Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண், பெண்ணை அடிமை கொண்டதாக நினைத்தால் அது அசட்டுத் தனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் தனக்கான இயற்கை இயல்புகளுடன் உயிர் வாழ்க்கைக்கான வழிகளைக் கூடிய வரை எளிதாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறது. ஒன்றின் வழி இன்னொன்றுக்குக் கடினமானதாகத் தோன்றலாம்; ஆனால் அதன் இயல்புக்கு அது சாதாரணமானது தான்.பெங்குவின் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வாரக்கணக்கில் இரவுபகல் நடந்து மாதக்கணக்கில் கஷ்டப்படுவதாக (HAPPY FEET உபயம்) நமக்குத் தோன்றுவது போலத்தான். காலக் கட்டாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயல்புகளையும் மாற்றிக் கொள்ள முடிவது இயற்கை தந்துள்ள வரம். கொசுக்கள் கூட, வலை, சுருள் புகை, விரட்டிப்பட்டை, கூடுதல் சக்தி கொண்ட விரட்டித் திரவம் எல்லாம் மீறி எப்படிக் கடிப்பது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் இயற்கையில் பெண்கள் தேனிலவுப் பயணத்திலேயே கணவனா காதலனா என்று முடிவெடுத்து விடும் அளவு மாறி இருக்க மாட்டார்களா என்ன?

ஆண், பெண்ணை அடிமை கொண்டதாக நினைத்தால் அது அசட்டுத் தனம். அப்படி ஓர் எண்ணத்தை ஆணின் மனதில் ஏற்படுத்தி விட்டதும் அந்தக் குற்ற உணர்வினைப் பிற்கால வாழ்க்கை விருட்சத்திற்கான விதையாக ஆரம்ப நாட்களில் விதைத்துக் கொள்வதும் பொறுமை மிகுந்த பெண்ணினத்தின் இயல்பு.

ஆதாமை முதலில் படைத்து பிறகு ஏவாளைப் படைத்ததால் ஆண் முதல் என்கிற உணர்வு ஏற்படுகிறது என்கிற வாதமே சரியாகப் படவில்லை. ஒவ்வொரு உயிரினமாகப் படைத்துக் கொண்டு வந்த கடவுள் கடைசியில் மனிதனைப் படைத்தபோது முதலில் ஆணையும் அதன் பிறகு பெண்ணையும் உருவாக்கினான் என்றால் பெண் தான் உச்சகட்ட சிறப்பான பிறப்பு என்று தானே அர்த்தம்?

அதிகாலைத் தூக்கம் சுகமானது என்பது தூங்குபவனுக்கு. அதிகாலை விழிப்பு உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு ஆரோக்கியம் தருவது என்பது அதனை அனுபவித்தவனுக்கு. இது சிகரெட் பிடிப்பது பற்றிய விவாதத்துக்குச் சமம். கிராமம் என்று பார்த்தால் ஆண்களும் எழுந்து விடுகிறார்கள். நகர்ப்புறம் என்று பார்த்தால் பெண்களின் அதிகாலை விழிப்பு மறைந்து மாமாங்கம் ஆகி விட்டது. அரைமணிநேரம் முன் பின்னே இருக்கலாம். ஆண் முதலில் எழுந்து காஃபி போட்டு பெண்ணை எழுப்பும் அளவுக்கு நடைமுறை ஆரோக்கியமாகி வருகிறது.

சமையல் சாப்பாடு குறித்து சொல்வதென்றால் சமையல் தெரிந்த அல்லது செய்கின்ற ஆண்கள் என் வார்த்தைகளை உணர்வு பூர்வமாக ஒப்புக் கொள்வார்கள். தன்னுடைய படைப்பினை பலபேர் படிப்பது எழுத்தாளனுக்குத் தரும் சந்தோஷத்தை விட அதிக சந்தோஷம் அளிக்கும் விஷயம் சமைத்ததை பசித்தவருக்குக் கொடுத்து அவர்கள் ரசித்து சாப்பிடுவதைப் பார்த்திருப்பது. தன்னுடைய படைப்புக்காக எழுத்தாளன் இரவு கண்விழித்து REFERENCE தேடி எழுதுவதைக் கஷ்டப்படுகிறான் என்று சொன்னால் பெண் சமையலைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருப்பதையும் கஷ்டம் என்று சொல்லலாம்.

