அரச கட்டுப்பாட்டுக்க இருக்கிற மட்டக்களப்பு நகரமும் திருமலையும் 100% சிங்கள நகராகிட்டுது. தமிழர்கள் மருந்துக்கும் இல்லை. ஆனால் தேர்தல் நடக்கப் போகுது என்ற உடன தமிழ் தேசிய எம்பிக்கள் கண்டன அறிக்கை விடினம். இதைப்பற்றி எல்லாம் அங்க போற அகாசி சொல்லுறாப் போல இல்ல. இராணுவ அதிகாரிகளோடையும் தமிழ், சிங்கள அரசாங்க அதிபருடனும் மேசை போட்டு கூல் ரிங் குடிச்சிட்டு வாறார்..!

நாங்க நினைக்கிறம் எங்கட விளக்கப்படங்கள் பெரும் உலகப் புரட்சியை செய்யும் என்று.

என்னமா தமிழின அழிப்பு தொடருது.. 30 வருசமா கொஞ்சம் கொஞ்சமா 30 இலட்சம் தமிழரைக் கொன்று விட்டினம். இப்பதான் இங்க சில பேர் சிங்களப் படை தமிழ் மக்களை பாதுகாக்க வரும் படை என்று ஒட்டுண்ணித் தகவல் வழங்கினம்...!

நாங்கள் என்னடான்னா சர்வதேசத்துக்கு சொல்லுறம் இன அழிப்புப் போரால 99.99% மக்கள் இறந்திட்டினம் என்று. அப்ப லண்டனுக்கு ஓடி வந்த 2 இலட்சம் பேரும்.. ஐயோ அவையள்.. தமிழ் மக்கள் இல்ல. டமிழ் மக்கள்.. என்ற உறுதித்தகவலை விளக்கப்படம் போட்டு விளக்கிட்டு இருக்கிறமில்ல..! :o:D

------------

சிங்கள அரசின் தமிழின அழிப்புக் கொள்கையாக முதன்மை பெற்றிருப்பது மட்டுப்படுத்திய படுகொலைகளுடன் தமிழ் மக்களின் நில மற்றும் ஆட்சியுரிமையையும் இனத்துவ விகிதாசாரத்தையும் பறிப்பதுதான்.. அது தான் யதார்த்த நிலை. தமிழின பூரண சுத்திகரிப்பு புலி அழிப்பின் பின்னால் நிகழலாம். ஆனால் தற்போதையை நிலையில் அப்படி நிகழ்வதாகக் காட்ட முடியாத நிலையை சிங்களம் தோற்றிவித்துள்ளது..!

கொசொவோவில் 3,000 அல்பேனிய முஸ்லீம்களை கொன்ற மிலேசவிச் சர்வதேச போர்க் குற்றவாளியாகி நிற்க.. சிறுகச் சிறுக தமிழர்களில் 80,000 பேரைக் கொன்ற ஜே ஆர்.. பிரமேதாச.. டி பி.. சந்திரிக்கா.. மகிந்த எல்லாம் வெள்ளைமாளிகையில் அரச விருந்துண்டுவருவதன் பின்னணி என்ன..??!

100% தமிழின அழிப்பின் வெளிப்பாட்டோ..???! இல்லவே இல்லை சிங்களம் கைக் கொண்டு வரும் தமிழின அடக்குமுறைக் கொள்கையின் தாக்கம்.. வடிவம்..என்பது உலக அரங்கிற்கு சரியான வடிவத்தில் இனங்காட்டப்படாமையே ஆகும்..! அதாலதான் ஜே வி பி சர்வதேசத் தூதுவர்களைக் கூட்டி வைச்சு சுட்டிக்காட்டுது.. தென்னிலங்கையிலேயே தமிழர்கள் பாதுகாப்போட இருக்க முடியுதென்றால் பிறகென்ன பிரச்சனை அவைக்கு இங்க என்று. தூதுவர் மாரும்.. அதையே பிரதிபலிக்கினம். ஆனால் தமிழ் மக்களின் உண்மைப் பிரச்சனை என்ன என்பதைச் சொல்ல அங்கு யாரும் இல்ல...!

