Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளிருந்து ஒரு குரல் (அம்புலி)

Featured Replies

முழங்காவிலை நோக்கிச் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் ஊர்திகள் எதிராக வந்து கொண்டிருந்தன. மக்கள் செல்லும் திசைக்கு எதிராக களமுனைப் போராளிகள் சென்று கொண்டிருந்தனர்.

எதிரிகள் துரத்தியடிக்கும் எறிகணைகளுக்கு அஞ்சி மக்கள் அவை எட்டாத தூரத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முழங்காவில் இன்று ஜெயபுரம் நாளை வன்னேரி பின்னர் அக்கராயன் அதையடுத்து கோணாவில் கிளிநொச்சியென்று அவர்கள் ஊரோடிக் கொண்டிருந்தனர். இந்த ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று நினைத்த தமிழர்கள் போராளிகளாகிக் களமுனையில் நிற்கின்றார்கள்.

முழங்காவிலில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னணிக் காப்பரண் கோட்டில் 2ஆம் லெப்.மாலதி படையணிப் போராளிகள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

காடுகளையும் ஊர்களையும கடற்கரையையும் வீட்டு முற்றங்களையும் வீதியையும் ஊடறுத்து முன்னணிக் காப்பரண் கோடு வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. காப்பரண்களுக்கு அருகாக ஒரு மரக்கிளையில் ஒரு ஏணைச் சேலை காற்றிலாடிக் கொண்டிருந்தது. மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களில் யாரோ அவசரமாகக் கட்டிய ஏணையாக அது இருக்கவேண்டும். சிங்களப் படைகள் முன்னேறிவர வந்த அவசரத்துடனேயே மீண்டும் அந்தத் தமிழர்கள் வேறிடம் போயிருக்க வேண்டும். அந்த ஏணைக்குள் உறங்கிய குழந்தை இப்போது எங்கிருக்கும் என்பதைச் செங்கனி அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. அது ஆணா பெண்ணா என்பதும் அவருக்குத் தெரியாது. காற்றிலாடிக் கொண்டிருக்கும் அந்த ஏணைச் சேலையைப் போலத்தான் தமிழர்களது வாழ்வும் அல்லாடிக் கொண்டிருக்கின்றது என்பதை அவள் நினைத்துக் கொண்டாள்.

தண்ணீர் எடுக்கச் செல்லும்போதும் சாப்பாடு எடுத்து வரும் போதும் உடன்பிறப்புகள் போல அவளைத் தொடர்ந்தன நாய்கள். கழுத்தில் பட்டியோடும் பட்டி இல்லாமலும் அழகாகவும் அழகின்றியும் சொறி பிடித்து ஒன்றும் குட்டையாக பொமரேனியன் இனம்போல இன்னொன்றுமாக விதம் விதமான நாய்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தாம் நம்பி ஒண்டி வாழ்ந்த மனிதர்கள் கைவிட்டுச் சென்றதால் அவை போக்கிடமின்றி அலைந்து கொண்டிருந்தன. களமுனையில் நிற்கும் போராளிகள் சாப்பிட்டுவிட்டு எஞ்சிய உணவைத் தரலாம் என மணிக்கணக்காக அவை காத்துக் கொண்டிருந்தன. தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்கள் வளர்க்கும் நாய் பூனை மாடு ஆடு என்று விலங்குகளுக்கும் கூட அவல வாழ்வுதான் என்பதை நினைத்தபோது உண்பதற்குக்கூட செங்கனிக்குக் கடினமாக இருந்தது.

ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி முழங்காவில் சந்தியடியில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்களப் படையினருக்கும் சண்டை நடந்தது. அந்தச் சண்டையின் பின்னர் வழமைபோலவே தமது வேலைகளைத் தொடர்ந்தார்கள். புதிய நிலைகளில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காப்பரண்களைப் பெண் புலிகள் உருமறைத்துக் கொண்டிருந்தனர். படையினர் அடிக்கடி ஏவும் எறிகணைகள் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தன. போராளிகளின் வேலைகளாலும் புதிய நிலைகளைப் பலப்படுத்தும் சுறுசுறுப்பினாலும் களமுனை கலகலத்துக் கொண்டிருந்தது. பல நாட்கள் குளிப்பு முழுக்கின்றி நின்று சண்டை செய்தவர்களை 2ஆம் லெப்.மாலதி படையணித் தாக்குதல் தளபதிகளுள் ஒருவரான சுகி மாற்றி மாற்றிக் குளிக்க விட்டுக் கொண்டிருந்தார். அவர்களுக்கான மாற்றுடைகள் பின்தளத்திலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன. அணிந்து கொண்டிருக்கும் உடையொன்றுதான் இப்போது அவர்களது உடைமை.

