Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யோர்ஜியா சொல்லித் தரும் அரசியல் பாடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோர்ஜியா சொல்லித் தரும் அரசியல் பாடம்

வலியோர்முன் தன்னை நினைக்க, தான் தன்னிலின் மெலியார்மேல் செல்லும் இடத்து. (அருளுடமை அதி. 25 – குறள் 250)

இதன் பொருள் - தன்னைவிட மெலிந்தவரைத் துன்புறுத்தச் செல்லும்போது தன்னிலும் வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க வேண்டும்.

கெட்ட காலத்துக்கு யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் மிக்கேல் சாகாஷ்விலி (ஆiமாநடை ளுயயமயளாஎடைi) க்கு பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தெரிநிதிருக்கவில்லை.

“மெலியாரை வலியார் ஒறுத்தால் வலியாரை தெய்வம் ஒறுக்கும்” என்ற பழமொழி கூட சாகாஷ்விலிக்குத் தெரிந்திருக்கவில்லை.

யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் சாகாஷ்விலி ஒரு மெலிய மாகாணமான தென் ஒசெச்சியாவை (ளுழரவா ழுளளநவயை) பிடிக்க படையை அனுப்பி அதன் தலைநகர் வுளமாinஎயடi யை துவம்சம் செய்தபோது வலிய உருசியப் படை தனது படையைத் தாக்கி நிலைகுலைய வைக்கும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இது வேட்டியோடு போனவன் தனது கோவணத்தையும் பறிகொடுத்துவிட்டு வந்த கதையாகப் போய்விட்டது. உருசிய படை யோர்ஜியாவுக்குள் ஊடுருவி அதன் இரண்டில் ஒரு பங்கு நிலப்பரப்பை பிடித்து வைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990 ளில் பிரிந்து போன தென் ஒசெச்சியாவைத் தாக்கி அதன் தலைநகர் வுளமாinஎயடi யை யோர்ஜிய படைகள் பிடித்தது. தென் ஒசெச்சியா யோர்ஜியாவின் ஆட்புலத்தில் ஒரு பகுதி என்பதுதான் யோர்ஜியா தனது படையெடுப்புக்குச் சொன்ன காரணம் ஆகும். இந்தப் படையெடுப்பில் ஒசெச்சியாவின் தலைநகர் தரைமட்டமாக்கப் பட்டது. 2,000 பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உருசிய அமைதிப்படையைச் சேர்ந்த பலரை யோர்ஜிய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றார்கள்.

யோர்ஜியா அரங்கேற்றிய படுயெடுப்பையும் படுகொலைகளையும் உருசிய ஆட்சித்தலைவர் டிமித்ரி மித்விடேவ் (சுரளளயைn Pசநளனைநவெ னுஅவைசல ஆநனஎநனநஎ ) முழுமையான இன வடிகட்டல் என வருணித்தார். அத்தோடு அவர் அமைதி அடைந்துவிடவில்லை.

“உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது” என உருசிய ஆட்சித்தலைவர் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற பாணியில் தெரிவித்தார். "ஐ அரளவ pசழவநஉவ வாந டகைந யனெ னபைnவைல ழக சுரளளயைn உவைணைநளெ றாநசநஎநச வாநல யசந. றுந றடைட ழெவ யடடழற வாநசை னநயவாள வழ பழ ரnpரniளாநன. வுhழளந சநளிழளெiடிடந றடைட சநஉநiஎந ய னநளநசஎநன pரniளாஅநவெ."

அதேவேளை உருசிய பிரதமர் விலடிமிர் புட்டின் (Pசiஅந ஆinளைவநச ஏடயனiஅசை Pரவin) பேசும் போது “அமெரிக்கர்கள் சதாம் குசேன் பல ஷியா ஊர்களை அழித்ததற்காக அவரைத் தூக்கில் போட்டார்கள். ஆனால் இன்றைய யோர்ஜியா ஆட்சியாளர்கள் பத்து ஒசெச்சியன் ஊர்களை ஒரு மணி நேரத்தில் இந்த உலகத்தின் முகத்தில் இருந்து அழித்துத் துடைத்துவிட்டார்கள். யோர்ஜியப் படைகளது தாங்கிகள் குழந்தைகளையும் முதியவர்களையும் மிதித்துக் கொன்றன. பொதுமக்களை அடித்தளத்துக்குள் (உநடடயசள) வீசி எரியூட்டிக் கொன்றார்கள். இந்தக் கொடுமைகளைச் செய்த யோர்ஜிய தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்” குறிப்பிட்டார்.

தென் ஒசெச்சியாவின் மக்கள் தொகை 70,000 மட்டுமே. இதில் பெரும்பான்மையினர் ஒசெச்சியர்கள். இவர்களது பூர்வீகம் இரான் ஆகும். மதத்தால் முஸ்லிம்களான இவர்கள் பின்னர் கிறித்தவர்களாக மாறினார்கள். உருசியர்களது விழுக்காடு 3 மட்டுமே. ஆனால் உருசிய நாட்டுக் கடவைச் சீட்டைப் பெரும்பான்மையோர் வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் தென் ஒசெச்சியா யோர்ஜியாவோடு இணைக்கப்பட்டது. வட ஒசெச்சியா உருசிய நாட்டை சேர்ந்தது.

