Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப் போர்

09/11/2008

--------------------------------------------------------------------------------

விடுதலைப் புலிகள் மரபுவழியில் போரிடும் திறனை இழந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் இப்போதும் அவர்கள் மரபுவழியிலான தற்காப்புச் சண்டைகளையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதை நிரூபிக்க வேறு ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை. அரசாங்கம் தரும் போர்க்கள நிலைவரப் புள்ளிவிபரங்களே போதும்.

மன்னாரின் வடபகுதியில் புலிகள் சண்டையின்றி பின் விலகிக் கொண்டபோது தான் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அவ்வாறு கூறியிருந்தார். அவரது கூற்று நூறு வீதம் சரியானதாக இருந்திருப்பின் இன்று கிளிநொச்சியில் படையினர் நின்றிருக்க வேண்டும். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது செப்ரெம்பர் தொடக்கத்தில் இருந்தே கிளிநொச்சி நகருக்கும் தமது முன்னரங்க நிலைகளுக்கும் இடையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய கி.மீ தூரமே இருப்பதாக படைத்தரப்பு கூறி வந்தது. இன்னும் 2 கி.மீ ஒன்றரைக் கி.மீ என்று குறைத்துக் குறைத்துக் கொண்டு வந்த படைத்தரப்பு இப்போது அதைப் பற்றி எதையும் சொல்லக் காணவில்லை.

அதேவேளை வடமேற்கு கரையோரத்தில் பூநகரிக்கு சமீபமாக இராணுவம் முன்னேறியிருப்பது உண்மை. அந்தப் பகுதியில் 90 வீதமான கரையோரப் பகுதி தம்வசம் வந்து விட்டதாக இராணுவம் கூறுகிறது. ஆனாலும் புலிகளின் மரபுவழிப் போரிடும் திறன் குறைந்து போய் விட்டதாகவோ அழிந்து போய்விட்டதாகவோ கருத முடியாதுள்ளது. இந்தநிலையில் கடந்தவாரம் சாலியபுரவில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையகத்தில் நடந்த வெள்ளிவிழா நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, புலிகளுடனான போரின் 80 வீதம் முற்றுப் பெற்று விட்டதாகக் கூறியிருந்தார். அப்படியானால் இன்னமும் அவர்களின் பலம் வெறும் 20 வீதம் தான் இருக்கிறது என்றே அர்த்தம்.

12,000 புலிகளை கடந்த இரண்டரை ஆண்டுப் போரில் இராணுவத்தினர் கொன்றிருப்பதாகவும் அவர் கணக்குக் காட்டியிருக்கிறார். இன்னும் வெறும் 20 சதவீதப் பலத்துடன் இருக்கின்ற புலிகளை அழிப்பதற்காகவே இராணுவம், புதிதாக 63 ஆவது டிவிசன் என்ற படைப்பிரிவை உருவாக்கியிருக்கிறது. புதிய படையினரைச் சேர்க்கிறது. தப்பி ஓடிய படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை மீளவும் படையில் சேர்க்கவுள்ளது. பல வாரங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி புலிகளின் தற்போதைய ஆட்பலம் வெறும் 4,000 தான் என்றும் அவர்களில் 11,000 பேரைக் கொன்று விட்டதாகவும் கூறியிருந்தார். இப்போது 12,000 பேர் கொல்லபட்டு விட்டதாகக் கூறுகிறார். இந்த இடைவெளிக்குள் 1000 புலிகளைக் கொன்று விட்டதாக அவரது கணிப்பு அமைந்துள்ளது.

அதேவேளை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கடந்தவாரம் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புலிகளின் ஆட்பலம் 4,000 என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்போதெல்லாம் போரில் இறக்கும், காயமடையும் படையினரின் தொகையைப் படைத்தரப்பு வெளியிடுவதில்லை. கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து இந்த சுயதணிக்கை கைக்கொள்ளப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் ஒன்று, முரண்பாடான இழப்புக் கணக்கு அறிவிப்புகள் வெளியாகி அதை ஊடகங்கள் காரசாரமாக விமர்சித்தமையாகும். பாதுகாப்பு அமைச்சு ஒன்றைக் கூறும். பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் இன்னொன்றைக் கூறும். இராணுவத் தலைமையகம் இன்னொரு கணக்கைக் காட்டும். ஒன்றையொன்று குறைமதிப்பீடு செய்து தகவல்களை வெளியிடப் போய் சிக்கலில் சிக்கிக் கொண்டதே மிச்சம்.

