Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிகேடியர் பால்ராஜ் நினைவாக வேல்சிலிருந்து அருஸ் எழுதிய - 'இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை, விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை"

Featured Replies

இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவின் அரச தலைவர் முதற்கொண்டு அடிமட்ட சிப்பாய் வரை அதிர்ச்சியில் உறைந்து போன மாதம். மார்ச் 26 ஆம் நாள் அதிகாலை இரண்டு பற்றலியன் சிறப்புப்படை அணிகளைக் கொண்ட 1,200 விடுதலைப் புலிகள் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் தரையிறங்கியிருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது படையணி மற்றும் 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள் உட்பட 15,000 இராணுவத்தினர் ஆனையிறவில் இருக்க, 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள், 51, 52 ஆவது படையணிகள் மற்றும் 55 ஆவது படையணியின் சில பற்றலியன்கள் என ஏறத்தாழ 25,000 துருப்புக்கள், இதற்றுக்குப் பின்னால் இருக்க 1,200 விடுதலைப் புலிகள் நடுவில் தரையிறங்கிய துணிச்சல் தென் ஆசியாவை ஒருகணம் உறைய வைத்திருந்தது.

அதாவது, ஏறத்தாழ 40,000 படையினரின் அழுத்தங்களை சமாளிக்கும் திறன்கொண்ட சிறப்புப் படையணியே இந்த ஆபத்தான முயற்சியில் களமிறங்கியிருக்கும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஆம், விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உட்பட பல சிறப்புப் படையணிகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறப்பு கொமோண்டோக்கள், தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கியிருந்ததுடன், 3 கொம்பனிகளைச் சேர்ந்த 450 சிறப்புப் படையணிகள் சிறு நீரேரியைக் கடந்து ஏ-9 வீதியை பளைக்கும் - முகமாலைக்கும் இடையில் ஊடறுத்திருந்தனர்.

முதலில் இது ஒரு வழமையான ஊடறுப்பு தாக்குதல் என எண்ணிய அரசு பின்னர் நிலமையின் விபரீதத்தை புரிந்து கொண்டது. இராணுவ இயந்திரம் வேகமாக சுழன்றது.

28 ஆம் நாள் காலை சந்திரிகா தலைமையில் பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியது. ஆனையிறவுக்கு ஆபத்து என்ற கூச்சல்கள் அங்கு பலமாக எழுந்தன. கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் கூட்டத்தின் முடிவில் ஒன்றை மட்டும் சந்திரிகா ஆணித்தரமாக கூறினார்.

அதாவது, நீங்கள் விரும்பிய ஆயுதங்களைக் கேளுங்கள், விரும்பிய படைத் தளபதிகளை நகர்த்துங்கள். ஆனால், கேணல் பால்ராஜின் கொமோண்டோக்களிடம் இருந்து இழந்த பகுதியை மீட்டு விடுங்கள் என்பதே அவரது கோரிக்கை (இதனை மன்றாட்டம் என்று கூட கூறலாம்).

மேலும் அவர் ஒன்றையும் கூற மறக்கவில்லை. அதாவது, பிரிகேடியர் பால்ராஜை அங்கிருந்து வெளியேற்றும் வரை முப்படைத் தளபதிகளும் பலாலியில் தங்கியிருக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, வான்படைத் தளபதி ஏயர் மார்சல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் லயனல் பலேகல்லவுடன் பலாலிக்குப் பறந்தனர்.

தம்மால் சுமக்க முடிந்த ஆயுதங்கள், சிறிதளவு உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றுடன் விடுதலைப் புலிகள், அவர்களை வழிநடத்தும் தளபதி, அருகில் திட்டம் வகுத்து கொடுத்த தலைவர் அவர்களுக்கு துணை வழங்கும் பொருட்டு மற்றைய களமுனைகளின் தாக்குதல்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.

இராணுவம் தனது சிறப்புப் படையணிகளையும், அதீத சுடுவலுவையும் கொண்டு விடுதலைப் புலிகளால் ஊடறுக்கப்பட்ட 4 கி.மீ அகலமான ஏ-9 வீதியை கைப்பற்ற தாக்குதலை ஆரம்பித்தது.

சிறீலால் வீரசூரியவுடன் சந்திரிகா தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார். 53 ஆவது படையணியின் வான் நகர்வு பிரிகேட் (53-2), சிறப்பு தாக்குதல் பிரிகேட் (53-4) என்பவற்றுடன் சிறிலங்காவின் பல பகுதிகளில் இருந்தும் தருவிக்கப்பட்ட சிறப்பு கொமோண்டோக்களும் இழந்த பகுதியை கைப்பற்ற தாக்குதலை தொடுத்தன.

34 நாட்கள் கடுமையான மோதல், நாற்புறமும் இராணுவத்தினர்.

