Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரசின் தேசபக்தி வியாபாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசின் தேசபக்தி வியாபாரம்

யோகி

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியோட நேரடி பேரன் ராஜீவ்காந்தியாகட்டும் நேரடிப் பேத்தி சோனியா காந்தியாகட்டும் இந்த யோக்கிய

சிகாமணிகளை அசிங்கப்படுத்தி இந்த தமிழ்நாட்டு சனங்க பன்ற சேட்டை தாங்க முடியல. அதனாலதான் வெங்கலபாலு கொதிச்சப் போயி இனியும்

நாங்க பொறுக்க மாட்டோம்ன்னு கையை நீட்டி பேட்டியும் கொடுத்திருக்காரு. அப்படி என்னதானே பண்ணிரு வாருன்னு தெரியலை. தமிழ்நாட்டு

சனங்களே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. அவருடைய ஞானக்கண்ணால எரிச்சாலும் எரிச்சிடுவாரு.

இந்த அல்லக் கைகளை பத்திப் பேசி ஏன் பெரிசு பண்ணணும்னு பேசாம விட்டா இதுக பண்ணுற அலுச்சாட்டியம் தாங்க முடியலை. அதனாலதான்

நாமெல்லாம் தொலைஞ்சி போயிட்டாருன்னு நெனச்சிருந்த அந்த பாலசுப்பிரமணியன் கூட நான் உசுரோடதான் இருக்கேன்னு நிரூபிக்க பிரபாகரன்

சர்வாதிகாரின்னு உளறியிருக்கார். எனவே நாம இந்த உத்தம புத்திரன், பத்தினிகளையும் பத்தி கொஞ்சம் பேசியாகவேண்டியிருக்கு. முதல்ல

காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஏன்னா, அடுத்தவன் டிரவுசரிலிருந்து அடுத்த வீட்டு விவகாரத்து வரை வாசன்

கூட்டணி, ஜெயந்தியக்கா கூட்டணி, எழவு கூட்டணின்னு தனித்தனியா இருந்தவங்களை ஒன்னாக்குனது இந்த ஈழத் தமிழர்கள்தான்.

சரி விஷயத்துக்கு வருவோம். மாங்கொல்லையில நடந்த “இலங்கைப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலை” என்ற பொதுக்கூட்டத்தில் நம்ம

சுத்தத் தமிழன் முழங்குன முழக்கங்களுக்கு விளக்கம் கொடுத்தே ஆகணும். அதாங்க எந்த எடத்துக்கு போனாலும் வேட்டி, சட்டைன்னு பளிச்சுன்னு

காட்சி தரும் நம்ம உள்துறை மந்திரி பழனியப்பன் சிதம்பரம் பத்தி கொஞ்சம் பேசியாகணும். இவரு நிதித்துறையில கிழிச்ச கிழி பத்தாதுன்னு

உள்துறைக்கு மாத்தியிருக்காங்க. அவரு சொல்றாரு புலிகள் ஆயுதத்தை கீழே போட்டுட்டு பேச்சுக்கு வரவேண்டும் என்கிறார். ஒரு படி மேல போயி

போராளிகளின் ஆதரவாளர்களைப் பார்த்து கேள்வியையும் கேட்டார். ஒரு தரப்பு காகிதத்துடன் பேச்சு வார்த்தைக்கு வரும்போது மறு தரப்பு

ஆயுதத்துடன் வந்தால் எப்படி?ன்று கேள்வியும் கேட்டார். ஒன்னே ஒன்னு தெரியுது. இவரு ஒட்டு மொத்தமா செய்தித்தாளு படிக்கறதே இல்ல போல.

தமிழ் நாடு சட்ட மன்றத்தில் புலிகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்ட மூன்றே மணி

நேரத்தில் நாங்கள் போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று விடுத்லைப் புலிகள் அறிவித்தனர்.

ஆனால் ராஜபக்சேவின் அரசாங்கமோ போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை

என்றது. கிளஸ்டர் குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக தமிழர்களை கூண்டோடு

அழித்துக் கொண்டு இருக்கிறது. இதுபற்றி இந்திய அரசு ஒரு வார்த்தை பேசவில்லை.

ராஜபக்சே அரசாங்கத்திற்கு ஆயுதங்களையும் தொழில்நுட்ப உதவிகளையும், பண

உதவிகளையும் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. வெளியுறவுத் துறை மந்திரி

பிரணாப் முகர்ஜியே இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தம் செய்ய இந்தியாவால்

வலியுறுத்த முடியாது என்று திட்டவட்டமாக பாராளுமன்றத்தில் அறிக்கையே

சமர்ப்பித்துவிட்டார். இந்த விஷயம் இந்தியாவில் யாரைக் கேட்டாலும் தெரியும்;

ஆனால் மெத்தப்படிச்ச மேதாவியும் சிவகங்கை சின்னப் பையனுமான (நன்றி. கலைஞர்)

இந்த உள்துறை மந்திரி பழனியப்பன் சிதம்பரத்துக்கு மட்டும் தெரியலை.

