Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் சுயாட்சி போராட்டத்தை பலவீனப்படுத்தும் சதியே யாழ். மக்கள் தொகை வெளியீடு: செ.கஜேந்திரன்

Featured Replies

தமிழ் மக்களின் சுயாட்சிப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் சதியாகவே துப்பாக்கி முனையில் யாழ். மக்கள் தொகைக் கணிப்பீட்டை சிங்கள அரசு வெளியிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சனத்தொகைக் கணக்கெடுப்பு அரசின் கபடத்தனமான அரசியல் நோக்கம் - செ.கஜேந்திரன்

யாழ்ப்பாண மாவட்ட கச்சேரியினால் கடந்த புதன்கிழமை( 09-04-2008) அன்று யாழ் மாவட்டத்திலுள்ள மக்கள் தொகை கணிப்பீட்டின் விபரங்கள் வெளியpடப்பட்டுள்ளது. இம் மக்கள் தொகை கணிப்பீடானது தற்போதய யுத்த சூழலில் அங்கு வாழும் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது சிங்கள பௌத்த மேலாண்மைவாதிகளின் கபடத்தனமான அரசியல் உள் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின்படி சனத்தொகை பின்வருமாறு காணப்படுகின்றது.

1. யாழ்ப்பாணம் 15311 குடும்பங்கள், 54156 அங்கத்தவர்கள்

2. நல்லூர் 23111 குடும்பங்கள், 73763 அங்கத்தவர்கள்

3. கோப்பாய் 21855 குடும்பங்கள், 75984 அங்கத்தவர்கள்

4. சண்டிலிப்பாய் 17575 குடும்பங்கள், 62992 அங்கத்தவர்கள்

5. தெல்லிப்பளை 7632 குடும்பங்கள், 26542 அங்கத்தவர்கள்

6. சங்கானை 14549 குடும்பங்கள், 49993 அங்கத்தவர்கள்

7. கரவெட்டி15021 குடும்பங்கள், 48241 அங்கத்தவர்கள்

8. பருத்தித்துறை 14687 குடும்பங்கள், 50141 அங்கத்தவர்கள்

9. மருதங்கேணி 975 குடும்பங்கள், 3401 அங்கத்தவர்கள்

10. உடுவில் 17491 குடும்பங்கள், 52633 அங்கத்தவர்கள்

11. சாவகச்சேரி 19237 குடும்பங்கள், 68082 அங்கத்தவர்கள்

12. வேலணை 3988 குடும்பங்கள், 14686 அங்கத்தவர்கள்

13. ஊர்காவற்துறை 4174 குடும்பங்கள், 13835 அங்கத்தவர்கள்

14. காரைநகர் 3083 குடும்பங்கள், 9327 அங்கத்தவர்கள்

15. நெடுந்தீவு 1531 குடும்பங்கள், 5060 அங்கத்தவர்கள்

யாழ் குடாநாட்டிலுள்ள 40000 இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவான ஈபிடிபி யினரதும் பொது மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளைகள் போன்ற வன்முறைகள் காரணமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யாழ் குடாநாட்டிலிருந்து படிப்படியாக வெளியேறி வன்னியிலும், தென்னிலங்கையிலும், இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

அதனைவிட பல நூற்றுக்கணக்கானவர்கள் படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதுடன், பல நூறு;றுக்கணக்கானவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழவில’ சரணடைந்துள்ளனர்.

அதனைவிட மேலும் பலநூற்றுக் கணக்கானவர்கள் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டினுள்ளேயே தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். இத்தகையதொரு நிலையில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி சனத்தெகை கணிப்பீடானது பாராளுமன்ற உறுப்பினர்கள் குடாநாட்டிலுள்ள அரசாங்க அதிகாரிகள் கல்விமான்கள் பொது மக்களதும் விருப்பத்திற்கு மாறாக அவர்களது எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டது.

யாழ் குடாநாட்டிலுள்ள கச்சேரி மற்றும் பிரதேச செயலகங்களிலுள்ள அதிகாரிகளும் கிராம சேவையாளர்களும் படையினரால் மிரட்டப்பட்டு பலவந்தமாகவே இச் சனத்தொகை கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே கல்வி பொருளாதார ரீதியாக ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள குடாநாட்டு மக்கள், அரசியல் உள் நோக்கம் கொண்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச் சனத்தெகை கணிப்பீட்டினால் மேலும் மேலும் ஓடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படலாம் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கும் ஏனைய உயர்கல்வி கற்கை நெறிகளுக்கும் மாணவர்களை அனுமதித்தல், பாராளுமன்றத்திற்கான உளுப்பினர்களை தெரிவுசெய்தல், மாவட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஓதுக்கீடுகள், தொழில் வாய்ப்புக்கள் வழங்குதல் போன்றவற்றின்போது இச் சனத்தொகை கணிப்பீடு கவனத்தில் கொள்ளப்படுமாயின் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும்.

ஏற்கனவே உயர்பாதுகாப்பு பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீள் குடியமர்த்துவதற்கு குடியிருப்பாளர்கள் நேரில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்னும் நிபந்தனை காரணமாக மீள் குடியமர்வு என்பது சாத்தியமற்றதாகவே உள்ள நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை ஐனநாயக உரிமைகளை மீறும் வகையில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இச் சனத்தொகை கணிப்பீட்டினை வெளியீடு செய்ததன் மூலம் தமிழ் மக்களின் சனத்தொகை தொடர்பாக குறைந்தளவான புள்ளிவிபரங்களை வெளியீடு செய்வதன் மூலம் சுயாட்சி கோரி போராடும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கு சிங்களத்தரப்பு மேற்கொள்ளும் சதி நடவடிக்கையாகவும் நாம் கருதுகின்றோம்.

ஐனநாயகத்திற்கு முரணான வகையில் துப்பாக்கி முனையில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி சனத்தொகை கணிப்பீட்டினை அரசு உடனடியாக செல்லுபடியற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இவ் விடயத்தில் உரிய அக்கறை செலுத்த வேண்டும் எனக் கோருகின்றேன்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.