Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஃபியின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஃபியின் கதை

காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது.

எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன.

அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதிகளை உட்கொண்டு உற்சாகமாக இருந்ததால், மோக்கா எனப்படுகிறது. அது தற்போது காஃபியுடன் தவிர்க்க இயலாத சொல்லாகி விட்டது. 'கஃபே கேன்ஸ்' எனப்படும் காஃபிக் கடைகள் முதன்முதலில் புனித நகரமான மெக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் அரேபியா நாட்டின் சதுரங்கம் விளையாடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எப்போதுமே மகிழ்ச்சியில் களைக்கட்டி கொண்டிருக்கும் பிரபலமான இடங்களில் காஃபியின் இனிமை வேகமாக பரவியதால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு காஃபி விற்பனையாகும் கடைகள் புது வளர்ச்சியும், தனித்தன்மையையும் அடைந்தன.

அதன்பிறகு டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாடுகளின் காலனிகளின் மூலமும் மற்ற இடங்களுக்கும் காஃபியின் மகத்துவம் பரவ ஆரம்பித்தது. 1683 ஆம் ஆண்டு வெனிஸ் நகரின் பிரபல பியாசா சான் மார்கோ பகுதியில் உள்ள கேஃப் ஃப்ளோரியன் கடையில்தான் முதன்முதலாக ஈரோப்பியன் காஃபி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அந்த இடம் காஃபிக்கு பெயர்பெற்ற இடமாகவே உள்ளது.

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு சந்தையான, லாயிட்ஸ் ஆஃப் லண்டன் நிறுவனமே ஒரு காஃபி கடையாகவே முதலில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 1688 ஆம் ஆண்டு எட்வர்ட் லாயிட்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் காப்பீடு செய்யும் கப்பல்களின் பட்டியல்களை தயாரிப்பது இவரது பணியாகும். 1668 ஆம் ஆண்டில் தான் தென் அமெரிக்க மக்களால் காஃபி சுவைக்கப்பட்டது.

1773 ஆம் ஆண்டு போஸ்டன் டீ பார்ட்டி, கிரீன் டிராகன் எனப்படும் காஃபி அவுஸில்தான் திட்டமிடப்பட்டது. இன்று நிதி மாவட்டம் என்றழைக்கப்படும் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள காஃபி கடைகளில்தான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும், பேங்க் ஆஃப் நியூயார்க்கும் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

1720 - ஆம் ஆண்டுகளில் முதன்முதலாக தென் அமெரிக்காவில் காஃபி பயிரிடப்பட்ட நிகழ்ச்சி, காஃபி வரலாற்றில் மிக முக்கிய தருணம் எனலாம். 60 வேறுபட்ட நாடுகளில், பெரும்பாலும் வளரும் நாடுகளில் காஃபி உற்பத்தி செய்யப்பட்டாலும், வளர்ந்த நாடுகளான ஐரோப்பியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தான் காஃபி அதிகளவில் அருந்தப்படுகிறது.

காஃபியை மிக அதிகமாக தயாரிக்கும் நாடு பிரேசில், காஃபிக்கு மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நாடு அமெரிக்கா. காஃபியின் தலைசிறந்த ஆறு தயாரிப்பாளர்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

webulagam.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொ‌ட்டை காஃ‌பியாகு‌ம் பாதை!

ஒரு காஃபி கொட்டையானது அதன் விதை நிலையிலிருந்து கோப்பைக்கு செல்லும் பயணம் சுவாரஸ்யமானது. எந்த ஒரு காஃபி ரசிகருக்கும் இன்னும் சிறந்த ஒரு கப் காஃபியை எவ்வாறு தயாரிப்பது என்ற தகவல் அல்லது ரொமாண்டிக்கான தகவல்கள் போன்றவை ஒட்டுமொத்த காஃபி அனுபவத்திற்கு மெருகூட்டக் கூடியவையே.

