Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு கொடூரம்... வெள்ளை வேன் எமன்... வெதும்பும் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கொடூரம்...

வெள்ளை வேன் எமன்... வெதும்பும் தமிழர்கள்!

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப் படும் பத்திரிகைகளின் சுதந்திரம், மீண்டுமொரு முறை வீதியில் எறியப்பட்டிருக்கிறது இலங்கையில்.

'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் படவும்... கொதித்துக் கிடக்கிறது மீடியா உலகம். ராஜபக்ஷே சகோதரர்கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என மீடியா உலகமும், தமிழ் எம்.பி-க்களும் குமுறுகிறார்கள்.

இலங்கையின் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்று சண்டே லீடர். இதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே சிங்களராக இருந்தாலும், தற்போதைய அதிபர் மகிந்தா

ராஜபக்ஷேவையும் அவருடைய சகோதரர்கள் பசில் ராஜபக்ஷேவையும், கோத்தபய ராஜபக்ஷேவையும் கட்டுரைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த விமர்சனங்களால் கண்சிவந்து கிடந்தது ராஜபக்ஷே பிரதர்ஸ் வட்டாரங்கள். குறிப்பாக, கொழும்புவில் அடிக்கடி நிகழும் 'வெள்ளை வேன் கடத்தல்' சம்பவங் களைத் தோண்டியெடுத்து அம்பலப்படுத்திய அடுத்த சில தினங்களுக்குள், துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி யிருக்கிறார் லசந்த விக்ரமதுங்கே.

இந்நிலையில், இந்த மரணத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மங்கள் குறித்து விரிவாக விளக்கி னார்கள் தமிழ் எம்-பிக்கள் சிலர்.

''இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமான மோதல் தொடங்கி முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை புலிகளின் கழுத்தை நெருக்கிப் பிடித்திருக்கிறது ராணுவம். மகிந்தா ராஜபக்ஷே அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தன்னுடைய சகோதரர்கள் பசில் ராஜபக்ஷேவை பிரதம ஆலோசகராவும், கோத்தபய ராஜபக்ஷேவை ராணுவச் செயலாளராகவும் நியமித்தார். இவர்கள் புலிகளுக்குக் கிடைத்து வரும் ஆதரவையும், உதவிகளை

யும் தடுத்து நிறுத்துவதற்கான வேலைகளைத்தான் முதலில் தொடங்கினார்கள். சர்வதேச அளவில் புலிகளுக்குக் கிடைத்து வரும் ஆதரவைத் தடுத்து நிறுத்துவதற்காக பசில், பல்வேறு நாடுகளுக்கும் பறந்து கொண்டிருந்தார். கோத்தபய, உள்நாட்டுக்குள் புலிகளுக்குக் கிடைத்து வந்த ஆதரவையும், உதவியையும் தடுத்து நிறுத்துவதற்காக உருவாக்கிய திட்டம்தான் 'வெள்ளை வேன் கடத்தல்கள்.'

இந்தக் கடத்தல் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளு முன், கொழும்பு நகரின் பாதுகாப்பு அடுக்குகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். மொத்தமே 17 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதுதான் கொழும்பு. கோல் சாலை, துப்பிலிகேஷன் சாலை, நேகம்பே சாலை, மருதானே சாலை ஆகிய நான்கு முக்கியச் சாலைகள்தான் நகரின் நான்கு வாயில்கள். இவ்வளவு சிறிய நகரத்துக்குள், கிட்டத்தட்ட 1,000 சோதனைச் சாவடிகளுடன் நான்கு அடுக்கு பாதுகாப்பு அரணை அமைத்திருக்கிறது இலங்கை அரசு. முதல் அடுக்கில் ராணுவமும், இரண்டாவது அடுக்கில் விசேஷ கமாண்டோ பயிற்சி பெற்ற அதிவிரைவுப் படை வீரர்களும், மூன்றாவதில் காவல் துறையினரும், நான்காவதில் கடல் மார்க்கத்தில் கடற்படையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பார்கள். முக்கிய இடங்கள் எல்லாம் கேமரா கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பு அரண் மிக்க ஒரு இடத்தில் ஒருவரைக் கடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இனி கடத்தல் விவரங்களுக்குள் போகலாம்.

