Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சர்வதேச சமூகம் - வேல்ஸிலிருந்து அருஷ்

Featured Replies

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பாக உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவுக்கும் அதற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இலங்கையில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் மிகவும் தீவிரமான கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுவரும் மனித பேரழிவுகளை நிறுத்தும் முயற்சிகளுக்கு தற்போது மேற்குலகம்

செவிசாய்க்க ஆரம்பித்துள்ளது. இலங்கை விவகாரங்களுக்கு என பிரித்தானியா சிறப்பு பிரதிநிதியை இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நியமித்ததை தொடர்ந்து இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்பட்ட முறுகல் நிலை மெல்ல மெல்ல தீவிரம் பெற்று வருகின்றது.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

ஆஸ்திரியா, மெக்சிக்கோ, கொஸ்டாரிக்கா ஆகிய நாடுகளின் ஊடாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என கொண்டுவர தீர்மானித்துள்ள விவாதத்தை சீனாவும், ரஷ்யாவும் எதிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு உள்வீட்டு பிரச்சினை என சீனா தெரிவித்துள்ளது. சீனாவினதும், ரஷ்யாவினதும் இந்த நகர்வுகளுக்கு அவர்கள் எதிர்கொண்டுவரும் திபத்திய மற்றும் செச்சென்யா பிரச்சினைகள் காரணம் என்பது தெளிவானது. இருந்த போதும் தாய்வானின் மீது சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தாய்வானின் நலனுக்கு குந்தகமானது என ஏன் சீனா கருதவில்லை என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

இலங்கை தொடர்பான விவாதம் ஏனைய விவகாரங்கள் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட ஐ.நாவிற்கான பிரதிநிதி சூசன் ரைஸ் கடந்த வார இறுதிப்பகுதியில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை தொடர்ந்து சூசனின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூகோள அரசியல் நலன்கள் தொடர்பாக இந்தியாவுக்கு சார்பாக நிலையெடுத்து மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகள் தவறாகிப் போனதே தற்போதைய நிலமைக்கு காரணம் என மேற்குலகம் கருதத் தலைப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவை தமது நட்பு நாடாக பேணுவதன் மூலம் இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற அமொக்காவின் கணிப்பு தவறாகி போயுள்ளது.

இந்தியாவே தற்போது அமெரிக்காவினது பொருளாதார மற்றும் பூகோள நண்பனாக உருவெடுத்து வருகின்றது. ஆனால் அமெரிக்காவின் நகர்வுகள் தவறாகி போனதற்கு காரணம் இந்தியா தனது நாட்டு நலன்களை விட தனிநபர் நலன்களை முன்நிறுத்தியதே என பல மூத்த ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவினதும், இந்துசமுத்திர பிராந்தியத்தின் உறுதித்தன்மையை குலைத்துவிடலாம் என அமெரிக்கா அஞ்சுகின்றது. சீனாவின் வளர்ச்சியும் அமெரிக்காவையும், இந்தியாவையும் அச்சமடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் சீனா தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு மேற்குலகத்திற்கு மேலும் அச்சங்களை ஏற்படுத்தலாம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் விடயங்களில் மௌனமான இருந்த சீனா தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளமை தென்கிழக்கு ஆசியாவில் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது.

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் போரை இந்தியா வழிநடத்தி வருகின்ற போதும், சீனா படைத்துறை உதவிகளையும், நிதி உதவிகளையும் இலங்கையில் அரசிற்கு வழங்கிவருகின்றது. எவ்7 ரக தாக்குதல் விமானங்கள், ஜேவை11 ரக முப்பரிமாண ராடார்கள், பீரங்கிகள் உட்பட பெருமளவான படைத்துறை உபகரணங்களை சீனா வழங்கி வருவதுடன், இலங்கைக்கு அதிக நிதி உதவிகளை மேற்கொள்ளும் நாடுகளில் சீனாவே தற்போது முன்னிலையில் உள்ளது. அது கடந்த ஆண்டு இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

கடந்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ சீனாவின் உதவிகளுக்கு இலங்øகயின் நன்றிகளை தெரிவித்ததுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் வலுப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து – இலங்கையின் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள சீனா ஐ.நா பாதுகாப்பு சபையில் இருந்து இலங்கையை காப்பாற்ற முன்வந்துள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் காப்பாற்ற முன்வந்துள்ளது.

