Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோட கருத்தில ஈழத்தமிழருக்கு ஆதரவாக உயிரையும் கொடுத்து போராடிக்கொண்டிருக்கின்ற சில உணர்வாழர் மத்தியிலும் இனவாதவெறியர்களுக்கு யால்ரா போடும் போட்டுக்கொண்டிருப்பவர்கள் பற்றியும் நாம் அறிந்திருக்கின்றோமா

சிறிலங்கா துணைத் தூதரக் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்களத் திரைப்படத்தை அழிக்க வேண்டும். -தொல்.திருமாவளவன் வழக்கு

thiruma3qf2.jpg

தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான "பிரபாகரன்" என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தை கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு தலைமை நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தொல்.திருமாவளவன் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

- பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது.

- இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலையால் லட்சக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் அகதிகளாக அல்லற்படுகின்றனர். ஆனால் பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்திலோ, புலிகளின் போரினால் மிக மோசமான அகதி முகாம்களில் சிங்கள மக்கள் அவதிப்படுவதாக பொய்யாக சித்தரிக்கப்படுகிற காட்சிகள் உள்ளன.

- 3 தசாப்தகால இனப்போரின் வரலாற்றை தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் வழக்குத் தொடர்ந்துள்ள நாமும் நன்கு அறிவோம்.

- கொத்து கொத்தாக சிங்களவர்கள் கொல்லப்படுவது போலவும் இடம்பெயருவதும் போலவுமான காட்சிகள் அனைத்துமே மிகப் பொய்யானவை மட்டுமல்ல பாரிய கற்பனையும் கூட.

- சில காட்சிகளில் "சிறார்களை" கொண்டு இனப்படுகொலை செய்துவதாகவும் காட்டப்பட்டுள்ளது. அதனைவிட மிக மோசமாக களமுனையில் கொல்லப்பட்ட சிறார்களுக்கு பாடசாலை சீருடைகளை அணிவித்து பள்ளிக்குழந்தைகளை இராணுவம் கொன்றதாக புலிகள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

செஞ்சோலை என்ற சிறார் காப்பகத்தின் மீது சிறிலங்கா வான்படையின் 16 வான்குண்டுகள் தாக்குதல் நடத்தியதால் 50-க்கும் மேற்பட்ட சிறார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களை ஆயுதப் பயிற்சிக்குச் சென்ற சிறார்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியது.

ஆனால் ஐ.நா.வின் சிறார் அமைப்பான யுனிசெஃப், பாடசாலை சிறார்களே படுகொலை செய்யப்பட்டோர் எனக்கூறியது.

இப்படத்தில், சிறிலங்காவின் பொய்ப் பிரச்சாரத்தை தூக்கி நிறுத்தும் வகையிலேயே வன்மத்துடன் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

- இப்படத்தின் நோக்கமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று இப்படத்தின் இணையதளத்திலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று குமுதம் றிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

- இப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் பதனீட்டுச் செயற்பாடுகளுக்கான பணிகள் ஜெமினி கலையகத்தில் நடைபெற்றது. இதற்கு எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது நிலைமையை சீராக்க காவல்துறையினர் அங்கு வந்தனர். காவல்துறை துணை ஆய்வாளர் முன்னிலையேயே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்படும் என்று படத்தின் இயக்குநர் துசாரா பீரிஸ் உறுதியளித்திருந்தார். கடந்த 27 ஆம் நாள் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு படம் திரையிடப்பட்டது.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணனும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் படம் இது என்று கருத்து தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு துசாரா பீரிஸ் கலந்து கொள்ளவில்லை.

- உலகத் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலான இப்படத்தை ஜெமினி வண்ணக் கலையகத்தை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று கடந்த மார்ச் 28 ஆம் நாள் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு முறைப்பாடு செய்திருந்தோம்.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்படைத் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் ஜெமினி கலையகத்தினர், சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தினர் அப்படத்தின் பிரதிகளை தம்மிடமோ அல்லது தாம் குறிப்பிடும் நபர்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களினது உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு சிறிலங்கா துணைத் தூதரகம் இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

அப்படத்தின் பிரதிகளை வெளியே கொடுத்தால் பல இடங்களில் திரையிட வாய்ப்பு உண்டு. இது இலங்கையில் இன மோதலை மேலதிகமாக மிக மோசமாகத்தூண்டி விடும்.