லண்டனில உள்ள தமிழர்கள் போய் கோடன் பிரவுணட்டச் சொல்லலாமே சிங்களப் படை ஓர்மத்தோட 100% இன அழிப்பைச் செய்யுது.. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புரூண்டியில போல கொல்லப்படினம் என்று... ஏன் செய்யாமல் இருக்கிறியள்..! விமானக் குண்டு விழும் வரை பார்த்துக் கொண்டு..! :lol:

Edited by nedukkalapoovan

குறுக்கால போவானின் பரந்து பட்ட அறிவு திறனை கொஞ்சம் விசாலமாயே ஆராயலாம்...

ஆனாலும் சில குறிப்புக்களை மட்டும் தரவிருப்பம். ஏனெண்டா நான் மினக்கெட்டு தட்டுழுத மட்டுறுத்துறவை இலகுவாய் தலைப்புக்கு சம்பந்தம் இல்லை, வலிந்த கருத்து திணிப்பு எண்டு மிக இலகுவாய் வெட்டி எற்றிவினம். ( உது தான் யாழின் தலை எழுத்து)

சிங்களவன் மோடன் கூலிக்கு மாரடிக்கிறான். ஓயாத அலைகள் 5 தொடங்கினவுடன் எல்லாத்தையும் போட்டுட்டு சாறியும் சறத்தையும் கட்டிக் கொண்ட ஓடிவிடுவங்கள் இல்லாட்டி அதுகள் கிடைக்காட்டி உரிஞ்சு போட்டு கோவணத்தோடை ஓட்டம் எடுப்பன் என்றியள்.

புலிகளின் பலத்தை ஒருவரும் அறியமுடியாது. அவர்களின் பலமே மரபுவழியில் முடியாவிட்டால் கொரிலாமுறையில் குடுக்கிறான் எண்டியள்.

தமிழ் மக்களிலையும் பார்க்க சிங்களவன் 10 மடங்கு அதிகம். அரசாங்கத்தை வச்சிருக்கிறவன் எண்ட வகையிலை பண பலத்திலையும் அவன் பலமானவன். அப்படி பாத்தான் படை பலம் பண பலம் எல்லாத்திலாத்திலையும் அவன் முன்னுக்கு நிக்க அவனாலை ஏன் இது வரையும் தமிழர் தரப்பை வெல்ல முடியவில்லை எண்டு ((நீங்கள் மேலை சொன்ன காரணங்களை விட) ஒரு காரணத்தை சொல்லுங்கோ பார்க்கலாம்.

இவ்வளவு பெரிய இராணுவம் ஆயுதங்கள் பல நாட்டு இராணுவ அறிவு எண்டு பலமாக எதிரி இருக்கும் போது எப்பிடி தமிழர் தரப்பு சம தரப்பாக, படை பலத்தில் சமனாக இருக்க்கிறது.? அப்படியான ஒரு அங்கீகாரத்துக்குள் பேச்சுக்கு போனது எண்டதை கோவணதை அவுக்காமால் ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ.

அப்ப சிங்களவனும் கொரிலாமுறையில செய்யிறான் தானே எண்டா. சா சா அது உலகத்து இராணுவம் எல்லாம் செய்தது தான் என்றியள். பிரேமதாச காலத்துக்கு முதல் ஜேஆர் காலத்தில இருந்தே செய்யிறாங்கள் அதுகளை மெருகேற்றி ( உலகத்து உதவிகளை கூட ஒழுங்காக பாவிக்கத் தெரியாத உந்த கூலிக்காக மாரடிக்கிற மோட்டுச் சிங்களவங்கள் தான்) இப்ப வன்னிக்கை நடத்திறாங்கள் அவ்வளவு தான் என்றியள்.

ஆரம்பத்தில கடினமாக இருக்கு பிறகு தந்திரோபாய மாற்றங்கள் வரும்பொழுது... எதில் பலம் இருந்தாலும் பலவீனமும் இருக்கும்...

புதிதாக ஆயுதங்கள் வரும் போது மாற்றம் வரும்தான். இன்னும் அப்பு வில்லோடை சண்டை நடக்க வில்லை 20 அடி தூரத்திலை இருந்து தாக்கி அழிக்கிற மரபு வளி போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் மாறியாச்சு. எறிகணைகளாலையும், மிதிவெடிகளும், கண்ணி வெடிகளும் இப்ப பேரளிவு ஆயுதங்களான பிறகு இப்பவும் ஆழ ஊடுருவும் அணியை பற்றி கவலை கொள்ளுறது எந்த ஆண்டுக்க உங்கட போரியலை வச்சு இருக்கிறீங்கள் எண்ட சந்தேகம் வந்திடுதூ.