கிட்டத்தட்ட ஒரு ராணுவத்துக்கு இணையான வலிமையுடன் போராடிக் கொண்டிருந்த புலிகளுக்கு மிக முக்கியமான தேவை பொருளுதவி. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட தமிழர்கள் பலரும் மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளில் வணிகங்களில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இவர்களைப் போன்றே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெரு வணிகர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், கொழும்பு நகரிலுள்ள செட்டித் தெருவில்தான் வசிக்கிறார்கள். தங்களது தாய் சமூகத்தின் விடுதலைக்காக இவர்களில் பலர் கொட்டிக் கொடுக்கும் பணத்தில்தான் புலிகளால் இயக்கத்தைத் தொய்வில்லாமல் தொடர முடிகிறது. அதனால், முதலில் புலிகளுக்குக் கிடைத்து வரும் நிதியுதவியை முடக்கத் திட்டமிட்டார் கோத்தபய. புலிகளுக்கு மறைமுகமாக உதவி வரும் தமிழ் தொழிலதிபர்கள், செல்வந்தர்களைப் பற்றிய ஒரு பட்டியலைத் தயாரித்தார். அடுத்த கட்டமாக, ஒரு வெள்ளை நிற டொயோட்டா வேன் திடீரென ஒரு நாள் இந்த செல்வந்தர்களின் வீட்டு வாசலில் வந்து நிற்கும். அதிலிருந்து நாலைந்து பேர் இறங்கி அந்த செல்வந்தரை சந்திப்பார்கள். ''நாங்கள் கொழும்பு ரகசிய போலீஸ் இலாகாவிலிருந்து வருகிறோம். உங்களை விசாரிக்க வேண்டியிருக்கிறது!'' எனக்கூறி அந்த செல்வந்தரை அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு ஒரு வார காலம் அந்த செல்வந்தரைப் பற்றிய எந்த செய்தியும் வெளியில் வராது. அவருடன் தொடர்புகொள்ளவும் முடியாது. இலங்கையில் உள்ள எல்லா பாதுகாப்பு ஏஜென்ஸியினருமே, 'நாங்கள் அழைத்துச் செல்லவில்லை' என மறுப்பார்கள். அந்த ஒரு வார காலத்தில் செல்வந்தரை அடித்து உதைத்து, அவரிடமிருந்து கடைசி பைசா சொத்து வரை எல்லாவற்றையுமே எழுதி வாங்கிக்கொண்டு விடுவார்கள். சில நேரம் அலங்கோலமான உடைகளுடன் பைத்தியம்போல் அந்த செல்வந்தர் எங்கேயாவது விடுவிக்கப்படுவார். பல நேரம் உடலெங்கும் காயங்களுடன் அடையாளம் தெரியாத அளவு சிதைந்துபோய், கடற்கரை ஓரமாகப் பிணமாக ஒதுங்கிக் கிடக்கும் அவரது உடல். இது வரை, ஏராளமான தமிழ் மற்றும் முஸ்லிம் செல்வந்தர்கள் இப்படி கடத்தப்பட்டிருக்கிறார்கள்!