சரி புது வரலாறுதான் இப்படியிருக்குன்னா, பழைய ஒப்பந்தங்களையெல்லாம் மீறுனது யாருன்னு கூட இந்த சிவகங்கை சின்னப்பையனுக்குத்

தெரியலை. நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதலில் தாக்குதல் நடத்துனது யாருன்னு கொஞ்சம் விவரமா நம்ம சேட்டன்

அந்தோணிகிட்ட கேளுங்க. ஏன்னா நீங்க நிதியமைச்சரா இருந்தப்ப அவர் கொடுத்த ஆயுதத் தாலதான் ராஜபக்சே அரசு முதல்ல அந்த அமைதி ஒப்பந்

தத்தை மீறினார்கள் என்பது உலகம் அறிஞ்ச விஷயம்.

அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன், பாலகுமாரன் இவர்களெல்லாம் இப்ப எங்கிருக்காங்க அப்படின்னு மரியதைக்குரிய உள்துறை அமைச்சர்

அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார். நீங்கள் 1987-ல் ஒப்பந்தம் போட்ட போது இவர்கள் உயிரோடு இல்லையா? அப்படி இருந்தார்கள் என்றால்

நீங்கள் ஏன் பேச்சுவார்த்தைக்கு அவர்களைக் கூப்பிடவில்லை. அப்போது உங்கள் கண்ணுக்கு ஜனநாயகவாதியாகத் தெரிந்த பிரபாகரன் இப்போது

மட்டும் ஏன் சர்வாதிகாரியாகத் தெரிகிறார். உங்ககிட்ட இருக்கிற ‘ஜனநாயகத்தை’ உங்க தொகுதியில இருக்கிற சுதர்சன் நாச்சியப்பனிடம்

கேட்டாத்தான் தெரியும்.

ஒப்பத்தத்துல கையெழுத்துப் போடாம யாரோ போட்ட ஒப்பந்தத்திற்கு, பரவாயில்லை. இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தந்தானே, அது கண்டிப்பா

நமக்கு உதவி செய்யும் நோக்கத்தில்தான் இருக்கும் என்று ஈழத் தமிழர்கள் பெருந்தன்மையா ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு பலிகடாவாக

பல்லாயிரக் கணக்கான மக்களை அமைதிப்படையை அனுப்பிக் கொன்னீங்க. நீங்க ஜனநாயகத்தைப் பத்திப் பேசறதுக்கு கொஞ்சம்கூட அருகதையே

இல்லை.

இறுதியா நம்ம உள்துறை அமைச்சர் முடிக்கும் போது நான் எப்போதும் தமிழர்களுக்காக தமிழனாகவே வாழுகிறேன் என்கிறார். இவர் லட்சணத்தை

இவர் கட்டிக்கிட்டு வந்த திருவாளர் மனைவி காட்டுன தாய் மொழிப்பற்றைத்தான் பார்த்தோமே. தமிழக அரசு தாய்மொழி வழிக் கல்வி சட்டம்

கொண்டு வந்தபோது அதனை எதிர்த்து, தாய் மொழி வழிக் கல்விச் சட்டம் செல்லாது என்று உச்சநீதி மன்றம் வரை சென்று ஆணையை வாங்கியவர்

அந்த சுத்தத் தமிழச்சி தாங்கிறத நம்ம உள்துறை மறந்திருப்பார் போல.

அடுத்து இன்னொரு தமிழன் அசன்அலி பண்ற அழிச்சாட்டியம் பற்றிப் பார்ப்போம். நம்ம அசன் அலி தொகுதி பக்கமே வரலைன்னு அந்த தொகுதி

மக்கள் செருப்பையும், வெளக்க மாத்தையும் தூக்காத குறையா திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொகுதி வேலையை விட்டுட்டு நம்மாளு

என்ன வேலைய பன்றார்னு பார்த்தா அவர் கூடப் பொறக்காத சகோதரன் ராஜபக்சேவுக்கும், அம்சாவுக்கும் தொடர்ந்து பாராட்டுக் கடிதம்

எழுதிக்கிட்டிருக்காரு. இவர் சொல்றாரு, நான் ஏன் புலிகளை எதிர்க்கிறேன் என்றால் அவர்கள் இஸ்லாமியர்களை கொன்றார்கள் என்கிறார். இவர்

இஸ்லாமிய மக்கள் மீது காட்டுற பாசத்தைப் பார்த்தால் நமக்கே புல்லரிக்குதுடா சாமி. தினமலர்ல புலிகள்தான் இஸ்லாமியர்களை கொல்லச்

சொன்னாங்கன்னு கருணா பேட்டி கொடுத்த போது வரிஞ்சி கட்டிட்டு தினமலரின் இஸ்லாமிய சேவைக்கு வாழ்த்து சொன்னவருதான் நம்ம

அண்ணன் அசன் அலி. ஒருபடி மேல போயி தினமலருடைய நடுநிலைமையை பாராட்டுனாரு. (ஆடு நனையுதுன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையா,

தினமலரு இலங்கையில இஸ்லாமியருங்க சாகுறாங்கன்னு கொட்டை எழுத்துல தலைப்புச் செய்தி போட்டுச்சி. ஆனா பாலஸ்தீனத்துல இஸ்லாமிய

தீவிரவாதிகள் மீது இசுரேல் தாக்குதல்னு சந்தோஷப்பட்டுச்சி.) இந்த தினமலத்தத்தான் நம்ம அண்ணாத்த பாராட்டுறாரு.