எது ஆரம்பமாக இருக்கு ஜேஆர் பிரேமதாச காலமா அல்லது மெருக்கேற்றப்படும் முறைகளா? ஆரம்பம் என்று சொல்லும் அளவிற்கு வேகமாக மெருகேற்றி மாற்றங்களை சிங்களவன் கொண்டுவருகிறானா?

அது எப்படி குறிக்கோள் இல்லாது கூலிக்கு மாரடிப்பவன் அப்படி வேகமாக இயங்குகிறான்? அவனுடைய அரசியல் தலமை வேறு சுயலாபத்திற்காக மாத்திரம் முடிவெடுக்கிறது என்று திருப்த்தியடைகிறோமே.

குறிக்கோள்ளோடு சிங்களவன் சண்டை பிடிப்பானாக இருந்தால் தமிழ்ழர் தரப்புக்கு கட்டுப்பாட்டு பிரதேசம் எண்டு ஒண்டு இருக்க முடியாது, அதுதான் உண்மை. அதுக்கு தேவையான வளமும் ஆள் தொகையும் அவனிடம் இருக்கிறது.

ஒருவேளை தமிழர்களை ( சிங்களவகாகவும் ) இலங்கையின் பெருண்பாண்மை யானவர்களாகவும் சிங்களவர்களை (தமிழர்களின் நிலையிலும்) சிறுபான்மை யானவர்களாயும், தமிழர்கள் அரசாங்கம் சர்வதேச ஆதரவு இருப்பவர்களாயும், தமிழர்களுக்கு எமது தலைவர் பிரபாகரன் தலைவராக இருப்பதாக சிந்தித்து பாருங்கள். உண்மையான நிலபரம் என்னவாக இருந்து இருக்கும் எண்ற்று சில வேளைகளில் புரிபடலாம். அப்ப தமிழர்கள் கோமணதை கழட்டி எறிந்து போட்டு ஓடுபவர்களாக ஒருவேளை தேரியுமோ என்னவோ.?

Edited by அகிலன்

குறுக்கால போவானின் பரந்து பட்ட அறிவு திறனை கொஞ்சம் விசாலமாயே ஆராயலாம்...

ஆனாலும் சில குறிப்புக்களை மட்டும் தரவிருப்பம். ஏனெண்டா நான் மினக்கெட்டு தட்டுழுத மட்டுறுத்துறவை இலகுவாய் தலைப்புக்கு சம்பந்தம் இல்லை, வலிந்த கருத்து திணிப்பு எண்டு மிக இலகுவாய் வெட்டி எற்றிவினம். ( உது தான் யாழின் தலை எழுத்து)

தமிழ் மக்களிலையும் பார்க்க சிங்களவன் 10 மடங்கு அதிகம். அரசாங்கத்தை வச்சிருக்கிறவன் எண்ட வகையிலை பண பலத்திலையும் அவன் பலமானவன். அப்படி பாத்தான் படை பலம் பண பலம் எல்லாத்திலாத்திலையும் அவன் முன்னுக்கு நிக்க அவனாலை ஏன் இது வரையும் தமிழர் தரப்பை வெல்ல முடியவில்லை எண்டு ((நீங்கள் மேலை சொன்ன காரணங்களை விட) ஒரு காரணத்தை சொல்லுங்கோ பார்க்கலாம்.

-1- சிங்களவர்கள் இதுவரை எடுத்த முயற்சிகளை போட்ட திட்டங்களை தமிழர்களால் குழப்ப முடியும் என்பதில் ஆரம்பித்து சில களங்களில் தடுக்க முடியும் என்பது தான் இதுவரை நிரூபிக்கப்பட்டது. இது சியமசெட்டியில் தொடங்கி மிக்27, MBRL அளவிற்கு சிங்களத்தின் தேவை வந்து நிக்கிற அளவிற்கு தமிழர்களின் எதிர்ப்பு வழர்ந்திருந்தாலும் இந்த நிலையில் மாத்திரம் திருப்த்தி காண முடியாது.