எனினும் பிரிகேடியர் பல்ராஜின் கட்டளைகள் பிசகவில்லை. எம்-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும், டாங்கிகளையும் தாக்குதலில் இணைந்து கொண்ட போதும், விடுதலைப் புலிகளை இராணுவத்தின் சிறப்பு அணிகளால் பின்தள்ள முடியவில்லை.

முதற் சமரில் ரி-55 ரக டாங்கியும், ரி-63 ரக துருப்புக்காவி வாகனங்கள் இரண்டு, யுனிகோன் கவச வாகனங்கள் இரண்டு என்பன அழிந்து போக இராணுவம் பின்வாங்கியது. இராணுவம் பல வழிகளில் முயற்சித்தது.

53 ஆவது பயைணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் காமினி கெட்டியாராட்சி, வான்நகர்வு பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் றொசான் சில்வா ஆகியோர் மாற்றப்பட்டனர்.

மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரிய 53 ஆவது படையணிக்கு நியமிக்கப்பட்டார். சமர் தொடர்ந்தது. இராணுவத்தின் பிரதி பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா களத்தில் இறக்கப்பட்டார். ஆனால் பலன் எதுவும் இல்லை.

சிறிலங்கா வந்திருந்த பிரித்தானியாவின் பாதுகாப்பு பிரிவுத் துணைக் கொள்கை வகுப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் ஜோன் றீத்திற்கும் நிலமையின் விபரீதத்தை விளக்கினார் லயனால் பலேகல்ல.

பாகிஸ்தான் வருமாறு அழைத்த ஜெனரல் பெர்சாவ் முசராஃப்பின் கோரிக்கையையும் புறக்கணித்தார் சிறீலால் வீரசூரிய.

செறிவான சூட்டு வலுவுடன் தாக்குதல் உக்கிரமடைந்தது. 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரியவும் மாற்றப்பட்டார். பிரிகேடியர் சிவாலி வனிகசேகரா நியமிக்கப்பட்டார். ஆனாலும் ஆனையிறவின் சரித்திரம் மாறிப்போனது.

ஆனையிறவின் இந்த சரித்திரத்தை மாற்றியமைத்தது, குடாரப்பு தரையிறக்கமே.

அதாவது ஆனையிறவுக்கான விநியோக வழிகளின் மூடலும், முற்றுகைச்சமருமே அந்தப் பெரும் தளத்தை வீழ்த்தியதுடன், 1991 ஆம் ஆண்டு ஆனையிறவுத் தளத்தை தக்கவைக்க இராணுவம் மேற்கொண்ட கட்;டைக்காட்டு தரையிறக்கத்தை குடாரப்பு தரையிறக்கம் சமப்படுத்தியது.

தற்காப்புத் தாக்குதலுக்கு ஏற்றதே ஆனையிறவு களமுனை என்ற கருத்தை தாக்குதலுக்கு ஏற்றதாக மாற்றிய தேசியத் தலைவரின் திட்டத்திற்கு களமுனையில் செயல்வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.

'சிறந்த ஒரு போர் வீரன் மேலதிக உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. தன்னிடம் உள்ள வளங்களே அவனுக்குப் போதுமானது" என்ற சீனப் போரியல் மேதை சன் சூ வின் கருத்துக்களை குறுகிய வளங்களுடன் குடாரப்பு தரையிறக்கத்தில் சாதித்த மிகச்சிறந்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.

போரில் புதிய உத்திகளையும், பெரும் வெற்றிகளையும் நிலைநாட்டிய கட்டளைத் தளபதிகளுக்கு உலகின் சரித்திரத்தில் நீங்காத ஒரு இடம் எப்போதும் இருப்பதுண்டு.

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் தாக்குதலை நெறிப்படுத்திய குநைடன ஆயசளாயட றுடைடயைஅ து. ளுடiஅ

கி.மு 218 ஆம் ஆண்டுகளில் போரியலில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்திய ர்யnniடியடஇ ரோமன் இராணுவத்தை திணறடித்த மிகச்சிறந்த போரியல் தளபதி இவர்.

வலிமை மிக்க எதிரியை பின்புறமாக தாக்கி அவர்களின் விநியோக வழியை மூடிய பின்னர், முற்றுகைச்சமரை நடத்தும் உத்திகளையும், புதிய படைக்கலங்களுடன் அதிர்ச்சிகரமான தாக்குதல்களை நடத்தும் உத்திகளையும் வகுத்து கொடுத்தவர் இந்த கானிபல். இவரது உத்திகளையே 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போரில் பயன்படுத்தியதாக அமெரிக்காவின் கட்டளைத் தளபதி தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போரின் சரித்திரத்தை மாற்றிய நோமன்டி தரையிறக்கத்தை வழிநடத்திய நேச நாட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் னுறiபாவ னுயஎனை நுளைநnhழறநச என சாதனை படைத்த தளபதிகளின் பட்டியல் நீளமானது.