சீனாவினதும் இலங்கையினதும் இந்த புதிய பிணைப்புக்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் சாவாலாக உருவெடுத்துள்ளது. "அமெரிக்கா தூங்கும் சமயம் பார்த்து சீனா ஆசிய பிராந்தியத்தில் தனக்கென பல நண்பர்களை உருவாக்கி வருகின்றது" என அமெரிக்காவை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ரெய்லர் மார்ஷல் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தனது காலை உறுதியாக பதிக்கும் ஆரம்ப நடவடிக்கைகளை 2007 ஆம் ஆண்டு சீனா மேற்கொண்டிருந்தது. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் டொலர்கள் முதலீட்டில் துறைமுகம், எண்ணை சுத்திகரிப்பு ஆலை, விமானநிலையம் போன்றவற்றை நிர்மாணிக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. இதன் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பல்கள் தரித்துச் செல்லும் பாரிய துறைமுகமாக மாற்றும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.

சீனாவின் இந்த நகர்வின் நோக்கம் தெளிவானது. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பிரதேசம் சீனாவின் வர்த்தகக்கப்பல்கள் பயணிக்கும் கிழக்கு மேற்கு இந்து சமுத்திர கடற்பாதையில் இருந்து ஆறு கடல்மைல் தொலைவில் உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து சீனா கொள்வனவு செய்யும் மசகு எண்ணைகளை கொண்டு செல்லும் கப்பல்களில் 70 விகிதமானவை இந்த பாதை வழியாகவே பயணிப்பதுண்டு.

ஈரானிடம் இருந்து சீனா தனக்கு தேவையான எரிபொருட்களில் 15 விகிதங்களை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் போர் ஒன்று ஏற்படுமாக இருந்தால் தனது கப்பல் பாதைகள் தாக்கப்படுவது இலகுவானதாக இருக்கும் என்ற அச்சம் காரணமாக தனது கடற்படையினை நவீனமயப்படுத்தி வரும் சீனா துறைமுகங்களின் வசதிகளையும் தனது கடற்பாதையில் அதிகரித்து வருகின்றது. பாகிஸ்தானில் உருவாக்கியுள்ள கெடார் (கணிணூt ணிஞூ எதீச்ஞீச்ணூ) துறைமுகத்தை போன்றதே அம்பாந்தோட்டை துறைமுகம்.

சீனாவின் இந்த நகர்வுகளுக்கு மாற்றீடாக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையில் கால்பதிக்க முற்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு மருத்துவக்குழுவை புல்மோட்டைக்கு அனுப்பியுள்ள போது, அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்ற முயன்றிருந்தது. ஆனால் அது கைகூடவில்லை.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகின் கையிருப்பு பணமாக தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க டொலர் மாற்றப்பட வேண்டும் என சீனாவின் மத்திய வங்கியின் தலைவர் சோவூ சியா ஒசூவான் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்த அறிக்கையானது இரு நாடுகளுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதுடன், தற்போது சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தில் மேலும் பின்னடைவை தோற்றுவித்துள்ளது. இது அமெரிக்க டொலரின் உறுதித்தன்மை தொடர்பாக மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

போர் மற்றும் அணுவாயுத அச்சுறுத்தல்கள் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்கா தனது காலத்தை செலவிட்ட போது சீனா 21 ஆவது நுõற்றாண்டின் புதிய சக்தியாக கிழக்கு ஆசியாவில் தன்னை கட்டியெழுப்பி வந்திருந்தது. அமெரிக்காவின் நீண்டகால நண்பர்களையும் தன்பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.

சீனா தனது ஆதிக்கத்தை கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசுபிக் பிராந்தியம் என விஸ்த்தரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் முக்கிய மாற்றமாகும். பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்திரேலியா வரை அதன் உறவுகள் வலுப்பெற்று வருவதாக சீனா தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரெய்லர் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்த நாடுகள். சீனாவுக்கும் பிலிபைன்ஸ் இற்கும் இடையில் உள்ள உறவுகள் மிகவும் விரைவாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளை போல சீனா கிழக்கு ஆசிய நாடுகளுடன் தனது உறவுகளை பலப்படுத்த முனைந்து வருவதுடன் தென்கிழக்கு ஆசியாவிலும் காலுõன்றி வருகின்றது.

