Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் கிழக்குத் தேர்தல்கள் - சி.இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் கிழக்குத் தேர்தல்கள் - சி.இதயச்சந்திரன்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலிற்கான வேட்பு மனு, இந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளூராட்சித் திருவிழா முடிவுற்ற கையோடு, மாகாணசபைத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் காட்டும் அவசரத்திற்கு, இருவிதமான வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தேர்தல் மேற்கிலிருந்து நிதிபெறும் நோக்கமென ஒருசாராரும், இந்தியாவின் உறவினை இறுக்கமடையச் செய்வதற்கான நகர்வென்று இன்னொரு சாராரும் கணிப்பிடுகின்றனர்.

ஆனாலும், வடக்கு கிழக்கைப் பிரித்ததால், இந்திய இலங்கை ஒப்பந்தம் முன்மொழிந்த தாயக தற்காலிக இணைப்பு செயலற்றும் போயுள்ளது.

அதேபோன்று, ரி.எம்.வி.பியோடு கூட்டணி அமைத்து, மேற்குலகம் விரும்பாத நகர்வொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஆகவே, மாகாண சபையை அமைப்பதன் பின்புலத்தில், கிழக்கை சிங்கள மயமாக்கும் பேரினவாத சிந்தனை முனைப்படைத்துள்ளதென்பதே சரியான கணிப்பாக இருக்க முடியும்.

இந்திய ஒப்பந்தமூலமாக 1987ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட தாயகம், 2007 சட்டத்தின் துணையோடு பிரிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக்கொடுக்கப்போகிறதென ஆனந்தக் கூத்தாடிய இந்திய அரசு, சிங்களச் சட்டம் கிழக்கைப் பிரித்தபோது தலையைத் திருப்பிக் கொண்டது.

போலிகளுக்கு மத்தியில் வாழ்வதும், கழிப்பதும் எவ்வளவு சிரமமென்பதை தமிழ் மக்கள் தற்போது தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள்.

மூதூர் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயங்களும், மட்டக்களப்பில் இடைத்தங்கல் அகதி முகாம்களும் மாகாண சபையை வரவேற்கக் காத்திருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

சேருவிலவை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தி கல்லோயாவில் ஆரம்பித்த சிங்கள மயமாக்கலிற்கு கும்பாபிஷேகமும் நடத்தியாயிற்று.

மனிதரற்ற நிலத்திற்கு உயர்பாதுகாப்பு, ஆக்கிரமித்த மண்ணிற்கு "புனிதம்' என்ற அந்தஸ்த்து வழங்கி, பல்லாயிரம் ஏக்கர் விவசாய மற்றும் குடிமக்கள் வாழ் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

9 இலட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்கள், 37பிரதிநிதிகளை கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்போகிறார்களாம். இந்த இலட்சணத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், அகதிமுகாம்களிலிருந்து தமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டலாமென காந்தியவாதிகள் ஆலோசனை கூறுகின்றனர்.

கிழக்கு மண்ணில், சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த சின்ன நடுகையும் நடைபெறுகின்றன.இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்த விடயமொன்று கவனித்தலிற்கு உள்ளாக்கப்பட வேண்டியதாக அமைகிறது.

அதாவது, வடக்கு கிழக்கைப் பாரம்பரிய தாயகமாக வரித்துக்கொண்ட தமிழ் பேசும் மக்களின், நிலத்தோடு பிணைக்கப்பட்ட வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

வட முனையிலிருந்து ஆரம்பித்த, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றம், அம்பாறையை தீவகாபி ஆக்கி, இன்று முழுமையான பூர்வீக நிலங்களும், பேரினவாதத்தால் விழுங்கப்படும் ஆபத்து உருவாகுவதை ஹக்கீம் உணர்ந்திருப்பது, வரலாற்று நிர்ப்பந்தம் என்றே கூற வேண்டும்.

விடுதலைப்புலிகளின் கிழக்குப் பின்னகர்வும், பாதுகாப்பற்ற சூழ்நிலை கருதி சொந்த மண்ணில் காலடி வைக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வெற்றிடமும், பேரினவாத அச்சுறுத்தலிற்கு நேரடியாகவே முகங்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் முஸ்லிம் மக்களைக் கொண்டு சென்றுள்ளது.

ஒடுக்கப்படும் மக்கள், ஒடுக்குபவருடன் ஒன்றிணைந்து தமது ஜனநாயக வாழ்வுரிமையை வென்றெடுக்கும் தவறான பாதையில் பயணிப்பதா? அல்லது விடுதலைக்காக போராடும் அம்மண்ணின் பூர்வீகக் குடிகளுடன் கலந்து பிறப்புரிமையை மீட்டெடுக்கும் பாதையில் இணைவதா என்பதைத் தீர்மானிக்கும் காலம் அண்மித்துவிட்டது.