படைப்பின் இலக்கணத்திலேயே இனத்திற்கு முதல் உணவை ஊட்டுபவள் தாய். அதில் அவள் அடையும் சந்தோஷத்திற்கு இணையான சந்தோஷம் வேறில்லை. உயிர்வாழ அடிப்படை என்பதால் எல்லா உயிரினங்களும் தனக்கு உணவு அளித்தவனிடம் நன்றியோடு இருப்பது இயற்கை. வேறு எதற்காக நன்றிக்கடன் படுவதைக் காட்டிலும் செஞ்சோற்றுக் கடனுக்காக உயிர் கொடுப்பது உணர்வு பூர்வ விஷயம். வள்ளுவர் "கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற்றற்று" என்று எழுதியதில் பெண்மையின் அடையாளமாகக் குறியைக் கூடச் சொல்லாமல் உணவளிக்கும் பாகத்தைச் சொன்னது அதனால் தான். உணவு வழங்கல் பெண்ணினம் சார்ந்தது. (விலங்கினங்களில் யாரும் சதி செய்து அப்படி ஏற்படுத்தி விடவில்லை). "பெண்ணினத்தையே தொடர்ந்து பிள்ளை பெற வைத்தது கூட ஆணினத்தின் சதி" என்று பேசுவது தான் பெண்ணுரிமை என்றால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

கணவனின் இலையில் நிறையக் காய்கறிகளைக் கொட்டி விட்டு அவன் மிச்சம் வைத்ததை சாப்பிடுவதான பழக்கம், மாமியார் தனக்கென எடுத்து சாப்பிட விட மாட்டாள் என்கிற சதியை முறியடிக்க பெண்ணே ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு. அப்படித் தான் தொடங்கியது ஆண்கள் சாப்பிட்டவுடன் இலை எடுக்காமல் எழுகின்ற பழக்கம். இன்று தனிக்குடித்தன வீடுகளில் எத்தனை பெண்கள் கணவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறார்கள் (வேலைக்காரி வராத நாட்கள் தவிர்த்து)?

எச்சில் தட்டெடுக்கும் வேலையில் நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்று ஆணா மறுக்கிறான்? சிறுவயது முதலே குறிப்பாக, பெண் குழந்தைகளை விட அம்மாப் பாசம் அதிகம் கொண்டு எல்லாவிதங்களிலும் உதவத் தயாராயிருக்கும் ஆண்குழந்தைகளை அப்படிப் பழக்காதது பெண்களின் தவறு. வளர்ந்த பிறகும் எச்சில் தட்டு எடுக்கப் போகும் ஆண்களையும் தடுத்து நிறுத்தும் பெண்கள் தான் அதிகம். அவர்களுக்கு அதில் ஏதோ ஒரு சந்தோஷம் இருக்கிறது, அதையெல்லாமா தியாகமாகக் கணக்கெடுப்பது.

தொடர்ந்து சமைப்பதென்பது அலுப்பும் சலிப்பும் தர வாய்ப்பிருக்கிறது. நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெருகியுள்ள ஓட்டல்கள், அங்குள்ள ஆண்கள் அந்த சலிப்பினை மதிக்க ஆரம்பித்து விட்டர்கள் என்று காட்டுவதாகச் சொல்ல மாட்டேன்; அங்குள்ள பெண்கள் தங்கள் சலிப்பினை உணர ஆரம்பித்ததன் அடையாளம் அங்கே ஓட்டல்கள் ஏற்பட வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தி விட்டது எனலாம். கிராமத்துப் பெண்களும் அந்த சலிப்பினை உணர ஆரம்பித்தால் அங்கும் சூழ்நிலை மாறும்.