இதே மாதிரி புலிகளுக்கு ஆதரவளித்தவர்கள் கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போயிருக்கிறார்கள். சமீபத்தில்கூட, ஐந்து நாடுகளில் ஜுவல்லரி நடத்தி வந்த பிரபலமான ஒருவரையும், கலர் லேப் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த ஒருவரையும் இப்படிக் கடத்தி, சொத்து முழுவதையும் பறித்திருக்கிறார்கள். 'தமிழ்நாட்டிலிருந்து வரும்போது என்ன கொண்டு வந்தீங்க? ஒண்ணுமில்லாம வந்த நீங்க ஒண்ணுமில்லாமலே போங்க'ன்னு சொல்லித்தான் சொத்துகளைப் பிடுங்கியிருக்கிறார்கள். இந்த 'வெள்ளை வேன் கடத்தல்' சம்பவம் முழுக்க முழுக்க கோத்தபய ராஜபக்ஷேவின் டைரக்ஷனில்தான் நடக்கிறது. மேலே விவரித்த பாதுகாப்பு அரண்களிலும், சோதனைச் சாவடிகளிலும் எந்த இடத்திலும் இந்த வெள்ளை வேனை மட்டும் நிறுத்த மாட்டார்கள். ஒரு அரசாங்கமே இப்படித் திட்டமிட்டுத் தமிழர்களின் சொத்துகளைப் பிடுங்குவது அநீதியானது. ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் அமைச்சருமான மகேஸ்வரன் கடந்த 2007-ம் வருடத்தின் கடைசி நாளில், இந்த விவரங்களை எல்லாம் 'ஏஷியன் டிரிபியூன்' பத்திரிகைக்குப் பேட்டியாகக் கொடுத்ததோடு அதில், இந்த சம்பவங்களுக்குக் காரணமான கோத்தபய ராஜபஷேவையும் ஒரு பிடி பிடித்தார். மறுதினமே 2008 புத்தாண்டு தினத்தில் கொட்டஞ்சேனை பொன்னம்பல ஆனேஸ்வரர் கோயிலில் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வருடக் கடைசியில் இந்த விவரங்களை மீண்டும் ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டிருந்தார் லசந்த விக்ரமதுங்கே. தற்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். இனி மேல் இந்த விவரங்களை வெளியில் பேசி யாரும் உயிரிழக்க விரும்ப மாட்டார்கள்!'' - ஒருவித பயத்துடன் நீளமாகப் பேசி முடித்தார்கள் அந்த தமிழ் எம்.பி-க்கள். இதற்கிடையில் மலையக மக்கள் முன்னணியின் எம்.பி-யான மனோ கணேசன், இந்த விவகாரத்தில் ராஜபக்ஷே சகோதரர்களைப் பிடிபிடியென பிடித்து வருவதோடு நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னையைக் கிளப்பி யிருக்கிறார்.

''கொழும்பு நகரில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 100-க்கும் மேலான 'காணாமல் போன' சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வெள்ளை ஊர்தியில் வரும் ஆயுதம் தாங்கிய நபர்கள், தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்களைக் கடத்திச் செல்கின்றனர். கொழும்பு நகரின் ஒவ்வொரு வீதியும் காவலர் அரண்களைக் கொண்ட பாதுகாப்பான பகுதி. அதில் ஒரு காவலர் அரணில்கூட இந்தக் கடத்தல்காரர்களின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டதே இல்லை. அரசாங்கமும் அதிலும் குறிப்பாக, அதிபரின் சகோதரரும் இக்கடத்தலில் இணைந்திருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. தலைநகரிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற பகுதிகளில் கேட்கவே வேண்டாம். தமிழர்களின் உரிமையோடு செல்வமும் சேர்த்துச் சுரண்டப்படுவது கொடுமையிலும் கொடுமை!'' எனக் கொதிக்கிறார் மனோ கணேசன்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பரிடம் இந்த 'வெள்ளை வேன் கடத்தல்' விவகாரங்கள் குறித்து புகார் அளித்திருக்கிறார்கள், மனோ கணேசன் தலைமையிலான 'அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு' அமைப்பினர். 'வெள்ளை வேன் கடத்தல்' சம்பவங்களைக் குறித்து இவ்வளவு விவகாரங்கள் கிளம்பியும், இது பற்றி துளியும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ராஜபக்ஷே பிரதர்ஸ்.

