Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Statement diplomacy of EU

[TamilNet, Monday, 23 February 2009, 15:26 GMT]

Significantly deviating from its earlier position of justifying war on 'terrorism', the EU Council Conclusions on Sri Lanka, Monday, stressed the need for Government of Sri Lanka (GOSL) and the LTTE to comply with ‘provisions of international humanitarian law and principles of the laws of war’, treating them as equal parties engaged in war. Taking this stance, the EU called for an immediate Ceasefire. The EU also reiterated its intention to send a Troika as soon as possible. However, the rest of the EU conclusions are the usual rhetoric, ending with the never implemented GSP+investigation on Sri Lanka, political observers said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28504

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் ‐ ஐரோப்பிய ஒன்றியம்:

வன்னிப் பகுதி சிவிலியன்களது பாதுகாப்பை கருத்திற் கொண்டு உடனடியாக அரசாங்கப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் சிவிலியன்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்துவதன் மூலம் சிவியலியன்களுக்கு நிவாரணங்களை தடையின்றி வழங்கவும், சிவிலியன்கள் சுதந்திரமாக இடம் நகரவும் வழிகோலும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு யுத்த பிரதேசத்தில் முடங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசாங்கப் படையினர் தொடர்ந்தும் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வந்து முகாம்களில் தங்கியிருக்கும் சிவிலியன்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களை கண்காணிப்பாளர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஆயுதங்களை களைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை கைவிட வேண்டுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6377&cat=

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. அத்துடன் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

n1527581102_30206825_9941.jpg

இன்றுவெளியிட்டுள்ள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடபுலத்தில் இடம்பெறும் யுத்தம் காரணமாக மக்கள் பாரிய இடப்பெயர்வுக்கு உள்ளாகுவதோடு, மக்கள் மத்தியில் பாரிய உயிரழிவுகள் தொடர்கின்றன. இந்தநிலையில் இரண்டு தரப்பும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.

உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்று அமுல்செய்யப்படவேண்டும். அத்துடன் மனிதாபிமான உதவிகள் அங்கு அனுப்பப்படவேண்டும். அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்களை வெளியேற அனுமதிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தற்காலிக நலன்புரி முகாம்களை சர்வதேச தரத்தில் பராமரிக்கவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஏனைய மனிதாபிமான நிறுவனங்கள் அங்கு சேவை செய்ய அனுமதிக்கப்படவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கைவிடவேண்டும். அதேநேரம் அரசாங்கம் அரசியல் தீர்வுதிட்டம் ஒன்றை முன்வைத்து அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டும்.

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இடம்பெறுகின்ற கொலைகள் காணாமல் போதல் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில்; அரசாங்கம், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

http://www.tamilsweet.com/Tamils/page.php?86

Edited by Maddy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.