// "காலம், காலமாக பெண் சமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், ஒரு நாள் சமைக்காவிட்டாலும், 'என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இல்லையோ..' என்று குற்றவுணர்வடைகிறேன்.." என்று சமீபத்திய பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் கவிஞர் இளம்பிறை. இது நுணுக்கமானது. 'இன்னென்ன வேலைகள் பெண்ணுக்கானவை. அதை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் நான் குற்றம் செய்தவளாகிறேன்..' என்று பெண்ணையே உணர வைப்பதில்தான் சூது ஒழிந்திருக்கிறது// என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதில் என்ன சூது? இதே ஆணுக்கும் பொருந்துகின்ற வாசகம் தானே? வேலை வெட்டி இல்லாதவன், தவறான பழக்கங்கள் உள்ளவன் குற்ற உணர்வு இல்லாமலா இருக்கிறான்? அவனை அப்படி உணர வைப்பதில் தான் சமூகத்தின் சூது ஒளிந்திருக்கிறது என்றா சொல்வது? ஒழுங்கு போதிப்பு என்பது சமூகக் கட்டுப்பாட்டுக்கு அவசியம். மாறுதல்கள் வரலாம். அவை காலக் கட்டாயம். அதனைக் காலமே கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யும்.

கவிஞர் இளம்பிறையின் வார்த்தை பெண் இனத்தின் ஒட்டு மொத்த வார்த்தை அல்ல. "எனக்கு சமைக்கவே தெரியாது; அதனால் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் என் கையால் சமைத்துப் பரிமாறினேன் என்கிற நிகழ்வு ஏற்பட்டதே இல்லை" என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தன்னைச் சந்தித்த பள்ளி மாணவர்களிடம் வருத்தம் சிறிதும் தொனிக்காத குரலில் சொன்ன ஜெயந்தி நடராஜனும் பெண் தான். "தங்கள் குழந்தைக்காக அதிக நேரம் ஒதுக்க முடியவில்லையே என்று எப்போதாவது வருந்தியதுண்டா?" என்ற கேள்விக்கு "இதே கேள்வியை ஓர் ஆணிடம் தாங்கள் கேட்பீர்களா? நான் என் குழந்தைக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் கட்டாயம்?" என்று சொன்ன கனிமொழியும் பெண் தான்.

திருமண விஷயத்தில் ஆண் உயரமாக இருப்பதும் பெண்ணை விட அதிகம் படித்தவனாக அதிகம் சம்பாதிப்பவனாக இருப்பதும் கூட ஆணாதிக்க சிந்தனை என்கிற வாதத்தை பெண்கள் கூட ஏற்க மாட்டார்கள். எங்கெல்லாம் EXPOSURE கூடி இருக்கிறதோ அங்கெல்லாம் பெண்கள் தம்முடைய சாய்ஸை முன்னிறுத்தத் தொடங்கியாச்சு.

