Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சைவமும் தமிழர் கலைகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சைவமும் கலையும்

பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன.

அவற்றுள் உலக் கோட்பாடு, இயற்கைக் கோட்பாடு, முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு

என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், வழிபாட்டு

கூறும், இயற்கை வழிபாட்டுக் கூறும், முன்னோர் வழிப்பாடுக் கூறும் கலந்து இயைந்தே உள்ளன. சமய வாழ்வின் தொடக்க நிலையினை பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் எமில் துர்க்கேம், குலக்குறியே, அதனைச் சார்ந்த நம்பிக்கையே சமயமாக வளர்ச்சி கொண்டது என்கிறார். ஆஸ்திரேலியாவில் வாழும் அருண்டா பழங்குடிமக்களை தாரமாகக் கொண்டு தம் கொள்கையை அவர் உருவாக்கி விளக்கினார். மக்கள் ஒரே மாதிரியாகப் போய்க் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் சலிப்பு அடைகிறார்கள். அந்தச் சலிப்பில் இருந்து விடுதலை பெற எல்லோரும்

ஆட்ட பாட்டத்தில் கழிக்கிறார்கள். இந்த ஆட்டப்பாட்டம் ஆரவாரத்தோடு வெறித்தனமாக அமைகிறது. எனவே அதில் கலந்துக் கொள்ள வேசம் வருகிறது. கொஞ்ச நேரத்தில் வந்த வேசம் அடங்க ஆட்டம்பாட்டங்கள் நின்றுபோகின்றன.

எப்படி இந்த வேகம் வருகிறது, எப்படி அது போகிறது என்று அவர்கள் எண்ணத் தொடங்கிறார்கள். ஏதோ ஒரு நுட்பமான- அருவருமான மறைமுக சக்திதான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.

அது வெளியே இருந்து மக்கள் உடலில் புகும்போது மக்களுக்கு வேசம் வந்துவிடுகிறது.

விலகிப் போகும் போது வேசம் போய்விடுகிறது.

இந்தச் சக்தியை அருண்டா மக்கள் 'மான' என்று குறித்தனர். அதனைப் பூசித்து வழிப்பட்டனர். அந்த உருவத்தைப் புனிதமாகக் கருதி வழிப்பட்டனர். அதனை ஒட்டியே பூசைகள் சடங்குகள் தோன்றின. அந்த உருவமே குலக்குற [totem] எனப்படும். உருவங்கள் மட்டும் அல்லாமல் தாவரங்கள், விலங்குகள், இயற்கைப் பொருள்கள் முதலியனவும் சக்தியின் இருப்பிடமாகக் கருதப்பட்டு, புனிதப்பொருள்களாகப் போற்றினர்.

தமிழர் ஆ தி சமயக் கூறுகளிலும் இக்குலக்குறி இருந்ததை நம் பழைய வரலாறு காட்டுகிறது.

கல், லிங்கம், புனித மரங்கள் நந்தி, நாகம் போன்ற விலங்குகள், பருந்து, மயில்,

போன்ற பறவைகள், தமிழர் வழிப்பாட்டில் வழிபாட்டு கூறுகளாக இருப்பதைக் காணலாம்.

தமிழர் சமயத்தில் உருவ வழிப்பாடு தவிர்க்க முடியாததாயிற்று. இந்த உருவம் சமைக்கும் முறையே சிற்பக் கலைக்கு மூல ஊற்றாக அமைந்திருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் போரில் மடிந்த வீரருக்கு நடுகல் நட்டு, பேரும் ஊரும் எழுதி வழிபடப் பெற்றதாக பழைய இலக்கியகளில் காணலாம். அண்மையக் காலங்களில் வட தமிழகத்தில் கல்வெட்டுகளோடு கூடிய உருவம் பொறித்த நடுகற்கள் கிடைத்துள்ளது. நடுகல் வழிப்பாடு எனும் முன்னோர் வழிபாடு சிற்பக் கலையோடு சேர்ந்து ஒன்றாகத் திகழ்கிறது.

