Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமரன் எனும் மாவீரன்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமரன் எனும் மாவீரன்.....

கவிதை அஞ்சலி....

தமிழ் நாட்டின் செல்வமே

நம் முத்துக்குமரனே

முத்தான உன் உயிர்தந்து

நம் மூச்சையே நிறுத்திவிட்டாய்....

காலையில் செய்திகேட்டோம்

கண்ணீரால் நம் உடல் நனைந்தோம்

உன் உடலைக் கருக்கிய

உன் உறுதி கண்டு

மனதளவில் உருக்குலைந்தோம் .....

உயிர்பிரியும் நேரத்திலும்

பிரபாகரன் என்றாய்

பின்னர் உயிரையே போக்கிவிட்டு

தமிழன் பிரபஞ்சதையே நீ வென்றாய்...

முத்துக் குழிக்கும்

ஊரிலே பிறந்தவனே......

தமிழன் மனங்களிலே முத்தாக

உன் உயிர் தந்தவனே.....

தமிழ் நாட்டிலே விதையாகி

தமிழர் மனங்களிலே

முளைத்து விட்டாய்......

உன் மூச்சு அடங்கமுதல்

உன் கொள்கைகளை எரியவைத்தாய்....

உன் லட்சியம் வெல்லவைப்போம்

துரோகிகளையும் ஓடவைப்போம்

உன் இறுதிமடலதையும்

எம் இலட்சியத்தில் சேர்த்திடுவோம்

உன் ஆசை நிறைவேற்றிடுவோம்

அன்பாய் நம் தலைவன்

கரம் பற்றிடுவோம்

மாவீரர் இல்லங்கலில்

தெய்வமாய் உனை வணங்கிடுவோம்.....

கரும்புலியோ களங்களிலே

களமாடி மாண்டிடுவான்

நம் முத்துக் கரும்புலியோ

தமிழன் உயிர்காக்க

கணத்திலே எரியூண்டு

மாண்டு விட்டான்.....

உன் எரிந்த உடல்காட்டி

எந்தன் மனங்களிலே

பொறியாக விழுந்துவிட்டாய்

இந்தப் பொறிகள் ஒவ்வொன்றும்

எரிக்கும் நம்

எதிரியின் உடல் காண்பாய்....

தமிழனின் காவியத் தலைவனே

காரிருளில் சூரியனே

உன் கனவெல்லாம் நனவாகி

உன் கல்லறயில்

தமிழ் ஈழத்தின் பூக்கள் விழும்.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உண்மைகளையும் ஒரு கடிதத்தில் எழுதி விட்டு காவியமாகி விட்டான் முத்துகுமரன். நன்றி கவிதைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

எங்கள் உறவாக ஈழத்திலே பிறக்காவிடினும் ஈழத்திலே பிறந்து தமிழினத்துக்கே துரோகம் இழைத்துக்கொண்டிருக்கும் தமிழின துரோகிகளின் தூக்கத்தையே கெடுக்க வைக்கும் ஓர் மகத்தான தியாகத்தைச் செய்த ஓர் அற்புத மனிதன் இவன். தமிழ் இனத்துக்கே பெருமை சேர்த்த ஓர் மாவீரன்....

உங்கள்கருத்துக்கு மிக்க நன்றி....

இளங்கவி

தமிழ் காத்த மறவனுக்கு வீரவணக்கங்கள்,உணர்வு உதட்டிலிருந்து வருவதல்ல தமிழனாய் பிறந்தவனுக்கு இரத்தத்தில் உருவாகிவருவது.வீரமறவனே!உனக்கு என் வீரவணக்கங்கள்!உன்னை ஈன்ற தமிழ் தாய் பெருமைக்குரியவள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு தியாகத்தைச் செய்த அந்தத் தியாகியின் தியாகத்தை எங்கள் சரித்திரம் என்றைக்கும் மறவாது.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.