குறிப்பாக, கோத்தபய ராஜபக்ஷே, 'புலிகள் அழிவுக்கான இறுதி நாள் குறிக்கப்பட்டுவிட்டது. இன்னும் பத்து தினங்களுக்குள் முல்லைத் தீவையும் ராணுவம் கைப்பற்றிவிடும். அதன் பிறகு புலிகள் என்ற வார்த்தையே இலங்கை சரித்திரத்தில் அழிக்கப்பட்டு விடும். இப்படிப்பட்ட முக்கியமான தருணத்தில் எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்புவதற்காகத்தான் ஆதாரமில்லாத இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் கிளப்பப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் அரசுக்கும், எனக்கும் துளிகூட தொடர்பில்லை' என இலங்கை மீடியாக்களிடம் ஜஸ்ட் லைக் தட்டாக பதில் சொல்கிறாராம்.

விகடன்

தெய்வமும் அரசே

எமதர்மனும் அரசே

ஊடகங்கள் வாய் மூடி மரணித்து விட்டன.

In this land of the most compassionate Lord Buddha…..

Sinhala Buddhists who believe this land belongs to the most compassionate Lord Buddha and constitutionally calls it the "Democratic Socialist Republic of Sri Lanka", sing with pride "In wisdom and strength renewed / Ill-will, hatred, strife all ended / In love enfolded, a mighty nation / Marching onward, all as one / Lead us, Mother, to fullest freedom." as their National Anthem.

And….. in this compassionate, democratic Buddhist land enfolded with love, in wisdom and fullest freedom, media is forbidden to raise a dissenting voice. Media is forbidden to criticise the "law" of the ruling regime. The media is forbidden to speak for the people.

Many who thought they as the media have a right to freedom of expression, they have a right to information, that the people also have the same right and that it is a fundamental right in a modern civilised society, have been told very bluntly and at times most brutally, that it isn't so in this land of the compassionate, democratic republic, run by a "patriotic" regime.

The Tamil media in the North were the first to have been told this bluntly and ruthlessly while the Colombo media did not want those dissenting voices in the North, heard elsewhere. They had to learn that lesson, first hand.

And….that was a lesson learnt by some, who are not with us to tell their story. That is a lesson learnt by some, who don't have the right to say it, because they have a right to live some time more. For a lot, it was their station "Sirasa" that went ablaze with that lesson. It was their station that was smashed and set on fire to teach a lesson.

For Lasantha Wickramatunge, an editor with a passion for uncompromising media professionalism, it was a challenge to face. A challenge he never minced words, in meeting. He had his own aggressive style in meeting the challenge. Admired and respected but left alone without political backing.

And….. he, therefore, could not surmount this challenge, all by himself.

A lesson learnt, that needs no repeats to learn. This compassionate Sinhala Buddhist land does not tolerate "dissent". Those who would not want to learn that living, would have to learn that in death. We who live, would come back when "dissent" comes back as a democratic right, accepted and enjoyed in a modern land of compassion.

Till then, good bye!

Editorial Board

Lankadissent

http://www.lankadissent.com/

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பரிடம் இந்த 'வெள்ளை வேன் கடத்தல்' விவகாரங்கள் குறித்து புகார் அளித்திருக்கிறார்கள், மனோ கணேசன் தலைமையிலான 'அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு' அமைப்பினர். 'வெள்ளை வேன் கடத்தல்' சம்பவங்களைக் குறித்து இவ்வளவு விவகாரங்கள் கிளம்பியும், இது பற்றி துளியும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ராஜபக்ஷே பிரதர்ஸ்.

நீங்கள் எங்கே முறையிட்டாலும் தமிழனுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, ஏனெனில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இப்டிப்பட்ட ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் வழங்கி வருவதே தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் உந்த சர்வதேச நாடுகள் தான்.

ஆகவே எம் மக்களை எப்படி காப்பது என்று நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.