தமிழீழ வரலாற்றிலும் பல தளபதிகளின் வரலாறுகள் பதிவாகி இருந்தாலும், பிரிகேடியர் பால்ராஜின் போரியல் அனுபவம் வேறுபட்டது.

இந்திய இராணுவத்தின் முற்றுகைகளில் இருந்து மணலாற்றின் இதயபூமியை காப்பாற்றியதில் இருந்து, தற்போதைய அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி வரையில் பிரிகேடியர் பால்ராஜின் போரியல் அனுபவங்கள் ஒரு போரியல் புத்தகத்திற்கு ஈடானது.

1990 களில் நடைபெற்ற மாங்குளம், கொக்காவில் படை முகாங்கள் தகர்ப்பு

1991 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆகாய கடல்வெளி சமர்

1993 களில் மேற்கொள்ளப்பட்ட மண்கிண்டிமலை படைமுகாம் தகர்ப்பு

1993 ஆம் ஆண்டு நவம்பர் மேற்கொள்ளப்பட்ட பூநகரி படை முகாம் தகர்ப்பு

இதற்கு முன்னர் நடைபெற்ற யாழ்தேவி படை நடவடிக்கை முறியடிப்பு

1995 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புலிப்பாய்ச்சல் நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படட முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு (ஓயாத அலைகள் -01)

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பரந்தன் ஆட்டிலறி பீரங்கித்தளம் மீதான ஊடறுப்புச் சமர்

1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் செப்ரெம்பரில் நடைபெற்ற கிளிநொச்சி தளம் தகர்ப்பு (ஓயாத அலைகள் - 02)

1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் - 03

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவுப் பெரும்தளம் தகர்ப்பு

தீச்சுவாலை முறியடிப்பு

என்பன பிரிகேடியர் பால்ராஜ் வழிநடத்திய மற்றும் முக்கிய பாங்கு வகித்த சமர்களில் முக்கியமானவை.

இவர் பங்கு கொண்ட ஒவ்வொரு சமர்களுக்கும் ஒவ்வொரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.

மண்கிண்டிமலை தாக்குதல் முதன் முதலில் 81 மி.மீ பீரங்கியை விடுதலைப் புலிகளுக்கு பெற்றுக்கொடுத்திருந்தது.

பூநகரிச் சமர் போர் டாங்கியையும், நீருந்து விசைப்படகுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தது.

முல்லைத்தீவுச் சமர் 122 மி.மீ பீரங்கிகளை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், இராணுவத்தின் 21 ஆவது படையணியின் 5 ஆவது பிரிகேட்டை முற்றாக அழித்திருந்தது.

இவ்வாறு இந்தச் சமர்களின் வரலாற்று முக்கியத்துவங்களும் அதனால் விடுதலைப் புலிகள் எட்டிய வளர்ச்சியும் அதிகமானவை.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவில் உக்கிரமடைந்த சமரை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் சிறப்புப்படையை அமைத்த போது, விடுதலைப் புலிகளின் முதலாவது சிறப்புப் படை றெஜிமென்டான சாள்ஸ் அன்ரனி றெஜிமென்டின் முதலாவது கட்டளைத்தளபதியும் பிரிகேடியர் பால்ராஜ் தான்.

முல்லைத்தீவில் ஒரு பிரிகேட் படையணிகளை முற்றாக அழிக்கும் திறன் பெற்ற விடுதலைப் புலிகள், ஆனையிறவில் ஒரு டிவிசன் படையினரை முற்றாக அழிக்கும் நிலைக்கு உயர்ந்ததற்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும் அதன் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் முக்கிய பங்காற்றியிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது.

கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு சமர்களில் ஏற்பட்ட இழப்புக்களுடன் சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது படையணி கலைக்கப்பட்டதும் ஒரு போரியல் வரலாறு தான்.

எங்கே களமுனைகளில் தொய்வுகள் எற்பட்டாலும் அங்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும், பிரிகேடியர் பால்ராஜூம் களமிறக்கப்படுவார்கள். திடீரென நடத்தப்படும் சிறப்புத்தாக்குதல்களுக்கும

'இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை, விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை" என்ற அந்த வாசகம், சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முதற் தளபதியின் இழப்பினால் உடைந்து போன உள்ளங்களை தூக்கி நிறுத்தவும் போதுமானது'

எங்களது தேசியத்தலைவர் தனதன்பிற்குரிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ் பற்றி கூறிய கருத்துக்களை மேற்கட்டுரையின்

தொடர்ச்சியாக இங்கே இணைக்கின்றேன்.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.