-
Tell a friend
-
Topics
-
1
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
Posts
-
தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
-
ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.
-
By தமிழ் சிறி · Posted
வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351 ################## ################## ################### மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு! இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 ################# ################## ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.