Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2008-ல் தமிழகத்தை ஆக்கிரமித்த ஈழத் தமிழர்களின் ஆதரவு அலை!

Featured Replies

தமிழகத்தின் பார்வையில் 2008! இந்தாண்டு தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை இந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பரவலாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கின. ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு அலை வீசத் தொடங்கியதும் இந்த ஆண்டுதான்.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலில் இலங்கைத் தமிழர்கள் மீதான வன்முறை மிகப் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியலில் ஈழப்பிரச்னையும் இப்போது தனியிடம் பிடித்திருக்கிறது. அத்தோடு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கன்னடர்களின் எதிர்ப்பும், அதற்காக நடிகர் ரஜினிகாந்தின் ‘‘உதைக்க வேண்டாமா?’’ என்கிற உணர்ச்சிப் பேச்சும் முக்கிய இடம் பிடித்தன.

திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் அண்ணா திமுகவுக்கு இடம் மாறியதும் திமுகவில் இருந்து வெளியேறி பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் திமுகவுடன் ஒட்டிக் கொண்டதும் மிகப்பெரிய நிகழ்வுகள். அத்துடன் ஈழ ஆதரவுப் பேச்சுக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், இயக்குநர்கள் அமீர், சீமான் கைதுகளும் அடங்கும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட குசேலன் படத்தின் தோல்வி, ரகுவரன், சோபன்பாபு, பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் ஆகியோர் காலமாகினர்.

இனி மாதம் வாரியாக முக்கிய சம்பவங்களைப் பார்க்கலாம்.

ஜனவரி

ஆந்திராவுடனான பாலாறு பிரச்னையில் தமிழகம், ஆந்திர அரசுகளை அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்

வேளாண் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை பலிவாங்கிய தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் எட்டாவது மாநகராட்சியாக உதயமானது, ஈரோடு மாநகராட்சி.

பாரதிராஜாவின் மண்வாசனை படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் பாண்டியன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அதை நீக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த உச்ச நீதமன்றம் அந்தத் தடையை நீக்கியது.

சித்திரை முதல் தேதியன்று கொண்டாடப்பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு இனிமேல் தை முதல் நாள் கொண்டாடப்படும் என சட்டப் பேரவை உரையில் கவர்னர் பர்னாலா அறிவித்தார்.

பிப்ரவரி

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

மத போதகர் டிஜிஎஸ் தினகரன் காலமானார்.

மார்ச்

தமிழகப் பகுதியில் நிறைவேற்றப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், கன்னடர்களைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் வெடித்தது.

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டா¢ புரூஸ்.

ஏப்ரல் ஒன்று முதல் மாநகராட்சி மயானங்களில் இலவச தகனம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்த கன்னட அமைப்பினரைக் கண்டித்து, தமிழத் திரைப்படத் துறையினர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ஆதரவாக தமிழத் திரையுலகினர் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் ‘‘கன்னடர்களை உதைக்க வேண்டாமா?’’ என்ற நடிகர் ரஜினியின் பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முன்னார் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா, வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நளினியின் சந்திப்பு சட்டப் பூர்வமாக நடந்ததாக, சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைப் பிரச்னையில் அரசியல் தீர்வு காண சிங்கள அரசும் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள் வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே

உசிலம்பட்டி அருகே உத்தமபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்பட 13 பேரை விடுதலை செய்தது, சித்தூர் நீதிமன்றம்.

லஞ்சம் வழக்கில் சிக்கிய தனது உறவினருக்கு பரிந்துரை செய்ததாக வெளியான குற்றச்சாட்டில் தமிழக அமைச்சர் பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக எல்லையோர கிராமங்களில் விஷச் சாராயம் பருகிய கூலித் தொழிலாளிகள் 32 பேர் உயிரிழந்தனர்.

ஜூன்

அகில இந்திய நாடாளு மக்கள் கட்சி என்கிற புதிய கட்சியைத் தொடங்கினார், நடிகர் கார்த்திக்.

