Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருக்கு ஆபத்து என்கிறார் திருமாவளவன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20061020004103001.jpg

தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருக்கு ஆபத்து என்கிறார் திருமாவளவன். சிந்தியுங்கள் திருமாவளவன் அவர்களே என்கிறோம் நாங்கள்.

செத்தாலும் மக்களோடு மக்களாகத்தான் சாவேனே தவிர ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது என்று சபதம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிற விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தலைவர் மேல் பாசமுள்ள திரு தொல் திருமாவளவனிற்கு ஒரு சில சிந்திக்கவேண்டிய விடயங்களை இங்கே முன்வைக்கின்றேன்.

ஈழத்தமிழரின் விடுதலைக்காக சாகும்வரை உண்ணாநோன்பிருந்தும் பல போராட்டங்களை நடாத்தியும் அரும்பாடுபட்டு வரும் திரு தொல் திருமாவளவன் அவர்கள் இன்று ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பதிலே முனைப்புடன் செயற்படும் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலில் கூட்டுச்சேர்ந்தள்ளார் என்பது ஈழத்தமிழர்களை மிகவும் வேதனைக்கூளாக்கியுள்ளது. பழநெடுமாறன், வைகோ போன்ற தமிழ் உணர்வாளர்களைப் போன்று உங்களையும் நாம் நம்பியிருந்தோம் நம்பியிருக்கின்றோம். காங்கிரஸ் கூட்டணியைவிட்டு நீங்கள் வெளியேற வேண்டும் என்பதே எமது விருப்பம்.

இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று (09.04.09) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் நீதிகட்சி தலைவர் சுப.தமிழரசன், கவிஞர் அறிவுமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்ற செய்தியை நாம் பத்திரிகைகளில் படிக்கும்போது எம் மனங்களைக் குளிர வைக்கின்றதுதான் ஆனாலும்….

தொல் திருமாவளவன் அவர்களே! ஈழத்தமிழர்களை கொன்றொழிப்பதில் ஆக்ரோசாமகச் செயற்படுவதே இந்திய அரசுதான் என்பதை மறந்து விடாதீர்கள். ஏம்மக்கள் இன்று தமது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலங்களையும் வீடு வாசல்களையும் இழந்து உணவு, உடை, உறக்கமின்றி காடுகளிலும் மேடுகளிலும் தற்காலிக கூடாரங்களில் வாழ்வதற்குக் காரணமே உங்கள் கூட்டணிக்கட்சியின் தலைவி தான் என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்பகின்றேன்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதும் அப்பாவி தமிழர்கள் மீதும் சிங்கள படை கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகள் சரணடையாவிட்டால் ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்தை அழிப்பேன் என அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கொக்கரித்துள்ளார். இதுபோன்று பேசுவதற்கு அவன் யாருக்கும் அஞ்சவில்லை என வீர முழக்கமிடும் உங்களுக்குத் தெரியுமா?

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதும் அப்பாவி தமிழர்கள் மீதும் சிங்கள படையும் இந்தியப்படைகளுமாக ஒன்று சேர்ந்து கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று. புலிகள் சரணடையாவிட்டால் ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்தை அழிப்பேன் என அந்நாட்டு அதிபர் ராஜபக்சே இந்திய அரசின் துணையுடன் கொக்கரித்துள்ளார். இதுபோன்று பேசுவதற்கு அவன் யாருக்கும் அஞ்சவில்லை காரணம் இந்திய அரசும் அவர்களது சாத்தான் படைகளும் ராஜபக்சவுடன் களத்தில் நிற்கின்றனர். இது தான் இன்றைய களத்தில் நடைபெறும் வெளியில் வராத உண்மைகள்.

ஹீரோசிமா, நாகசாகி ஆகிய இடங்களில் விசவாயு குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தை உலகம் இன்றும் கண்டித்து வருகிறது அதன் பின்னர்தான் அணு ஆயுத தயாரிப்பு, அணுசக்தி ஒப்பந்தம் போன்றவற்றில் முறையான வரையறைகள் தேவை என விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்த ராஜபக்சே தயாராகி வருகிறார் என்று கூறுகின்றீர்களே!

இந்தத் தயார்ப்படுத்தலுக்கு சோன்யா காந்தியின் தலைமையில் உள்ள காங்கிரஸ் அரசே முழுக்கமுழுக்கக் காரணம் என்பதை நீங்கள் அறிந்தும் அறியாதவர் போல் இருப்பதன் காரணம் என்ன? நம் விடுதலை வீர்களை வேரோடு அழிப்பதெனக் கங்கணங்கட்டிக்கொண்டு இராணுத்தளபாடங்களையும் இராணுவயுக்திகளையும் களத்தில் நேரடியான இராணுவ உதவிகளையும் செய்து வருகின்றனர். புpரான்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றின்படி இலங்கைப்படையின் இரண்டு பிரிவில் இந்திய இராணுவத்தினர் உள்ளதாக தற்பொழுது அம்பலமாகியுள்ளது. இதற்குச் சான்றாக புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் உயிரிழந்த சுமார் 125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரஙகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளனவே இதற்கு உங்கள் பதில் என்ன?

சர்வதேச நாடுகள் தடை செய்துள்ள கிளஸ்டர் பாம் (கொத்துக் குண்டுகள்) வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற தாக்குதல் நடத்தினால் உடலில் காயம் ஏற்படாது, நச்சு வாயு பரவி உடலில் படர்ந்து தோல் உரிந்து ரத்த வாந்தி எடுத்து சாக நேரிடும். இதுபோன்று சமீபத்தில் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஏராளமான போராளிகள் கரிக்கட்டையாகி உயிர் இழந்துள்ளனர் என கூறுகின்றீர்களே!

