Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தாயக மக்களுக்கானது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ந்த தேசங்களின் தமிழ் மக்கள் நடாத்தும் போராட்டங்கள் அனைத்தும் தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கானதே அன்றி இங்கு இயங்கும் சில அமைப்புக்களுக்காகவோ அல்லது தன நபர்களுக்காகவோ அல்ல என்பதை சகலரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன். நாம் ஒவ்வோர் வரும் முடிந்தளவு என்ன செய்ய முடியும் எதை செய்ய முடியும் என்று எண்ணிபடியே தான் எமது செயற்ப்பாடுகளை செய்கின்றோம்

அதை குறிப்பிட்ட அமைப்புக்களுக்கோ அல்லது குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கின்றது என்று வாதாடும் உரிமை முட்டாள்த்தனமான ஆக்க பூர்வமற்ற செயலாகும். மக்கள் விடிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தால் நாம் மற்ற எல்லாக் காரணங்களுக்கும் அப்பால் தூய எண்ணத்துடன் நாம் செயற்ப்படுதல் இன்றைய கால கட்டத்தில் இன்றி அமையாத ஒன்றாகும். வாழ்வுக்காக போராடும் எம் மக்களின் அன்றாட அவலங்களை பார்த்த படியே நாம் இங்கு நானா? நீயா? என்ற போட்டியில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களாகும்.

துரோகளை உருவாக்கியதும், மக்களை செயற்ப்பாடுகளில் இருந்து ஒதுக்கிய சேவைகளும் இனியும் தொடர வேண்டாம். விட்டுக்கொடுப்புக்களும் புரிந்துணர்வுகளும் தமிழர்களுக்குள் ஏற்ப்பட வேண்டும். இந்த வேளையில் நாம் ஒற்றுமைப்படாது விட்டால் பின்னர் எப்போது யாருக்காக ஒற்றுமைப்பட போகின்றோம்?

வானொலியில் சண்டை பிடித்தோம், பத்திரிகையில் கிழிபட்டோம் என்றால் எம் மக்களின் அவலத்தை போக்கும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்குமா இழுபறிப்பட வேண்டும்? நான் எனது மக்களின் அவலத்தை போக்க போராடுவதற்க்கு யாரின் அனுமதியை பெற வேண்டும்? இவ்வாறு பல கேள்விகள் கேட்டால் கேள்வி கேட்பவன் குற்றவாளியாக்கப்படுகின்றான

யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ???????

ஏன் இதன் பிண்ணனி பற்றி எழுத பின்னடிக்கிறீர்கள் ?

எனக்கும் சில கேள்விகள் இருக்கிறது ஆனால் இவர்கள் வெட்டி எறிவார்கள் ?

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் நேற்று ஒட்டாவா பாராளுமன்றின் முன்பாக நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தானே சொல்லவருகிறீர்கள்?

நான் அதில் பங்குபற்றியிருந்தேன். உண்மையில் மிகச் சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டம். பாராளுமன்றிற்கு சற்றுத் தொலைவில் நின்றபோதே புலிக்கொடிகள் பட்டொளி வீசிப் பறப்பதை காண மகிழ்வாக இருந்தது. எதுவித ஊடகங்களின் ஆதரவின்றியும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடி முதன்முறையாக கனடிய பாராளுமன்றின் முன்னால் எண்ணுக்கணக்கற்ற புலிக்கொடிகளைத் தூக்கி "LTTE Freedom Fighters", "Our leader Prabhakaran", "We want Tamil Eeelam" உரக்கக் கூவியது மிகப் பெரிய வெற்றி.

தமிழ்தேசிய ஏகபோக ஊடகங்கள் என்று தம்மைத்தாமே தம்பட்டம் அடித்த ஊடகங்கள் சிறு அறிவித்தலாகவாவது இதை விடுத்திருந்தால் இன்னும் நிறைய மக்கள் கூடியிருப்பார்கள். என்ன செய்வது எம்மினத்தின் விதி எது செய்தாலும் தாம்தான் செய்யவேண்டும் என்னும் சிறுமைக் குணம்...

ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் பெருவெற்றி என்பேன். நிச்சயம் தமிழ்தேசியம் தம் தாத்தா வீட்டுச் சொத்து என நினைபோரின் முகத்தில் விழுந்த அறை. எனவே நீங்களூம் இந்தப் போராட்டத்தை ஒழுங்குசெய்வதில் பங்குபற்றியிருந்தால் என் மனமார்ந்த பாராட்டுக்கள். சோர்வுறாமல் உங்கள் பணியைத் தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

நிறைய எழுதவே விரும்பினேன். ஆனால் இடையில் நேரம் கிடைக்காமையால் அவசரத்தில் எழுதி விட்டு போய்விட்டேன். யார் என்ன செய்தார்கள் என்பது பற்றிய விபரங்கள் அதிகமானவர்களுக்கு தெரியும். அதை வெளிப்படுத்தி எம்மை நாமே பலவீனப்படுத்த வேண்டாம் என்று நினைக்கின்றேன். மக்களின் அவலங்களுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க முயற்ச்சிப்போம் பின்னர் முகத்திரைகளை கண்டிப்பாக கிழிப்போம்.