அதனால் தமிழ்நாட்டில் 1980-களில் நடந்தது போன்ற உணர்வுமிக்க போராட்டங்களும் நடைபெறும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொதுமக்களினது இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலையும்.

இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிப்பதுடன் படத்தின் பிரதிகளை எவரிடமும் கொடுக்கக்கூடாது என்று ஜெமினி கலையகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும் சிறிலங்கா துணைத் தூதரகத்தின் அழுத்தங்களுக்கு அமைய மத்திய மற்றும் மாநில உள்துறைச் செயலர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெமினி கலையகத்திற்கு உத்தரவிடுவதைத் தடுக்க வேண்டும்.

அத்துடன் இப்படத்தின் பிரதிகள் மற்றும் மின்னனு பேக்கப் உள்ளிட்ட அனைத்துவகையானவற்றையும் மத்திய உள்துறைச் செயலகம் கைப்பற்றி அழிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடக் கோருகிறோம் என்று அதில் திருமாவளவன் கோரியுள்ளார்.

தொல்.திருமாவளவனுக்காக சட்டவாளர்கள் கோபிகிருஷ்ணா என்ற ஆர்வலன், பொன். இரவி என்ற இளந்திரையன், கே.பாலகிட்ணன் என்ற இளமாறன், இ. அங்கையற்கண்ணி, சிவலிங்கம், சுரேசு என்ற அகரன் ஆகியோர் இம்மனுவைத் தாக்கல் செய்தனர்.

-Pathivu

எப்படியோ விரைவில் தமிழகம் ஈழத்தமிழர்களுக்காக கிளர்ந்தெழுந்து, சகோதரர்கள் விடியலின் மூலம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிபிறக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம். அதற்கு 'போலி தேசியம்' என்ற பெயரில் இடையூறு விளைவிக்க முற்படும் சக்திகளை தகர்த்தெறிந்து நேசக்கரம் நீட்ட வேண்டியது அனைத்து தமிழர்களின் கடமையுமாகும்.

இப்படிப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்

koothadicinemacopygs4.jpg

கூத்தாடிகளுக்குப் பணம் தான் முக்கியம் அது போல் தான் தமிழ்நாட்டுத் தமிழ்த் திரையுலகக் கூத்தாடிகளும். ஒவ்வொரு நாளும் அப்பாவித் தமிழர்கள் ஈழத்தில் சிங்களவர்களால் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள், மறு நாள் அவர்களின் உடல்கள் கடல் கரையில் ஒதுங்குகின்றன, சிங்கள இராணுவம் குண்டு மழை பொழிகிறது, ஈழத்தமிழர்கள் உணவுத் தட்டுப்பாட்டினால் தவிக்கிறார்கள் ஆனால் அந்தச் சிங்களவர்களுடன் கைகோர்த்து கவிதை பாடுகின்றனர் தமிழ் நாட்டுத் தமிழ்க் கூத்தாடிகள்

chennai0vj8.jpg

வெட்கக் கேடு மட்டுமல்ல வேதனைக்குரிய விடயம். ஈழத்தமிழர்களை நீங்கள் கொன்று குவித்தாலும் பரவாயில்லை, நாங்கள் ஆடிப்பாடி உங்களை மகிழ்விக்கும் போது, இலங்கையின் மறுபக்கத்தில் தமிழர்களின் சாக்குரல் கேட்டாலும் பரவாயில்லை, எங்களுக்குக் காசு தான் நாங்கள் உங்களை மகிழ்விக்கிறோம் என்று சிங்களவருடன் கொஞ்சிக் குலாவி விட்டு வந்திருக்கிறார்கள் தமிழகக் கூத்தாடிகள். அந்தக் கூத்தாடிகளைச் சொல்லிக் குற்றமில்லை, இன்றும் தமிழ்நாட்டுக் கூத்தாடிகளின் படங்களுக்குப் பாடுபட்டு உழைத்த் பணத்தைக் கொட்டி விட்டு வாணீர் வடிக்கும் ஈழைத்தமிழர்களைத் தான் செருப்பாலடிக்க வேண்டும்.

chennai25202nh4.jpg

தமிழ்நாட்டிலே ஈழத்தமிழர்களுக்கெதிராக இயங்குவதற்காகவே நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை தூதரகம் பணத்தால் அடித்ததும் பாய்ந்து விழுந்து ஓடி விட்ட ராதிகா என்ற கூத்தாடி தன்னுடைய உடலில் கலப்பு இரத்தம் ஓடுவதைக் காட்டி விட்டது. மற்ற பரதேசி நடிகர்களைச் சொல்லவே தேவையில்லை.