சைவ சமயத்தில் ஆ தி உருவமானதாகக் கருதப்பெறும் சிவலிங்கம் கி.மு 1500க்கு

முற்பட்ட சிந்திவெளி நாகரிகத்தில் கிடைத்தாகச் சொல்வார்கள். பழந்தமிழ் நூலான

தொல்காப்பியத்தில் கட்டப்பெறும் 'கந்தமி' என்பது சிவனைப் பற்றிய குறிப்பாகும் என்பர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை லிங்க உருவச் சின்னங்கள் கிருத்துவக்கு முற்பட்ட காலத்தில்

உள்ளவை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.

கி.மு முதல் நூற்றாண்டைச் சார்ந்த லிங்க உருவம் ஒன்று பெட்ட[bHETS] எனும்

இடத்தில் கிடைத்தாகவும், அது லக்னோ அருங்காட்சியில் உள்ளதாக தொரிகிறது.

ஒவியக் கலையைப் பொறுத்தளவில் நடுகல்லில் சங்ககாலத்தில் எழுதப்பட்ட வீரனின்

ஒவியங்கள் மிகப் பழங்காலத்தன. சங்க இலக்கியங்களில் ஒவியம் பற்றிய குறிப்புகள் இடம்

பெற்றுள்ளன. அகநாநூறு, நற்றிணை, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை

போன்றவறில் ஓவம்- ஓவியம் என்னும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரத்தில் திரையில் எழுதப்பட்ட ஒவியங்களை பற்றிய குறிப்புகள் இடம்

பெற்றுள்ளன. கதை ஓவியங்களைப்பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. நெடுநல்வாடை, அகம், மணிமேகலை பாடல்களில் ஓவிய நூல் ஒன்று இருந்தாக அடியார்க்கு நல்லார் உரையில் குறிப்பு ஒன்று வருகிறது. திருப்பரங்குன்றத்தில் கவுதம் முனிவர் தம் மனைவி அகலிகையையும், இந்திரனையும் சபித்த நிகழ்வு ஓவியமாக வரையப்பெற்றிருந்தது எனும் குறிப்பு பாரிபாடலில்கூறப்பட்டுள்ளது. மணிமேகலை, சிலப்பதிகாரம், பெருங்கதை,

சிந்தாமணி, திவாகர கண்டு, கம்பராமாணயம் ஆகியவற்றில் ஓவியம் பற்றி பல்வேறு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பல்லவர காலத்திற்குப் பின்பு காஞ்சிபுரம், பனமலை, ரமா மலை, சித்தன்ன வாசல், தஞ்சாவூர், திருமலைபுரம், நர்த்த மலை கிய இடங்களில் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் சில ஆ லயங்களிலும், வைணவ ஆ லயங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிற்பக் கலை, ஓவியக்கலை ஆகியவற்றுக்கு அடுத்ததாக அல்லது அதற்கு இணையாக கருதத்தக்க தோற்றமும், வளர்ச்சியும், பெருமையும் உடையது இசை கலையாகும்.

இசை

தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிபடுத்துகின்றன. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலானோர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தாகும்.

பக்தி இலக்கியத்திற்கு முன்பே பாரிபாடல் தமிழிசை, தாளம், பண்கியவகை

தொகையோடு அமைக்கப் பட்டிருந்ததைக் காணுகிறோம். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பொரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டு எடுத்துரைக்கின்றன. பிற்காலத்து அருணகிரி தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத் தலங்களில் இசை மழைப் பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கிறது.

தமிழ் இசையோடும் சைவத்தோடு இணைந்த பலரை வரலாற்றில் இருந்து காட்ட முடியும்.

தெலுங்கு மொழியின் தலையீடும் செல்வாக்கும் தமிழர் வரலாற்றில் குறுக்கிடுகின்ற வரை தமிழருக்கே உரிய இசை சிறந்து வளர்ந்து இருந்தது. தொடக்கத்தில் மானா சக்தி ஆ ட்டம் பாட்டத்தில் இருந்து அறியப்பெற்றது என்ற வரலாற்றையும் தமிழ் இசை இணைப்பையும் இணைத்துக் கருதின் தமிழர் இசைப்பழைமை தெளிவாகப் புலப்படும்.

