Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பிரதான கொலைகளுக்கு கே 9 எனப்படும் குழுவினரே காரணம் மங்களசமரவீர மனம் திறக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பிரதான கொலைகளுக்கு கே 9 எனப்படும் குழுவினரே காரணம் மங்களசமரவீர மனம் திறக்கிறார்

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையும், அதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனமான எம்.ரி.வி குண்டுத்தாக்குதல்களுக்கு உள்ளானதுமான சம்பவங்கள் ஜனநாயக ரீதியாக செயற்படும் நிறுவனங்களை இடையூறு செய்வதும், மௌனமாக்குவதும் பல்வேறு மாறுபட்ட அபிப்பிராயங்கள வெளியாவதை தடுக்கும் வகையிலான ராஜபக்ஷ நிர்வாகத்தின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் ஆகும்.எனினும் அது தொடர்பான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆனால் 2006ஆம் ஆண்டிலிருந்து சட்டத்துக்குப் புறம்பான கொலைக் குழுக்கள் இங்கே இயங்கி வருகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும்.

மிகப் பிரபல்யமான வெள்ளைவான் கடத்தல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் ஆகியோர் மீதான படுகொலை ஊடகவியலாளர் கெய்த் நொயர் துரோகத்தனமாகத் தாக்கப்பட்டமை (இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விமர்சித்து எழுதியமைக்காக) ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலை ஆகிய அனைத்திற்கும் கே 9 எனப்படும் குழுவினரே காரணம் என்று கூறப்படுகிறது. பின்னர் இக்குழு மகாசோன குழு எனவும் அழைக்கப்பட்டது. இக்குழு ’தேசபக்தி அற்ற சக்திகளுக்கு ராஜபக்ஷ தரப்பினரை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் கடும் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டுமென்று எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியிருந்தது.’ இந்தக் கொலைக் குழுவினர் இராணுவ வட்டாரங்களில் "கோத்தாவின் சிங்கமாஃபியா" என்று அழைக்கப்பட்டது.

திருகோணமலையில் நான்கு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பிரான்ஸ் தொண்டர் நிறுவனமான அக்ஷன் பேமைச் சேர்ந்த 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஜனாதிபதியின் ஆதரவுடன் இக்குழுக்கள் செயற்படுவது குறித்து கேள்வியெழுப்பினேன். அவர் என்னை இதன் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலத்தினார். அதன் பிறகு இரண்டு மாதங்களின் பின்னர் புலிகளின் ஆதரவாளனாக அரச ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டேன்.

லசந்த விகக்கிரமதுங்கவும் கூட அரசாங்க ஆதரவுடன் செயற்படும் இவ்வாறான கொலைக் குழுக்கள் குறித்து ஆவணங்களைச் சேகரித்து வந்தார். கடந்த வருடம் இடம்பெற்ற ஜானக பெரேராவின் கொலை தொடர்பான விபரங்கள் அடங்கிய ஒரு ஒலி மற்றும் ஒளிப்பதிவு நாடாவைத் தான் வைத்திருப்பதாக லசந்த எங்களில் சிலருக்குச் சொல்லியிருந்தார். அதேவேளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ லசந்த இவ்வாறான விடயங்களை வெளியிடா வண்ணம் நீதிமன்றத் தடையுத்தரவையும் பெற்றிருந்தார். எனினும் லசந்த துணிச்சலாக ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்தார். 2006ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதியால் தொலைபேசியின் மூலமாக அச்சுறுத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் இருந்தார். அடுத்த வாரம் சண்டே லீடரில் ஜனாதிபதியுடன் தான் நடத்திய உரையாடல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி இருந்தார் லசந்த. இவை தவிரவும் ஏராளமான ஊழல்கள் குறித்தும் அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அதேவேளை அவற்றை நிறுத்துவதற்கு அண்மைக்காலத்தில் பல்வேறு முயற்சிகளை ஜனாதிபதி எடுத்திருந்தார். எனினும் லசந்த அவற்றைத் தொடர்ந்தும் அம்பலப்படுத்தியே வந்தார். அச்சுறுத்தல்களுக்கும் இடையூறுகளுக்கும் அடிபணியாது, சலுகைகளையும் பலாபலன்களையும் எதிர்பார்க்காது பணியாற்றிய மிகச் சில ஊடகவியலாளர்களில் லசந்தவும் ஒருவர். ஊடகங்களின உதவியுடன் வடக்கின் வெற்றிகளைப் பற்றிப் புகழ் பாடிக் கொண்டிருக்கும் அதே சமயம், தெற்கில் மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் ஜனவரி 6ஆம் திகதி ஆனையிறவு வீழ்ச்சியடைந்ததென்று அரசாங்கம் அறிவித்த அதேநேரம் ஜனவரி 9ஆம் திகதி லசந்த படுகொலை செய்யப்பட்டார். இன்று சிறிலங்காவில ;ஜனநாயகம் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளது, ஜோர்ஜ் ஓர்வல் 1984இல் குறிப்பிட்ட பயங்கரம் 2009இல் இங்கு புலப்பட ஆரம்பித்திருக்கிறது.

சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெற்றுவரும் இராணுவ வெற்றிகள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவ்வாறு உதவுமென நினைக்கிறீர்கள்?

