Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆக்கிரமிப்பாளனின் அழிவும் துரோகியின் வரவும்

Featured Replies

பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று 6000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒன்று கூடியிருந்தனர். இலண்டனில் ஒலிக்கும் குரல், சர்வதேசமெங்கும் எதிரொலிக்கும் என்பது ஊடகத் துறையினருக்கு நன்கு புரியும்.

காலனியாதிக்க காலத்தில் சூரியன் மறையாத, பாராண்ட பாராளுமன்றத்திற்கு முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சி ஒன்றுகூடல், பல செய்திகளை மேற்குலக நாடுகளிற்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.

பிரித்தானியாவில் குற்றவாளியாகக் கணிக்கப்பட்டவர், சிறீலங்காவில் ஜனநாயகவாதியாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இனி அவரையும் பிரித்தானிய அமைச்சர் சந்தித்து, இனிவரும் றெயினர்ஸ் லேன் கூட்டங்களில், தனது சுய விளக்கத்தை பிரித்தானியத் தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பார். ஆகவே ஜனநாயக முகமூடியணிந்து, இனப்படுகொலை செய்யும் பயங்கரவாத அரசுகளை அரவணைக்கும் போக்கினை மாற்றிடக் கோரியே, இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன, என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இடம் பெயரும் மக்களை, வழி மறித்துப் படுகொலைசெய்யும், சிறீலங்கா இராணுவ ஆழ ஊடுருவும் படையனரின் கொடூர வன்செயலைக் கண்டிக்க திராணியற்ற அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியங்கள், இனப்படுகொலையாளன் மேஜர், ஜெனரல் ஜனக பெரேராவின் மறைவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய கண்டனங்கள், இவர்களின் இரட்டை வேடத்தை மிகத் துலாம்பரமாக தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றன. எமது இதய பூமியைச் சிதைத்து, மண்கிண்டிமலையை ஜனகபுரவாக மாற்றியவரே இந்த ஜனக பெரேரா. இவனது அழிவை கேள்வியுற்று, செம்மணிப் புதைகுழிகள் சிலிர்த்துக்கொண்டது சிங்களத்திற்கு தெரியும்.

யாழ்குடாவில் காணாமல் போகடிக்கப்பட்ட 600 தமிழர்களுக்கு, ஜானக பெரேரா வெட்டிய புதைகுழிகள் பற்றி, சர்வதேச ஜனநாயகக் காவலர்கள் வாய் திறக்கவேயில்லை.இவர் யாரால் படுகொலை செய்யப்பட்டார் என்கிற காரண காரணிகள் பற்றிய விசாரணைகளைச் செவி மடுக்கும் நிலையில் தமிழ் மக்கள் இப்போது இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில், தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை அளவுகோலாகக் கொண்டே, அந்த மனிதன் குறித்த பார்வையினை மக்கள் வெளிப்படுத்துவார்கள். மனிதகுல விரோதியின் மரணத்துள், இழப்பின் கனதியை சிங்களம் தேடினாலும், தமிழ்மக்களைப் பொறுத்தவரை, ஒரு ஆக்கிரமிப்பாளனின் அழிவையே தரிசிப்பார்கள்.

ஆனாலும் சிங்களவர்கள் எல்லோரும் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லையென்பதைப் புரிந்துகொண்டாலும், ஆக்கிரமிப்பாளர்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருப்பதே சிறீலங்காவின் சாபக்கேடு. அரசியல் யதார்த்தமும் அதுதான். இந்த ஆக்கிரமிப்புக் கும்பலுக்குள், கருணா போன்ற முன்னாள் போராளிகள் சரணடைந்திருப்பது, முழு விடுதலைக்காக ஏங்கி, நெருப்பாற்றில் இறங்கியுள்ள தாயக மக்களின் மன உணர்வை சீண்டிப்பார்க்கிறது. கருணாவின் சிங்களச் சரணடைவு, பிரதேசவாதத்திற்கு அப்பாற்பட்ட, பொருண்மியம் சார்ந்த அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.‘சிங்களவர்க்கே இந்நாடு சொந்தம்' எனப் பகிரங்க அறிவித்தல் விடுக்கும் பேரினவாதம், தமிழன் ஒருவனை தலையில் வைத்து கூத்தாடும் பின்புலத்தில் பிரித்தாளும் நயவஞ்சகத்தைப் புரிந்துகொள்ள, மாமேதை ‘மாக்கியவல்லியின்' சூத்திரத்தை படிக்க வேண்டிய அவசியமில்லை.