coffee_oldstyle_cup.jpg

கடந்த பத்து வருடங்களில் இந்தியாவில் காஃபியின் பயன்பாடு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. 1996 -இல் காஃபி வர்த்தகத்தில் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல், உள்நாட்டு தேவைகளுக்கும் ஏற்றுமதிக்கும் பச்சை காஃபி பயன்படுத்தப்படுவதை பெரிய அளவில் மாற்றியுள்ளது. சில்லறை வணிகத்துறையின் போக்கை மாற்றி இந்தியாவின் புறநகர் பகுதிகளில் நூற்றுகணக்கான கஃபேக்கள் உருவாக்கப்பட்டன, இதனால் சில்லறை வணிகத்துறையில் தொழில் முனைவர்களையும் ஈர்த்துள்ளது. சமீப ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் தொழில் ரீதியான வெற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆவலைத் தூண்டி நமது சந்தைகளின் மேல் கவனம் செலுத்த வைத்துள்ளது. சில சர்வதேச நிறுவனங்கள் அவர்களின் கிளைகளை இந்தியாவில் தொடங்கியுள்ளனர். இவையனைத்தும் சேர்ந்து ஒரு புதிய, துடிப்பு மிக்க காஃபி சமூகத்தை உருவாக்குகிறது, இது காஃபி வர்த்தகத்துக்கும், நுகர்வோருக்கும் மிகவும் சிறந்த சூழலை உருவாக்குகிறது.

சுவைமிக்க காஃபியின் வரவானது இந்தியாவின் காஃபி விழிப்புணர்வை கணிசமாக மாற்றியுள்ளது. தென்னிந்திய ஃபில்டர் காஃபியானது, இத்தாலியின் எஸ்பிரஸ்ஸோ மற்றும் இன்ஸ்டன்ட் காஃபியுடன் கூடவே தொடர்ந்து குடிக்கப்பட்டு வருவது ஆர்வத்தை தூண்டக் கூடியது. ஒரு நுகர்வோரால், இரண்டடுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபில்டரில் தயாரிக்கப்பட்ட காஃபியுடன் காலையில் எழுந்து, பின் அலுவலக காண்டினில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் காஃபியை குடித்துவிட்டு, பின்னர் மாலையில் நண்பர்களுடன் ஒரு காஃபி பாரில் இத்தாலியின் கேப்பச்சீனோவை அருந்த முடிகிறது. காஃபி வளர்க்கப்படுவதிலும் விற்கப்படுவதிலும் இந்திய காஃபி சந்தை மிகவும் விரிவானது. அதே போல் காஃபியானது அருந்தப்படும் முறைகளும் பலவகைகளில் விரிவானது. ஆனாலும் நாட்டின் சில பகுதிகளில் இன்னும் காஃபி ஒரு அந்நியமான பானமாக கருதப்படுகிறது, அல்லது போதுமான அளவில் கிடைக்கவில்லை. இதற்கு மிகக் குறைந்த அளவில் இன்ஸ்டன்ட் காஃபி கிடைப்பதே காரணமாக இருக்கலாம். இந்தியாவின் காஃபி சந்தை உண்மையில் ஒரு சிக்கலானதாகவும் ஆனால் அதே சமயம் மிகவும் இலாபமளிக்கக்கூடியதாகவும் உள்ளது.

வளரும் இந்திய பொருளாதாரத்தைச் சார்ந்து, நுகர்வோர் வாழ்க்கைத்தரமும் வாங்கும் திறனும் மாறுகின்றன, அவற்றின் மாற்றங்களைச் சார்ந்து காஃபி அருந்தும் பழக்கம் மாறிக் கொண்டே இருக்கிறது என்பது தெளிவானது. சந்தைப்படுத்துபவர்களுக்கு உள்ள சவால்களாவன, வேகத்தை தக்கவைப்பதும், முன்பே உள்ள சந்தைகளில் ஊடுருவுவதும் புதிய சந்தைகளை உருவாக்குவதுமாகும். நுகர்வோர்களால் தரமான காஃபியை அடைய முடியுமாறு இருப்பது அவசியம், மேலும் உயர்ந்த மற்றும் மணம் வாய்ந்த காஃபியின் உலகை காண்பதற்கான உந்துதலையும் போதுமான அளவிற்கு அவர்களுக்கு வழங்க வேண்டும். காஃபிக்கான வலியுறுத்தல் அவசியம், அது ஒரு நறுமணத்துடன் தொடங்குகிறது.

சரியான நறுமணத்துடன் கூடிய சிறந்த ஒரு கப் காஃபி, வாழ்வின் எளிமையான சந்தோஷங்களில் ஒன்றாகும்.

Coffee should be black as hell, strong as death, and sweet as love. Turkish proverb

http://tamil.webdunia.com/miscellaneous/nc...080307070_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பிய நாடு காஃபியின் தாயகம் ஆக இருந்தாலும், எனக்கு கடும் காப்பிதான் பிடிக்குங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.