-2- அடுத்த நிலையில் தமிழர்கள் எடுக்கும் முயற்சிகள் போடும் திட்டங்களை சிங்களவர்களால் தடுக்க முடியும் என்றாலே எல்லைகள் பற்றி எப்படி பலத்தின் அடிப்படையில் பேச முடியும்? தமிழரின் முயற்சிகளை சிங்களவனால் தடுக்கு முடியும் என்ற நம்பிக்கை அவனிற்கு இருந்தாலே எப்படி தொடர் குடியேற்றங்களால் அபகரித்து வைத்திருக்கும் கிழக்கின் பல பகுதிகளை எமக்கு விட்டுத்தரப்போகிறான்? அப்படியான பேச்சுகள் அடுத்த கட்ட யுத்தத்திற்கான தயார்படுத்தலிற்கான இடைவேளையாகத்தான் 2 தரப்பிற்கும் இருக்கும்.

-3- தமிழர்கள் எடுக்கும் முயற்சிகள் போடும் திட்டங்களை சிங்களவர்களால் தடுக்க முடியாது என்று நிலையில் தான் சிங்களம் இறுதி உடன்பாட்டிற்கு வரும். இந்த நிலைக்குத் தமிழர்கள் சென்றால் அதை எதிர்கொள்ளுவதற்கு சிங்களவன் மனிதாபிமான அவலம் என்று ஆதரவு தேடத்தான் குடியேற்றங்களை அவசர அவசரமாக விரிவாக்கிக் கொண்டிருக்கிறான். அத்தோடு நிர்வகித்த சுதந்திரம் என்று பிரிவதற்கான வாக்கெடுப்பு நடத்தினால் அதற்கான வெற்றிவாய்ப்பை குறைக்கலாம் போன்ற காரணங்களும் தான்.

ஆனால் நாமோ முதலாவது நிலையோடு சிற்றின்பம் கண்டு கொண்டிருக்கிறம் ஐய்யோ சர்வதேசம் எங்களை ஏமாத்திப்போட்டு ஐய்யோ இந்தியாக்காறன் கழுத்தறுக்கிறான் ஐய்யோ நோர்வேக்காறன் ஏமாத்திப்போட்டான் என்று. இல்லாட்டி எந்த நேரமும் எந்த வேலிக்காலையும் பாஞ்சு எங்கையும் கொடியேத்தி நாளைக்கே தமிழீழம் பிரகடனம் செய்துபோடுற நிலமையில் தான் நாங்கள் இருக்கிறம்.

இவ்வளவு பெரிய இராணுவம் ஆயுதங்கள் பல நாட்டு இராணுவ அறிவு எண்டு பலமாக எதிரி இருக்கும் போது எப்பிடி தமிழர் தரப்பு சம தரப்பாக, படை பலத்தில் சமனாக இருக்க்கிறது.? அப்படியான ஒரு அங்கீகாரத்துக்குள் பேச்சுக்கு போனது எண்டதை கோவணதை அவுக்காமால் ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ.

தமிழர்கள் பெற்றது சமச்சீரற்ற படைவலுச்சமநிலையே அன்றி சமச்சீரான படைவலுச்சமநிலை அல்ல. தனிநாடு வேண்டும் என்றால் அதை சிங்களமும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ள வைக்கவும் முதலில் குறைந்தபட்சம் நாம் சமச்சீரான படைவலுச்சமநிலைக்குரிய அளவில் பொருளாதார தொழிநுட்பவளங்களை அதிகரிக்க வேண்டும். அதுவும் நாம் எண்ணிக்கையில் பலமடங்காக குறைந்தவர்கள் என்ற நிலையில் தொழிநுட்பத்தின் பங்கு அதிகம் தேவையானது. அந்தவகையில் இந்தா இறுதியுத்தம் தொடங்கப்போகுது தமிழீழப் பிகடனம் செய்யப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புகளோடு நோக்கினால் புலிகள்-தமிழர்கள் பலவீனமாகத்தான் இருக்கிறார்கள். புலிகளை தோற்கடிக்க சிங்களவர்கள் போடும் திட்டங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று (மீண்டும் மீண்டும்) நிறுவினால் போதும் என்பதற்கும் இறுதியுத்தம் - தமிழீழப் பிரகடனம் என்பவற்றிற்குமான இடவெளி பாரியது. புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்ற எதிர்ப்பார்ப்பை பொறுத்தவரை புலிகள் மிகவும் பலமாகத்தான் இருக்கிறார்கள் கடந்த 30 வருடங்களாக. ஆனால் அந்தப் படிநிலையே தனிநாட்டைப் பெற்றுத்தராது இன்னும் 30 வருடங்கள் சென்றாலும். எமது இறுதி இலட்சியத்தைக் கருத்தில் கொண்டு புலிகள் பலமாக இருக்கிறார்கள் என்று எம்மை நாமே ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். இந்த நீண்ட கால உண்மையை புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டும். அது வரை தமிழீழம் வெறும் பகல்கனவு தான்!