// 'தம்மைப் பற்றிப் புகழ்ந்து சொல்லப்படுவதில் மிகையும் பொய்யும் இருப்பதை உணர்ந்தாலுமே எவரும் விரும்பத்தான் செய்வார்கள்; அவற்றை விரும்பி ஏற்று தமதாக்கிக் கொள்வதில் பெண்களின் தயார்நிலை கொஞ்சம் அதிகம்' // என்கிற வாதத்துக்கு எதிராக // இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அவர்களை எமோஷனல்,சென்டிமெண்டல் இடியட்ஸ்களாகவே நாம் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்// என்று சொல்லப்பட்டது. யார் சொன்னது அவர்கள் எமோஷனல் இடியட்ஸ் என்று. தம் தேவை, அவற்றை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க சகல வழி முறைகள் வித்தைகள் எல்லாவற்றிலும் முழுத் தேர்ச்சியுடனான MOST INTELLIGENT அவர்கள். அவர்களை நாம் இடியட்ஸாக வைத்துக் கொண்டிருப்பதாக நினைத்தால் தவறு என்று தான் சொல்லுவேன். ஒரு ஜோக் படித்திருக்கிறேன். திருமணமாகி புக்ககம் செல்லும் பெண் தன் தாயிடம் கேட்கிறாள்; "அம்மா, நான் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் பேச்சுக் கேட்டா, என் இஷ்டப்படியா?" தாயாரின் பதில்: "கணவனின் பேச்சைக் கேட்டுக் கொள். உன் இஷ்டப்படி நட". இது தான் பெண்களின் வாழ்க்கை பாணி. வீட்டுக்குப் பொருள் சேர்ப்பதில் இருந்து புது வீடு கட்டுவது வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பவள் பெண் தான். மனைவியின் CAPABILITY அறிந்த கணவர்கள் குறைவு. தன் கணவனின் சலகமும் அறிந்து வைத்திருப்பவள் பெண். அவர்கள் அவர்களுடைய இயல்பின் படி இருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆண்கள் தான் தம் இயல்பு மீறி தன்னைப்பற்றி சிந்திப்பதை விட அடுத்தவர்கள் பற்றி போதாக்குறைக்கு அடுத்த இனம் பற்றி வரை தேவையில்லாத தவறான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அதற்கேற்ப ஆடி ஓடி ஒய்ந்து போகிறார்கள் என்பேன். தியானம் செய்பவர்களில் அதிகம் ஆண்கள், வாழும் கலை போன்ற பயிற்சிகளில் அதிகம் கலந்து கொள்பவர்கள் ஆண்கள், உடற்பயிற்சி விஷயங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் ஆண்கள் இவ்வளவுக்குப் பிறகும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற விஷயங்கள் ஆண் இனத்தை அதிகம் தாக்குவது எதனால்? இயல்பாக இல்லாததால்.

மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் இது சரியா தவறா என்கிற கோணத்திற்கே நான் போகவில்லை. காலச் சூழலில் இவை எல்லாம் கட்டாயங்கள்.

ஒர்க்கஹாலிக்ஸ் என்று ஒருவித மனப்பழக்கம் (வியாதி என்கிற வார்த்தையைக் கவனமாகத் தவிர்க்கிறேன்) உண்டு. ஐந்து பேர் இருக்கும் இடத்தில் தன்னைத் தானே வருத்திக் கொண்டு கூடுதல் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது; அவர்களில் மூன்று பேரையாவது தன்னுடைய சார்பாளர்களாக்கி விடுவது (தானில்லை என்றால் கஷ்டம் தான் என்கிற நிலையை உருவாக்குவது) இதெல்லாம் தருகிற உள்மன சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. ஆனால் போதைப் பழக்கம் போல், சிறிது காலத்திற்குப் பிறகு, உடம்பும் ஒத்துழைக்காமல், பழக்கத்தை விடவும் முடியாமல், தான் TAKEN FOR GRANTED ஆகி விடுவதை ஜீரணிக்கவும் முடியாமல், அடுத்த தலைமுறையைப் பொறுப்பற்றதாகவும ஆக்கிவிடுகிற மோசமான உத்தி இது. அலுவலக வட்டங்களில் நிறையக் காணக் கிடைக்கும். சிறந்த நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள நிறுவனங்களில் இத்தகையோரை இனம் கண்டு கண்டிக்கிறார்கள் அல்லது மாற்றி விடுகிறார்கள். பல வருடங்களுக்கு முன் நான் படித்த அயல்நாட்டு ஆசிரியர்கள் எழுதியிருந்த ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் இதற்கான விளக்க உரையில் இந்தியக் குடும்பப்பெண்கள் இதற்கு சிறந்த உதாரணம் என்று எழுதப் பட்டிருந்தது குறித்து ஆச்சர்யப்பட்டேன். இன்றைய நிலைமை அப்படி இல்லை. குறைந்தது இரண்டு தலைமுறைக்கு முன்பு கூட மனைவி, தன் தாய் வீட்டுக்குப் போவதாகத் தெரிவித்தால் கணவன் எல்லா தடங்கல்களும் சொல்லித் தடுப்பான்; இன்று "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்று பார்ட்டி வைக்கிறார்கள். சார்பு நிலை குறைந்து விட்டதற்கான நல்லடையாளம் தானே இது?

