Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. அங்கீகாரமும் சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுகளும்: ச.வி.கிருபாகரன் (பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம்)

Featured Replies

உலகின் முதலாவது (1914-18) இரண்டாவது (1939-1945) போர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அவசியத்தை உணர்த்தியதுடன் அதன் உருவாக்கத்திற்கும் உடனடி காரணியாகவும் அமைந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் நிறுவப்படுவதற்கு முன்பாக முதலாவது உலகப் போரை தொடர்ந்து ~வேர்சை உடன்படிக்கை| யின் அடிப்படையில் 1919 ஆம் ஆண்டு ~லீக் ஓப் நேஷன்| (தேசங்களின் கூட்டமைப்பு) என்ற சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனது இணை அமைப்பாக ~சர்வதேச தொழிலாளர் அமைப்பு| உருவாகியது.

~தேசங்களின் கூட்டமைப்|பினால்; அவ்வேளையில் சுடர்வி;ட்டு எரிந்த இத்தாலியின் ~பாசிசத்தையோ| அல்லது ஜேர்மனியின் ~நாசிசத்தையேப| அல்லது 1935 இல் எதியோப்பிய மீதான இத்தாலியின் ஆக்கிரமைப்பையோ கட்டுப்படுத்தவோ அல்லது தண்டிக்கவோ முடியாத காரணத்தினால் - இரண்டாவது உலகப் போரின் ஆரம்பத்தை தொடர்ந்து இவ் அமைப்பு தனது செயற்பாடுகளை நிறுத்தி கொண்டலும் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக ஆரம்பாமாகும் வரை நிலைத்திருந்தது.

தேசங்களின் கூட்டமைப்பும் ஐக்கிய நாடுகள் சபையும் உருவாகுவதற்கு முன்னர்ää சர்வதேச அரசியலையும் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட விடயங்களையும் ஓருங்கிணைப்பதற்கென உலகில் மூன்று சர்வதேச அமைப்புக்கள் உருவாகியிருந்தன.

1865 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பிரான்சின் தலைநகரான பாரிசில் ~சர்வதேச தொலைதந்தி சங்கம்| ஆரம்பிக்கப்பட்டு அதனுடைய தலைமைக்காரியாலத்தை 1868 ஆம் ஆண்டு சுவிசாலந்தின் தலைநகரான பேர்ணில் அமைத்தது. இதேவேளை உலகளாவிய ரீதியில் தபால் விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்காக 1874 ஆம் ஆண்டு ~சர்வதேச தபால் சங்கம்’ சுவிற்சர்லந்தின் தலைநகரான பேர்ணில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு அமைப்புக்களும் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடனää; அதனுடைய துணை அமைப்புக்களாக உள்ளன.

அதே காலப் பகுதியில் பிரெஞ்சு-பிரித்தானிய பாரளுமன்ற அங்கத்தவர்கள் இருவர் இணைந்து ஓருமைப்பாட்டை கொண்டுள்ள நாடுகளில் உள்ள பாரளுமன்றங்களின் பல்வேறுபட்ட அரசியல் விடயங்களை கவனத்தில் கொள்ளும் நோக்குடன்~சர்வதேச பாரளுமன்ற சங்கம்| என்ற ஓர் அமைப்பு 1889 ஆம் ஆண்டு உருவாகியது. இதனது முதலாவது மாநாட்டை பிரான்சின் தலைநகரான பாரிசில் 1989 ஆம் ஆண்டு யூன் மாதம் நடத்தினார்கள். இவ் அமைப்பு இன்றும் தனது தனது தனித்துவத்துடன் ஜெனீவாவில் இயங்கும் அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் வேறுபட்ட திட்டங்களுக்கும் உறுதுணையாகவும் இருந்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம்

இரண்டாவது உலகப் போரினால் உலக சமாதானதிற்கு ஏற்பட்ட மிக மோசமான தாக்கம் காரணமாக இன்றைய வல்லரசுகள் அல்லது இன்றை ஐ.நா. பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர அங்கத்தவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் வேலைகளை மிகவும் துரிதப்படுத்திய காரணத்தினாலää; 1945 ஆம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபை உதயமாகியது.

இதேவேளை உலக நாடுகள் உலகின் சட்ட ஒழுங்குகளை கடைப்பிடிப்பதற்கென ஐக்கிய நாடுகள் சபையினால் ஓர் ~ஐ.நா. கோவை| உருவாக்கப்பட்டது. இவ்வேளையில் ஐம்பத்து ஒரு நாடுகள் மட்டுமே ஐ.நா.வில் அங்கம் வாகித்தாலும் 1948 ஆம் ஆண்டு ஐ.நா. உத்தியோகபூர்வமாக வேலைகளை ஆரம்பிக்கும் வேளையில் அங்கு 58 நாடுகள் அங்கம் வகித்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளார் நாயாகம் பங் கீ மூனுடன் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன்

ஐ.நா. உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு சில காலங்களில் மிகவும் கடுமையான ஆழ்ந்த நீண்ட விவாதங்களின் பின்னர் 1949 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு ஐ.நா.வில் அங்கத்துவம் வழங்கப்பட்டது.