புதிதாக ஆயுதங்கள் வரும் போது மாற்றம் வரும்தான். இன்னும் அப்பு வில்லோடை சண்டை நடக்க வில்லை 20 அடி தூரத்திலை இருந்து தாக்கி அழிக்கிற மரபு வளி போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் மாறியாச்சு. எறிகணைகளாலையும், மிதிவெடிகளும், கண்ணி வெடிகளும் இப்ப பேரளிவு ஆயுதங்களான பிறகு இப்பவும் ஆழ ஊடுருவும் அணியை பற்றி கவலை கொள்ளுறது எந்த ஆண்டுக்க உங்கட போரியலை வச்சு இருக்கிறீங்கள் எண்ட சந்தேகம் வந்திடுதூ.

ஆம் புதிதாக ஆயுதங்கள் வரும்போது மாற்றங்கள் வரும் இது தொடரச்சியான பலப்போட்டி. இருதரப்பும் ஒரு இறுதி உடன்பாட்டிற்கு வரும் வரை தொடர்ந்து தமது பலத்தை விருத்தி செய்வதில் போட்டி போட்ட படி முதலீடு செய்ய வேண்டும். இந்த நீண்டகால பொறுப்பிற்கு புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார அறிவியல் தொழிநுட்பரீதியில் தம்மை தயார்படுத்த வேண்டும். போலியாக இறுதி யுத்தத்திற்கு காசு வேண்டுறம் இதோடை எல்லாம் அடிச்சுப் பிடிச்சு முடிச்சுடுவம் என்ற நிலைப்பாட்டை நம்பவைப்பது இலகுவாக இருக்கலாம் ஆனால் அடுத்தகட்டத்திற்கு போகும் போது மக்களிற்கு குழப்பத்தை உருவாக்கும் அவர்களும் அதற்கு தயாராக இருக்கப் போவதில்லை. போராட்டத்தின் பங்காளிகளாக இருந்து உரிய பங்கை ஆற்றுவதற்கு அவர்களிற்கு உண்மை நிலை தெரிய வேண்டும். அவர்களை மாயையில் வைத்திருந்தபடி பங்களிப்புகள் போதாது என்று கவலைப்பட்டுப் பயனில்லை.

ஒரு குறித்த காலத்தில் குறித்த பின்னணிகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உருவான (சமச்சீரற்ற) படைவலுச்சமநிலை வைத்துக் கொண்டு பலமாக இருக்கிறம் சமதரப்பாக உடன்பாடு செய்தனாங்கள் எண்டு எவ்வளவு காலம் படங்காட்டப் போறியள்? ஊர்உலகத்தில இருக்கிற நாடுகள் எல்லாரிட்டையும் இருந்து சிறீலங்கா பெறும் உதவிகளை சமப்படுத்த புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து தான் உதவி வரவேண்டும் என்றால் அவர்களிற்கு அந்த உண்மையை விளக்காது பழைய புராணத்தைப் பாடி ஏமாற்றுவதால் இறுதியில் நன்மையடைவது யார்?

குறிக்கோள்ளோடு சிங்களவன் சண்டை பிடிப்பானாக இருந்தால் தமிழ்ழர் தரப்புக்கு கட்டுப்பாட்டு பிரதேசம் எண்டு ஒண்டு இருக்க முடியாது, அதுதான் உண்மை. அதுக்கு தேவையான வளமும் ஆள் தொகையும் அவனிடம் இருக்கிறது.

கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருப்பது பின்தளமே அன்றி உரிமைகோரும் பிரகடனம் செய் தயார் என்று அங்கலாய்க்கும் தாயகத்தின் பெரும்பகுதிகள் அல்ல. ஆனால் பின்தளத்திற்குள்ளும் ஊடுருவி தாக்குதல் செய்வதில் மூச்சோடு நிற்பதுதான் சிங்களத்தரப்பில் இன்று தென்படும் ஓர்மத்தின் வெளிப்பாடு. தமிழர்கள் தென்பகுதிகளில் சிங்களத்தின் கோட்டைக்குள் தாக்குதல் செய்துவிட்டதாக பெருமைப்படுவது போல் உரிமை கொண்டாடும் நிலையில் தான் சிங்களவன் துணிந்து நிக்கிறான்.