ஆடற்கலை

இசைக் கலைக்கு இணையாச் சுட்டிக்காட்ட வேண்டியது ஆடற்கலையாகும்.

சிவனின் ஒரு தோற்றமான நடராச உருவம் உலகம் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த

ஆடவல்லான் உருவம், சைவ நாயன்மார் காலத்தில் உருக் கொண்டு, பிற்காலச்

சோழர் காலத்தில் மிகப் பெரிய அளவு பரவிய ஒன்றாகும். நடராச உருவத்தில்

ஆயிரக்கணக்கான வெண்கலப் படிமங்களாகும், பல்லாயிரக்கணக்கான படைப்பு

உருவச் சிற்பங்களும் தமிழகக் கோயில்களில் காணப்படுகின்றன. ஆடற்கலை தமிழர்

பெரும் வல்லுநர் என்பதைச் சிலப்பத்திகாரமும், குறிப்பாக அரங்கேற்று காதையும்

குன்றக் குரவை, ஆய்சுயர் குர்வையும் எடுத்துக்காட்டும்.

மாதவி ஆ டலிலும், யாழ் மீட்டுவத்திலும், இசை பாடுவதிலும் பெரும் ஆ ற்றல்

பெற்றிருந்தாள் என்று சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டுகின்றது. ஆடல், இசை தொடர்பான

இலக்கண நுல்களைத் தமிழர்கள் பெற்றிந்தனர் என்று அடியார் நல்லார் உரை

தெளிவுபடுத்துகின்றது.

சோழர் காலம் தொடங்கி, கோயில்களில் ஆ டல் வல்ல மகளீர் அமர்த்தப்

பெற்றிருந்ததைக் கல்வெட்டுச் செய்திகள் வலியுறுத்துகின்றன. கூத்து என்பதே

ஆடலையும், நாடகத்தையும் குறிக்கும் சொல்லாகத் தமிழரிடையே புழங்கியது.

வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து என்ற வழக்காறுகளும் இருந்தன.

நாடகத்தமிழ் ஒரு காலத்தில் பாட்டும் நடனமுமாகவே இருந்தது.

தமிழகத்தில் கி.பி. 6,7 ம் நூற்றாண்டு முதல் கட்டப்பட்ட கோயில்கள்

கட்டகலைக்குப் பெரும் சான்றாக விளங்குகின்றது. தமிழர் கோயில் கட்டும் கலை

நுற்றாண்டு தோறும் தொடந்து இருந்து வந்ததை உலகு எங்கும் பரவியுள்ள கோயில்

எடுத்துரைக்கின்றன. பிற்காலச் சோழர்காலத்தில் தாய்லாந்து முதலான தென்கிழக்கு

ஆசியா நாடுகளிலும் தமிழருடைய கோயில் கட்டடக்கலை செல்வாக்கோடு போற்றப்

பெற்றதை நாம் காணமுடிகிறது. சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை,

கட்டடக்கலை கிய நான்கும் பல நூற்றாண்டுகளாகத் தமிழருக்குரிய பண்பாட்டு

முத்திரையுடன் தோன்றி வளர்ந்து வந்ததை கண்டோம்.

தமிழரைப் பொறுத்த அளவிற்குச் சைவம் எந்த தனிப்பெயர் சூட்டிக்

குறிக்க முடியாவிட்டாலும் தொல் தமிழர் சமயம் பாட்டு, ஆடல் என்ற இரு வகை

கலைகளோடு சேர்ந்து பிறந்ததை உறுதியாகச் சுட்டிக்காட்ட முடியும். நடுகற்கள்

எந்த சமய வழிபாட்டைச் சார்ந்தவை என்று குறிக்க முடியாவிட்டாலும் வழிபாட்டிற்கு

உரியதாக இருந்தன என்பதையும் அதனை ஒட்டித் தொடக்கக் காலப்படைப்புச்

சிற்பமுறையும், ஓவியமுறையும் தோன்றி வளர்ந்தன என்பதையும் உறுதியாகச்

சொல்ல முடியும். சங்க இலக்கியங்கள் சுட்டும் வேலன்ட்டம், முருகனோடு

தொடர்புடையாதாகும். அருளாடல் ஆடலோடு தொடர்புடையது என்பதை எடுத்து

சொல்லவேண்டியதில்லை. குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை ஆ கியன, பெண்கள்