அவ்வேளையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள ~இஸ்லாமிய மாநாடுகளின் அமைப்பு| என்ற உலக இஸ்லாமிய நாடுகளுக்கான அமைப்பு உதயமாகியிருக்காதது மட்டுமல்லாது அவ்வேளையில் பதினொரு இஸ்லாமிய நாடுகள் மட்டுமே ஐ.நா.வில் அங்கத்துவத்தை கொண்டிருந்தன. இது இஸ்ரேலுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். இஸ்லாமிய மாநாடுகளின் அமைப்பு 1969 ஆம் ஆண்டு உருவாகியதுடன் இவ் அமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் பாலஸ்தீனம் தவிர்ந்த மற்றைய நாடுகள் யாவும் தற்போதைய ஐ.நா.வில் அங்கத்துவ நாடுகளாகவுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா ~வீற்ரோ| அதிகாரத்தை நான்கு தடவை சிறிலங்கா மீது பாவித்துள்ளது

இஸ்ரேலின்; அங்கத்துவத்தை தொடாந்து 1955 ஆம் ஆண்டளவில் இலங்கை (சிறிலங்கா) உட்பட 76 நாடுகளுக்கு ஐ.நா.வில் அங்கத்துவம் கொடுக்கப்பட்டது. இதில் சிறிலங்காவின் அங்கத்துவம் ஐ.நா.வின் சரித்திரத்திலேயே மிக வியப்பானதாகவும் வேடிக்கையானதாகவும் பதியப்பட்டுள்ளது.

காரணம் சிறிலங்காவின் ஐ.நா. அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தை முன்னையா சோவியத் குடியரசான தற்போதையா ரஷ்யா தனது ~வீற்ரோ| அதிகாரம் மூலம் நான்கு தடவை (18 ஆகஸ்ட் 1948 15 டிசம்பர் 1948 13 செப்ரெம்பர் 1949 13 டிசம்பர் 1955) நிராகரித்தது.

அவ்வேளையில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் நடைமுறையிருந்த ஓர் பாதுகாப்பு ஒப்பத்தத்தின் பிரகாரம் சிறிலங்காவில் திருகோணமலையில் உள்ள விமானத்தளம் துறைமுகம் ஆகிய இரண்டையும் பிரித்தானியா தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. இதன் காரணமாக இலங்கையை ஓர் சுதந்திரமான தேசிய நாடாக கொள்ள முடியாதென சோவியத் குடியரசு ஐ.நா.வில் விவாதித்தது. இறுதியில் வல்லரசுகளுக்கு இடையேயான ஓர் விசேட சலுகை மூலமே சிறிலங்காவிற்கு 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம 14 ஆம் திகதி ஐ.நா. அங்கத்துவம் கொடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளார் நாயாகம் கலாநிதி (திருமதி) ஆஷா-றோஸ் மீகிறோவுடன் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன்

இதை தொடர்ந்து சரியாக 10 ஆண்டுகளின் பின்னர்ää ஐ.நா. வில் அங்கத்துவ நாடுகள் 117 ஆக அதிகரித்தன. 1974 ஆம் ஆண்டு பங்காளதேஷ் கிறினிடாட் கினியா-பிசு போன்ற நாடுகளின் அங்கத்துவத்துடன் ஐ.நா. வில் அங்கத்துவ நாடுகள் 138 ஆக அதிகரித்தது. இதில் பங்காளதேசின் ஐ.நா. அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தை சீன மக்கள் குடியரசு தனது ~வீற்ரோ| அதிகாரத்தை பாவித்து 1972 ஆம் ஆண்டு நிராகரித்தது.

1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உதயத்திற்கு சீனக் குடியரசின் பங்கு மிக அளப்பெரியது. அவ்வேளையில் சீனப் புரட்சி தனது உச்சக் கட்டத்தை ஏய்தி கொண்டிருந்தது. ஆகையால் ஐ.நா. கோவை|யில் சீன தேசத்தின் சார்பில் சியங் கை-சேக்கின் கோமிங்ரங் அரசான சீனக் குடியரசே கையெழுத்திட்டது.

மாசேதுங் தலைமையில் மக்கள் விடுதலைப் படை 1949 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் சீனவின் பிரதான இடங்களை தமது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்து சீன மக்கள் குடியரசை நிறுவியதும் சியங் கை-சேக்கும் அவரது ஆதரவாளர்களும் சீனாவின் தீவான தைவானுக்கு தப்பிச் சென்று அத்தீவை சீனக் குடியரசாக பிரகடனப்படுத்தினர்கள்.