இப்போது அந்தப் பிரச்சினை கிடையாது. நாளாந்த இழப்புக் கணக்கு காட்டப்படுவதில்லை. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பின் போதுதான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இழப்புக் கணக்கு வெளியிடப்பட்டது. கடந்த மாதத்தில் 171 படையினர் கொல்லப்பட்டு 1,122 படையினர் காயமுற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் 200 படையினர் கொல்லப்பட்டு 997 படையினர் காயமடைந்தனர் என்று அரசு கூறியது. அதாவது மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1200 1300 படையினர் வரை கொல்லப்பட்டும் காயமடைந்தும் களத்தில் இருந்து அகற்றப்படும் நிலை காணப்படுகிறது. இன்றைய நிலையில் உலகில் வேறெந்த நாடுகளிலுமே இந்தளவுக்கு படையினர் கொல்லப்படும் காயமடையும் நிலை காணப்படவில்லை. இது மரபுவழிப் போர்த்திறனை இழந்த ஒரு படையமைப்பினால் சாதிக்க முடியாததொரு விடயம் என்பதையும் சுட்டிக் காட்டுதல் பொருத்தம்.

கடந்த இரண்டரை வருடங்களில் 12,000 புலிகளைக் கொன்றிருப்பதாக இராணுவத் தளபதி கூறியிருக்கின்ற நிலையில், இது உண்மையா என்பதல்ல முக்கியம். எஞ்சியிருக்கின்ற புலிகளின் 20 வீதத்தை அழிக்க இராணுவத் தரப்புக்கு இன்னமும் எவ்வளவு காலம் பிடிக்கும்? இதற்கு எவ்வளவு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் பொறுத்தே அந்த 20 வீதப் பலத்தின் போர்த்திறன் மதிப்பிடு அமையும். புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்று எப்போது படைத்தரப்பு கூற ஆரம்பித்ததோ அப்போதே படைத்தரப்பின் மாதாந்த இழப்பு நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கைத் தொட்டு விட்டது. அதாவது மூன்றிலக்கத்தில் இருந்து நான்கு இலக்கத்தை அடைந்து விட்டது. புலிகளின் பலத்தின் வீழ்ச்சி என்பது அவர்களின் ஆளணி,ஆயுத வளத்தின் அழிவாக மட்டும் கணக்குப் போடுகின்ற வழக்கத்தில் இருந்து இராணுவம் இன்னும் விடுபடவில்லை.

1995ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டுப் புலிகள் பின்வாங்கியபோதும் இப்படித்தான் கூறப்பட்டது. 1998ஆம் ஆண்டில் ஜெயசிக்குறு நடவடிக்கையின் போதும் 80 வீத புலிகளின் பலம் அழிக்கப்பட்டு விட்டதாகவே பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தை கூறினார். ஆனால் அதன் பின்னர் குறைந்து போனதாகக் கூறப்பட்ட பலத்தைக் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலுக்கு §முன்பாக இராணுவத்தின் பலம் மிக்க டிவிசன்களால் கூட நின்று பிடிக்க முடியாது போனது. படைத்தரப்பு தற்போதைய மோதல்களில் எதிர்கொள்கின்ற இழப்புகள் அதிகம் என்றும், பெருமளவு படையினர் தப்பியோடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. பாதுகாப்பு கண்காணிப்பகம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள அவர் இந்த வருடத்தில் 2200 படையினர் கொல்லப்பட்டதாகவும் 30,000 படையினர் தப்பி ஓடியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மங்கள சமரவீர அரசாங்கத்திற்கு எதிரானவராக இருந்தாலும் படையினருக்கு எதிரான கருத்தையோ பொய்யான தகவலையோ வெளியிடமுடியாது. காரணம் அவர் தென்னிலங்கையை நம்பியே அரசியல் நடத்துபவர். அத்தோடு புலிகளை கடந்த காலத்தில் மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தவர். இந்த வகையில் பார்க்கின்ற போது வன்னிப் போர்க்களத்தில் இராணுவம் வெற்றி பெற்று வருவதாகவும் முன்னேறி வருவதாகவும் கூறி வருவதை எந்தளவுக்கு சாதகமான அணுகுமுறையாகக் கணக்குப் போட முடியும் என்ற கேள்வி எழுகிறது. படைத்தரப்பின் கணக்குப்படி 20 வீதமான பலத்தையே புலிகள் கொண்டிருந்தாலும் கூட அதைக் கொண்டு அவர்கள் போரில் திருப்பங்களை உருவாக்குகின்ற வல்லமை பெற்றவர்களாகவே இருக்கின்றனர்.

