Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் தமிழர் இனம்.......................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun May 11 7:38:18 EEST 2008

தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் தமிழர் இனம் தொலைநோக்கு இல்லாதவர்களால் ஏற்பட்ட விளைவுகள் சிங்கள இனத்தைக் கப்பாற்றிய தமிழ்த் தலைமையின் பரம்ரை இன்றுஅழிவின் விழிம்பில்

யாராவது ஒருவர் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டால், யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் என்று சொல் வார்கள். இலங்கைத் தமிழர்களின் நிலை யும் இதுதான். இன்று இலங்கைத் தமிழர் கள் அடிமைகளாக, நாடோடிகளாக, குந்தி யிருப்பதற்கோ, உறங்குவதற்கோ கூட இய லாத நிலையில் அலைந்து திரிகிறார்கள் என்றால் அதற்கு நாமே காரணம், வேறு யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை.

எம் மூதாதையர்களும் தமிழர்களின் தலை வர்கள் என்றுகூறிக் கொண்டவர்களும் இழைத்த தவறுகளின் பலனை இன்று நாம் அனுபவிக்கின்றோம் என்பதே ஆழமான உண்மை. தங்களைப் புத்திசாலிகள் என வும் சிங்களவர்களை மோட் டுச் சிங்கள வர்கள் எனவும், வர்ணித்த கல்விமான் களும், சட்டத்தரணிகளும் விட்ட தவறு களின் பலனே இன்று எமக்கு இந்த நிலை.

எம்மிடையே காணப்படும் ஒற்றுமை யின்மையும் நானா, நீயா என்ற அதிகாரப் போட்டியுமே எமது அழிவுக்குக் காரணம். சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங் களுக்கிடையில் போர் புரிந்து மாண்டார் களேயொழிய அண்டை நாட்டைக் கைப் பற்றும் எண்ணம் யாருக்கும் வரவில்லை. மூவேந்தர்களும் ஒற்றுமையாக இருந் திருந்தால் பிரித்தானியர்கள் உலகம் முழு வதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்ததுபோல் தமிழ் இராச்சியமும் ஜாவா, சுமாத்திரா தீவுகளுக்கு அப்பாலும் விஸ் தரிக்கப்பட்டிருக்கும். நீயா, நானா என்ற போட்டியே பிரதேசவாதத்திற்கு அடிப் படைக் காரணம். இந்த நீயா, நானா என்ற போட்டி அடிமட்டத்திலிருந்து அதியுயர் மட்டம் வரை சகலரிடமும் காணப்படுகிறது.

சிங்களவர்களைக் காப்பாற்றும் படி அவர்களுக்காக யாழ்ப்பாணத்தவர்கள் தமி ழர்கள் குரல் கொடுத்த காலம் போய் மகிந்த ராஜபக்ஷவிடம் முதலமைச் சர் பதவிக்குச் சண்டை பிடிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் கார ணம்? நாமே தான் காரணம்!

பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த சம்பவம்

1915 ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் கலவரம் இடம்பெற்றபோது, அவ்வேளை இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் சிறுபான்மை யினரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் முஸ்லிம் களிற்குச் சார்பாகவே நடந்து கொண்டனர். இதனால் முஸ்லிம்களின் கை ஓங்கியது. சிங்கள மக்கள் எம்மைக் காப்பாற்ற யாருமே இல்லøயா என எண்ணினர்.

செய்வதறியாது விழித்த சிங்களத் தலைவர்கள் சேர். பொன். இராமநாதனிடம் சென்று மண்டியிட்டனர். இராமநாதன் துரை நீங்கள் எப்படியாவது சிங்கள மக் களைக் காப்பாற்ற வேண்டும் என சிங் களத் தலைவர்கள் இராமநாதனிடம் கேட்டுக் கொண்டனர். இலங்கையில் சிங் கள இனமே அழிந்து விடும் போலிருக்கிறது; நீங்கள்தான் எப்படியாவது சிங்களவர் களைக் காப்பாற்ற வேண்டும் என அப் போது இருந்த சிங்களத் தலைவர்கள் இராம நாதனிடம் மன்றாடினர்.

படித்தவரான சேர்.பொன். இராமநாதன் 1917 இல் கப்பலேறி லண்டனுக்குச் சென்றார். (அப்போது விமானப் பயணம் கிடையாது; இல்லாவிட்டால் விமானத்தில் சென்றிருப் பார்கள்.) லண்டனில் வைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் சிங்கள மக்களைக் காப் பாற்றும் படி வாதாடினார் இராமநாதன். பிரித்தானிய அரசாங்கம் இராமநாதனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இலங் கையில் கண்ட இடத்தில் சுடும் மார்ஷல் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கலவரம் கட் டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சிங்கள மக்கள் காப்பாற்றப்பட்டனர், நிம் மதிப் பெருமூச்சு விட்டனர்.