எது எப்படியாகவிருந்தாலும் சீன மக்கள் குடியரசை பொறுத்த வரையில்ää அதாவது சீனாக் குடியரசென கூறப்படும் தைவான் சீன மக்கள் குடியரசின் ஓரு பகுதியே. இதன் காரணமாக இரு சீனக்களும் ஒருவரை ஒருவர் இன்று வரை அங்கீகரிக்கவில்லை. இதில் விசேடம் என்னவெனில் சீனக் குடியரசென கூறப்படும் தைவானை அங்கீகரித்த இருபத்து நான்கு நாடுகளுடன்ää சீன மக்கள் குடியரசு எந்தவித இராஜதந்திர உறவுகளையும் பேணாது தட்டிக்கழித்து வருகிறது.

இதேவேளை இவர்களது அயல் நாடானா பூட்டான் இரு சீனக்களுடனும் எந்தவித தொடர்புகளும் இல்லாத போதும் 1972 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் ஐ. நா. பிரவேசத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

பாதுகாப்புச் சபையில் சீன மக்கள் குடியரசு

1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி சீன மக்கள் குடியரசிற்கு ஐ.நா. வில் அங்கத்துவம் வழங்கப்பட்டதுடன் பாதுகாப்பு சபையில் சீனக் குடியரசிற்கு பதிலாக சீன மக்கள் குடியரசு ~வீற்ரோ| அதிகாரத்துடன் அமர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை சீனக் குடியரசிற்கு ஐ.நா. பொதுச் சபையில் அங்கத்துவம் வழங்கப்பட்ட போதிலும் ஐ.நா.வில் சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் வகிக்கும் வரைää தமக்கு அங்கத்துவம் தேவையில்லையென சீனக் குடியரசின் தலைவர் சியங் கை-சேக் அவ்வேளையில் மறுத்துவிட்டார். ஆனால் 1991 ஆம் ஆண்டிலிருந்து சீனக் குடியரசினால் ஐ. நா. அங்கத்துவத்திற்காக முன் வைக்கப்பட்ட சகல விண்ணப்பங்களும்; இன்றுவரை நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம; சீன மக்கள் குடியரசின் அழுத்தங்களே.

ஆனால் ஐ.நா. அங்கத்தும் அற்ற சீன குடியரசான தைவான் ~ஆசியாவின் பொருளாதரப் புலிகள்| எனக்கூறப்படும்; நான்கு (சிங்கப்பூர் கொங்கோங் தென் கொரியா) நாடுகளில் ஒன்றாக நிமிர்ந்து காட்சி அளிக்கிறது. இதன் மூலம் உலகிற்கு உணர்த்தும் உண்மை என்னவெனில் ஓர் சுதந்திர தேசம் தனது பொருளாதாரத்தை சரியான முறையில் கட்டியெழுப்ப முடியுமானால் - அங்கீகாரம் ஐ.நா. அங்கத்துவம் ஆகியவை இன்றியமையாத ஒன்றாகும்.

மேற்கு சாகாரவி மக்களின் விடுதலையை 45 நாடுகள் அங்கீகரித்துள்ளன

மேலும் நாம் தொடர்ந்து புதிய நாடுகள் சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுக்கள் ஆகியவற்றின் அங்கீகாரம் பற்றி ஆராய்வோமானால் - ஏறக்குறைய முப்பது ஐ.நா. அங்கத்துவ நாடுகள் இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர உறவுகள் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் காணலாம்.

இதேவேளை சைப்பிரஸ் இன்றுவரை துருக்கியின் அங்கீகாரத்தை கொள்ளவில்லை வடக்கு தெற்கு கொரியக்கள் ஒருவரை ஒருவர் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை 1988 ஆண்டு பலஸ்தீனியரின் விடுதலையைää இன்றும் பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

அதேவேளை வட ஆபிரிக்காவில் உள்ள மொறோக்கோ நாட்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மேற்கு சாகாரவி மக்கள் அல்லது பொலிசாரிய மக்களென அழைக்கப்படும் ~சாகாரவி அரபு ஜனநாயக குடியரசு| விடுதலை பெற்றது. இவர்கள் அல்ஜிரியாவில் ஓர் புகழிட அரசையும் நிறுவினர். இவர்களை நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட ஐ.நா. அங்கத்துவ நாடுகள் அங்கீகரித்தது மட்டுமல்லாது ஆபிரிக்காவின் பிராந்தியா அமைப்பான ~ஆபிரிக்கா யூனியன்| இவர்களுக்கு முழு அங்கத்துவமும் வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மொறோக்கோ ஆபிரிக்கா யூனியனிலிந்து தம்மை விலக்கி கொண்டுள்ளது.

புதிய நாடுகளின் சுதந்திரம்ää சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுகளை தொடந்து ஆராயுமிடத்து 1983 ஆம் ஆண்டு சைப்பிரசிலிந்து விடுதலை பெற்ற ~வட சைபிரசின் துருக்கி குடியரசை| ஐ.நா. அங்கத்துவ நாடான துருக்கியினால் அங்கீகரிக்கப்படப்பட்டுள்ளத

நன்றி சூர்யா

1.jpg

இது யாழ் குழுமத்தின் செய்திப்படம் என நினைகிரேன் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.