Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதாகைகள் போட்டி - POSTER CONTEST

Featured Replies

GOOD 50x70 என்கிற ஒரு போட்டி நிகழ்வு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிறது. UNICEF, AMNESTY போன்ற பல அமைப்புக்களின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் பதாகைகள் பின்னர் வெவ்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் பதாகைகள் தொகுப்பிலும் (Poster Catelogue) இடம்பெறும். உலகின் முக்கியமான பிரச்சனைகளை மையப்படுத்தி அவர்கள் தலைப்புக்களை வழங்குவார்கள். அந்தத் தலைப்புக்களைப் கருப்பொருளாகக் கொண்டு பதாகைகள் உருவாக்கி அனுப்பவேண்டும்.

பதாகை(Poster) உருவாக்கத்தில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்குபற்றலாம்.

முடிவுத் திகதி: 1. April 2009 ஆக இருந்தது. அதனை இப்போது ஏப்ரல் 10ம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள்.

பதாகையின் அளவு: 50cm x 70 cm

அவர்களுக்கு நீங்கள் உருவாக்கிய பதாகையை அவர்களின் இணையப் பக்கத்தினூடாகவே அனுப்பிவைக்கலாம். உங்கள் பதாகையுடன் சேர்த்து, சிறிய விளக்கம், மற்றும் உங்களின் நிழற்படம் ஆகியவற்றையும் அனுப்பிவைக்கவேண்டும்.

மேலதிக விபரம்: http://good50x70.org/2009/

இம்முறை கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் war on terror, women's rights violation இரண்டும் எமது பிரச்சனையை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான தலைப்புக்கள். எனவே ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்கள் (கட்டாயமாக) பங்குபற்ற வேண்டும். குறிப்பாக யாழ் களத்தில் தரமான வகையில் பதாகைகளை உருவாக்கிய இணையவன் மற்றும் RKR ஆகியோர் கவனமெடுக்கவும். ஏனையவர்களும் உங்களுக்குத் தெரிந்த இளைஞர்களுக்கும், இதில் திறமையுள்ளவர்களுக்கும் இதனை அறியக் கொடுக்கவும். தனியே மேலே நான் குறிப்பிட்ட இரண்டு தலைப்புகளில் மட்டுமல்லாது, ஏனைய தலைப்புகளுக்கும் பதாகைகளை செய்து அனுப்பிவைக்கலாம். Poster கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை பார்க்க மேலே நான் குறிப்பிட்ட இணையப்பக்கத்துக்கு சென்று பார்க்கவும். அல்லது இங்கு சென்றும் பார்க்கலாம்: http://www.flickr.com/search/?q=good50x70

முன்னைய போட்டிகளில் இடம்பெற்ற பதாகைகள் சில (உதாரணத்துக்கு):

7human2008.jpg

26human2008.jpg

28human2008.jpg

16war2008.jpg

வித்தியாசமான புதுமையான சிந்தனைகள் வரவேற்கப்படுகின்றன. பதாகைகள் உருவாக்குவதில் உங்களுக்கு சிரமமிருந்தால், பதாகைகளுக்கான யோசனைகளை இத்தலைப்பில் முன்வைத்தால் ஏனையவர்கள் அதனை உருவாக்கி அனுப்பி வைக்கலாம். ஒரு குழுவாக இணைந்தும் இதனைச் செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி இளைஞன்,

கட்டாயமாக இதில் பங்குபற்றுவேன்.

  • தொடங்கியவர்

பின்வரும் பக்கத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து போட்டி பற்றிய விபரங்கள் அடங்கிய PDF கோப்பினை தரவிறக்கலாம்.

http://good50x70.org/2009/call-for-entries/

war on terror: இந்தத் தலைப்பின் கீழ் சிறிலங்கா அரசு war on terror என்ற பெயரால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது என்கிற கருத்தை வலியுறுத்தும் விதமாக பதாகைகள் அமைக்கலாம். அதேபோல் war on terror என்ற பெயரால் ஊடகவியலாளர்கள் எப்படி அடக்கப்படுகிறார்கள், குழந்தைகளும் இலக்காகிறார்கள் போன்ற கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம். மற்றும் war on terror என்ற பெயரில் ஒரு இனக்குழுமத்தின் சுதந்திரபோராட்டம் நசுக்கப்படுவதையும், கொச்சைப்படுத்தப்படுவதையும

