Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல் மதிப்புரை - படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும்,மனித நேயத்தின் தியாக வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூல் மதிப்புரை:

தி. அழகிரிசாமி எழுதிய -

படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும்

மனித நேயத்தின் தியாக வரலாறு

பேரா. அ. அய்யாசாமி

padagupayanamfs0.jpg

சிங்களப் பேரினவாத அரசு மூர்க் கத்தனமாக இனப்படுகொலையில் ஈடு படுவது உலகறிந்த இரகசியம் இராணு வத்தை அனுப்பித் தமிழர் குடும்பங்களை ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறு பாடு பார்க்காமல் கொத்துக் கொத்தாக மானபங்கப் படுத்துவதும் கொலை செய்து குவிப்பதும் இலங்கைத் தீவில் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன. இது போதாதென்று கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஒரே ஒரு பாதை யையும் அடைத்து யாழ்ப்பாணத்தையே சிறைக்கூடமாக்கியிருக்கிறது சிங்கள அரசு. யாரும், எந்தப் பொருளும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது. உணவில்லை, மருந்தில்லை, பசியால் அழும் குழந்தைக்குப் பாலில்லை.

"பிறந்த மண்ணில் இந்தக் கொடுமைக்கு ஆளான தமிழினம் எழுப் பிய ஓலக்குரல் ஒரே ஒருவர் காதில்தான் விழுந்தது. அவரே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.

"யாழ்ப்பாணத்து அழுகுரல் அவரை உலுக்கியது. மனிதாபிமான உணர்வுகள் அவரை விடியலை நோக் கிப் புறப்பட வைத்தது... "சாதி பேதங் களை விட்டுக் கட்சி மாச்சர்யங்களை விட்டுத் தமிழன் என்கிற உணர்வோடு ஒன்றுசேருவோம்" என்று அழைத்தார் நெடுமாறன்." என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார் தி. அழகிரிசாமி.

தொடர்ந்து எறும்பு சேகரிப்பது போல உணவுப் பொருள்களையும் மருந் துப் பொருள்களையும் சேகரித்தபிறகு அவற்றை யாழ்ப்பாணத்தில் துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அனுப்பித் தருவதற்கு இந்திய அரசுக்கு மனம் வரவில்லை. இந்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு நேரமில்லை. இந்த நிலையில் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இந்திய அரசின் மெத்தனப்போக்கையும் அலட் சிய மனப்பான்மையையும் அசைப்ப தற்காக நெடுமாறனும் தமிழீழ ஆதர வாளர்களும் உயிரையும் கொடுக்கத் தயாரான தியாக வரலாறுதான் "படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும்"." இந்த வரலாற்றைச் செம்மையாக ஆவணப் படுத்தித் தந்திருக்கிறது தி. அழகிரிசாமியின் இந்த நூல்.

ஆறு கோடித் தமிழர்கள் கிளர்ந் தெழுந்து ஈழத் தமிழர்களுக்குத் துணை நிற்க முன்வந்து ஒரு கோடி ரூபாய் பெறு மானமுள்ள பண்டங்களை உவப்புடன் அளித்தார்கள். அவற்றை அனுப்பி வைக் கச் செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்தது. நல்லவர் பலர் நடுவண் அரசின் மனக் கதவைத் தட்டினார்கள். 5-6-2007 அன்று மனித நேயம் கொண்ட ஆயிரக்கணக் கானோர் பட்டினிப் போராட்டம் நடத்தி னார்கள். 12-06-2007 அன்று ஜெனீவா வில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகத்திற்கு நெடுமாறன் நேரில் சென்று முறையிட்டார். இருந்தாலும்... "மாற்றாந்தாய் போக்கிலே மத்திய அரசு, காந்தாரி நிலையிலே தமிழக அரசு", என்கிறார் நூலாசிரியர் அழகிரிசாமி.

இந்த நிலையில்தான் பொருள் களைப் படகில் ஏற்றி, சிங்கள அரசின் படைக்கலன்களைத் துச்சமாக மதித்து, ஈழத் தமிழருக்கு எடுத்துச் செல்லத் தீர்மானித்தார் நெடுமாறன். வை.கோ, மரு. இராமதாசு, தொல். திருமாவளவன், பசீர் அகமது முதலிய தலைவர்கள் ஆதரவு நல்க, 12-09-2007 அன்று நாகைத் துறை முகத்தில் உயிரைத் தூசெனக் கருதிய சிங்க நிகர் தொண்டர்கள் ஆயிரக் கணக் கில் திரண்டனர். ஆனால் படகுகள் தர ஒருவரும் முன்வரவில்லை. அதிகார மிரட்டல் அப்படி.

மனித நேயச் செயல்கூடத் தடுக் கப்பட்ட இந்த நிலையில்தான் உண்ணா நிலைப் போராட்டத்தை அறிவித்தார் நெடுமாறன். அவரோடு சேர்ந்து போரா டத் தயாரான ஆயிரக்கணக்கான பேரும் கைது செய்யப்பட்டு பின் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள். போராட்டம் தொடரும் என்று அறிவித்த நெடுமாறன், சென்னையில் அதைத் தொடர முடிவு செய்தார்.