பெண்ணுரிமை பேசியவர்களில் பலரும் தங்கள் மனைவிகளை அடக்கி வைத்திருந்ததாகக் குற்ற உணர்வில் மருகியவர்கள். தன்னுடைய பரிசோதனைகளுக்காக மனைவியின் சம்மதத்தை எதிர்பார்க்காமல் கட்டாயப் படுத்திய காந்தியாகட்டும், பாரதியாகட்டும், தள்ளாத வயதில் வயதுப் பொருத்தமில்லாத பெண்ணை மணக்க வேண்டிய சூழலுக்குள்ளான பெரியாராகட்டும் இன்றும் வீட்டின் பெரியவர்களில் மனைவி மீது உருகிப் பாயும் ஆண்களாகட்டும் எல்லோரும் தாம் தவறு செய்து விட்டோமோ என்கிற குற்ற உணர்வுக்கு ஆட்பட்டவர்களே. பெண்களின் மனப்பூர்வ சம்மதம் இல்லாமல் அவர்கள் ஒன்றும் செய்திருக்க முடியாது என்று அவர்கள் உணராதபடிப் பார்த்துக் கொண்டது தான் பொறுமை பூண்ட பெண்மையின் வெளித்தெரியாத வெற்றி. "சதிராடும் நடையாள் அல்லள்; தள்ளாடி விழும் மூதாட்டி, மதியல்ல முகம் அவள்க்கு; வறள்நிலம் குழிகள் கண்கள், எது எனக்கின்பம் நல்கும்; இருக்கின்றாள் என்பதொன்றே" என்கிற குடும்ப விளக்கு பாடலில், ஆணின் உணர்வில் வெளிப்படும் எதிர்காலத் தனிமை குறித்த பயம், அறுபது வயது தாண்டிய எத்தனை பெண்களிடம் இருக்கிறது என்று கணக்கெடுத்துப் பாருங்கள்.

இது ஒருவித அரசியல். என் உடல் பொருள் ஆவி சகலமும் கட்சிக்காகவும் நாட்டு நலனுக்காகவும் ஏழைகளின் கண்ணீர் துடைப்பதற்காகவுமே என்று கோடீஸ்வர தலைவன் சொல்வதும், கட்டைவண்டி இழுத்து காலணா சம்பாதிக்கும் தொண்டன் அதனையும் கொண்டு போய் கட்சி நிதியாகக் கொடுப்பதையும் போன்றது பெண்ணுரிமை பற்றிய ஆண் வாதங்கள்.

இந்தப் பதிவுலகத்தில் எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு அதிகமாகவே இருப்பதால் LIGHTER SENSE -ல் ஒன்று கூறி முடிக்கிறேன்:

ப.சிதம்பரம் ஒருமுறை சொன்னார், "இருபத்தைந்து வயதுக்குள் ஒருவன் கம்யூனிஸம் பேசவில்லை என்றால் அவனுக்கு இதயமே இல்லை என்று அர்த்தம்; இருபத்தைந்து வயதுக்குப் பிறகும் கம்யூனிஸம் பேசினான் என்றால் அவனுக்கு மூளையே இல்லை என்று அர்த்தம்" என்று. கருத்துக்கு அப்பாற்பட்டு என்னைக் கவர்ந்த வாக்கியங்களில் ஒன்று அது. அதே பாணியில் பெண்ணுரிமை குறித்து, "இருபத்தைந்து வயதுக்குள் ஒருவன் "பெண்கள் பாவம்" என்று பேசவில்லை என்றால் அவனுக்கு இதயமே இல்லை என்று அர்த்தம்; அதற்கு மேலும் பேசுகிறான் என்றால் அவனுக்குள் வேறு கணக்கு இருக்கிறது என்று அர்த்தம். அறுபது வயதுக்கு மேலும் பேசுகிறவனை ஏதோ UNDUE ADVANTAGE எடுத்த குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருக்கிறது என்று அர்த்தம்" என்று வேண்டுமானால் சொல்லலாம்.

http://rathnesh.blogspot.com/2007/09/blog-post_3931.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.