ஈரானிடம் இருந்து தனது எரிபொருள் தேவையில் 15 விகிதங்களை பெற்றுவரும் சீனா அதற்கு ஆதரவாக குரல்கொடுத்தும் வருகின்றது. கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் பிரசன்னம் ஜப்பான், தாய்வான் மற்றும் தென்கொரியாவை முதன்மைப்படுத்தியே அமைந்துள்ளது. சீனா அமெரிக்காவுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து வருகின்ற போதும், சூடான், மியான்மார் போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தையும், இராஜதந்திர உறவுகளையும் சீனா வலுவாக பேணிவருவது இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை தோற்றுவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் இந்த இரு நாடுகளும் மிகவும் மோசமான நிலையை கொண்டிருக்கின்றன என்பது அமெரிக்காவின் வாதம். தற்போது இந்த கூட்டணியில் இலங்கையும் இணைந்துள்ளது. ஆனால் சீனாவின் குறிக்கோள் தெளிவானது. அதாவது அமெரிக்காவின் சக்தியின் வலுவை இந்த பிராந்தியத்தில் குறைப்பதே அதன் பிரதான நோக்கம். அதனை உறுதியான வர்த்தக உடன்பாடுகள் மற்றும் மென்மையான இராஜதந்திர நகர்வுகள் மூலம் சீனா சாதிக்க முயன்று வருகின்றது.

சீனாவின் முக்கிய நகர்வுகள் மூன்று திசைகளில் உள்ளன. கிழக்காக ஜப்பான் வரையிலும், மேற்காக இந்திய உபகண்டம், தெற்காக வியட்னாம் வரையிலுமே இந்த நகர்வுகள் முனைப்பு பெற்று வருகின்றன.

சீனாவின் இந்த நோக்கங்களை புரிந்து கொண்டதனால் தான் அமெரிக்கா வியட்னாமுடன் தனது உறவுகளை வலுப்படுத்த தற்போது முயன்று வருகின்றது. வியட்னாம் படையினருக்கு ஆங்கில கல்வி வசதிகளை அது ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்திலும் தனது உதவிகளை அமெரிக்கா ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்திருந்தது.

ஆனால் தற்போது தோன்றியுள்ள பொருளாதார வீழ்ச்சியும் பல வழிகளில் உளவியல் தாக்கங்களை இந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொள்கை வகுப்பாளர்கள் அமெரிக்கா, சீனா தொடர்பான தமது பார்வைகளை மீள்பரிசீலினை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்து சமுத்திர பிராந்தியத்தை பொறுத்தவரையிலும் தற்போது இலங்கை முற்றுமுழுதாக சீனாவின் ஆளுமைக்குள் வந்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர். மியன்மார் அரசுக்கு ஆதரவாக ஐ.நா சபையில் சீனா எடுத்த நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை அது தற்போது –இலங்கை அரசுக்கு சார்பாக எடுத்து வருகின்றது.

எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துலக மட்டத்தில் இரு கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் நிலையை அடைந்துள்ளது

குறிப்பிடத்தக்கதொரு திருப்பம். மறுவளமாக பார்த்தால் எல்லா நாடுகளுடனும் நழுவும் உறவைகொண்டிருந்த இலங்கை தற்போது ஏதாவது ஒரு தரப்பின் பக்கம் சாயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்குலகத்தை பொறுத்தவரையில் இலங்கை தொடர்பாக அவர்கள் கணிப்பிட்டிருந்த வெளிவிவகார கொள்கைகள் எதிர்மறையாகி போகும் நிலையை அடைந்துள்ளன.

அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் கொள்கைகளை அனுசரித்து போனதுதான். இந்தியா தனது நாட்டின் நலனைவிட தனிநபர்களின் நலன்களை முன்நிறுத்தியே இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கைகளை வகுத்திருந்தது. இந்த கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் அது தற்போது அவர்களை ஆபத்தான கட்டத்தில் நிறுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் இலங்கை தொடர்பான விவாதங்கள் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படுவதை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் எதிர்த்திருந்தன. ஆனால் தற்போது அவர்கள் அதனை ஆதரித்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த நகர்வு இலங்கைக்கு நல்லதல்ல என பல அவதானிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை நிறுத்தும் வல்லமையை சீனாவும், ரஷ்யாவும் எதுவரை தாக்குபிடிக்கும் என்பதும் கேள்விக்குறியானதே.

தற்போதைய நிலையில் சீனாவும், ரஷ்யாவும், எனைய ஏழு நாடுகளுமே இலங்கையுடன் நேரடியாக கைகோர்த்துள்ளன. இந்த சமயத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலை தொடர்பாக கருத்தில் எடுக்குமாறு விடுதலைப்புலிகள் சீனாவிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர். சீனாவுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்தது இதுவே முதல்முறையாகும்.