ஒருவேளை தமிழர்களை ( சிங்களவகாகவும் ) இலங்கையின் பெருண்பாண்மை யானவர்களாகவும் சிங்களவர்களை (தமிழர்களின் நிலையிலும்) சிறுபான்மை யானவர்களாயும், தமிழர்கள் அரசாங்கம் சர்வதேச ஆதரவு இருப்பவர்களாயும், தமிழர்களுக்கு எமது தலைவர் பிரபாகரன் தலைவராக இருப்பதாக சிந்தித்து பாருங்கள். உண்மையான நிலபரம் என்னவாக இருந்து இருக்கும் எண்ற்று சில வேளைகளில் புரிபடலாம். அப்ப தமிழர்கள் கோமணதை கழட்டி எறிந்து போட்டு ஓடுபவர்களாக ஒருவேளை தேரியுமோ என்னவோ.?

ஓம் ஓம் ஒருவேளை தமிழர்கள் அமெரிக்கர்களாகவும் தலைவராக ஜேர்ச் புஸ்சாகவும் இருந்தால்....

ஒருவேளை தமிழர்கள் ஆங்கிலேயர்களாகவும் தலைவராக கோடன் பிறவுண் இருந்திருந்தால்...

ஒருவேளை புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லாரும் கடவுளின் அவதாரமாக ஒளிவட்டத்தோடு பிறந்திருந்தால்.... என்று கனக்க எழுதி சிற்றின்பம் காணலாம். :lol:

குறுக்கண்ணே.! உங்களுக்கு தெரிந்த அளவுக்கு போராட்டம் எங்கை நிக்குது எண்டதை விளங்க படுத்தினீங்கள். கேட்க புல் அரிக்குது.

அண்ணே இண்டைக்கும் ஆமியை அடிக்க வேணும் கொல்லவேணும் என்பது போராட்டத்திலை கட்டாயமான ஒரு அம்சம். அதை செய்ய முடியாவிட்டால் எங்களை சாதாரணமாக தற்காத்து கொள்ள முடியாது எண்டதிலை தாயக தமிழர்கள் தெளிவாக புரிந்து நிக்கிறார்கள்.

தற்காலிகமாக போராட்டம் எண்டது எங்களை நாங்கள் பாதுகாப்பதுக்காக எண்ற அளவில் நிற்கிறது. அதாவது தற்காப்பு சண்டை . இதை தமிழர்கள் புற சூழலை கையாளவே பயன் படுத்து கிறார்கள்.

வெளிநாடுகளின் தடை என்பது கூட இலங்கை அரசினால் வெளிநாடுகளுக்கு கொடுக்க பட்ட ஆசை வார்த்தைகளும் உறுதிகளையும் அடிப்படையாக கொண்டது. சர்வதேசம் இலங்கை அரசின் உண்மையான நிலைப்பாட்டை சரியாக புரிந்து கொண்டு செயல்பட வேணும் என்பதுக்காக தேவையான அவகாசம் கொடுக்க பட்டு உள்ளது, இன்னும் அவகாசம் கொடுக்க படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இண்டைய இராணுவ நடவடிக்கை களுக்கு எல்லாம் ஆரம்பம் எண்ட ஒண்டு இருக்கு. அதை மாற்று குழு நபர் ஒருவரின் கூற்று படி மாவிலாத்திலை சும்மா இருந்து இருந்தால், மூதூரிலை கை வைக்காமல் இருந்து இருந்தால் பேசாமல் கிழக்கிலை இருந்து இருக்கலாம் எண்டார். அவருக்கு சொன்ன பதில்தான் அண்ணே உங்களுக்கும். செயல் என்பது முக்கியம் இல்லை அதை விளைவு என்ன எண்டதுதான் முக்கியம்.

