Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1

தமிழ்மணத்தில், இஸ்ரேலுக்கு எதிராக வந்த/வந்து கொண்டிருக்கும் சில பதிவுகளில், எழுதப்படும் கருத்துக்கள்

யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ளானர்

ஐரோப்பாவில் இருந்து வந்தேரிய யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர்

இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம்

யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்)

யூதர்கள் என்றுமே, Two state solution ஐ ஏற்றுக் கொண்டதில்லை.

ஹோலோகாஸ்ட் சம்பவத்தை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுள்ளனர்.

பாலஸ்தீன அகதிகள் பிரச்சனை, முழுக்க இஸ்ரேலினால் வந்த வினை.

இஸ்ரேலியர்கள் அமைதிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

பாலஸ்தீன சிவிலியன்களை திட்டமிட்டு கொல்கிறது இஸ்ரேல்.

மனித உரிமை மீரல் என்று பார்த்தால் இஸ்ரேலுக்கு தான் முதலிடம்.

இந்தப் பதிவின் நோக்கம் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், இந்த கருத்துக்களுக்கு மறு பக்கத்தை காட்டி விவாத மேடையினை சமன் படுத்துவதே ஆகும். ஒவ்வொரு கருத்தும் தனியாக விவாதிக்கப் படவேண்டும் என்பதால் தனித் தனிப் பதிவுகளாக இடுகிறேன்.

யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ள்னர்

முற்றிலும் தவறு பாலஸ்தீனர்களுக்கு எது சொந்தமே அது யூதர்களுக்கும் சொந்தம்.

முதலில் வெளி நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த யூதர்கள், தத்தம் நாடுகளை விட்டு வந்த காரணம், ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் நிலவிய யூத வெறுப்பு காழ்புணர்ச்சி (Anti-semitism). யூதர்கள் சுய மரியாதையுடன், எந்த வித வெறுப்புக்கும் ஆளாகமல் வாழ வேண்டும் என்ற நோக்குடன் வந்தவர்கள். முக்கியமாக அப்போதிருந்த ஓட்டோமான் அரசு யூதர்கள் வருகையை அனுமத்தது (அல்லது அவர்கள் வருகையை கண்டுகொள்ளவில்லை!).

1939 ல் Martin Buber என்ற பாலஸ்தீனிய உரிமைகளுக்காக போராடியவர், "Our settlers, do not come here as do the colonists from occident, to have the natives do their work for them; they themselves set their shoulders to the plough and they spend their strength and their blood to make the land fruitful" என்று கூறியிருக்கிறார்.

1882-1903 வரையான காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து முதல் அலையாக வந்தவர்கள், பாலஸ்தீனத்தில் காலம் காலமாக வாழ்ந்துவந்த யூதர்களுடன் (Sephardic jews)இணைந்தனர். இப்படி முதல் அலையாக வந்த வர்களிடம் யூத நாடு அமைக்க எந்த எண்ணாமும் இல்லை. அவர்கள் முதல் எண்ணம் அடக்குமுறை அல்லாத, யூத வெறுப்பில்லாத "A home in our country", "a state with in a larger state where they could have civil and political rights and could help our brother Ishmael in the time of his need" என்ற எண்ணாத்துடன் வந்தவர்கள் என்பதற்கு 1882ல் யூதர்களால் வெளியிடப்பட்ட Manifesto சாட்சி. 1897ல் தான் தியோடர் ஹெர்ட்சல் தலமையில் சுவிட்ஸர்லாந்திலுள்ள பஸெல் நகரில், முதல் சியோனிச காங்கிரஸ் நடந்தது அதில் தான் தனி நாடு அமைக்கும் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. இரண்டாவது அலையாக வந்தவர்கள் தான் அத்தகய எண்ணங்களுடன் செயல் பட்டனர். தனி நாடு என்றவுடன் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டுத்தான், என்ற எண்ணம் தவறு. அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளது அதைவிரிவாக வேறு பதிவில் போடுகிறேன்.

சரித்திர காலத்துக்குச் சென்றால், ஹீப்றூ இனத்தவர் கி.மு 1500-1000 ஆண்டுவாக்கில் அல்லது அதற்கு முன்னர், ஜோஷுவா தலமையில் வந்து தற்போதய பாலஸ்தீனப் பகுதியில் குடியேறியவர்கள். பிறகு தாவிது அரசனும் அவனது வாரிசுகளாலும் கிட்டத்தட்ட 1600 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளனர் இந்த காலகட்டத்தில் யூத இனத்தவர் தான் இந்த நிலப் பகுதியில் நிரந்தரக் குடிகள். இவைகளுக்கு வரலாற்று சான்றுகள் தோண்டும் இடத்திலெல்லாம் கிடைக்கும். முக்கியமாக ஜெரிகோ, ஜெரூசலம் பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்த /வாழ்ந்துவந்த சரித்திரம் தெளிவாக இருக்கிறது. Crusader கள், Saracens கள் கொன்று குவித்த யூதர்கள் எண்ணிக்கை ஏராளம்.

ரோமாபுரி மன்னர்கள், ஜுடீயா என்ற இந்தப் பகுதிக்கு பாலஸ்தீன் என்று பெயர் மற்றம் செய்தனர். (கடல் வழியாக யூதர்கள் அல்லாத வந்தேரிய குடிகள் பெயர்). அதற்கு காரணம், ரோம மன்னர்களுக்கு யூதர்கள் மசியாததும், அவர்கள் மதத்தை ஏற்காததும் தான். (கி.பி 70 மற்றும் கி.பி 135 களில் ரோம மன்னர்களின் அடக்குமுறைகு எதிராக யூதப் புரட்சி வெடித்ததும் அதை ரோம மன்னர்கள் அடக்கியதும் வரலாறு).

பாலஸ்தீன் யூத மதப் தத்துவம் கற்கும் இடமாக திகழ்ந்ததும் அதை Zion என்று யூதர்கள் அழைத்ததும், Zion க்கு திரும்பச் செல்லவேண்டும் என்று நித்தமும் வழிபடும் யூதர்கள் ஐரோப்பாவில் இருந்தனர். கிறுத்துவ விவிலியமும் பல இடங்களில் Zion பற்றி குறிப்பிடுகிறது. இந்த இடத்தின் உண்மையான வரலாறு அடிப்படையில், குறைந்தபட்சம் பாலஸ்தீனியர்களுகு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு யூதர்கள்க்கும் இந்த நிலப்பகுதியில் உரிமை உள்ளது.

யூதர்கள் அளுமைக்கு உட்பட்டு திகழும் இன்றய இஸ்ரேல், எந்த ஒரு நாட்டையும் பறித்து அமைத்த நாடு அல்ல. காலம் காலமாக யூதர்கள் வாழ்ந்த பூமியில் அமைந்த நாடு.

to be continued ....

http://sankarmanicka.blogspot.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.