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சீனா அல்லது ரஷ்யா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினாலும், அங்கத்துவ நாடுகளிடம் வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டு (கணூணிஞிஞுஞீதணூச்டூ திணிtஞு) விவாதத்தை தொடர முடியும் என்ற ஒரு மாற்று வழியும் உண்டு. இவ்வாறான ஒரு நிலைமை ஸிம்பாப்வே தொடர்பான விவாதத்தில் ஏற்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பான விவாதத்தை முன்னர் ரஷ்யா எதிர்த்திருந்த போதும் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ÷ஹால்ம்ஸ் –இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையானது கடந்த முறை அங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை விவாதிக்கப்பட்டதை ரஷ்யா எதிர்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (26) இலங்கை தொடர்பான விவாதம் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டிருந்தது. எல்லா உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைக்கலாம் (ஐணtஞுணூச்ஞிtடிதிஞு ஞீடிச்டூணிஞ்தஞு) என்ற ஒரு திட்டத்தின் அடிப்படையில் –இலங்கை தொடர்பான விவாதம் ஆராயப்பட்டிருந்தது.

பாதுகாப்பு சபை கூட்டமாக அது இருந்த போதும் பாதுகாப்பு சபை மண்டபத்தில் நடைபெறவில்லை என்பதுடன் பாதுகாப்பு சபையின் தலைவரும் அதற்கு தலைமை தாங்கவில்லை. இலங்கை விவகாரங்கள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படுவதை தீவிரமாக எதிர்த்து வந்த லிபியா வேறு வழியின்றி கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தது.

ஏறத்தாழ 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் மிகவும் மென்மையான போக்கை கடைப்பிடித்திருந்தார்.

அவர் அரசாங்கத்தை குற்றம் சுமத்த முன்வரவில்லை.

இந்த கூட்டத்தின் முடிவில் கருத்து வெளியிட்டிருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதித்துõதுவர் றோஸ்மேரி டிகார்லோ இலங்கை அரசு கனரக பீரங்கிகளை வைத்தியசாலைகளுக்கு அண்மையாக பயன்படுத்தி வருவதாககுற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பாக அனைத்துலகத்தின் நிலைமையை நோக்கும் போது சில கருத்துக்கள் தெளிவானவை. அதாவது மேற்குலகம் அரசுக்கு எதிராக அழுத்தமான கண்டனங்களை மேற்கொள்ள முன்வரவில்லை. மறுபுறம் இலங்கை ஆதரவான கூட்டணி நாடுகள் அரசுக்கு அழுத்தமான ஆதரவுகளையும் வழங்கவில்லை.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முறியடிப்பு : அமைச்சர் மஹிந்த சமரசிங்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு வானிலை அவதானிப்பு மையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்ககையில், "இலங்கையின் உண்மையான நிலவரம் குறித்தும், அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடடிக்கைகள் குறித்தும் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்கமளித்தோம்.வழமையாக ஒரு வாரகாலம் இடம்பெறும் இக்கூட்டம், இம்முறை உயர் மட்ட அமர்வுகள் காரணமாக ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. ஜெனீவா விஜயத்தின் போது அங்கு வருகை தந்த பிராந்திய, ஏனைய நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள், மனித உரிமை அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். மேற்கு பிராந்திய அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு நாம் அழைப்பு விடுத்த போதும்,அதற்கான வாய்ப்பினை அவர்கள் தரவில்லை.எனினும் டென்மார்க், சுவீடன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் நாம் கலந்துரையாடினோம். இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாக அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்.அத்துடன் ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம்" என அமைச்சர் தெரிவித்தார்.

"இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள், விவாதங்கள் மேற்கொள்ள பல அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தின. அத்துடன் இலங்கை விடயம்குறித்து மனித உரிமைகள் ஆணையகத்தில் விவாதத்திற்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எமது தோழமை நாடுகள் எனக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகள் ஆணையக தலைவருக்கு 'இது இலங்கையின் உள்விவகாரம். இலங்கை அரசாங்கம் இது குறித்து விளக்கமளிக்கத் தயாராக உள்ளது' என தெரிவித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இடமளிக்கவில்லை" எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, இடம்பெயந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் நலன் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மனித உரிமைகள் அமைச்சர், "தற்போது நலன்புரி நிலையங்கள் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை மீள்குடியேற்ற அமைச்சும், அரசாங்க அதிபரும் மேற்கொண்டு வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்காக அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.இது வழங்கப்பட்டதும் இம்மக்கள் சுதந்திரமாக நடமாடலாம்.அத்துடன் இடம்பெயர்ந்து வந்த மக்களுள் ஆதரவற்ற முதியோர்கள் மன்னாரிலுள்ள முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படவுள்ளனர்" என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் வன்னியிலுள்ள மக்கள் நலன்கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தற்போது முல்லைத்தீவிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு 56,000 பேர் வெளியேறி வருகின்றனர். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. எனினும் அனுப்பப்படும் பொருட்களுள் 50 சதவீதமானவற்றை விடுதலைப் புலிகள் எடுக்கின்றனர். எனினும் புதுமாத்தளன் பகுதியில் உள்ள மக்களும் இலங்கை மக்களே. அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கம் தொடர்ந்து அனுப்பி வைக்கும்" என அமைச்சர் பதிலளித்தார்

- வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குல நாடுகளுக்கு இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த சந்தர்ப்பமளிக்கவில்லை மகிந்த சமரசிங்க:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் ஐ.நா மனித உரிமை விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஊடாக இலங்கை தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுப்பதற்கு முயற்சித்தனர் எனவும் எனினும் தமது முயற்சியால் அது முறியடிக்கப்பட்டது என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வானிலை அவதான நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 198 நாடுகளை உள்ளடக்கியதே சர்வதேச சமூகமாகும். எனினும் சர்வதேச சமூகம் என்ற சொற்பதத்தை விளங்கிக் கொள்ளாத சிலர் மனிதாபிமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஐ.நா மனித உரிமை விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையூடாக இலங்கைக்;கெதிரான கண்டனத்தை வெளியிட சிலர் முயற்சித்தனர். இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டால் அதன் மூலம் புலிகளே பலமடைவார்கள் என்பதை தான் தெளிவுபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்கூட்டியே தாம் தயார் நிலையில் இருந்தமையினால் தமக்கு எதிராக விரோதமாக செயற்படுவதற்கு முடியவில்லை. இலங்கை, தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பேரவையின் தலைவர் விசேட கூற்றொன்றை விடுக்க வேண்டும் என்று சில நாடுகள் வலியுறுத்தின.

மனித உரிமை பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமையைக் கொண்டிருக்கின்றன பேரவையில் தலைவர் விசேட கூற்றொன்றை விடுக்கவேண்டுமாயின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பேரவை இணங்க வேண்டும். இலங்கை அந்த பேரவையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல என்றாலும் எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்தது.

அரச சார்பற்ற நிறுவனங்களும் தனிநபர்கள் சிலரும் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர். இதனால் தனக்கு பெரும் போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினேன்.

மூச்சு எடுக்க முடியாத அளவிற்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சில வேலைகளில் தனது மனித உரிமை மீறப்படுகின்றதோ? என்று தான் நினைத்ததாகவும் தங்களை பிரதிநிதிகள் சந்திப்பதற்கு முன்னர் தாங்களாகவே சென்று சந்தித்ததாகவும் அதன் மூலமாக பல்வேறு விடயங்களை தெளிவுப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது இலங்கையின் உண்மையான நிலைமை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கு பல நாட்கள் எடுத்தன.

மேற்கு வலயம் மட்டும் தங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. எனினும் மேற்கு ஐரோப்பிய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் டென்மார்க், சுவிடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மனித உரிமை பேரவையின் தலைமையை ஜுன் மாதம் பிரான்ஸ் ஏற்கவிருப்பதனால் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு முக்கியமானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாடுகளில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, அவுஸ்த்ரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கூடிய மேற்குல நாடுகள் தவிர ஏனைய அங்கத்துவ நாடுகள் அனைத்துடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கையின் நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்தியதாகவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

மாநாட்டில் வன்னி இரணுவ நடவடிக்கை தொடர்பாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் தெளிவுப்படுத்துவதற்கு மேற்குல நாடுகளில் சில தூதுவர்கள் தம்மை அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வேறு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களை சந்திக்க வேண்டியுள்ளதாக கூறி, அவர்கள் இலங்கை தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்த்து கொணடதாகவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் டென்மார்க், பிரான்ஸ், சுவிடன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இலங்கையின் நிலைமைகள் குறித்து தெளிப்படுத்த முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=7874&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.