Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் மாதாந்த அறிக்கை

Featured Replies

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் மாதாந்த அறிக்கை ஜனவரி 2008

மன்னார் மாவட்டம் மடு மாதா திருப்பதியை அண்மித்த பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரின் மானிட சங்காரம் நிகழ்ந்து ஓரிரு நாட்களில் வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் 2008 தை மாதத்திற்கான மாதாந்த அறிக்கையை தயாரிக்க நேர்ந்தது மனச்சுமை ஏற்படுத்தும் பணியாக அமைந்துவிட்டது. தட்சணாமருதமடுப் பிரதேசத்தில் வழமையாக பள்ளிச்சிறாரை ஏற்றிச்செல்லும் பள்ளிச்சேவை பேருந்தின் மீது 29.01.2008 செவ்வாய் அன்று சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 11 பாடசாலைச் சிறார் உட்பட 20 பொதுமக்கள் கொல்லப்பட்டு 09 சிறார் உட்பட 17 பொதுமக்களும் படுகாயமடைந்த பரிதாபகரமான சம்பவம் தமிழ் மக்களை உலுக்கி எடுத்துள்ளது.

வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் ஆரம்பித்த காலத்திலிருந்தே மோதல் பிரதேசங்களில் வாழும் பெண்கள் மற்றும் சிறார்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் தொடர்பாக மிகுந்த கரிசனை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் அண்மைக் காலமாக பாடசாலைகளும் சிறாரும் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் என்று சொல்லப்படும் வான் தாக்குதல்களில் அதிகமாக அகப்பட்டுக் கொள்ளும் நிலை அதிகரித்து வருகின்றது. இம்மாதம் 17ம் நாள் கிளிநொச்சி கனகபுரம் மத்திய மகா வித்தியாலயத்தை அண்மித்த பிரதேசம் காலை 9.30 மணிக்கு வான்குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த நேரத்தில் கனகபுரம் பாடசாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் 50 பேர் அளவிலான ஆசிரியர்களும் இருந்தனர். இதைவிட இந்த நாளிற்தான் ஆண்டு 01 இல் புதிதாகச் சேர்ந்த சிறாருக்கு புகுமுக வரவேற்பு நடப்பதாக இருந்தது. மழலைகள் தங்கள் பள்ளிவாழ்வின் முதல் நாளை பேரவாவுடன் கழுத்தில் மாலைகள் அணிந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தவேளை உயிர் கலங்க வைக்கும் கடூர தொனியுடன் குண்டுவீச்சு விமானங்கள் அப்பிரதேசத்தை வட்டமிட்டு குண்டுகளை வீசியிருக்கின்றன.காயம், பதற்றம் என்பவற்றிற்கு அப்பால் இப்பள்ளிச் சிறாரின் மனதில் ஏற்பட்ட பீதி அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஓர் பயங்கரமான அனுபவமாக இருக்கப்போகின்றது. ஓர் சமூகத்தின் இளந்தளிர்கள் வளர்ந்து பெரியவராகி சமூகப் பொறுப்புக்களை ஏற்கும்போது கூட இந்தப் பாதிப்பும் இதனால் மனதில் ஆழப்பதிந்துபோன வஞ்சமும் நிலைத்து நிற்கப் போகின்றன. வளரும் சமூகத்திற்கு இது ஆரோக்கியமான ஒரு அம்சமாக இருக்கப்போவதில்லை.

சென்ற வருடம் செம்ரெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நாங்கள் வெளியிட்ட அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த பள்ளிச் சிறார் மீதான தாக்குதல்கள் தொடர்பான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகளின் ஓராண்டு நிறைவாக கல்விப்பணிப்பாளர் ப. அரியரத்தினம் அவர்கள் உரையாற்றுகையில்