யோர்ஜியாவின் படைகள் தென் ஒசெச்சியாவைத் தாக்கி அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள்; மீண்டும் கொண்டுவர எடுத்த முயற்சியை முடியடிக்க உருசியா யோர்ஜியா மீது படையெடுத்தது. யோர்ஜியா தலைநகர் திபிலிசியிலுள்ள (வுடிடைளைi) இராணுவ விமானத் தளங்கள் மீது உருசிய போர் விமானங்கள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன. தென் ஒசெச்சியா போல யோர்ஜியாவிலிருந்து பிரிந்த மற்றொரு மாகாணமான அப்ஹாஸியாவில் இருந்து உருசிய படைகளின் உதவியோடு அப்ஹாசியாப் படைகள் யோர்ஜியாவுக்குள் ஊடுருவி தனது எனச் சொந்தம் கொண்டாடிய முழனழசi பழசபந பகுதியை கைப்பற்றியது. தென் ஒசெச்சியாவிலிருந்து தமது படைகளை திரும்பப் பெற்றுள்ளதாக யோர்ஜியாவின் உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் உருசியா விடுவதாக இல்லை. யோர்ஜியா மீது மேற்கொண்ட படை நடவடிக்கை தொடர்ந்தது. அயந்து நாள் சண்டையின் பின் பிரான்ஸ் நாட்டு அதிபரது முயற்சியால் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எழுதப்பட்டுள்ளது.

யேர்ஜியாவின் ஆட்சித்தலைவர் ஏன் வலிந்து தென் ஒசெச்சியா மீது தாக்குதல் தொடுத்தார்? உலகத்தின் கவனம் பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நிலைகொண்டிருந்த போது தனது படையெடுப்பை மற்ற நாடுகள் கண்டு கொள்ளாது என அவர் கணக்குப் போட்டிருக்கலாம். மற்றது அமெரிக்க ஆதரவாளரான அவர், அமெரிக்கா தனது உதவிக்கு வரும் என எதிர்பார்த்திருக்கலாம். இராக்குக்கு எதிரான போரில் யோர்ஜியா 2,000 படையினரை அங்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. எதுவாக இருந்தாலும் சாகாஷ்விலி போட்ட கணக்குப் படுமோசமாகப் பிழைத்துவிட்டது. 2006 இல் இஸ்ரேலிய படைகள் லெபெனன் மீது குண்டுமாரி பொழிந்தும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியும் அந்த நாட்டை சுடுகாடாக ஆக்கியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். பல கோடி பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. அப்போது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் லெபெனன் மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவில்லை. மாறாக இஸ்ரேல் தற்பாதுகாப்புத் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அந்த உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்றும் யோர்ஜ் புஷ் சொன்னார். கிழமைக் கணக்காக யோர்ஜ் புஷ் மட்டுமல்ல அய்யன்னா பாதுகாப்பு அவையும் கண்மூடிக் கிடந்தது. தென் ஓசெச்சியா மீது யோர்ஜியா மேற்கொண்ட படையெடுப்பை மேற்குலக நாடுகள் கண்டிக்கவில்லை.

படையெடுப்பைக் கைவிடும்படி யோர்ஜியாவிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. மாறாக யோர்ஜியா மீது உருசியா மேற்கொண்ட பதில் தாக்குதலைக் கண்டித்தன. படையெடுப்பை உருசியா நிறுத்த வேண்டும் அல்லது வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்று யோர்ஜ் புஷ் எச்சரித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலீசா றைஸ் “உருசியா உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும்” என்று மெல்லிதாக மிரட்டினார். இஸ்ரேலின் அப்பட்டமான படையெடுப்பைக் கண்டு கொள்ளாத அய்க்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை உருசியா யோர்ஜியா மீது படையெடுத்த போது காலை மாலை என ஒவ்வொரு நாளும் கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

யோர்ஜ் புஷ் உருசியாவின் பதிலடி “அளவுப்படி மிகையானது, கொடூரமானது” என வருணித்தார். “இப்படியான படையெடுப்பு 21 ஆம் நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அமெரிக்கா, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட யோர்ஜியா அரசு பக்கம் நிற்கிறது. யோர்ஜியாவின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு (உருசியாவால்) மதிக்கப்பட வேண்டும்;. உருசிய அரசு தனது பாதையை பின்புறமாக திருப்ப வேண்டும்” என்றார்.

துணை ஆட்சித்தலைவர் டிக் செனி (னுiஉம ஊhநnநெல) உருசியாவின் ஆக்கிரமிப்பு (யபபசநளளழைn) தண்டிக்கவிடாமல் போகாது என்றார். இதனைப் படிப்பவர்கள் சாத்தான்கள் வேதம் ஓதுவதாக நினைப்பார்கள்.