குளிக்கவே நேர மற்றிருந்தவர்களுக்கு முடிவெட்டிக் கொள்வதற்கு எங்கே நேரமிருக்கப் போகின்றது. முடிவெட்டப்பட்ட பலருக்கு பற்றைக்காடுபோல அவை வளர்ந்து விட்டிருந்தன. ஆறுதலாக முடிவெட்டி எண்ணெய் வைத்து முழுகும் ஓய்வு நாட்களையா சிங்களப் படைகள் தரப்போகின்றன? ஒவ்வொரு நாளும் சண்டைஇ ஒவ்வொரு நாளும் முன்னகர்வும் முறியடிப்பும் என்றிருப்பவர்களுக்கு முடிவெட்டிக்கொள்ள எங்கே நேரம் கிடைக்கிறது? எவ்வளவு துன்பம் வந்தாலும் பெற்றதாய் தன்மகவைச் சீராக வளர்க்கத்தானே விரும்புவாள். அதுபோலத் தாக்குதலணித் தளபதி சுகியும் தன் பிள்ளைகளை ஒவ்வொரு நிலைகளாகச் சென்று கவனித்துக்கொண்டு வந்தார். அடுத்த சண்டையை எதிர்கொள்வதற்கான களத் தயார்ப்படுத்தல்இ சண்டை சார்ந்த தொலைத்தொடர்பு முன்னாயத்தங்கள்இ போராளிகளைக் குளிக்க அனுப்புதல் என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அவரது கையில் ஒரு புதிய கத்தரிக்கோல் இருந்தது.

ஷஷபிள்ளைகளெல்லாம் சடைக்காளியா நிக்குதுகள். அதுதான் முடிவெட்டிக்கொண்டு வாறன்|| அழககக் கலைஞர்களின் வேலையையும் சுகியே செய்து கொண்டிருந்தார். அன்று இரவு பதினொரு மணியிருக்கும் அப்போதுதான் தனது வேலைகளை முடித்த சுகிக்கு குளிப்பதற்கு நேரம் கிடைத்தது. அவருக்கு முடிவெட்டிக் கொள்ள நேரமில்லை. ஆகவே அவரது தலையும் பற்றைக்காடுதான். சண்டைக் களங்கள் பலவற்றுக்குச் சென்று போராடிய அவரது உடலில் எத்தனையோ விழுப்புண்கள் ஒரு சுகதேகியாக அவள் நடமாடிக் கொண்டிருக்கவில்லை. அவர் மட்டுமல்ல பல பெண் போராளிகளும் சுகியைப் போலத்தான் விழுப்புண் பட்டவர்களாக இருந்தார்கள்.

சிங்களத்தின் படையெடுப்பு ஓய்வொழிச்சலின்றிக் களமுனையிலேயே அவர்களை நிறுத்திவைத்திருந்தது. அந்தச் சண்டைக்காரப் பெண் புலிகளை நம்பித்தான் பல புதியவர்களும் களமுனைக்கு வந்திருந்தனர். சுகி குளித்து முடித்துவிட்டு மேலும் சில கடமைகளைச் செய்து உறக்கத்திற்குப்போக நள்ளிரவு தாண்டியிருந்தது. உறக்கமும் அரைக்கண் உறக்கம்தான். எங்காவது வெடியோசை கேட்டாலோஇ எறிகணை விழுந்தாலோஇ தொலைத்தொடர்புக் கருவி இரைந்தாலோ உடன் விழிப்பு நிலைக்கு வந்து விடும் உறக்கம் தான் அது. வழமையாக ஒரு தாய்க்கு ஆகக் கூடியது எத்தனை பிள்ளைகள் இருப்பார்கள்.