காவலரின் கெடுபிடிகளுக்கு இடையில் சென்னை கோயம்பேட்டில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கி யது. மூன்றாம் நாளான 14-09-2007 அன்று எல்லா அரசியல் கட்சித் தலை வர்களும் நேரில் சந்தித்து நெடுமாறன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர். நான்காம் நாளான 15-09-2007 ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்த நாள் என்கிறார் அழகிரிசாமி. காலையில் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்கிறார் நெடுமாறன். செருப்பை மாட்டிக் கொள்ள முடியவில்லை. நடையில் தளர்ச்சி. உண்ணா நிலையை முடித்துக் கொள்ளு மாறு ஈழத் தமிழ்த் தலைவர்களும் மக்களும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மருத்து வர்கள் கலக்கம் கொள்கிறார்கள்.

அன்று மாலை வந்த மரு. இராம தாசு நெடுமாறனின் நாடி பிடித்துப் பார்த்ததுடன் முதல்வரின் தூதுவராக வந்திருப்பதாகவும் உணவுப் பொருள் களை அனுப்பி வைப்பதற்குத் தமிழக முதல்வர் உறுதியளித்திருப்பதாகவும் இல்லையென்றால் தாமும் நெடு மாறனுடன் இணைந்து போராடத் தயாராக இருப்பதாகவும் கூறிய சொற்கள் தான் நெடுமாறன் அவர்களின் மனத்தை மாற்றக் காரணமாக இருந்தன. போராட் டத்தில் உடன் நிற்பதாக வைகோவும் உறுதியளித்தார். இவற்றை ஏற்றுப் பழரசம் பருகி உண்ணாநிலையினை நிறைவு செய்தார் நெடுமாறன்.

நூலின் இரண்டாவது பகுதியில் பத்திரிகைச் செய்திகளை இணைப்பாகத் தந்துள்ளார் நூலாசிரியர். தென்செய்தி 16-08-2007 இதழில் நெடுமாறன் "வரலாற்றுக் கடமையாற்றத் தமிழர்களே வருக" என்று விடுத்த அறைகூவல், தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2007 இதழில் வந்த விரிவான செய்தி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவது பகுதி "பத்திரிகை களின் பேராதரவு" பற்றிக் குறிப்பிடுகிறது. தினமணி 7-9-2007 அன்று க. சச்சிதானந் தன் எழுதிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டதுடன் 13-09-2007 அன்று விரிவான தலையங்கம் ஒன்றும் தீட்டியது. சச்சிதானந்தன் "தமிழக மக்கள் கடல் கடந்த யாழ்ப்பாணத்தை அளவு கடந்து நேசிக்கிறார்கள் என்பதே அங்குள்ள தமிழர்களுக்கு உணவாகும், மருந்தாகும், உடையுமாகும்", என்ற வாசகத்துடன் தன் கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.

தலையங்கம் இந்தியாவுக்கு எந்த ஒரு காலத்திலும் ஆதரவு வழங்காத இலங்கையை நட்பு அரசாகக் கருதும் இந்தியாவின் கருத்து வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டு, இந்திரா காந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கை யும் தைரியமும் அதற்குப்பின் காணாமல் போனதன் விளைவே இந்த அவலத் திற்குக் காரணம் என்று பொட்டில் அடித் தாற்போல் கூறுகிறது. "பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானம் கூடவா இந்தியாவிற்கு இல்லாமல் போய் விட்டது என்று சரித்திரம் எள்ளி நகை யாடும்" என்று எச்சரிக்கை விடுக்கிறது.

இலங்கை அரசின் வெறித் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி, இந்திய அரசின் போக்கைக் கண்டித்து உடனடியாக ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வருமாறு மன்மோகன் சிங்கிற்கு அறிவுரை வழங்குகிறது ஜனசக்தி 17-09- 2007 தலையங்கம். ஈழ மக்களுக்குக் கிடைத்த சேகுவேராவான நெடுமாறனின் பணி எப்போதும் எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளது சர்வதேச ஈழமுரசு குடும்பத்தின் கடிதம்.

இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடு களில் வாழும் தமிழ்த் தலைவர்களின் உள்ளத்தை உருக்கும் வேண்டுகோள் நூலின் அடுத்த பகுதியாகத் தரப்பட்டுள்ளது. திருகோணமலை திரு மலைத் தமிழ் மக்கள் பேரவை, "இந்த வேள்வித் தீ தமிழகத்தின் நெஞ்சங்களி லெல்லாம் கொழுந்துவிட்டெரியத் தொடங்கிவிட்டது... எங்களுக்கு இச்செய்தி புதிய உத்வேகத்தை ஊட்டி நிற்கிறது... வேரும் விழுதுமாக நின்று விடுதலையை வென்றெடுப்போம்", என்று வீரவுரை கூறுகிறது.

தி. அழகிரிசாமியின் இந்தச் சீரிய தொகுப்பினைத் தமிழர் அனைவரும் படித்து ஈழத் தமிழர் படும் இன்னல்களைப் புரிந்துகொள்ள முன்வர வேண்டும். நம் கண்ணுக்கு முன்னர் வரலாறு உருவாகிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

-தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.