தேசிய வாதிகளை இங்கு குற்றம் சாட்டுவதில் பலன் இல்லை. ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குள் இவை தள்ளப்பட்டமையும் விரும்பியோ விரும்பாமலே பலரும் அந்த சாக்கடைக்குள் வீழ்ந்து கிடப்பதுமே இன்று நடப்பவைக்கு காரணம்.

மற்றவர்களை அணைத்து செல்ல வேண்டிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்து அவர்களை புறந்த தள்ளி போராட்டத்துக்கான ஆதரவை வழங்காமை பெரும் ஏமாற்றத்தை அழித்தது. அதன் காரணமாகவே இங்கு இதை எழுத நேர்ந்தது.

சில விசயங்கள் நமக்குள் மட்டுமே பேச கூடியவை சந்தியில் நின்று பேசி யாருக்கு எதிராக நாம் போராடுகின்றோமோ அவர்களுக்கு நாம் சந்தர்ப்பத்தை அழிக்க கூடாது என்பதற்காகவே பலவற்றை தவிர்த்து கொள்கின்றேன்.

யார் போராட்டம் நடாத்தினாலும் மக்களுக்காக அணைவரையும் அணிதிரள செய்வோம் என்ற திடகற்ப்பத்துடன் நிற்பதால் எவரின் புறக்கணிப்பும் எந்த ஊடகத்தின் குழம்பங்காட்டலும் மக்களுக்குள் எடுபடாது என்பதை மட்டும் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றேன்.

போராட்டத்தின் போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் எல்லாவற்றையும் எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது ஆரோக்கியமான விடையமல்ல. சிலருக்கு சிலரின் கொள்கைகள் பிடிக்காது போகலாம் அது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அதற்காக சமூகம் சார்ந்து வரும் போது அவற்றை தூக்கிப்பிடிப்பது அறிவிலித்தனம். இங்கு நான் குறிப்பிடுவது இரு தரப்பினரையுமே!

கனேடிய தமிழ் சமூகத்துக்குள் உண்மையான ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் விரும்பும் ஒவ்வொருவரும் ஒற்றுமையை காக்க ஒன்றாகுங்கள்!

எல்லாப் பழியையும் இவ்வாறாக வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது மட்டும் போட்டு விடவும் முடியாது.

வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாடுகளை உரிய முறையில் அரசியல் மயப்படுத்தும் தமது தலையாய கடமையில் இருந்து, விடுதலைப் புலிகளின் பரப்புரைச் செயற்பாடுகள் தவறிவிட்டன என்பதையும் இங்கே சொல்லியே ஆக வேண்டும்.

குறிப்பாக - விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்ட நாடுகளில் - தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னான காலத்தில் - ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவ வெற்றிடங்கள் சரிவர நிரப்பப்படாமல் விடப்பட்டு விட்டன.

இது வழுதியின் அண்மைய கட்டுரையிலிருந்து

ஏன் இந்த ஆய்வாளர்கள் வன்னியில் இருக்கும் போராளிகளே புலத்திலும் போராட வேண்டும் காய்நகர்த்தல்களை செய்யவேண்டும் என்று சொல்கிறார்களா ?

ஆனால் இது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது அதற்காக ஒருவரை புலிகள் நியமித்து விட்டார்கள் அதன் பின்பும் ஏன் முரண்பாடுகள் ????

அண்மைக்காலமாக கனடாவில் தமிழ் அமைப்பாளர்களாக செயற்பட்டு வரும்

கனடிய தமிழர் அமைப்பு எல்லோரும் அறிந்ததே

இவர்களின் செயற்பாடுகளில் குறை கூற முற்படவில்லை ஆனால் சில விசனங்கள் , விமர்சனங்கள் தற்போது ஏற்பட்டுள்ளன

அவை பற்றி விவாதிப்பது தான் எனது நோக்கம்

1. விடுதலைப்புலிகள் பற்றி மெளனம் சாதிப்பது

2. விடுதலைப்புலிகளே ஏக பிரநிதிகள் என்று உரைக்காமலிருப்பது

3. தமிழர்களின் கொடியான புலிக்கொடியை தவிர்ப்பது

http://www.tamilnaatham.com/arasiyal_kalam.html

கனடிய வானொலியில் ஒலிபரப்பாகிய அரசியல் களத்தில் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.