அதனால்தான் மாதாந்தம் படையினர் தரப்பில் ஏற்படுகின்ற சேதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சியின் வீழ்ச்சியோ, பூநகரியின் வீழ்ச்சியோ புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்த முடியுமே தவிர, புலிகளின் வீழ்ச்சிக்கு வித்திடுமா என்பது சந்தேகமே. ஏனென்றால் அதற்குப் பின்னரும் போர் நீளப் போகிறது.

- சுபத்திரா

நன்றி: வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணை

என்ன மாத்தி மாத்திக்கதைக்கிறயள்

நேற்று பூனகரி போனால் கரந்தடிக்கு மீண்டும்போகவேண்டியதுதான் என்றீர்கள்இன்று இல்லை மரபு என்கிறீர்கள்

சரியான குளிரே நாட்டில??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) குகன்,

இது என்ர கருத்தில்லை கண்டியளோ?!

வீரகேசரியில சுபத்திரா எழுதினது. இதை எதுக்கு இங்க இணைச்சனான் எண்டால்,பூநகரியும், கிளிநொச்சியும் கூட பிடிபடலாம் எண்டு எங்கட ஆராய்ச்சியாளர் இப்ப ஏற்றுக்கொள்ளீனம் எண்டதற்காகத்தான்.

இன்னொண்டு, இங்க இப்ப சரியான வெய்யில். நீங்கள் ரெண்டு மாசத்துக்குப் பிந்திக் கேட்டிருக்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெய்யில்தான் மாற்றினதோ??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும் உந்த ஆய்வாளர்கள் சொல்லுறதை எல்லாரும் ஆ வென்று வாயை பிளந்து கேட்கவேண்டிய அவசியமில்லை. இனிமல் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுவினம் பூநகரி போகும் கிளிநொச்சி போகும் முல்லைத்தீவு போகும் என்று அப்புறம் ஒருக்கா புலிகள் நல்ல அடி ஓன்று குடுத்தால் உடனே சொல்லுவினால் நான் முதல் ஆய்வு கட்டுரையிலையே குறிப்பிட்டனான் புலிகள் இன்னும் பலமாக இருக்கினம் என்று பாருங்கோ உடனே நடந்திட்டு என்று உவங்களுக்கு உதுதான் பரபரப்பும் தொழிலும்.

உந்த சு......பத்திரா யாருங்கோ :) ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும் உந்த ஆய்வாளர்கள் சொல்லுறதை எல்லாரும் ஆ வென்று வாயை பிளந்து கேட்கவேண்டிய அவசியமில்லை. இனிமல் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுவினம் பூநகரி போகும் கிளிநொச்சி போகும் முல்லைத்தீவு போகும் என்று அப்புறம் ஒருக்கா புலிகள் நல்ல அடி ஓன்று குடுத்தால் உடனே சொல்லுவினால் நான் முதல் ஆய்வு கட்டுரையிலையே குறிப்பிட்டனான் புலிகள் இன்னும் பலமாக இருக்கினம் என்று பாருங்கோ உடனே நடந்திட்டு என்று உவங்களுக்கு உதுதான் பரபரப்பும் தொழிலும்.

உந்த சு......பத்திரா யாருங்கோ :) ?

உந்த சு......பத்திரா யாருங்கோ

என்பது இருக்கட்டும்

இதை இங்கை விதைத்தவரின் நோக்கம்தான் முக்கியமானது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த சு......பத்திரா யாருங்கோ

என்பது இருக்கட்டும்

இதை இங்கை விதைத்தவரின் நோக்கம்தான் முக்கியமானது????

ஐயோ மறந்திட்டன் இப்பத்தான் விளங்கிச்சுது குகதாசன் தொடருங்கோ :):o . நான் போட்டு வாறன் :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.