பேரினவாதத்தின் பிரித்தாளும் சதிகளின் எதிர்விளைவுகளே சிறுபான்மை தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கும் பல வரலாற்றுத் தவறுகளை உருவாக்கின. அதற்காக, ஒரு சாரார் மீது குற்றம் சுமத்துவது பொருத்தமானதாக இருக்க முடியாது.

பரஸ்பர தவறுகள், உணரப்பட்டு நிவர்த்தி செய்யப்படும்போது, அதனோடு சமரசம் கொண்டு, பொது எதிரியை எதிர்கொள்வதே ஒடுக்கப்படும் இனங்களிற்கிடையே புரிந்துணர்வையும், பலத்தையும் ஏற்படுத்தி வரலாற்றை முன்னகர்த்திச் செல்ல உதவும்.

ஆக்கிரமிப்புப்படையாக மாறிய இந்திய அமைதிப்படைகள், கிழக்கு மாகாண பூர்வீக இனங்களிற்குள் உரசலையும், பிளவினையும் எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதனை மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அதேபோன்று, விசேட அதிரடிப்படையினர், இனமோதலிற்கு தூபமிட்ட நிகழ்வுகளும், அவர்களோடு இணைந்து சில குழுக்கள் கட்டவிழ்த்த அராஜகங்களும் வரலாற்றில் பதியப்பட்ட சோக நிகழ்வுகளாகும்.

பேரினவாதத்தாலும், அதன் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலிக்கடாவான சில குழுக்களாலும் அழிக்கப்பட்ட மட்டக்களப்பு கிராமங்களின் சோக வரலாற்றினை ஆவணப்படுத்தி, தொகுத்துத் தந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி.

அழிக்கப்பட்ட மண்ணில் பிறந்து வன்னியில் வாழும் ரவி ""தமிழீழ எல்லைகளை நோக்கி'' என்கிற நூலில், ஆக்கிரமிக்கப்பட்ட தாயக பூமியின் சிதைவுகளை முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளார்.

தற்போது இலங்கைக்கு சமாதான விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளிடம், தாயகக் கோட்பாட்டை உள்ளடக்காத எந்தவித தீர்வினையும், தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை மிக ஆணித்தரமாகவே தமிழ் கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளனர்.

வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்க விரும்பிய மேற்குலகத்தாரை, கள நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறி, அவர்களின் பயணத்தையும் தடுத்து விட்டது அரசாங்கம்.

தாம் இன்னமும் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகவில்லையென்றும், நோர்வே மத்தியஸ்தம் ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாரென புலிகள் அண்மையில் விடுத்த அறிக்கையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திட, மேற்குலகம் விரும்பிய பயணமே இதுவாகும்.

முன்பு பேச்சுவார்த்தைக்கூடாக, சர்வதேச வலைக்குள் புலிகளை விழுத்த சதிசெய்தார் ரணில் விக்கிரமசிங்க. பேச்சுவார்த்தைக்குச் சென்று, மேற்குலகின் வலைக்குள் தான் விழுந்தால், பேரினவாதப் போர் முனைப்பு மழுங்கி விடுமென அச்சமடைகிறார் மஹிந்த ராஜ பக்ஷ.

போர்க் களத்தில் மட்டுமல்லாது, அரசியல் சமரிலும் விடுதலைப் புலிகளின் ராஜதந்திர உத்திகளை எதிர்கொள்ள முடியாமல் மேற்குலகும், சிங்களத்தேசமும் திணறுவதை தெளிவாகக் காணலாம்.

இதேவேளை, மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசனுடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் மேற்கொண்ட சந்திப்பில், இருவித அணுகுமுறைகள் வெளிப்பட்டன.

அதாவது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 13ஆவது அரசியல் திருத்த யோசனை, நிரந்தர தீர்வினை நோக்கிய ஆரம்ப படி நிலையா? அத்தோடு, கிழக்குத் தேர்தல்கள், ஆயுததாரிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்க வழிவகுக்குமா? என்பது போன்ற கேள்விகளை மனோ கணேசனிடம் முன்வைத்துள்ளார்கள்.

அவர்களின் விருப்பிற்கேற்ற சாதகமான பதிலை, மனோகணேசனிடமிருந்து பெற்றார்களாவென்பது வேறு விடயம்.

ஆகவே, மனித உரிமை மீறல் விவகாரங்களில் தம்மை ஈடுபடுத்தும் மூன்றாவது தரப்பிடம், நாடி வைத்தியம் பார்க்கும் மேற்குலகின் போக்கில், மாற்றமேதும் இல்லையென்பதை இச்சந்திப்பு உணர்த்துகிறது.