இதற்கெல்லாம் யார் காரணம்? இலங்கை இந்திய கூட்டு இராணுவத்தால் நடாத்தப்பட்ட விச வாயுக்குண்டுத்தாக்குதல்தான

  • கருத்துக்கள உறவுகள்

திரு தொல்.திருமாவளவன் அவர்கள் அரசியலுக்காக வளையமாட்டார் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானுமொருவன். நினைத்துப்பார்க்கிறேன். பெல்யியத்தில் பொங்கு தமிழ் நிகழ்வு. யார் பேசவருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம்................. திரு தொல்.திருமாவளவன் அவர்கள் மேடைக்கு வருகிறார் என்றதும் கரகோசத்தினால் அதிர்கிறது.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் அவரது உரையை செவிமடுக்கின்றனர். அந்த உரையை இப்போது கேட்டாலும்............ எமது தேசியத் தலைவரவர்களை அசைக்க முடியாது என்று தமிழீழ மக்கள் முன்பாகப் பிரகடணம் செய்துவிட்டு இன்று அவருக்கு ஆபத்தெனவும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதுபோலவும் கூறுவதுதான் வேதனையளிக்கிறது. ஏன் எலலோரும் சராசரி அரசியல்வாதிகளாகி விடுகிறார்களென்பதே தமிழ் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. உண்மையிலேயே ஒரு உள்ளார்ந்த தமிழ்த்தேசிய உணர்வுள்ள கட்சிகளின் ஒன்றிணைவில் தேர்தலை தமிழகம் எதிர்கொள்ளக் கூடிய சூழலும் மக்களின் எதிர்பார்ப்பும் இருந்தது என்றால் மறுக்க முடியாது. ஆனால் அதனை எந்தக் கட்சியோ அமைப்போ சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதே வேதனையானது. எல்லோரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் முத்துக்குமார் போன்ற தியாகிகளைக் கொல்லாதிருப்பது நன்றல்லவா? நாங்கள் சாகிறோம் ஈழத்தமிழனாகப் பிறந்ததனால். நீங்கள் எதற்காக ஓட்டை நிறைந்த ஓட்டு அரசியலை துறக்க வேண்டும். ஆனால் எல்லா விடயங்களும் ஒரு தனி மனிதனின் துன்பங்களின் போது உறவுகள் யார்? நண்பர்கள் யார்? எனப் புரிந்துவிடும் என்பது, அரசியலுக்கும் பொருந்துகிறது.

எதிரிகளைவிடத் துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பது தமிழினத்தின் பட்டறிவு. இங்கு எமக்கு மிகப் பெரும் துரோக்த்தைப் புரிந்தவர்களில் முதலிடம் கருணாவுக்கல்ல. அது சோனியாவுக்கேதான். தான் விதவையென்பதற்காக பல ஆயிரம் பெண்களை விதைவைகள் ஆக்கித், தனது கணவனின் அழிப்புப் பணியைத் தொடர்வதொன்றே சான்றாகும். தனது படைகளோடு உயிர்கொல்லி நச்சாயுதங்களை ஏவித் தமிழினத்தைத் துடைத்தழிக்கும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசின் கொடுமையை தமிழினமோ வரலாறோ மறக்கப் போவதில்லை. அந்த வரலாற்றில் சில கோமாளிகளும் இடம்பெறுவார்கள் என்பது உறுதி. தமிழினத்தின் மனவுறுதியை எந்த வல்லாதிக்கச் சக்திகளலும் உடைத்தெறிய முடியாதென்பதை உலகத் தமிழினம் உறுதிசெய்யும். எம் தலைவன் சந்திக்காத சோதனைகளா?

இன்றை எமது அவலத்துக்குக் காரணமான மிகப் பெரும் துரோகக் கும்பலான காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தபோது எம்மால் நம்பமுடியவில்லை. சோனியாவின் செல்ல "மாமா"வான கருணாநிதி நினைத்திருந்தால் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் எமது முகத்தில் தனது வார்த்தையாடல்களால் புள்ளியைப் போட்டுவிட்டு, தமிழினத்தின் முதுகில் குத்திவிட்டார். முதுகில் குத்தியதோடு நில்லாது எமது தலைவனை நிந்திக்கும் விதமான கருத்துகளை பதிவது காழ்ப்புணர்வின் வெளிப்பாடே. அந்தக் கருத்தை அடியொற்றியதாகத் தாங்களும் உயிராபத்துப் பற்றிக் கூறுவதானது ஏற்புடையதல்ல என்பதே எனது கருத்தாக உள்ளது. புரட்சிகரமான அரசியல் சிந்தனை கொண்ட அமைப்பொன்றின் தலைவனென்ற வகையிலே கட்சிகளுள் சங்கமித்து அமிழ்ந்துவிடாது புரட்சிகரச் சக்திகளை ஒன்றிணைத்து ஓர் புதிய தமிழகத்தை மலரச்செய்ய வேண்டிய பெரும் வரலாற்றுக் கடமையில் இருந்து வழுவுதல் என்பது உழைக்கும் மக்களான தலித்துகளுக்குச் செய்யும் துரோகமாகவே பார்க்க முடியும்

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.