எந்த ஒரு நாட்டிலும் சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஒரு இனத்தை அந்த நாட்டினுடைய அரசு பல்வேறு வகையிலே துன்பப்படுத்துவது ஒரு வழமையான வரலாறாக இருந்தாலும் இந்தச் செஞ்சோலை வளாகத்திலே நிகழ்த்தப்பட்ட இந்தச் செயல் எந்தவொரு நாட்டினுடைய ஆட்சியுடனும் ஒப்பிட முடியாத ஒரு கொடூரமான செயல். 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 14ம் திகதியன்று தலைமைத்துவப் பயிற்சியினைப் பெறுவதற்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலுள்ள பாடசாலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்பைச் சேர்ந்த 530 வரையான மாணவர்கள் ஒன்று கூடியிருந்த ஓர் இடத்திலே ஒரு திட்டமிட்ட படுகொலையினை சிறீலங்கா அரசாங்கம் நிகழ்த்தியது. இந்தப் படுகொலையினுடைய பின்னணி மிக நீண்ட ஆழமான பல நோக்கங்களையுடையது.இந்த மாணவிகள் எதிர்கால சந்ததிக்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரு தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்காக அமைதியான ஓர் இடத்திலே கூடுவதற்கு நாங்கள் முற்கூட்டியே அனுமதியெடுத்திருந்தோம். ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனத்திற்கு இவ்விடயத்தை ஏற்கனவே அறிவித்து அதற்கான அனுமதியினைப் பெற்றிருந்தோம். செஞ்சோலை வளாகம் என்பது யுத்தப் பிரதேசமற்ற ஒரு பாதுகாப்பான பகுதி என்று அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட ஒரு பிரதேசமாகும். இந்த இடத்திலே இத்தகைய தலைமைத்துவப் பயிற்சியைப் பெறுவதற்கான நிதியுதவியை நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து பெற்றிருந்தோம். இந்தப் பயிற்சியை வழங்கவுள்ள வளவாளர்களின் பெயர்ப்பட்டியல்களை நாங்கள் ஏற்கனவே அவர்களுக்குக் கொடுத்திருந்தோம்.

ஓரு சர்வதேச நிறுவனத்தினூடாக இவ்வாறான ஒரு பயிற்சியை வழங்குவதற்கு முன் கூட்டியே அனுமதி பெற்றிருந்த நிலையில் இந்த அரசாங்கம் திட்டமிட்டு இப்படுகொலையைப் புரிந்திருந்தது. இந்தப் படுகொலையின் உள்நோக்கம் மிகத் தூரநோக்கைக் கொண்டதாக இருந்தது. இம்மாணவர்கள் க.பொ.த சாதாரணதரத்திலே ஒன்பது பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்று உயர்தர வகுப்புக்களில் கற்றுவந்த இம்மாவட்டத்தின் முதற்தரமாணவர்கள், இத்தலைமைத்துவப் பயிற்சியினைப்பெற்று இந்தச் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு துறையில் சிறந்தவர்களாக விளங்கி இந்தச் சமுதாயத்திற்கு தலைமை தாங்கக்கூடிய ஏறத்தாழ 53 தலைவர்களை ஒரே சந்தர்ப்பத்திலே இந்த அரசாங்கம் படுகொலை செய்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அனைவரும் பெண்பிள்ளைகள்.

உலகத்திலே உளவியல்துறையில் பெண்களைக் கொலை செய்வதென்பது ஒரு சமுதாயத்தைக் கொலை செய்வதற்குச் சமனானது. ஏனெனில் அவர்கள் சமுதாயத்தின் பெரும் சொத்துக்களாக விளங்குபவர்கள். படுகொலையைப் புரிந்த பின் இந்த அரசாங்கத்திற்கும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையினூடாக இவர்கள் அனைவரும் பாடசாலை மாணவர்கள் என்பதை எழுத்துமூலம் அறிவித்திருந்தேன்.

என்னிடமிருந்து சனாதிபதி செயலகத்தினால் பெறப்பட்ட விபரத்திலே இவர்களின் பெயர்கள், வயது, கல்விகற்ற பாடசாலைகள், பெற்றோர்களின் விபரம் என்பனவற்றையும் வழங்கியிருந்தேன். இதேவேளை வேறு ஒரு நாடாக இருந்தால் இவர்களின் குடும்பங்களுக்கு பெருந்தொகையான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டிருக்கும். இறுதியாக சர்வதேச நஷ்ட ஈட்டுக்குப் பொறுப்பான நிறுவனமொன்றிடமிருந்து கிடைத்த தகவலின்படி நஷ்ட ஈட்டுக்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தேன். அதுகூடப் பாதுகாப்பு அமைச்சினாலே அவர்கள் பாடசாலை மாணவர்கள் அல்ல எனக்கூறப்பட்டு நஷ்டஈடு மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்தியபின்பும் இவர்களைப் படுகொலை செய்யவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு செயற்பட்டதனால் அவர்களுக்கான உதவிகளை வழங்க மறுத்திருந்தது. அத்தோடு காயமடைந்து சிகிச்சைக்காகச் சென்ற மாணவிகளில் இறந்த ஒருவரின் உடல் மட்டும் இங்கு கொண்டுவரப்பட்டது. ஏனைய இருவரில் ஒருவர் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மகரகமவிலிருந்து அவர்களைச் சொந்த இடத்திற்கு வருகை தரவோ, மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவோ அரசு இதுவரை அனுமதிக்கவில்லை என்றார்.