குதிரைகளை அவிழ்த்துவிட்டு

வடம் பிடித்து இழுத்தனர்

நாடு திரும்பிய இராமநாதனை வரவேற் பதற்காகக் கொழும்புத் துறைமுகத்தில் சிங்களத் தலைவர்கள் காத்திருந்தனர். இராமநாதனை அழைத்துச் செல்வதற்காக குதிரைகள் பூட்டப்பட்ட இரதமும் தயா ராக இருந்தது. இராமநாதன் வந்து இறங் கியதும் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு, சிங்கள மக்களுக்காக குரல் கொடுத்த இராமநாதனை நாமே வடம் பிடித்து இழுத்துச் செல்வது தான் அவருக்கு நாம் செய்யும் கைமாறு எனக் கூறி தாமே வடம் பிடித்து பொரளை யிலிருந்து இராமநாதனின் இல்லம் வரை இழுத்துச் சென்றனர்.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அண்மையில் தென்னிலங்கையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இச்சம் பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரம சிங்க இராமநாதனை சிங்களத் தலைவர் கள் பல்லக்கில் சுமந்து சென்றதாகக் குறிப் பிட்டுள்ளார். இங்கே பல்லக்கிலா, தேரிலா அழைத்துச் சென்றார்கள் என்பதல்ல பிரச் சினை, இராமநாதன் லண்டனுக்குச் சென்று சிங்கள மக்களுக்காக வாதாடினார் என்பதே நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம்.

இராமநாதன் சிங்களவர்களைத் தட்டியெ ழுப்பிய இன்னொரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். கொழும்பு ஆனந்தாக் கல் லூரியில் ஒருமுறை பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இராம நாதன், சிங்களவர்கள் ஆங்கில மோகத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டு ""சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பேசாவிட்டால் வேறு யார்தான் சிங்கள மொழியைப் பேசுவார் கள் எனக் கூறினாராம். என்னை! இன்று தமிழர் கள் கட்டாயம் சிங்களம் பயில வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1926 ஆம் ஆண்டு ஒக்ஸ்போட் பல் கலைக்கழகத்தில் கல்வியை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய எஸ். டபிள்யூ. ஆர். டி.பண்டார நாயக்கா இலங்கை ஐரோப்பி யர் வருவதற்கு முன்பு இருந்தது போல மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சமஷ்டி ஆட்சி முறை அறிமுகப்படுத் தப்பட வேண்டும் என்று கூறியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தமி ழர்களே. (ஆதாரம் தந்தை செல்வா நினை வுப் பேருரை 2008. முன்னாள் உயர்நீதி மன்ற நீதியரசர் வி.விக்கினேஸ்வரன் )

இதன் பின்னர் ஜி. ஜி. பொன்னம்பலம் 50 / 50 என்ற இலங்கை நாடாளுமன்றத் தில் சிறுபான்மையினருக்கு அரைவாசி ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த போது டி. எஸ் சேனநாயக்கா 60 / 40 ஆசனங்கள் பற்றி பரிசீலிக்கத் தயாராக இருந்தாராம். ஆனால் ஜி.ஜி அதற்குச் சம்மதிக்கவில்லையாம். பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது ஜின்னா விடம் நேரு சொன்னாராம். நான் இருக் கிறேன், காந்தி இருக்கிறார் முஸ்லிம் களுக்கு எந்தவித பிரச்சினையும் வராது என்றாராம். அதற்கு ஜின்னா "" இப்பொழுது நீங்கள் இருக்கிறீ“ர்கள். இனி வரப்போகும் தலைவர்களும் எங்களைப் போல் நேர்மை யாகச் செயற்படுவார்கள் என்பதற்குத் என்ன உத்தரவாதம்'' என்றாராம்!

ஜின்னாவிடம் இருந்த தூர நோக்குச் சிந்தனை ஆசியாவிலேயே புகழ் பூத்த கல்விமான்களிடம் இல்லாமல் போனது கவ லைக்குரிய விடயம். இன்று சமஷ்டி என்ற சொல்லே சாதாரண பாமர சிங்களவருக்கும் வேப்பங் காயாகக் கசக்கிறது. செல்வநாயகம் பட்டுத் தெளிந்த பின் கூறியது போல் இலங்கைத் தமிழர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று விதி வழியே நடப்பதைத் தவிர வேறென்ன செய்ய என் றல்லவா, இப்போது தமிழர்களின் நாளாந்த வாழ்க்கையே நகருகிறது!!!

அம்பலவன்

http://www.uthayan.com/

Edited by கறுப்பி

காடந்தகாலத் தவறுகள் மீண்டும் அவ்விடத்திற்கே சென்று திருத்தங்களைச் செய்ய முடியாதது. இப்போதுள்ள நிலையென்ன? அவர் தவறு செய்தார் இவர் தவறு செய்தார் என்ற வாதங்கள் வளர்ச்சியை ஏற்படுத்தாது. அன்று தவறு செய்தார்கள் என்று சொல்லப்பட்ட தலைவர்களைவிடவும் மிகக் கேவலமானவர்கள் தமிழ்த் தொலைவார்கள் இன்று நம்மிடையே உள்ளார்கள். அந்த வாலாட்டும் மிருகங்கள் அப்படி நடப்பதால் நாம் நமது நோக்கங்களைக் கைவிட முடியாது.

பாதுகாப்பற்ற ஒரு சூழலில் தமிழர்கள் இன்று கிழக்கு மாகாணத் தேர்தலில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் நிலையை வைத்துக் கொண்டு, இந்த நிலைப்பாட்டுக்கு வரக் கூடாது. இது உருவாக்கப்பட்ட ஒன்று. வடக்குக் கிழக்கு மாகாணசபைக்கே இந்திய இராணுவத் தரப்பின் முழுப் பாதுகாப்பிருந்துமே அதனால் செயற்பட முடியவில்லை. இத்தக் கிழக்குமாகாணசபை செயற்பட முடியுமா? வெறும் பதவிகள் மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.