Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாந்தன் மீண்டும் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் உள்ள புலிகளின் தலைவர் A.C. Shanthan இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

LTTE leader arrested in Britain

Tue, May 6 08:49 PM

London, May 6 (IANS) Arunachalam Chrishanthakumar, a London-based leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was arrested by the British police Tuesday for the second time in less than a year for alleged fund-raising activities and procurement of war material.

Also known as A.C. Shanthan, the 51-year-old man was first arrested in June 2007 under Britain's Terrorism Act before being released on bail in November.

The police re-arrested him in Swindon, Wiltshire, in a pre-dawn raid Tuesday.

"Shanthan is the de-facto leader of the LTTE in the UK and has built up the outfit over 20 years in London," said Walter Jayawardhana, a spokesman for the Sri Lankan High Commission in London.

Shanthan is also thought to have been close to the late LTTE ideologue Anton Balasingham, and accompanied him for peace talks in Geneva in 2006.

http://in.news.yahoo.com/indiaabroad/20080...in-ef5d19c.html

The LTTE is a banned outfit under British law.

http://in.news.yahoo.com/indiaabroad/20080...in-ef5d19c.html

  • கருத்துக்கள உறவுகள்
:)

Edited by தூயவன்

புலிகள் இயக்க முக்கியத் தலைவர் சாந்தன் பிரிட்டனில் கைது

புதன்கிழமை, மே 7, 2008

லண்டன்:விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாந்தன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதம் வாங்க நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்தான் ஏ.சி.சாந்தன். மறைந்த ஆன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து லண்டனில் செயல்பட்டு வந்தார்.

நார்வே அமைதிக் குழுவின் முயற்சியால் ஜெனீவாவில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பாலசிங்கத்துடன் சாந்தனும் கலந்து கொண்டார்.

கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி சாந்தனை லண்டன் போலீஸார் கைது செய்தனர். பின்னர் நவம்பர் 22ம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் திடீரென கைது செய்யப்பட்டார்.

வில்ட்ஷயர் போலீஸார், ஸ்வின்டன் என்ற இடத்தில் நடந்த சோதனையின்போது சாந்தனைக் கைது செய்தனர்.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, ஆயுதம் வாங்க பணம் திரட்டியதாக சாந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி லண்டனில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாந்தனின் மனைவியும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தனின் இயற்பெயர் அருணாச்சலம் கிறிசாந்தகுமார். இவருக்கு வயது 51.

நன்றி தற்ஸ்தமிழ்

லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவு தலைரான சாந்தனை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் வசித்து வருபவர் அருணாச்சலம் கிரிசாந்தக்குமார் என்ற சாந்தன். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரிட்டனில் செயல்பட்டு வருவதாகவும், அந்த அமைப்புக்காக நிதி திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சாந்தன் உள்ளிட்ட 3 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 29ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆண்டன் பாலசிங்கத்துக்கு நெருக்கமாக இருந்தவர் சாந்தன். இவர், கடந்த 2006ல் ஜெனீவாவில் நடந்த அமைதிப்பேச்சு வார்த்தையிலும் கலந்து கொண்டார்.

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாகஇ கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சாந்தன் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி யாகூதமிழ்(மூலம் - வெப்துனியா)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திபற்றி அளவுக்கதிகமாக கருத்துக்களை பரிமாறுவது அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல.

ஆனால் எங்களது ஆதரவாளர் விரைவில் விடுதலையாக பிரார்த்திப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.