Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியா பூரண ஆதரவாம்.

Featured Replies

விடுதலைப் புலிகளை விரைவில் அழித்தொழிக்க முடியுமென தெரிவித்த இரட்ணசிறி, அரசின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பூரண ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன். இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையெனவும் பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே இருப்பதாகவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் :

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றபட்டது தவறு என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்தும் உள்ளளேன். எமது மன வருத்தத்தினையும் இதற்காக தெரிவித்தோம். அச்சம்பவம் தவறுதான் என நீதிமன்று கூடத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழர் வெளியேற்றம் தொடர்பில் ஜெயராஜ்புள்ளே தெரிவித்த கூற்றுக்கள் அவரின் தனிப்பட்ட அபிப்பிராயம். அது அரசின் நிலைப்பாடு அல்ல. எமது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து இனிமேலும் நாம் மாறப்போவதில்லை.

இலங்கையில் இன முரண்பாடு என்ற எதுவுமே இல்லை. இங்கு இனமுரண்பாடு நிலவினால் வெள்ளவத்தையில் தமிழர்கள் எவ்வாறு வசிக்க முடியும்? கொழும்பில் தமிழர்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும்? இலங்கையில் நிலவுவது பயங்கரவாதப் பிரச்சினையாகும். இதனை நாம் முறியடிப்போம்.

விடுதலைப் புலிகளை நிச்சயம் யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியுமென்ற வலுவான நம்பிக்கை எம்மிடமுண்டு. அந்த நம்பிக்கை ஒரு போதும் வீணாகாது. புலிகளுக்கெதிரான வெற்றி கைக்கெட்டிய தூரத்திலுள்ளது.

எனினும், புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி எப்போது என்பதை காலகெடு செய்ய நாம் தாயாரில்லை. அவ்வாறு காலகெடுவை கூறவும் கூடாது. பிரபாகரனுக்கு கடந்த 30 வருடகாலம் நல்ல காலமெனலாம். எனினும், தற்போது அவருக்கு கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது. தினமும் 40 புலிகள் கொல்லப்படுகின்றர்கள். பயங்கரவாதிகளுக்கெதிரான யுத்தத்தில் தற்போது நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புலிகள் சிக்குப்பட்டுள்ளனர். நான்கு பக்கம் அவர்களுக்கெதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படப் போவதில்லை.

உலகில் நாளை 15 தேசங்கள் மலர்ந்தால் பரவாயில்லை. ஆனால், இலங்கை பிரிந்துவிடக் கூடாதென்பதே எமது எதிர்பார்ப்பு, அதனை என்ன விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவோம்.

மேலும், முப்படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாதென்பதே எமது நிலைப்பாடு. கிழக்கில் ஆயுதமற்ற சூழல் உருவாக்கபட்படும். நான் பிள்ளையானை கண்டதுமில்லை கதைத்ததுமில்லை.

பிள்ளையான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இனிமேல் அவருக்கு ஆயுதம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிழக்கில் அவர் முதலமைச்சரானால் ஆயுதமற்ற சூழலை அங்கு உருவாக்க வேண்டும்.

புலிகளுக்கெதிரான யுத்தத்தை நாம் ஒரு போதும் நிறுத்த மாட்டோம். புலிகள் பேச்சுக்கு விரும்பினால் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்களுடன் இடை நடுவில் எந்த ஒப்பந்தம் செய்யவும் நாம் தயாரில்லை. புலிகளுக்கெதரிரான போருக்கு போதிய ஆதரவு நல்கும் இந்தியா புலிகளை விரைவில் அழித்தொழிக்கவும ஆசீர்வாதம் வழங்கியுள்தெனவும் மேலும் தெரிவித்தார்.

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காப் பிரதம மந்திரியும்.. பழுத்த சிங்கள பேரினவாதியுமான.. ரட்னசிறி விக்கிரமநாயக்கா கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் நாளேடான தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியில்..

புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியா பூரண ஒத்துழைப்ப நல்ல முன்வந்துள்ளதாகக் கூறியுள்ளதுடன்..

அதி நவீன விமானப்படை மற்றும் ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தும் சிறீலங்கா முப்படையினரும் வெற்றிக்கனியை எட்டும் தூரத்துக்கு நெருங்கி விட்டதாகவும்..

இலங்கையில் தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சனை இனப்பிரச்சனை இல்லை என்றும் அப்படி இருந்தால் எப்படி தமிழ் மக்கள் வெள்ளவத்தையில் வாழ முடியும் என்று கேட்கிறார் விக்கிரமநாயக்கா.

அதுமட்டுமன்றி புலிப்பயங்கரவாதமே இலங்கையில் உள்ளது என்றும் அது பூண்டோடு ஒழிக்கப்படும் என்றும்.. அதுவரை அதனுடன் பேச்சுக்கோ.. ஒப்பந்தத்துக்கோ வழியில்லை என்றும்.. பிரதமர் காட்டமாக முழங்கியுள்ளார்.

எமது படையினர் புலிகளை நான்கு திக்குகளாலும் சூழ்ந்து பிடித்துவிட்டனர். எனி புலிகளின் அழிவுதான் மிஞ்சியுள்ளது.

அதுமட்டுமன்றி என்ன விலை கொடுத்தாலும் புலிகளை ஒழித்து யுத்ததுக்கு முடிவுகட்டுவோம் என்று ரத்வத்தை பாணியில் மீண்டும் முழக்கமியுள்ளார் இந்தச் சிங்களப் போர் வெறி பிடித்த பேரினவாதி.

தமிழீழம் என்பது கனவுதான். எத்தனை நாடுகள் பிரிந்தாலும் சிறீலங்கா என்ற தேசத்தை பிரிக்க விடமோம் என்றும் வீரமுழக்கமிட்டுள்ளார் பிரதம பேரினவாதி. (ஆனால் கிழக்கை பிரிப்பம் வடக்கிலிருந்து :unsure: )

இந்த நிலையில் தான் இன்று கொழும்பில் குண்டு முழக்கம் கேட்டுள்ளது..!

-------------

'India gives full blessings to eliminate LTTE,' says SL Prime Minister

[TamilNet, Friday, 16 May 2008, 11:50 GMT]

Sri Lanka's Prime Minister Ratnasiri Wickramanayake, in a special interview to Thinakkural, a Colombo based Tamil daily, on Friday, claimed that the Indian government had given "full blessings" to the government of Mahinda Rajapaksa to "eliminate the LTTE." Mr. Wikramanayake further proclaimed that there was no "ethnic conflict" in Sri Lanka. "LTTE should lay their arms down if they want peace talks. We are not prepared for talks with them in the meantime," he further said.

"How can Tamils live in Wellawatte in Colombo if such conflict prevails," Mr. Wikramanayaka asked, claiming that there was only a "terrorism problem," in Sri Lanka.

"Hence, our government will destroy the LTTE very soon", said the Sri Lankan Prime Minister.

"We are confident that we will defeat the LTTE in the war front. The victory against the LTTE is in the hand reach."

However, the Sri Lankan Prime Minister was not prepared to fix a deadline to defeat Tigers.

"We have started attacking the LTTE from four sides. We are using modern sophisticated weapons," he said.

"Thamileezham is not achievable," Wickremanayake was quoted as saying by the paper.

"We are not worried if fifteen nations declare independence tomorrow. But our expectation is that no division is allowed in Sri Lanka."

"We will stop that division at any cost. We will not stop the war."

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.