விளைவு எண்டது, தமிழர் படுகொலைகள், இடம் பெயர்வுகள், அழிவுகள், இண்டைய போர் நிறுத்த முறிவு எண்பது எனது கணிப்பு. அதுக்கு சர்வதேசம் என்ன செய்ய போகுது என்பதும் விளைவுதான். இனவெறியை சிங்களம் வெளிக்காட்டிய விதம் என்பதும் இதில் கவனிக்க தக்கது.

எனக்கு எண்டா சிங்களம் தமிழனை அளிக்க இதை விட சிறப்பாக செயல் பட்டு இருக்க முடியும் என்பது மிகுந்த நம்பிக்கை யோடை இருக்கிறன். அதால சிங்களவனை மோட்டு சிங்களவன் எண்டு சொல்கிறதிலை சந்தோசம் தான்.

இப்ப நீங்கள் எல்லாம் செய்ய வேண்டியது என்ன எண்டால் ஊரிலை மக்கள் பசியாலையும் இடம் பெயர்வாலையும் கஸ்ரப்படுகிறார்கள். உங்களால முடிஞ்சது எதையாவது அவர்களுக்காக அனுப்பி வையுங்கள். அவர்களின் வாழ்வை கட்டி எழுப்ப எதாவது முடியும் எண்டால் அதை செய்யுங்கள்.

நீங்கள் புலிக்கு ஆயுதம் வாங்க தேவை இல்லை. அவர்களுக்கு தொழில் நுட்டபமும் வாங்க வேண்டாம். கோயில்களிலை தான் தமிழ் சனம் அதிகமாக கூடுகிறார்கள் எண்டால் அங்கை போய் அவர்களுக்கு புரியும் வண்ணம் தமிழர்களின் தேவைகளை புரிய வையுங்கள்.

அதுக்கு

  • கூட்டங்கள் வைக்கலாம்.

  • துண்டு பிரசுரங்கள் வைக்கலாம்.

  • அல்லது தெரு நாடகங்களை வைப்பதின் மூலம் சொல்லுங்கள்.

அதை விட்டு போட்டு கோயில் மணிகளை புடுங்கி கோயிலை மூட நிக்காதேங்கோ. எதையாவது ஆக்கமாக செய்யுங்கோ.

(மட்டுறுத்துனர் மாருக்கு நான் எழுதினது எதையாவது நீக்க வேணும் எண்டு கட்டாயம் தோணும். நீக்கிறது எண்ட முழுமையாக நீக்கவும்.)

ஒருவர் இனஅழிப்பு என்ற குறிக்கோள் எல்லாம் இல்லை ஆட்சி அதிகாரத்தில பங்கு கேட்காகமல் மட்டந்தட்டி அடக்குவதற்குத்தான் சிங்களவன் இயங்குறான்;.

மற்றவர் சிங்களம் செய்த இனப்படுகொலைக்கு சர்வதேசத்தின் விளைவைப் பொறுத்திருந்து பாருங்கோ எல்லாத்தையும் திறந்து விடப்போகுது.

:lol:

தமிழர், அரசு, படைகள் ஆகியவற்றின் கடந்தநால நிகழ்வுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்துக்கொண்டு பலம் பலவீனங்கள் நன்றாகவே ஆராயப்படுகின்றன. எதிர்கால நிகழ்வுகளும் இப்படித்தானிருக்கும், என்றும் சில இடங்களில் கணக்கிடப்படுகிறது.

நிகழ்வுகளின் சாதகத் தன்மையும் பாதகத் தன்மையும் ஒரேநிலையில் வைத்து ஆராயப்படுகிறது. ஆனால் அறியப்படாத புலிகளின் பலம் பலவீனம் கடந்தகால நடப்புகளை வைத்துக்கொண்டுமட்டும் ஆராயப்படமுடியாது. அதைத்தான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். மரபுப்போருக்குத் தயாரில்லையென்றால் கெரில்லா போர்முறைக்கு மாறுவது. இந்த மாறும் விடயத்தை அரச படைகளினால் ஒருபோதும் செய்ய முடியாது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிற்பாடு விடுதலைப்புலிகள் எதையும் அதிகளவில் இழக்கவில்லை. அதே நேரத்தில் அரசும் தனது பிரசாரத்தில் கூறுவதுபோல் பெரியளவு வெற்றிகளையும் பெறவில்லை. ஆயுதங்கள் அரசினால் படைகளிடம் குவிக்கப்பட்டுள்ளது. அரசும் போர்புரிதலுக்கு தயார்நிலையிதான் உள்ளனர்.