ஆனாலும், சிங்களத்தின் கடிவாளம் ஆசிய வல்லரசுகளான இந்தியா, சீனாவின் கைகளில் இருப்பதனால், தடவிக் கொடுத்தல் அல்லது வர்த்தக நிதி முடக்கம் செய்தல் போன்ற இரட்டை அணுகுமுறைகளை அரசினர் மீது பிரயோகிக்கிறது மேற்குலகம்.

2006ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்து அதன் நிதி சேகரிப்பினை ஐரோப்பாவில் முடக்கி விட்டதாகக் கூறியவாறு சிங்களத்தின் முதுகைத் தடவுவது, மனித உரிமை மீறல்கள் கட்டற்று விரிவடைவதால், வர்த்தக உறவுகளில், பாதிப்பு ஏற்படலாமென்று அழுத்தத்தை திணிப்பது, போன்ற இருவழி நகர்வில் மேற்குலகம் பயணிக்கிறது.

இதேபோன்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில், அரசாங்கத்திற்கெதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு, பின்னர் அரசாங்கத்தை சாந்தப்படுத்த, பயங்கரவாத தடுப்பு ஆயுதங்களை வழங்கி சமரசம் செய்ததைப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது இறுக்கமும், தளர்வும் இணைந்த உத்தியை மேற்குலகம் தற்போது பிரயோகிக்க முடிகிறது.

அரசாங்கத்திற்கு எதிராகக் கண்டனங்களை வெளியிடும் சக்திகள், புலிகளுக்கு உயிரோட்டம் அளிக்க முற்படுகிறார்கள் என்கிற வகையில் பதிலடி கொடுத்து, அவர்களை மௌனியாக்கும் உத்தியை சிங்களத்தேசம் பயன்படுத்துகிறது.

ஐ.நா.மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவும் முயற்சிகளும் பலன் அளிக்கப் போவதில்லை.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்தும் பெறும் நிதியினை போரில் முதலீடு செய்வதால், கடன் சுமை அதிகரிப்பதைத் தவிர, வேறெந்த பிரதிபலனும் கிட்டப்போவதில்லை.

2007மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மடு பிடிக்கும் பõரிய படை நகர்வு ஜெயசிக்குறு போன்று நீள்கிறது.

அரசாங்கம் கூறுவது போன்று, நாளொன்றுக்கு 10 புலிகள் வீதம் கொல்லப்பட்டால், அடுத்த இருமாத காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விடுமென்பதைக் கணிப்பிட கணிதமேதை இராமõனுஜத்தின் உதவி தேவையில்லை.

புலிகளின் தற்காப்புச் சமரிற்கே, இத்தகைய பாரிய இழப்புகளை இராணுவம் எதிர்கொண்டால், வலிந்த தாக்குதல்கள் உருவாக்கப் போகும் பின் விளைவுகள் மோசமான அழிவுகளையும் மனித அவலங்களையும் இம்மண்ணில் உருவாக்கும்.

[நன்றி - வீரகேசரி]

வன்னிக் களத்தினை ஊடறுக்கும் முயற்சிகளிலிருந்து படைகள் மந்தநிலையடையும் பட்சத்தில் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கான வாய்ப்புகளுண்டு. அதன் அச்சத்தின் நிமிர்த்தமே, மட்டக்களப்பிலிருந்து அதிரடிப்படை விலக்கல், மன்னாரில் படை குவித்தல் சம்பவங்கள். இந்தமுயற்சியும் கைகூடாநிலையேற்பட்டால் இராணுவத்தினரிடையே மாத்திரமல்ல, அதன் உயர் பதவிகளில் உள்ளவர்களிடமும், அரசியலாளர்களிடமும், சலிப்பு வரும். அப்போதுதான் இது நடக்கலாம்.

"புலிகளின் தற்காப்புச் சமரிற்கேஇ இத்தகைய பாரிய இழப்புகளை இராணுவம் எதிர்கொண்டால், வலிந்த தாக்குதல்கள் உருவாக்கப் போகும் பின் விளைவுகள் மோசமான அழிவுகளையும் மனித அவலங்களையும் இம்மண்ணில் உருவாக்கும்."

என்ன இறைவன் வேள்ஸ் அருளைரை மிச்சிடுவிங்க போல :D

  • கருத்துக்கள உறவுகள்

வரவிருக்கும் கிழக்கு மாகாணத் தேர்தலில் வென்று முதலமைச்சராக வரவிருக்கும் பிள்ளையான் சிங்கள ஆதிக்கத்திற்குள் கிழக்கு போனால் தமிழரால் கிழக்கை ஆள முடியாது என்றுணர்ந்து ஏதாவது செய்வார் என்று நம்புவோம். .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.