Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசமே உடனடியாக எமது தமிழரைக் காப்பாற்று

Featured Replies

சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்களே உங்களுக்கு ஓர் அன்பான தயவுகூர்ந்த வேண்டுகோள். எமது மக்கள் பல சொல்லொணாத் துன்பச் சுமைகளோடு தாங்கமுடியாத் துன்பங்களோடு, தினமும் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடல் மெலிந்து பட்டினிச் சாவையும் தினம் வீழும் குண்டுகளின் முன்னே தமது உயிர்களையும் இழந்தவண்ணம் உள்ளனர். நேற்றுக் கூடிய சரத் பொன்சேகா தலமையிலான குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம். அழிப்பது ஒன்றே முற்றாக அழி என்று உறுதி மொழி எடுத்திருக்கின்றார்கள்.

கடைசியாக தம்மிடம் உள்ள அனைத்து வளங்களையும், அனைத்து ஆட்லெறிக் குண்டுகளையும், விமானத் தாக்குதல்களையும் அதிகரித்து மக்கள் பாதுகாப்பு வலயம் மீது முகவும் மூர்க்கத்தனமான தாக்குதல் ஒன்றினைத் தொடுப்பதற்கான அனைத்து வேலைகளும் மிகவும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது. சிங்களவர்களின் புதுவருடப் பிறப்பிற்கான ஓர் பாரிய வெற்றிச் செய்தியை அறிவிக்கவும், வர இருக்கும் தேர்தலுக்கான தமது ஆதரவை அதிகரிக்கவும் இவ்வாறான ஒரு செயலைச் செய்ய இருக்கின்றார்கள். இதனால் ஓர் குறுகிய கால எல்லைக்குள் பெருமளவான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இனம், மதம், துறந்து, உள்ள பகைமையைத் துறந்து, இருக்கும் வேற்றுக் கருத்துக்களை மறந்து, எமது ஒட்டுமொத்த 300000 மக்களையும் காப்பாற்றவேண்டிய உடனடித் தேவைக்குள் நாம் சிக்கியிருக்கின்றோம்.

சர்வதேசம் எங்கும் வாழும் உறவுகளே!

உங்கள் நாடுகளில் நீங்கள் போராட்டங்களைக் காலதாமதமின்றி முன்னெடுங்கள். ஒட்டுமொத்த நாடுகளையும் ஒரே நேரத்தில் முடக்குங்கள். ஐ.நா சபையை செயல் இழக்கச் செய்யுங்கள், போராட்டத்தை தீவிரப் படுத்துங்கள், இதன் மூலம் நாம் எமது மக்களைக் காக்கவேண்டும். உடனடியாக ஒரு வார காலத்துக்குள் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்கக் கூடியவாறு ஐ,நா சபைக்கு அழுத்தங்களைப் பிரயோகியுங்கள்.

காக்கத் தவறும் சர்வதேசம் எங்கும் எம்மைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஒலி ஒலிக்கவேண்டும். காலம் தவறாது உடனடியாக முன்னெடுங்கள் இல்லையேல் இழக்கப்படப்போவது 3இலட்சம் எமது உறவுகள்.

உங்கள் ஒவ்வொரு உறவுகளும் இழக்கப் படப் போகின்றார்கள். தமிழினம் என்றொரு இனம் அதன் அடிப்படை அழிக்கப் படப் போகின்றது. உடனே விரையுங்கள். காலம் தாழ்த்துவதனால் ஒவ்வொரு விநாடிகளும் ஒராயிரம் உயிர்கள் காவுகொள்ளப்படப் போகின்றன.

கடிதங்கள் மின்னஞ்சல்கள் எழுதப்படும்போது அவை இப்போது கவனத்தில் எடுக்கப் படுவது குறைந்து வருகின்றது. அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் வடிகட்டி பாவிக்கப்பட்டு அழிக்கப் படுகின்றன. காலதாமதமின்றிப் போராட்டங்களை முன்னெடுங்கள்

  • தொடங்கியவர்

தமிழர்களின் ஒட்டு மொத்த போராட்டத்தையும் முடக்கி, பெருமளவான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடாத்தும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது, அது தான் உண்மை... சிங்களவன் எம் புலம் பெயர் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு பழியை தமிழர்கள் மேற் போடும் பாரிய திட்டத்துடன் உள்ளான் நாமும் அவனது வலையிற் சிக்கிக் கொள்ளாமல் அனைத்து புலம்பெயர் நாடுகளையும் முடக்கவேண்டும், ஐ.நா தலையிடவேண்டும். போராட்டம் அதிகரிக்கப் படவேண்டும் அதுவும் அவதானமாக வெளிநாட்டுக் காவற்துறையினரின் பூரண ஆதரவுகளுடன் நடாத்தப் படவேண்டும், சுதந்திரமான நிறைய ஊடகங்களை உள்ளிளுத்து போராட்டம் நடாத்தப் படவேண்டும்....

பெருமளவான தமிழர்கள் கொல்லப் படப் போகின்றார்கள். இதைத் தடுத்து நிறுத்த சர்வதேச அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும், மக்களது போராட்டங்களிடையே தமிழர்களுக்கு இடையே சிங்களவர்களை விட்டு போராட்டங்களைக் குழப்ப சிங்களம் திட்டமிட்டுள்ளது. பெருமளவன சிங்களவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க திரளுகின்றார்கள். இலங்கை அரசு அதற்கான நிதியில் இருந்து போக்குவரத்துச் செல்வு வரை தான் பொறுப்பேற்று நடாத்த இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.