ppwq6.jpg

ஈழத்தமிழர்களுக்கெதிராக நடத்தப்படும் மனிதவுரிமைச் செயல்களைக் கண்டித்து இலங்கைக்கு எதிராக தடைச்சட்டங்களைக் கொண்டு வரவேண்டுமெனவும், இலங்கையின் உற்பத்திப் பொருட்களை மனிதவுரிமைகளை மதிக்கும் எவரும் கொள்வனவு செய்யக் கூடாதெனவும், இலங்கை பங்குபற்றும் கிரிக்கெட் போட்டிகளிலேயே பங்குபற்ற வேண்டாமெனவும் பல அனைத்துலக மன்னிப்புச்சபையும் (Amensty International), பல்வேறு மனிதாபிமான, மனிதவுரிமை நிறுவனங்களும் கோரிக்கைகளை முன்வைக்கும் போதும், இலங்கைக்கு உல்லாசப் பயணம் செய்ய வேண்டாமென இலங்கைத் தமிழர்கள் மேலை நாட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து பிரச்சனைகளை விளக்கும் போது தமிழ்நாட்டுக் கூத்தாடிகள் மட்டும் இலங்கையில் முதலீடு செய்வதைப் பற்றியும், சிங்களப் படங்கள் தயாரிப்பதையும், இலங்கையில் படப்பிடிப்பை நடத்தி சிங்கள அரசுக்கு வருமானத்தை அதிகரிப்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் இந்த தமிழ் விபச்சாரிகளின் படங்களைக் காசு கொடுத்துப் பார்த்து, இனிமேலும் ஆதரிப்பதா இல்லையா என்பதை மானமுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனும் சிந்திக்க வேண்டும்.

iiji6.jpg

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கெதிரான அரசாங்கம் பலமுறை பணத்தைக் கொட்டி, வருந்தி அழைத்தும் அமெரிக்காவின் நடிகர்கள் பாடகர்கள் யாருமே தென்னாபிரிக்காவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவோ தொடர்புகளை வைத்திருக்கவோ இணங்கவில்லை. பல தேசிய இனங்களின் கலைஞர்கள் தமது கலையை தமது மக்களின் விடுதலைக்காகப் பயன்படுத்தியுள்ளனர், யாருமே தமதினத்தை அழிப்பவர்களுக்குக் கூத்தாடிப் பிழைக்க விரும்பியதில்லை. இந்த தமிழ்நாட்டுக் கூத்தாடிகள் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தால் கூடப் பரவாயில்லை முதுகில் குத்தாமலாவதிருக்கலாம்.

oozx3.jpg

இவர்களின் இந்த்ச் செயலால், தமிழ்நாட்டுக் கலைஞர்கள் எல்லாம் சிங்கள அரசுக்குத் தான் ஆதரவு தருகின்றனர், தமிழ்நாட்டிலேயே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவில்லை என்று பிரச்சாரம் செய்ய வழிவகுத்து விட்டார்கள், இந்த சவாலை ஈழத்தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள், இந்த தமிழ்நாட்டுக் கூத்தாடிகளுக்கு எப்படிப் பாடம் படிப்பிக்கப் போகிறார்கள் என்பது தான் எமக்கு முன்னாலுள்ள கேள்வி

uuvh9.jpg

விசு என்ற தமிழ்நாட்டுக் கூத்தாடி, கனடாவுக்கு ஈழத்தமிழர்களுக்குக் கூத்துக் காட்ட வந்து விட்டு, தமிழீழத்தையும், பிரபாகரனையும் பற்றி எதிராக ஒரு வரி பேசியதற்காக அடுத்த நாளே, கனடா அரசாங்கமே அவரை விமானத்திலேற்றி அனுப்பி விடச் செய்தவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதை ராதிகாவுக்கும், மாதவனுக்கும் மற்றக் கூத்தாடிகளுக்கும் ஈழத்தமிழர்கள் உணர்த்துவார்களா அல்லது தொடர்ந்து அவர்கள் எங்களை இளிச்ச வாயன்களாக நினைக்கும் படி நடந்து கொள்ளப் போகிறோமா?

நன்றிகள் http://unarvukal-unarvukal.blogspot.com/20.../blog-post.html

Edited by puspaviji

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.