Jump to content

புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg27.jpg

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி யிருக்கிறது.இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே?

``புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாறுகளில் சாதாரண விஷயம்.''

இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ராடார்கள் வழங்குவதும், விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதுமாகத் தொடர்ந்து உதவி செய்கிறதே?

``இலங்கைத் தீவில் சிங்கள ராணுவம் தமிழ் மக்களை தொடர்ச்சியாகக் கொன்றொழித்து வருகிறது. அவ்வாறான ஒரு அரசுக்கு இந்தியா ராணுவ உதவி செய்வது எமக்கு வேதனை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் அதிகளவில் தமிழர்களைக் கொல்வதற்கே இத் தகைய நடவடிக்கைகள் உதவும். இதை இந்திய அரசு விளங்கிக் கொண்டு ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என உலகில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்''

விடுதலைப்புலிகளுக்கு மருந்துப் பொருள்கள், பெட்ரோல், வாக்கி டாக்கி கடத்தியதாகத் தமிழகத்தில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் புலிகள் முடக்கப்படுகிறார்களா?

``அத்தகைய கடத்தல் விவகாரங்களுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு விஷமப் பிரசாரம். தமிழ் ஈழ ஆதரவாளர்களைப் பயமுறுத்த சொல்லப்படும் பொய்யான பிரசாரங்கள்.''

தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் நிரந்தர அச்சுறுத்தலாகிவிட்டது. சில சமயங்களில் மீனவர்களை விடுதலைப் புலிகள்தான் தாக்குவதாகச் சொல்லப்படுகிறதே?

``இது எமது போராட் டத்துக்கு எதிரான சக்திகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகள். தமிழக மீனவர்கள் எமது உடன்பிறப்புகள். நாம் என்ன விலை கொடுத்தாவது எமது உடன்பிறப்புகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக் கிறோம்.''

ஈழத்தமிழர் பிரச்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

``கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுணர்வு மிக்கவர். ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்ற வகையில் ஈழத்தமிழரின் துன்பநிலை கண்டு கொதித்துப் போயிருக்கிறார். கலைஞரின் சொந்த உணர்வு தி.மு.க. என்ற பேரியக்கத்தின் உணர்வாகி, மற்ற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக, ஈழத் தமிழரின் எதிரிகள் திகைப்படையும் அளவுக்கு எழுச்சி அடைய வேண்டும் என விரும்புகிறோம்.''

மத்திய அரசின் நெருக்கடிக்காக கருணாநிதி புலிகளிடம் கறாராக நடந்து கொள்வதாக நினைக்கிறீர்களா?

``மத்திய அரசுக்கு எதிராக, தமிழ் உணர்வுடன் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியவர் கலைஞர். அவர் மத்திய அரசுக்குப் பணிந்து ஆட்சி நடத்துகிறார் என்று சொல்வது தவறு. எனினும்,இந்திய? தேசிய அரசியல்- மாநில அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து ஈழத் தமிழரின் விடுதலைக்கு உதவ வேண்டியது அத்தியாவசியம் என்ற உண்மைக்கு கலைஞர் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லையே!''

இலங்கைப் பிரச்னையைக் கையாள்வதில் சந்திரிகா குமாரதுங்கா, ரணில் விக்கிரமசிங்கே, மகிந்தா ராஜபக்சே ஆகியோரிடையே என்ன வித்தியாசம்?

``எந்த வித்தியாசமும் இல்லை. சந்திரிகாவும், ராஜபக்சேயும் வெளிப் படையாக இனவாதம் கக்கும் போர் வெறியர்கள். ரணில் விக்கிரம சிங்கேயை மட்டும் உலகம் ஒரு சமாதானப் பிரியராக அடையாளப் படுத்துகிறது. உண்மையில், அவர் ஜெயவர்த்தனே போல குள்ளநரித் தந்திரமுள்ளவர். ராஜபக்சே போர் நடத்துவதை அவர் ஆதரிக்கிறார்.''

நெருக்கடி மிகுந்த இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் புலிகள் சொல்வது என்ன?

``இந்திய - சீனப்போரின் போதும்; இந்திய -பாகிஸ்தான் போர்களின் போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டையே சிங்கள அரசு எடுத்திருந்தது வரலாறு.அப்போதெல்லாம் ஈழத்தமிழர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். ஆனால், இப்போது ஈழத்தமிழர் தமது சொந்த விடுதலைக்காக ரத்தம் சிந்திப் போராடும்போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவுவதை நிறுத்தி, எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.''

பழ.நெடுமாறன் ஈழத் தமிழர் பிரச்னை மூலமாகத் தனது நலனைப் பெருக்கிக் கொள்வதாகச் சமீபத்தில் கருணாநிதி கூறினாரே?

``நீண்டகாலமாக எந்தவிதச் சலிப்பும் இல்லாமல் எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர் நெடுமாறன் ஐயா. அவரது பணியை ஈழத்தமிழர்கள் என்றும் மனதில் இருத்தி மரியாதை செலுத்துவார்கள்.''

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை பிரியங்கா சந்தித்ததை விடுதலைப்புலிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

``பிரியங்கா எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான உணர்வோடு சென்று பார்த்திருக்கிறார் என கருதுகிறேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.