பா.ம.க.வுடன் கூட்டணி தொடர முடியாது என திமுக அறிவிக்க, கூட்டணியில் இருந்து வெளியேறியது, பாமக.

ஜூலை

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா மற்றும் தமிழக அமைச்சர்களை அவதூறாகப் பேசிய சம்பவம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாமகவின் முக்கிய பிரமுகர் காடுவெட்டி குரு கைதானார்.

கிருஷ்ணசாமியை நீக்கிவிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு நியமனம் செய்யப்பட்டார்.

அரசு அலுவலரைத் தாக்கியதாக தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டது.

ஆகஸ்ட்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்ட காங்கிரஸ§டன் இணைந்த திமுகவுடன் உறவு கிடையாது என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிவித்தார்.

வேலூர் மாநகராட்சியை ஒன்பதாவது மாநகராட்சியாகவும், 10_வது மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியையும் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஆள் கடத்திய வழக்கில் சிக்கிய அமைச்ர் என்.கே.கே.பி. ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

செப்டம்பர்

சென்னை, தியாகராய நகர், ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோஸில் நடந்த தீ விபத்தில் அங்கு தங்கியிருந்த அந்தக் கடை ஊழியர்கள் இரண்டு பேர் பலியாகினர்.

வயலின் இசைக் கலைஞரும், இசையமைப்பாளரும் குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்.

அண்ணா பிறந்த நாளுக்கு ஆயுள் தண்டனைக் கைதிகள் 1,405 பேரை விடுதலை செய்தது, தமிழக அரசு.

காமெடி நடிகர் வடிவேலு வீடு கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் வடிவேலு உயிர் தப்பினார்.

நளினியை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அக்டோபர்

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க பிரதமருக்குத் தந்தி அனுப்ப பொதுமக்களிடம் கருணாநிதி வேண்டுகோள். லட்சக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டன.

இலங்கைத் தமிழர்கள் படுகொலையை நிறுத்த சிங்கள அரசிடம் வலியுறுத்த மத்திய அரசு தவறினால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இலங்கைப் பிரச்னையில் ராமேஸ்வரத்தில் திரண்ட தமிழ்த் திரையுலகத்தினர் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஈழப் பிரச்னையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரமேஸ்வரத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரும் கைதாகினர்.

தன்னை விடுதலை கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி மீண்டும் மனு.

பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் காலமானார்.

காதலிக்க நேரமில்லை, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட தமிழில் முக்கியப் படங்களை எழுதி, இயக்கிய இயக்குநர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

பொது இடத்தில் புகைப்பிடிக்கத் தடை

நவம்பர்

சிங்கள அரசுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து நடிகர், நடிகைகள் சென்னை, சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்தனர்.

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (ஃபெப்சி) உண்ணாநிலை போராடடம் நடத்தினர்.

இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற பழநெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

பழம் பெரும் வில்லன் நடிகர் எம்.என் நம்பியார் மரணமடைந்தார்.

தமிழகத்தில் பரவலாக கடும் மழை பொழிந்தது.

டிசம்பர்

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கடும் மழைக்கு 177 பேர் பலி.

இலங்கையில் போரை நிறுத்த சிங்கள அரசு வலியுறுத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தலைமயில் அமைத்துக் கட்சிக் குழு சந்திப்பு.

மக்களவைத் தேர்தலில் அண்ணா திமுகவுடன் கூட்டு என அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்த (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) பிரகாஷ் காரத் அறிவித்தார்.

ஈரோட்டில் தமிழர் தேசியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஈழப் பிரச்னை குறித்துப் பேசிய இயக்குநர் சீமான் மீண்டும் கைது செய்யப்படார். அவருடன் பெரியார் திராவிட கட்சித் தலைவர் கொளத்தூர்மணி, தமிழர் தேசியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அமைந்தகரையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழீழ அங்கீகார மாநாடு நடந்தது.

(டிசம்பர் 26_ம் தேதி மாலை வரையிலான தமிழக நிகழ்வுகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.)

http://www.tamilseythi.com/tamilnaadu/2008...2008-12-26.html

-தமிழ்செய்திமையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.