முன்னைய காலத்தில் எனில்இ பத்துப் பன்னிரண்டு இருக்கலாம். இன்றைய நாளில் இரண்டோஇ மூன்றோ அல்லது நான்கோ இருக்கலாம். ஆனால் இவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? ஷஷநான் ஒரு பெரிய குடும்பத்தின் தலைவி என்னை நம்பி எத்தனை பிள்ளைகள். ஒரு அம்மாவைவிட நான் எத்தனை பெரிய சுமையைச் சுமக்க வேண்டியிருக்கின்றது பார்த்தீர்களா?|| என்று எங்களை நோக்கிக் கேள்விகேட்ட அவருக்கு அகவையொன்றும் கூடுதலாக இல்லை. இவ்வளவு சுமைகளுக்கு நடுவிலும் அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது தாக்குதல் அணிப் போராளிகள் எதிரிகளுடன் சண்டை பிடித்துப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

சான்ழொழி 2ஆம் லெப்.மாலதி படையணியில் ஒரு நல்ல சண்டைக்காரி. சொந்த ஊரான வெள்ளாங்குளத்திலிருந்து மன்னார் நகர்ப்பகுதியின் விடுதியில் தங்கி பள்ளிப்படிப்பை உயர்தரம் வரை கற்றுஇ நல்ல பெறுபேறும் பெற்றவர். குடும்பத்தின் நான்கு பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்த அவரை மேலும் உயர் படிப்புப் படித்து வேலையொன்றைச் செய்வதற்குக் குடும்பத்தினர் ஒப்பவில்லை. திருமண ஒழுங்கு ஒன்றைச் செய்து வெளிநாடு அனுப்பவே வீட்டார் விரும்பினர். அதன்படி அலுவல்களும் நடந்தன. உயர்தரத் தேர்வு முடித்து வெள்ளாங்குளத்தில் அவர் வந்து நின்றபோது நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிவிட்டது. காலம் வீட்டிலிருந்து ஒருவரைப் போராட அழைத்தது.

திருமண ஏற்பாடுகள்இ உயர்கல்விஇ வேலைவாய்ப்பு என்று எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு சான்மொழி போராடப் புறப்பட்டார். வீட்டில் மூத்தவராகப் பிறந்த அவர் போராட்டத்துக்கான கடமையும் தன்னைக் கடந்தே தான் பிறருக்கு உண்டு என நம்பினார்.

தம்பிகளும் தங்கையும் படிக்கட்டும்இ அவர்களுக்காகத் தான் போராட வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி பயிற்சி பெற்றுஇ 2ஆம் லெப்.மாலதி படையணியில் இணைந்து களமுனைக்கு வந்து ஒருவருடமாகின்றது. பல சண்டைகளை எதிர் கொண்டுஇ பல பெட்டிச் சமர்களை உடைத்துஇ பல எதிரிகளைக் கொன்று - அவனது முன்னேற்றத்தைத் தடுத்து இன்று வiர் இப்பத்தியை எழுதும் வரை களமுனையில் போராடிக் கொண்டிருக்கின்றார். எத்தனையோ எறிகணைகளுக்கும்இ சன்னங்களுக்கும் நடுவில் நின்றாலும் ஒரு சின்னக்கீறல் கூட அவருடம்பில் படவில்லை.

"சண்டையெண்டா காயப்படுவம். செத்துப்போவம் எண்டு யார் சொன்னது? அவரவருக்கு ஏதோ தலையில விதி எழுதி வைத்திருப்பதாக எங்கட சனம் நம்புது. அது உண்மையாக இருந்தால் சாவுக்கு ஏன் பயப்படவேண்டும். அது ஒரே ஒரு நாள்தான் வரும். அதுவரை போராடலாமே" என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

30.07.2008 அன்று மூன்றாம்பிட்டிச் சந்தியிலிருந்து பின்னே சில நூறு மீற்றர்களில் இவரது காவல்நிலை இருந்தபோது கடற்புலிகளின் ஆண் போராளிகள் அணியொன்று இவர்களது இடத்துக்கு வந்தது.