உருசியாவின் பதிலடி கொடூரமானது என்றால் அமெரிக்காவின் இராக் மீதான சட்டத்துக்கு முரணான படையெடுப்பை என்படி வருணிப்பது? இதுவரை 1.4 மில்லியன் மக்கள் இராக்கில் இறந்துபட்டுப் போனார்கள். நான்கு மில்லியன் இராக்கியர் ஏதிலிகளாக அயல்நாடுகளில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார்கள்.

ஒரு நாட்டின் எல்லைகள் என்பது கடவுளால் கீறப்பட்டவை அல்ல. போரில் வென்றவர்கள் எல்லையைக் கீறினார்கள். யோர்ஜியா மீது உருசியா மேற்கொண்ட பதில் தாக்குதல் “இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு” (ளுழஎநசநபைவெல யனெ வநசசவைழசயைட iவெநபசவைல) கோட்பாட்டை நிர்முலமாக்கியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் இதன் தார்ப்பரியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று உலகத்தில் நடைபெறும் மோதல்களில் பெரும்பான்மையானவை சிறுபான்மை தேசிய இனங்களை பெரும்பான்மை தேசிய இனங்கள் ஆக்கிரமிப்பதால் நடைபெறுவன ஆகும். எடுத்துக்காட்டாக திபெத், கஷ்மீர், தமிழீழம், பலுஸ்தித்தான், குர்திஷ், சீனாவின் வட மேற்கு மாகாணமான ஓiதெயைபெ இல் வாழும் உய்க்கூர் (ருiபாரச) முஸ்லிம்கள் போன்ற தேசிய இனங்களைக் குறிப்பிடலாம். கியூபெக் மக்கள் கூட தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை.

உருசியப் படைகளுக்கு யோர்ஜிய படைகள் உறை போடவும் பற்றாது. உருசியா யோர்ஜியாவை விட 30 மடங்கு பெரிய நாடு. இது ஆட்சித்தலைவர் சாகாஷ்விலிவுக்குத் தெரியாது என்று யாரும் சொல்லமுடியாது. மேலும் யோர்ஜியா உருசியாவின் பின்வளவு. அந்த நாடு வட அட்லாந்திக் உடன்பாட்டு அமைப்பில் (Nயுவுழு) சேருவதை உருசியா எதிர்த்துவருகிறது. உருசியாவின் அண்டை நாடுகளான போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் அமெரிக்கா ஏவுகணைப் பாதுகாப்புக் கேடயத்தை உருவாக்கியுள்ளது. இது உருசிய – அமெரிக்க உறவில் விரிசலை தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா அது “போக்கிரி” (சழபரந)p நாடுகள் ஏவும் ஏவுகணைகளைத் தடுப்பதற்கு அமைக்கப்படும் பாதுகாப்புக் கேடயம் என்று சொன்னாலும் உருசியா அதனை நம்பத்தயாராயில்லை. அந்தப் பாதுகாப்பு ஏவுகணைக் கேடயம் உருசியாவை இலக்காகக் கொண்டது என உருசியா நினைக்கிறது.

யோர்ஜியா மீதான உருசிய தாக்குதல் மொஸ்கவுக்கும் வோஷிங்டனுக்கும் இடையிலான பதில் யுத்தம் (pசழஒல றயச) என்றே பலர் கருதுகிறார்கள். இது மீண்டும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பனிப்போரை தொடக்ககூடும். யோர்ஜியாவை நேட்டோ அமைப்புக்குள் இழுத்து அதனைத் தனது எல்லை வரை கொண்டுவரும் அமெரிக்க முயற்சியையிட்டு நீண்டகாலமாக உருசியா கொதித்துக் கொண்டிருந்தது யாவரும் அறிந்ததே.

எது எப்படியிருப்பினும் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்ற மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு எண்ணிக்கையில் பெரிய தேசிய இனங்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களைத் தாக்கி தங்கள் பிடிக்குள் வைத்திருக்கலாம் என்ற கோட்பாட்டுக்கு யோர்ஜியா மீது உருசிய மேற்கொண்ட தாக்குதல் வேட்டு வைத்திருக்கிறது. பெரிய தேசிய இனங்கள்; சிறிய தேசிய இனங்களைத் வலோத்காரமாக – அவர்களது ஒப்புதல் இன்றி – அவர்கள் மீது சவாரி செய்யும் அல்லது சவாரி செய்ய நினைக்கும் மேலாண்மைப் போக்கைக் கைவிட்டால் உலகில் மோதல்கள் அருகி அமைதி ஏற்பட வழி பிறக்கும். யோர்ஜியா சொல்லித் தரும் அரசியல் பாடம் இதுதான்.

-நக்கீரன்

தமிழ் கனேடியன்

நீங்கள் எழுதிய ஆக்கம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் கந்தப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதிய ஆக்கம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் கந்தப்பு.

கனடா நக்கீரன் எழுதிய ஆக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.