கூட்டமாகக் குழுமி இசையோடு ஆ டல் நிகழ்த்தியத்தைக் காட்டும் சான்றுளாகும்

எனவே, பண்டைத்தமிழர் வாழ்வோடு இசையும், ஆடலும் பின்னிப் பிணைந்தே இருந்தன.

மேற்கண்ட இரண்டும் ஜைனர் பெளத்த வரவாய் இருந்தவை.

அடுத்த, சில நுற்றாண்டுகளில் ஒடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஜைனர்கள்

மக்களை உணர்ச்சி வயப்படுவதால் இசைக்கும், டலுக்கும் முன்னுரிமை

கொடுத்துப் போற்றுவதில்லை. இலக்கியங்களில் ஜைனர்கள் தம் கருத்தை

மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கூறியுள்ளனர்.

ஜைனரரான இளங்கோவடிகளால் எழுதப்பெற்ற சிலப்பதிகாரத்தில்

ஆடலிலும், பாடலிலும் வல்ல மாதவி வாழ்க்கையில் தோல்வியுறுவதாக காட்டப்பட்டு

இருக்கிறது. ஆடலில் வல்ல மணிமேகலை இந்திர விழாவில் ஆ டக்கூடாது என்று

மாதவியால் தடுக்கப்பட்ட செய்தியைப் பெளத்தக் காப்பியமான மணிமேகலை

எடுத்துக்காட்டுகிறது. யசோதர காவியம் எனும் ஜைன காப்பியமும் அமிழ்தமதி என்ற

பிரிதொரு ஜைன காப்பியமும் அரசனின் பட்டத்தரசி ஒழுக்கம் குன்றிப்பாடும் ஆற்றல்

தொழுநோயாளியுடன் தொடர்புகொண்டு துற்றப்படுவதையும் காட்டுகிறது.

இசைக்கலை நல்லவர்களையும் அல்லவர் ஆ க்குகிறது என்பது மேற்கண்ட காப்பியத்தின் உட்பொருளாகும்.

ஆடல், பாடல் ஆகியவற்றில் பேரீடுபாடு கொண்டவராக வாழ்ந்த பண்டை தமிழர்

இதில் வேறுபட்டு நின்றனர்....

தமிழருக்கு அவற்றை வெறுத்து ஒதுக்கும் ஜைன,ரிபளத்தங்கள் வேண்டாதனவாக

இருந்ததில் வியப்பு இல்லை. எனவேதான் கி.பி 575 க்குப் பின் பிறகு பாண்டியன்

கடுங்கோள் வருகை ஒட்டித்தமிழகத்தில் ஜைன, பெளத்த மதங்கள் வீழ்ச்சி

அடையத்தொடங்கியது. இதன் அடையாளத்தைத் திருஞான சம்பந்தரின் வரலாறிலும்,

திருநாவுக்கரசரின் வரலாற்றிலும் தெளிவாகப் பார்க்கிறோம். இவ்விருவரும்

இன்னிசையால் இறைவனை வணங்கும் நாயன்மார்களாக வாழ்கின்றனர். "நாளும்

இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்றே பாராட்டப் பெறுகிறான்

திருவாரூர் கோயிலில் ஆடலிலும், பாடலிலும் வல்லவராக விளங்கியத் தேவரடியாகத்

தொண்டு புரிந்து வந்த பரவை நாச்சியாரைச் சைவ நாயன்மார்களில் ஒருவராகித்

சுந்தரர் காதலித்து மணம்முடித்து கொள்கிறார். 64 நாயன்மார்களுள் திருநீலகண்ட

யாழ்ப்பாணர் இசைத் தமிழிழோடு மிக நெருக்கமான தொடர்பு உடையவர். எனவே

ஜைன பெளத்தம் தடுத்து நிறுத்தி இசை ஆடல் கலைகளில் சைவ சமய

எழுச்சிக்குப் பிறகு பேரார்வம் காட்டினர் எனலாம்.

