Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம்

நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்!"

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

2008 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது, சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடாகிய சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினமாகும். தமது முழுமையான சுதந்திரத்திற்காக, மகத்தான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தமிழீழ மக்களுக்கோ அன்றைய தினம் ஒரு கரி நாளாகும்!

காலப் பெரு வெள்ளத்தினூடே, நீச்சலிட்டு வாழுகின்ற மனித குலம், படிப்படியாகத் தனது காட்டுமிராண்டித்தனமான வாழ்;க்கையிலிருந்து பரிணாமம் அடைந்து நாகரிகத்திலும், பண்பாட்டிலும் முன்னேறி, மனிதத்தின் உயர் விழுமியங்களைப் போற்றிக் கடைப்பிடிப்பதில் படிப்படியாக வெற்றி பெற்று வருகின்றது. ஆனால் இந்த மனிதப் பரிணாமத்திலிருந்து முற்றாக முரண்பட்டு, பழைய காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை முறையை நோக்கிப் பின்னோக்கி ஓடுகின்ற ஒரே ஒரு தேசமாகச் சிங்களப் பௌத்தப் பேரினவாத தேசமான சிறிலங்கா விளங்குகின்றது. கடந்த 60 ஆண்டுக்காலத்தில், காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிச் சிறிலங்கா பின்னோக்கிச் சென்ற வேகமானது, மனித குலத்திற்கு வெட்கத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். அதனடிப்படையில், சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர தினம், தமிழீழ மக்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஒரு கரி நாளேயாகும்! உயர் மனித விழுமியங்களுக்கும் ஒரு கரி நாளாகும்!

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளை, 60 ஆண்டுகளுக்கு முன்னரேயே சிங்களத் தலைமைகள் ஆரம்பித்து விட்டன என்பது வரலாற்று ரீதியான உண்மையாகும். பின்னாளில் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகப் பதவியேற்ற டொன் ஸ்ரீபன் சேனநாயக்கா என்கின்ற னு.ளு.சேனநாயக்கா, பிரித்தானியாவின் ஆட்சிக்காலத்தில், 1930களில் - அதாவது 78 ஆண்டுகளுக்கு முன்னர் - பிரித்தானியாவின் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்திலேயே, அவர் தமிழ்ப் பிரதேசங்களின் உலர் நிலப் பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து விட்டார். அதாவது, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரேயே, சிங்களப் பேரினவாதம், தமிழர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதே வரலாற்று உண்மையுமாகும்.

ஆனால் கடந்த 60 ஆண்டுகளில், சிங்களப் பௌத்தப் பேரினவாதம், தமிழினத்தையும், தமிழர் தேசத்தையும் அழிப்பதில் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே செயல்பட்டு வந்துள்ளது. மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றாலும், 'தமிழ் மொழியுரிமை மறுப்பு, சிங்கள மொழித் திணிப்பு, தமிழர்களுக்கான கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு மறுப்பு, தொடர் சிங்களக் குடியேற்றங்கள் ஊடாக தமிழர்களின் நிலங்களை அபகரிப்பு, தமிழர்களின் பொருளாதாரக் கட்டமைப்பினைச் சீர்குலைப்பு, 1956, 1958, 1961, 1977, 1981, 1983 என்று திட்டமிடப்பட்ட முறையில் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், தமிழினத்திற்கு எதிராக இயற்றப்பட்ட அரசியல் யாப்புக்கள், தமிழர் தலைமைகளோடு கைச்சாத்திடப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் முறித்தமை, தமிழ் மக்கள் மீதான தொடர் இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார, உணவு, மருந்து, போக்குவரத்துத் தடைகள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், செம்மணிப் புதை குழிகள்|| என்று பட்டியல் - - - முடிவின்றி நீண்டு கொண்டே போகும்.

என்று ஒர் 'அரசு", தன்னுடைய மக்கள் என்று, 'தான்" சொல்லிக் கொள்பவர்கள் மீதே, திட்டமிட்ட அழிவைக் கொண்டு வருகின்றதோ, அன்றிலிருந்து, அந்த மக்கள் மீது எந்தவிதமான அதிகாரத்தையும் அந்த அரசு பிரயோகிக்க அதற்கு உரிமையில்லை.

இன்று 60 ஆவது ஆண்டுச் சுதந்திர தினம் என்று கூறிக்கொண்டு, அச்சத்தின் ஊடே, சுதந்திரமில்லாத வகையில், தனது சுதந்திர தினத்தைக் 'கொண்டாடுகின்ற" சிங்களச் சிறிலங்காவின் வரலாற்றைச் சற்றுக் கவனிப்N;பாம்.

மிகப் பெரிய நம்பிக்கைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் 60 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதியன்று, காலிமுகத்திடலில் டச்சுப் பீரங்கிகள் 21 வெடிமுழக்கங்களைத் தீர்த்துக்கொண்டிருக்கையில், கொழும்பு ரொரிங்டன் சதுக்கத்தில் பிரித்தானிய அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களின் சொந்தச் சகோதரரான, டியு_க் குளஸ்டர், இலங்கைத்தீவின் (அன்றைய சிலோன்) சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினார். பின்னர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியான டொன் ஸ்ரீபன் சேனநாயக்கா இலங்கையின்; அப்போதைய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இலங்கையின் (ஊநுலுடுழுN) அன்றைய தேசியக்கொடி, கண்டியின் கடைசி அரசதானியாகிய தமிழ் மன்னன் சிறிவிக்கிரம ராஜசிங்க கொண்டிருந்த கொடியாகும்.

1815 ஆம் ஆண்டு மார்;ச் மாதம் 2 ஆம் திகதியன்று கண்டியில் ஆங்கிலேயர்களால் இறக்கி வைக்கப்பட்ட சிங்கக்கொடி, 133 ஆண்டுகளுக்கு பின்னர் 1948 ஆம் ஆண்டு, 'ஒருங்கிணைந்த இலங்கைக்குரிய கொடியாக" மீண்டும் ஏற்;றி வைக்கப்பட்டது.

ஆனால் இந்தச் சிங்கக்கொடி ஏற்றலுக்குப் பின்னால் நடைபெற்ற சம்பவங்கள், அன்றைய சிங்களத் தலைமைகளின் பேரினவாதத்தை அப்போதே பிரதிபலித்துக் காட்டி விட்டன. சுருக்கமாகச் சில விடயங்களைப் பார்ப்போம்.

தனது முன்பாதத்தில் கூர்மையான வாள் ஒன்றை ஏந்தியவாறு உள்ள சிங்கக் கொடியை, இலங்கைத்தீவில் முதலில் நாட்டியவன் விஜயன் என்று மகாவம்சம் கூறுவதாகச் சொல்லப்படுகி;றது. பின்னாளில் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தை அடையப் போகின்ற வேளையில், இலங்கையின் தேசியக்கொடியாகச் சிங்கக் கொடியைக் கொள்ளவேண்டும் என்று முதலில் பிரேரணையைக் கொண்டு வந்தவர் மட்டக்களப்புப் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த முதலியார் சின்ன லெப்பை என்பவராவார். முஸ்லிம் பிரதிநிதியான சின்ன லெப்பை இவ்வாறான பிரேரணையை ஜனவரி 1948 இல் கொண்டு வருவதற்கு மூலகாரணமாகப் பின்னணியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற சிங்களத் தலைவர்கள் இருந்தார்கள் என்று நம்பப்படுகிறது.

செனட்டர் நடேசன் போன்ற தமிழ்த் தலைவர்கள் 'சிங்கக் கொடியானது இலங்கைத் தீவின் சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.