ஆனால் இங்கு பிரஸ்தாபிக்கப்படும் ஒரு சொல் "ஓர்மம்" என்பது. இது எப்போது வரவேண்டும். அது களத்திலே காட்டப்பட வேண்டும். மூதூர்ப் பிரதேசம் தற்காலிக மீள்நிலைக்குள் வந்தபோது அரச படைகளின் நிலைப்பாடு எவ்வாறானதாகவிருந்தது. அந்த நிலையில்தான் "ஓர்மம்" எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இராணுவ இழப்புக்கள் தென்பகுதிக்கு சரியாக அறிவிக்கப்படாமையால்தான் படையதிகரிப்புகள் இடம்பெறுகின்றது. போர்செய்ய வேண்டும், நாட்டைப்பாது காக்கவேண்டும், புலிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்களப் படையில் இளைஞர்கள் இணைவதில்லை. அவர்களுக்கு களநிலைவரம் சரியாக உணர்த்தப்படுவதில்லை. அதே நேரம் தமிழர் தரப்பு களத்தின் கடுந்தன்மையை நன்றாகவே உணர்ந்துள்ளது. மாற்று வழியேதுமின்றி போர்நிலைக்குள் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. இதில் "ஓர்மம்" எந்தப்பகுதிக்கு அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் இனஅழிப்பு என்ற குறிக்கோள் எல்லாம் இல்லை ஆட்சி அதிகாரத்தில பங்கு கேட்காகமல் மட்டந்தட்டி அடக்குவதற்குத்தான் சிங்களவன் இயங்குறான்;.

மற்றவர் சிங்களம் செய்த இனப்படுகொலைக்கு சர்வதேசத்தின் விளைவைப் பொறுத்திருந்து பாருங்கோ எல்லாத்தையும் திறந்து விடப்போகுது.

:lol:

இன அளிப்பு குறிக்கோள் இல்லையோ.? சிறப்பா இருக்கு உங்கட வாதம். வளர்ந்து வரும் ஒரு குடும்பத்தின் தூண் ஒவ்வொண்றையும் சாய்த்து பசி பட்டினியில் தள்ளி மக்களின் நோக்கதை சிதைப்பது என்பது, உரிமை கேட்க்கும் எல்லா நாடுகளிலையும் இண்றைய தேதியின் ஆழும் வர்க்கத்தின் ஒடுக்கும் தந்திரோபாயம்.

உங்களை மட்டம் தட்டுவது என்பது பலமானவர்களை பலவீனர் ஆக்கும் என்பதுக்கு அல்ல, உங்களை வறுமைக்குள் தள்ளுவது மட்டுமே. அப்படி மட்டம் தாட்டுவதால் மட்டுமே போராடுபவர்கள் உயிர் வாழுவத்துக்காக செல்வத்துக்காக மட்டும் போராடும் நிலமையை தோற்றுவிக்கும்.

தவிர சர்வதேசம் உங்களுக்கு ஒண்றையும் தூக்கி சும்மா தந்துவிடாது. நிங்கள் கேட்க்கும் கோயில் மணி உட்பட.! நீங்கள்தான் உங்கட மணிகளை உபயோகித்து எதாவது செய்ய வேணும் ( நான் மணி எண்டது பணத்தை மட்டுமே)

எங்கள் மீதான அழுத்தம் நீக்க பட வேண்டும். அது சிங்களத்தின் இரட்டை தன்மையை சர்வதேசம் புரிந்து கொள்வதால் மட்டுமே முடியும். அது நிகழாது என்பது பொய்த்து வருகிறது. அப்போது சிறீலங்காவின் மனித உரிமைமீறல்கள் கருத்தில் எடுத்து கொள்ளப்படும். அதிலை நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்.

உருக்கிறதுக்கு ஏதாவது கோயில் மணிகள் கிடைக்குதா எண்டு மட்டும் பாருங்கோ. போராட்டம் போகும் போக்கின் திசையை உங்கட விருப்புக்கு மாத்தி கொண்டு இருக்காமல் விட்டால் நல்லது.

ஆயுதங்கள் வாங்க வேண்டிய தேவையிலை நிச்சயமாய் நீங்கள் இல்லை.. அதுக்கான பதிலை புலிகள் பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி விட்டார்கள்.

Edited by அகிலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.