Jump to content

ஷார்ள் போதலயர் - பிரஞ்சு எழுத்தாளர். (வாசுதேவன்)


Recommended Posts

பதியப்பட்டது

Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did,

expelled from Rome .-Baudelaire.

சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்;ஸ் போதலயர்.

'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது.

ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக உணர்ந்து வேதனைப்படுகிறான். இருப்பினும், இளவயதிலேயே தந்தையை இழந்த தாயின் புதியவாழ்க்கையிலான மகிழ்ச்சி அவனுக்குத் திருப்தியை அளிக்கிறது. தனது புதிய தந்தையுடன் ஓரளவான சுமூக உறவையும்பேணிக்கொள்கிறான்.

ஏதாவது ஒரு நாட்டின் தூதுவராலய ராஜதந்திரியாக வருவதற்கு நீ கல்வி கற்க வேண்டும் என்று தாய் கூறினாள். அவளின் கணவனான இராணுவ அதிகாரி இராணுவத்தில் சேர்ந்து கொண்டு பெரிய பதவியை அடையவேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் ஷரர்ல் போதலயர் தான் ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் எனத் திடமாக உறுதி பூண்டிருந்தான். எல்லோரினதும் தொல்லை தாங்காது இறுதியில் சட்டப் படிப்பைத் தொடர்வதற்குச் சம்மதம் தெரிவித்தபோதும் கவித்துவப் பூரணத்தைக் கண்டடைவதையே அவன் மனம் இலக்காக் கொண்டிருந்தது.

விக்டர் ஹிகோவின் நாடகமொன்றைப் பார்த்த புளகாங்கிதத்தில், அவருக்குத் திறந்த மடையாக சிறிய வயதில் போதலயர் எழுதிய கடிதமே அவனின் துணிவையும், இலக்கியத் திறனையும் வெளிப்படுத்தப் போதுமானது.

அழகற்ற யூதச் சிறுமி ஒருத்தியுடன் விபச்சார உறவில் (முதலுடலுறபனுபவம்) ஈடுபட்டு நோயையும் உள்வாங்கிய இளைஞன் ஷார்ல் தன்னை அந்நோயிலிருந்து கடினமாகவே விடுவித்துக்கொள்கிறான்.

இளவயதிலேயே உலகத்தால் வெறுப்படைந்த போதலயர் அபத்த உலகை மறப்பதற்காய் தன்னை வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபடுத்திக்கொண்டான். "இவ்வுலகின் வஞ்சகங்களையும், அழுக்குகளையும் மறப்பதற்காய் வீர்ஜலை வாசிக்கப்போகிறேன்" என்று கடிதமொன்றில் தன் சகோதரனுக்குக் குறிப்பிட்டிருக்கிறான்.

இளைஞனான காலத்தில், ஹொஸ்டலில் சேர்க்கப்பட்ட போதலயருக்குக் கூடாத கூட்டுகளும் கட்டற்ற வாழ்வும் கடன்தொல்லைகளை உருவாக்குகின்றன. சகோதரனின் உதவி ஓரளவு கிடைத்தபோதும் நிலை மிகவும் சங்கடத்திற்குள்ளானது.

"உனது கூட்டாளிகள் உன்னைப் பெண்களிடத்தில் கூட்டிச் சென்றார்கள். நீ ஒழுக்கமற்ற வாழ்வை மேற்கொண்டாய். அப்பெண்களுக்கு உணவும் உடையும் தேவையானவையும் வழங்குவதற்காய் உன் பணத்தைக் கண்டபடியெல்லாம் செலவளித்துக் கொண்டாய். கடனாளியானாய். எதிர்பார்ப்புகளை வழங்கிய குழந்தையாகவிருந்த உன்னை நீயே ஒரு கட்டற்ற ஆடவனாக்கினாய். சமூக விதிகளை உடைத்தெறிந்து, அதனுடடான கட்டுக்களை அவிழ்த்தெறிந்து, வாழ்க்கை பற்றிய பார்வையை வித்தியாசமாகக் கொண்டிருந்த வயதில் அதிகமானோரையும் மதிக்காது, ஒருநாள் வாழ்வை உண்மையென நம்பி, மறுநாட்களை மறந்து வாழ்ந்தாய்... " எனச் சகோதரன் போதலயருக்கு எழுதிய கடித வரிகள் நிலைமையைத் தெளிவுற விபரிக்கின்றன.

செய்தியைக் கேள்வியுற்ற வளர்ப்புத் தந்தை "வழுக்கல் நிறைந்த பாரிஸின் வீதிகளை" விட்டுத் தன் வளர்ப்பு மகனைக் காப்பாற்று முகமாக எங்காவது நீண்ட பயணமொன்றிற்கு போதலயரை அனுப்பி வைக்கத்திட்டமிட, ஒரு வருடம் நீடிக்கக்கூடிய இந்தியப் பயணமொன்றிற்கு போதலயர் அரைமனத்துடன் கப்பலேறினான். கப்பல் வாழ்கைமுறைகளுக்கு அடங்கி நடக்காதபோதும், தன்கடமையைச் சரிவரச் செய்யவேண்டுமென்ற நோக்கில் கப்ரன் இவ்விளைஞனை அக்கறையுடன் பராமரித்த போதும் , றெயூனியோன் தீவில் பயணத்தை இடைநிறுத்தி தான் மீண்டும் பிரான்ஸிற்குப் போகும் இன்னொரு கப்பலில் ஏறுகிறான் இருபது வயதான இளைஞன் போதலயர். கல்கத்தா வரையும் செல்ல வேண்டிய பயணம் அரைவழியில் முடிந்துவிடுகின்றது.

தந்தைவழியால் உரித்தான தனது பங்குச் சொத்தைப் பெற்றுக்கொண்டு, குடும்பத்திடமிருந்து பிரிந்து தனியான வாழ்வை ஆரம்பிக்கும் போதலயரின் செலவுகள் கட்டுக்கடங்காது, காணிகளையும் விற்று அனைத்தையும் தொலைத்துவிட்டு மீண்டும் பரதேசியாகும் நிலைக்கு போதலயர் தள்ளப்படுகிறான். தாய், வளர்ப்புத் தந்தை, சகோதரன் எல்லோருமாக வழங்கிய ஆலோசனைகள் ஏதும் பலனற்றுப் போய் குடும்பத்துடனான முறிவு உருவாகுகின்றது. சட்ட ரீதியாக இவரின் பணநலன்களைக் கவனிக்கும் முறையில் இவரது குடும்பத்தினால் இவருக்குச் சட்டக் கட்டுப்பாடுடடான பரிபாலனம் உருவாக்கப்படுகின்றது. இவரின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் மேற்பார்வைக்குள்ளாக்கப்படு

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.