மூன்றாம்பிட்டிச் சந்திக்கு இறங்கிச் சென்று எதிரிக்கு அடி கொடுப்பதற்காக அது இவர்களைக் கடந்து முன்னே செல்ல இருந்தது. பத்துப்பேர் கொண்ட அவ்வணியின் தலைவனான சதீஸின் நடைபேசியில் கோளாறு. நடைபேசி இன்றி முன்னே செல்வது வேலைக்காகாது.

அவ்வணியில் இருந்த போராளிகளும் புதியவர்கள். எனவே சதீஸ் நடைபேசியுடன் உள்ளிறங்குவதற்கு துணையாக வருமாறு பெண் போராளிகளில் ஒருவரைக் கேட்டார். சான்மொழி தனது நடைபேசியுடன் அவ்வணியோடு இணைந்து கொண்டார். பற்றைகள்இ வெட்டைகள் தாண்டி அவ்வணி முன்னகர்ந்தது. மூன்றாம்பிட்டி சந்தியையும் அதனோடிணைந்த பேருந்துத் தரிப்பிடம்இ கோயிலடி ஆகியவற்றில் நிலை கொண்டிருந்த எதிரிகளோடு சண்டையிடத் தொடங்கியது. முன்னேயிருந்து எதிரிகள் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்தனர். சான்மொழியும் தனக்கு வாய்த்த சிங்களப் படைகளைச் சுடுகருவியால் விழுத்திக் கொண்டிருந்தார். எதிரிகளுக்கும் இவர்களுக்குமான தூரம் 25 மீற்றர் ஆகச் சுருங்கியிருந்தது. அணித்தலைவனான சதீசுக்கும் இன்னுமொருவருக்கும் விழுப்புண்பட்டது. சான்மொழி கட்டளை மையத்துக்கு நிலைமையை அறிவித்தபடியே சண்டையிட்டார்.

சதீஸின் அணி பீ.கே.எல்.எம்.ஜி.யாலும்இ 40 மி.மீ. சுடுகலனாலும் அடித்தபடியிருந்தன. எதிரிகள் வீதிக்கு இருபுறமாகவும் இவர்களை நோக்கி முன்னகர்ந்து கொண்டிருந்தனர். முறியடிப்பை முடித்துவிட்டுப் போராளிகள் பின்னகர வேண்டும். அணியில் வந்த புதியவர்களை முதலில் பின்னுக்கு அனுப்பிவிட்டுஇ விழுப்புண்காரர்களுடன் சான்மொழியும் பின்னகர்ந்தார். கடற்புலிகளின் அணித்தலைவனான சதீஸ் நல்ல சண்டைக்காரன். ஆனாலும் அவருக்கு விழுப்புண்.

அவரையும் அவருடன் விழுப்புண்பட்ட மற்றையவரையும் பின்னகர்த்திஇ இடையிடையே சண்டையிட்டுத் தனது நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டார். கள நிலைமைக்கேற்ப கடமையைப் பொறுப்பெடுத்துஇ உடன் போராடும் ஆண் போராளிகளுக்குத் துணை நின்றுஇ துணிச்சலுடன் சண்டை செய்துஇ மீண்ட அவரை அணித்தலைவியும் ஏனையோரும் மனமாரப் பாராட்டினார்கள்.

ஷஷசண்டையெல்லாம் முடிந்து அண்ணையைப் பார்க்கவேணும் நான் பிடித்த சண்டைகளைப் பற்றி அவரோடு உரையாட வேண்டும்|| என்பதே சான்மொழியின் உள் விருப்பு. ஆனால் வெள்ளாங்குளத்தில் தன் வீட்டு முற்றத்தைக் கடந்து சண்டைக்குச் சென்றுஇ தன் வீட்டையும் ஊரையும் இழந்ததனால் ஏற்பட்ட வலியையும் சுமந்துஇ வீட்டுக்காரர்கள் எங்கிருக்கின்றார்களோ தெரியாது என்ற துயரோடு - உள்ளே பாசத்தையும் வெளியே வீரத்தையும் அணிந்தபடி போராடிக் கொண்டிருக்கும் சான்மொழிக்கு எதிரியை அடித்துக் கலைத்து நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இப்போதைய விருப்பு.

நன்றி சங்கதி

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.