இச் சுழலிலே கி.பி. 7 ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டை ஆண்ட மகேந்திர வர்மனுக்குப் பிறகு தமிழகத்தில் கலைப்பாட்டுடன் கட்டப்பட்ட சிவன் கோயில்களின் நுற்றுக்கணக்கான கோயில்களை ஒட்டி வளர்க்கப்பட்ட இசை, ஆடல் கலைகளையும் சேர்த்து எண்ணுதல் வேண்டும். பல்லவமன்னர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாமல்லபுரத்தில் தனி இசை மண்டபம் இன்றும் உள்ளது. மகேந்திரவர்மனுக்குச் சித்திரகாரப்புலி என்ற பட்டமே இருந்தது. பல்லவமன்னர்கள் காலத்துச் சைவ ஆ லயங்களும் அவற்றை ஒட்டியச் சிற்பங்கலும் நிறைய உருவாகி என்பதைப் பிற்கலச் சோழர் வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

அத்தோடு மட்டுமல்லாது சோழமன்னர்கள் கட்டடக்கலையுடன், சிற்பக்கலை, இசைக்கலை, ஓவியக்கலை ஆ கியவற்றையும் சேர்த்து வளர்த்தனர். பல்லவர் கால காஞ்சிபுர கைலாயநாதர்கோயிலும் அதன் உள்மண்டபத்தில் உள்ள ஓவியங்களும் சிவன் கோயில்களுடன் ஓவியக்கலையையும் சேர்ந்து வளர்க்கப்பட்டதை எடுத்துரைக்கும் முதல் இராசராசன் தில்லைவாழ் அந்தணர் உதவியுடன் தேவாரத்தை கண்டு எடுத்து, இசை அமைத்துப் பல்வேறு தேவார ஓதுவார்களை நியமித்துப் பாடசெய்தான். தொடர்ந்து சோழ அரசர்களால் இப்பழக்கம் போற்றப் பெற்றதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

தமிழகத்தின் கலை வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால், அது பெரும்பாலும்

சமயத்தைச் சார்ந்தே வளர்ந்து இருக்கிறது என்பதை அறியமுடியும். சமயத்தை

விட்டுவிலகி கலைக்காகவே கலை எனும் பார்வைக்குரிய தமிழர் கலை வரலாறு

ஐரோப்பியர் வரவு வரை அமையவில்லை என்றே கூறலாம்.

கலை வளர்த்த வரலற்றில் சைவ சமயத்தின் பங்கு மிகப்பெரியது,குறிப்பிடத்தக்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு நன்று நெடுக்காலபோவன்

தமிழருக்குள் கலை, கலாச்சாரங்கள் இருக்கின்றது என்றால் அது சைவம் காவிக் கொண்டு வந்தது தான். மற்றய சமய வழிபாடுகள் எதிலுமே கலைகளுக்கு இடம் வழங்கப்படவில்லை. தமிழ் மன்னர்கள் அறிமுகப்படுத்தி கண்டி நடனமான சிங்கள நடனமும், பெருவிழா என்பதில் புத்தரின் தந்தத்தை உள்ளீடு செய்து பெரஹரா ஆகிப் போன கண்டிக் கலாச்சாரமாகட்டும். அவைகள் தமிழரில் இருந்து போனவையே.

கீழ்தட்டுச் சிங்களவர்கள் முதலில் இப்படி ஒன்றையும் கொண்டாடாமல் இருந்து, பிறகு கண்டிக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அவ்வாறே இறைவனைப் பாடல்கள் மூலமும், நடனங்களில் இறைவனைச் சம்பந்தப்படுத்தியும் வழிபட்ட உலகின் ஒரே ஒரு பக்தி என்றால் தமிழரின் சைவமும், அது சார்ந்த பக்தி முறைகளும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.