கடந்த காலங்களில் போரில் பல்வேறு இராணுவ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் கூட, போர் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது 2ஆவது வருடத்தினுள் நுழைந்திருக்கிறது. 1992இன் பின் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்து அங்கு தேர்தலையும் நடத்தியிருக்கிறார்கள். 1993இன் பின்னர் ப10நகரி விடுவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ஒன்றாக 1995 டிசம்பர் 5 இல் யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் விடுவித்தனர். அரசாங்கம் இந்தப் பழைய வெற்றிகளைப் புறக்கணித்து தாங்களே எல்லா வெற்றிகளையும் பெறுவதைப் போன்ற மாயைகளை உருவாக்கி வருகின்றது. போரையும் தேசியவாதக் காய்ச்சலையும் பயன்படுத்தி ஊழலையும், துஸ்பிரயோகத்தையும் மறைக்க முற்படுவதோடு தனது உறவினர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கிப் பாரபட்சமும் காட்டுகிறது. புயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதாக பம்மாத்துக் காட்டிக் கொண்டு ஜனநாயக நிறுவனங்களை இடைய10று செய்து அவற்றை வேட்டையாடி வருவதோடு மாற்றுக் கருத்தாளர்கரைளயும் அச்சுறுத்தி வருகின்றது. நட்பு நாடுகளுடைய இராஜ தந்திரிகளும், ஐக்கிய நாடுகளின் அதிககாரிகளும் இது தொடர்பாகக் கவலையை வெளியிட்ட போது அவர்கள் அரசாங்க ஊடகங்களினால் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டார்கள். ஒரு நாட்டுக்குள்தேளயே மோதிக் கொள்ளும் இரண்டு இனக் குழுக்களில் வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளர்களும் இல்லை. தோல்வியாளர்களும் இல்லை. தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை தீர்ப்பது ஒன்றேதான் பயங்கர வாதத்தைத் தோற்கடித்து நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி. பெரும்பாலான தமிழர்கள் நாட்டைப் பிரிக்குமாறு கேட்கவில்லை. பிரிக்கப்படாத இலங்கையினுள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதையே அவர்கள் கேட்கிறார்கள். ஆகவே, அரசியற் தீர்வு ஒன்றுதான் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான ஒரே ஆயதம். சிங்கள சோவனிஸ அரசியல் எப்போதும் தமிழ் தீவிரவாதிகளை உருவாக்கி விடுகிறது. தற்போதைய இந்த அரசியற் போக்கு மிதவாத தமிழர்களைக் கூட, தீவிரவாதத்துக்குத் தள்ளிவிடுகிறது. புpரபாகரன் அழிக்கப்பட்டாலும் கூட இன்னும் பல பிரபாகரன்கள் உருவாகக் கூடும். சிறிலங்காவின் இந்த அவலம் அடுத்த சந்ததிக்கும் தொடரக்கூடும்.

ராஜபக்ச அரசாங்கம் தமது முதலாவது ஆட்சிக்காலப்பகுதியில் எவ்வாறான தவறுகளைச் செய்துள்ளது? எவற்றைச் சரியாகச் செய்துள்ளது?

மகிந்த ராஜபக்ச 2005இல் பதவியேற்றபோது தன்னை தாராளவாதப் பின்னணி கொண்ட ஒரு சிறந்த தலைவராகக் காட்டிக் கொள்ள முற்பட்டார். ஆனால் அவர் சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை இல்லாமற் பண்ணுகிற மிக முக்கியமான காரியத்தை ஆற்றியிருக்கிறார்.

சிங்கள பௌத்த உயர் அதிகாரத்தரப்பை நியாயப்படுத்தும் கோத்தபாய ராஜபக்சவின் ’இரு சகோதரர்களான’ சம்பிக ரணவக, விமல் வீரவன்ச ஆகியோரோடு சேர்ந்து இன்று பாதுகாப்பு அமைச்சராக அவர் அதிகாரத்தில் மேனிலைக்கு வந்துள்ளார்.

இதன்விளைவாக சிறிலங்கா பல தசாப்தங்களாக ஆதரவளித்த பல்வேறு நாடுகளின் ஆதரவை இழந்ததோடு, தற்போதைய அரசு ஜனநாயகக நடவடிக்கைகள் குறித்து சந்தேகப்படக் கூடிய நாடுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கவனம் கொள்ளத்தக்க ஒரு விடயம் பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடுவது தான். எனினும் தமிழ் மக்களுடைய மனதை வென்றெடுக்கும் வகையிலான தந்திரோபாயத்தைக் கொண்டிருப்பின் அது சாதகமான அம்சமாக இருந்திருக்கும். ஆனால் துரதிர்ஸ்டவசமாக சர்வகட்சிக் கூட்டம்கூட சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவே அதுவும் இந்தியாவின் அழுத்த்தின் காரணமாகமே மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் சர்வகட்சிக் கூட்டம் ஐக்கிய இலங்கை என்ற அடித்தளத்திற்குள்ளேயே பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுகிறது. அந்த அடிப்படை என்பது தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய எந்தவகையான அதிகாரப் பகிர்வையும் நிராகரி;த்து விடுகிறது.

நீங்கள் நம்புகிறீர்களா சிறிலங்கா இன்னமும் ஒரு ஜனநாயக நாடு என்று. இல்லாவிட்டால் ஏன் என்று சொல்லுங்கள்?

நான் முன்னரே குறிப்பிட்டதைப் போன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையால் ஜனநாயகம் நெருக்கடிக்குள்ளாகியிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.