கோத்தபாய, ஹெகலிய ரம்புக்வெல, மகிந்த சமரசிங்க, போகொல்லாகம வரிசையில், தமிழ் மொழியில் மகிந்த சிந்தனையை முன்னெடுக்க, கருணாவும் இணைக்கப்பட்டுள்ளார். நவீன மகாவம்ச நூலின் பின்னிணைப்பாக அணி சேர்ந்துள்ள கருணா என்கிற தற்காலிகப் பக்கங்கள், கிழக்குமாகாணமானது பூரண கட்டுப்பாட்டுள் சிங்களமயமாக்கப்பட்டவுடன், கழற்றி விடப்படும். ஏற்கனவே பிள்ளையானின் மாகாண சபையின் துணையுடன், பிக்குகள் ‘பிரித்' ஓத, புத்தர் சிலைகளும், அரச மரங்களும் கிழக்கில் பரவலாக நடப்படுகின்றன. மரம் நடுவது, ஓசோனில் ஓட்டை துளைக்காதென்பது விஞ்ஞான உண்மை. பல்லின உயிர்ப்பெருக்கத்திற்கு ஆதரவானதென்பதும் அறிவியல் உண்மை. ஆனாலும் நடப்படும் அரச மரங்கள், ஓர் இனத்தையே காவுகொள்ளும் விச விருட்சமாக மாறுமென்பதை கிழக்கில் தெளிவாகத் தரிசிக்கலாம். கிடைத்ததை வைத்து சிறப்புடன் வாழப்பழக வேண்டுமென்கிற அடிவருடி மனோபாவம், கருணாவைத் தொற்றிக்கொண்டாலும், கிழக்கில் கடந்த 60 ஆண்டு காலமாக தென்னைமரவாடியிலிருந்து அம்பாறைவரை இழந்த பிரதேசங்களை மீட்டெடுக்கப் போராடும் கிழக்கு இளைஞர்களின் தமிழ்தேசிய உணர்வு, அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

பிரித்தானியாச் சிறை மீண்ட செம்மல், அரசியல் அனாதையாக விடப்பட்ட நிலையில், வடக்குத் தோழரின் பரிந்துரை கலந்து, றுகுண ராஜதானியின் அநுசரணையுடன் அவருக்கு விமோசனப் பாதையன்று உருவாக்கப்பட்டுள்ளது. மனம் உருகி, மகிந்தருக்கு நன்றி கூறியுள்ளார் கருணா. அன்று போர் முனையில் களமாடிய தமிழன், சிங்களத்தின் காலடியில் நன்றி தெரிவித்து சரணாகதி அடையும் இழிநிலை, இனி எந்தத் தமிழனிற்கும் வரக்கூடாது. ஆனாலும் இவர் அவசரத்தில் அள்ளித் தெளித்த கறைபடிந்த அலங்கோலங்களை, கிழக்கு மக்களே துடைத்தழிப்பார்கள் என்பது திண்ணம்.கல்லோயா முதற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் எத்தனை, ஒவ்வொரு கிராம அழிப்பிலும், நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அதிகம்.அம்பாறை மாவட்டம் பேரினவாதக் கறையான்களால் அரிக்கப்பட்டு, கடலோரக் கிராமங்கள்வரை குறுக்கப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கில், பூர்வீகக் குடிகள் வாழ்ந்த வேரடியை அழித்து, சிங்களத்தின் உயர்பாதுகாப்பு வலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.