இராணுத்தினரின் கிளைமோர்த் தாக்குதலில் ஏழு மாணர்கள் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் ஒன்றான ஐயன்கன்குளம் கிராமத்தின் ஐயன்கன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 2007 நவம்பர் 27ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் முதலுதவிச் சிகிச்சைக்காக ஆலங்குளம் மருத்துவமனை நோக்கி நோயாளர் காவு வண்டியிற் சென்றுகொண்டிருந்தபோது பாடசாலையிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாகரட்ணம் மதிகரன் (வயது 15), நாகரட்ணம் பிரதீபா (வயது 16) ஆகியோரும் நித்தியானந்தம் நிதர்சனா (வயது 13), சந்திரசேகரம் டிறோசா (வயது 17), கருணாகரன் கௌசிகா (வயது 15), சண்முகவேல் சகுந்தலாதேவி (வயது 17) ஆகிய மாணவ மாணவிகளும் மற்றும் சுதகாதாரத் தொண்டர்களான அற்புதராசா அஜித்நாத் (வயது 22), வைரமுத்து கிருஸ்ணவேணி (வயது 25)ஆகியோரும் சாரதியான காந்தன் உட்பட 11 பேர் உயிரிழந்ததுடன் சந்திரசேகரம் யசிதா வயது (15), தேவராசா உதயராணி ஆகிய இரு மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் தந்தை திரு.சங்கரப்பிள்ளை நாகரட்ணம்:-

என்னுடைய இரண்டு பிள்ளைகளை ஒரே தரத்தில் கொன்று விட்டார்கள். இனி நான் என்ன செய்வேன். நாங்கள் வாழ்வதே பிள்ளைகளுக்காகத்தான். எங்களின் பிள்ளைகளை சிறிலங்கா அரசாங்கம் கொன்று கொண்டே போனால் நாங்கள் ஏன் வாழவேண்டும். பள்ளிக்கூடப் பிள்ளைகளிற்கூட இரக்கமற்றவர்கள். கிளைமோர்த் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களால் எப்போது சா வருமோ என்ற அச்சத்துடனேயே இருக்கின்றோம். இவற்றை எல்லாம் உலக நாடுகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் எப்போது ஒரு முடிவுகாலம் வருமோ தெரியாது என்றார்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகக் குரல் தரும் அமைப்பென்ற வகையில் வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் சிறார் குண்டுவீச்சுகளுக்கு ஆளாகி கொல்லப்படும், காயப்படும் சம்பவங்களை அங்கொன்று இங்கொன்றாக அறிக்கையிடுவதுடன் மட்டுப்படுத்த முடியாது. மாறாக திட்டமிட்ட வகையில் நீண்ட நெடுங்காலமாக தமிழ்ச் சிறார் ஓர் இன ஒழிப்பு நடவடிக்கைக்கு இரையாகி வருவதை மீண்டும் மீண்டும் பட்டியலிடவேண்டியுள்ளது.

எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழ் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதை மட்டுப்படுத்தும் இனவாத நோக்குடன் இலைமறை காயாக இருந்த பாரபட்சமான உயர்கல்வி சார்ந்த வழிமுறைகள் ‘தரப்படுத்தல்’ என்ற பெயரில் சட்டரீதியாக்கப்பட்டன. உயர்கல்விக்கான அடிப்படை மனிதஉரிமை படிப்படியாகக் குறைக்கப்பட்டு தரப்படுத்தலால் முற்றாக மறுக்கப்பட்ட இளையோர் விரக்தியும் வெறுப்புமுற்றனர். தமிழ் அரசியலில் இளையோரின் கிளர்ச்சிப் போக்கு தோற்றம்பெற்ற திருப்புமுனை இதுவே.

யாழ்ப்பாணம் நாகர்கோவிலில் 1995ம் ஆண்டு ஆரம்பப் பாடசாலைக்கு மேலாக வீசப்பட்ட வான்குண்டு 5ம் ஆண்டுக்குக் கீழ்ப்பட்ட மாணவர்கள் 14 பேரைக் கொன்றதுடன் பலரை அங்கவீனர்களாக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர் எல்லோரும் பாடசாலை மாணவர்களே. இச்சம்பவம் நடந்த அடுத்தநாள் சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் 14 பயங்கரவாதிகள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக உரிமை கோரியிருந்தார். ஆண்டு 5க்குக் கீழ்ப்பட்ட பள்ளிச்சிறாரை பயங்கரவாதிகளாக்கியது சிறிலங்கா அரசு.

இச்சம்பவத்திற் காயமடைந்த மாணவர்கள் பலர் இன்று அங்கவீனமுற்ற இளைஞர்களாக பிறர் தயவில் வாழநிர்ப்பந்திக்கப்பட்டுள்

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.