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

போட்டி முடிவடைந்துவிட்டது. மொத்தம் 4168 பதாகைகள் கிடைத்திருக்கின்றனவாம். யாராவது கள உறுப்பினர்கள் போட்டியில் பங்குபற்றினீர்களா? அப்படியிருந்தால் அறியத்தரவும். :D

  • 1 month later...
  • தொடங்கியவர்

மனசே சரியில்ல. கணினிக்கு முன்னால ஒண்டும் செய்யாமல் இருக்கிறன். வெறுமனே ஒவ்வொரு இணையத்தளங்களா மாறி மாறி செய்தியள பார்த்துக்கொண்டு இருக்கிறன். இண்டைக்கு விடியவில இருந்து கவலைப்படுற மாதிரியான செய்தியள் தான். ஒரு பக்கம் 20000 க்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டு மருந்தில்லாமல் அவதிப்படுறதா செய்தி. 1000 காயப்பட்ட போராளிகள் அந்தப் பகுதிக்குள்ள இருக்கிறதா செய்தி. இதோட தளபதியள் செத்திட்டினம் எண்டு செய்தி. பிறகு பார்த்தா தலைவரும் செத்திட்டார் எண்டு ஒரு செய்தி. ஒரு நீண்ட இரவு போல இருக்கு கடந்த சில நாட்கள்.

இதுக்குள்ள, ஒவ்வொருநாளும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த good50x70 poster contest முடிவுகள் வெளிவந்திட்டு. அதுவும் எங்கட சனத்தின்ர பிரச்சனைய வெளிப்படுத்தோணும் எண்டு பங்குபற்றின போட்டி. தாமதமாத்தான் அதின்ர முடிவுகள் வந்திருக்கு. வந்தும் என்ன பயன். எனக்கு/எமக்கு சாதகமான முடிவுகள் இல்ல. மொத்தம் ஏழு பிரிவுகள். அதில ஒவ்வொண்டிலயும் 30 பதாகைகள் தெரிவு செய்திருக்கினம். மொத்தமா 210 பதாகைகள். ஏழு பிரிவுக்குள்ள இரண்டு பிரிவுகளுக்குத்தான் நான் பதாகைகள் அனுப்பினான். ஒண்டும் தெரிவாகேல.

அவையள் அந்த பிரிவுகளில எதிர்பார்த்த விசயம் வேறயா இருக்கலாம். குறிப்பா war on terror பிரிவில guantanamoவை பற்றியதத் தான் அதிகம் எதிர்பார்த்திருக்கினம். அதப்போல women rights violation பிரிவில ஆபிரிக்க பெண்கள் பற்றித்தான் அதிகம் எதிர்பார்த்திருக்கினம். எல்லாற்ற எதிர்பார்ப்பையும் நாங்கள் நிறைவேற்ற முடியாது தானே. கிடைக்கிற சின்ன விசயத்துக்குள்ளாலயும் எங்கட சனத்தின்ர பிரச்சனையை சொல்லிடலாம் எண்ட ஒரு நப்பாசைதான்.

war on terror பிரிவில தெரிவுசெய்யப்பட்ட பதாகைகள்:

http://good50x70.org/2009/gallery/war-on-terror/

women rights violation பிரிவில தெரிவுசெய்யப்பட்ட பதாகைகள்:

http://good50x70.org/2009/gallery/womens-rights-violations/

நான் போட்டிக்கு அனுப்பிவைச்ச பதாகைகள்:

poster_good50x70_1.jpg

poster_good50x70_2.jpg

poster_good50x70_3.jpg

poster_good50x70_6.jpg

poster_good50x70_4.jpg

poster_good50x70_4b.jpg

இந்த பதாகைகள சிறிலங்கா சிங்கள பேரினவாத + பயங்கரவாத போரில இறந்து போன எங்கட சனத்துக்கும், சிங்கள பயங்கரவாத அரசின்ர இனக்கருவறுப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிற சனத்துக்கும் சமர்ப்பிக்கிறன். :mellow:

வலைப்பதிவு: http://www.4th-tamil.com/blog/?p=127

Edited by இளைஞன்

நீங்கள் இங்கு போட்டிருக்கும் பதாகைகள் நேர்த்தியாக தெளிவாக கருத்தை சொல்லும்படி உருவாக்கியிருக்கிறீங்கள்.

என்ன செய்ய........... எல்லாமே guantanamo மயமாக இருக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.