Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டக்கச்சி பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமான வான் தாக்குதல்: 6 மாத குழந்தை உட்பட இருவர் படுகொலை; 9 பேர் படுகாயம்

Featured Replies

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கட்சன் வீதிப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் வைற்றர் ஜெற் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று கிளிநொச்சியிலும், கிளாலி களமுனைகளிலும் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்ய முடியாமல் அப்பாவி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுகளை வீசுகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழ்கின்ற வட்டக்கச்சி, ஒட்டுசுட்டான், முள்ளியவளை பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு சிறுவர்கள் 8 வயது சிந்துஜா,10 வயது நிருசான் ஆகியோர் வட்டக்கச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஆறு மாத குழந்தை உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வட்டக்கச்சியில் விமானக் குண்டுத் தாக்குதல்

வவுனியா நிருபர் 12/17/2008 5:49:17 PM - கிளிநொச்சியில் உள்ள வட்டக்கச்சி பகுதியில் புதன்கிழமை காலை இடம்பெற்ற விமானக்குண்டுத் தாக்குதலில் ஐந்து மாதக் குழந்தையுட்பட இருவர் மரணமாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காலையில் 6.30 மணியளவிலும் அதற்குச் சற்றுப் பின்னரும் நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதல்களில் 15 பேர் காயமடைந்து வட்டக்கச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு ஒரு கைக்குழந்தை உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தி்ல் ரவிசங்கர் ரஜித்தன் 5 மாதம், செல்வரட்ணம் ஜேசுதாசன் (29) ஆகிய இருவருமே இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

எஞ்சிய 13 பேரில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தர்மபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த 5 பேரில் பத்து வயதும், 8 வயதும் உடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான சகோதரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் உள்ள இன்னுமொருவரை மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவ

என்னடா உங்கட போர் தர்மம்?

  • தொடங்கியவர்

நேற்று வட்டக்கட்சியில் நடந்த விமானக்குண்டு வீச்சில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் தர்மபுரம் வைத்தியசால அதிகாரி வழங்கிய செவ்வி என்பன இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம் ஊடாக ஒலிபரப்பாகும் பி.பி.சி தமிழோசையில் தணிக்கை செய்யப்பட்டே ஒலிபரப்பானது.

இதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் வெட்டவெளிச்சமாக பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

பி.பி.சீ உலக சேவையினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்புச் செய்யப்படும் செய்தியறிக்கைக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 27ம் திகதி மற்றும் டிசம்பர் 10ம் திகதி ஆகிய தினங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்ட பி.பி.சீ சிங்கள சேவையின் செய்தி அறிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலளார் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான தணிக்கைகள் ஊடகத் தர்மத்திற்கு புறம்பானதென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பி.பி.சீ சிங்கள சேவையின் ஊடகவியலாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தேசியப் பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பி.பி.சீ உலக சேவையினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்புச் செய்யப்படும் செய்தியறிக்கைக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியில் தெளிவு தேவை நண்பரே!

நீங்கள் கூறிப்பிட்ட செய்தியைப் படிக்கும் ஒருவர் பி.பி.சி உலக சேவை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தானத்தின் செய்திகளுக்கு பல்வேறு தடங்கல்கள் ஏற்பப்டுத்தப்பட்டதாகவே புரிந்து கொள்ள கூடியதாயிருக்கின்றது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினூடாக ஒலிபரப்பாகும் பி.பி.சி உலகசேவையின் தமிழ், சிங்கள செய்திகளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தணிக்கை செய்வதுடள் இடையூகளையும் விளைவிக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஆறு மாத குழந்தை உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 7:20 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக போர் வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தின. இதனைத் தொடர்ந்து முற்பகல் 10:00 மணியளவில் வட்டக்கச்சி மருத்துவமனை அருகில் உள்ள மக்கள் குடியிருப்பக்கள் மீதும் தாக்குதல் நடத்தின.

38861907aa6.jpg

[படம்: புதினம்]

62597870ua8.jpg

[படம்: புதினம்]

83890522va2.jpg

[படம்: புதினம்]

இதில் வட்டக்கச்சி மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவு கடுமையான சேதங்களுக்குள்ளானது.முழங்கா

Edited by thamizhanpan

SLAF bombs refugee settlements: 2 killed, 13 wounded, 4 child victims

A 5-month-old child and a 25-year-old male were killed and 13 other refugees including three children were wounded Wednesday when Sri Lanka Air Force (SLAF) fighter jets bombed refugee settlements in Vaddakkachchi four times, on each sorties bombing the refugees twice. The SLAF bombardment on civilian targets comes in the wake of high casualties to the Sri Lanka Army (SLA) in its latest offensive push in Ki'linochchi and Jaffna frontiers. The second attack was reported 250 meters near the hospital in Vaddakkachchi. Civilians in Vanni interpreted the indiscriminate attacks, which were repeatedly carried out on displaced peoples settlements, as 'collective punishment' by the Sri Lankan forces that have suffered heavy casualties in the battlefront. Medical sources identified the 5-month-old child killed in the indiscriminate bombardment on refugee settlement as Rajithan Ravishankar. The male killed in the bombardment was identified as Jeyasundraram Selvaratnam.

The first attack took place at 7:30 a.m. on Hudson Road in Vaddakkachchi. Two children were wounded in the second attack near the hospital in Vaddakkachchi at 10:00 a.m. One child, 10-year-old Midhushan Sriranjan had his leg amputated at the hospital and his 8-year-old sister Sinthuja Sriranjan was seriously wounded in her stomach.

Medical sources at Tharmapuram hospital identified the other civilians wounded in the bombardments as Joseph Dharmadevi, 15, Nallathambi Nandakumar, 44, Mahendran Ravishankar, 36, Yogarasa Yogeswaran, 30, Ravishankar Sujanidhi, 28, Raja Mahendran, 59, Sinnaththambi Luxmy, 57, Satkunanathan Nandhini, 21, Balasubramaniam Thangamalar, 55, and Karan, 32.

Sri Lanka Army (SLA) has also intensified artillery attacks targeting civilian settlements in Vaddakkachchi, Oddisuddaan and Mu'l'liyava'lai in the south of Mullaiththeevu district in the recent days.

On Monday, artillery shells hit Mullaiththeevu General hospital, causing minor injuries to two patients, according to Medical Superintendent of the hospital, Dr. V. Shanmugarajah. Many patients and staff in a nearby ward narrowly escaped from the blast that destroyed part of the building and the medical equipment.

16518943uc5.jpg

92899829yz6.jpg

51785237fm3.jpg

14540844ph9.jpg

71420633qt0.jpg

59528529ou8.jpg

www.tamilnet.com

வேதனையான நிகழ்வுகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.