அண்ணனோட இஸ்ஸாமிய பாசத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொல்வதற்கு காரணமாயிருந்த

கொலைகாரன் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தப்ப அவனோட விருந்து சாப்பிட்டுட்டு அவனை வாழ்த்திவிட்டு வந்திருக்கிறாரு. அதையும்

வெக்கமில்லாம குமுதத்துல பேட்டி வேறே கொடுக்குறாரு. நம்ம ஊரு முஸ்லீம்கள் எல்லாம் குமுதம் மாதிரி கழிசடை பத்திரிக்கைகளை யெல்லாம்

படிப்பதில்லை அதனால இதுல சொன்னா பிரச்சனை வராதுன்னு நெனைச்சாரோ என்னமோ தெரியலை. ஆனா உண்மையான முஸ்லீம் யாராவது

கொலைகாரன் மோடியை இவரு சந்திச்சதை படிச்சிட்டு மோடிக்கு பதிலா இவருக்கு வேட்டு வெச்சாலும் வெச்சிரு வாங்க. எதுக்கும் பாய்

ஜாக்கிரதையா இருக்கட்டும்.

நம்ம ஞான சூனியம் (ஞானசேகரன்) கேக்குது இங்கே இவ்வளவு பிரச்சனை இருக்கறப்ப எல்லாரும் ஏன் இலங்கை பிரச்சனை மட்டும் பேசறீங்க?

நாம எப்படி அடுத்த நாட்டுக்குள்ள தலையிட முடியும்னு கேள்வி கேக்குது. அவரு ஜெயிச்ச வேலூர் தொகுதியை போய்ப் பார்த்தாத்தான் லட்சணம்

தெரியுது. சும்மா சிங்கப்பூருக்கு நிகரா தொகுதியை மாத்திப்புட்டார் மாத்தி நம்ம ஞானம். அடிப்படை வசதியே இல்லாம அல்லல் படற மக்களைக்

கவனிக்காம அவர் பாசையில கேள்வி கேட்டா இந்த ஞானத்துக்கு ஏன் இந்த இலங்கை பிரச்சனை? அது சரி அடுத்த நாட்டு பிரச்சனைக்குள்ள நாம

தலையிட முடியாதுங்கறது உண்மைதான். அடுத்த நாட்டுக்கு ‘அமைதிப்படை’யை மட்டும் அனுப்பலாமா? தொகுதி மக்கள் பிரச்சனையை சொல்ல

வந்தா, பிரச்சனையை தீர்க்கறதா சொல்லி தன்னோட கார்ல ஏத்திக்கிட்டு இவரு ஊர் சுத்தறதுக் கெல்லாம் சேத்து பல ஆயிரத்துக்குப் பெட்ரோல்

போட்டுட்டு அதுக்கான பில்லை அப்பாவி ஏழை மக்கள் தலையில கட்டுற இந்த ஞான சூனியம் வழக்கம் போல கொஞ்சம் ஓவராத்தான் பேசறாரு.

அடுத்து, சொர்ணாக்கா (யசோதா) சட்ட மன்றத்துல குதிச்ச குதியப் பார்த்தப்ப உள்ள இருந்தவர்களுக் கெல்லாம் டங்குவார் அந்து போச்சி. பிரபாகரன்

தீவிரவாதி, பிரபாகரன் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி, அவரப் புடிச்சா இந்தியாவுக்கு கொண்டு வரணும்னு நம்ம அக்காவும் அந்த அசட்டுப்

பேர்வழி சுந்தரமும் பண்ணின அழிச்சாட்டியம் தாங்க முடியலை. நமக்கொரு சந்தேகம். ஏறிவந்த ஆட்டோவுக்கு கட்டணம் கேட்ட அப்பாவித் தமிழன

சுட்டுக் கொன்னுட்டு இலங்கைக்கு ஓடிப்போன டக்ளஸ் தேவானந்தா கூட இவங்க தலைவி ‘அன்னை’ சோனியாவும், இவங்க பிரதமர் மன்மோகன்

சிங்கும் எப்படி உக்காந்து போட்டோ எடுத்துக்கறாங்க? அதெல்லாம் இந்த அசடுகளுக்குத் தெரியலையா? குற்றம் நிரூபிக்கப்படாம குற்றவாளின்னு

குற்றம் சாட்டப்பட்டிருக்கிற ஒரே காரணத்துக்காக தேடப்படும் குற்றவாளின்னு அறிவிச் சிருக்கிற அவரை கொண்டு வரணும்னு கேக்கறாங்க. நமக்கு

ஒண்ணே ஒன்னு உறுத்துது. சொர்ணக்கா கொலைக் குற்றம், பாலியல் வழக்குகள்ல சிக்கி குற்றவாளியாக இருக்கிற அக்யூஸ்ட் நெம்பர் 1-னான

சுப்பிரமணி என்கிற காஞ்சி சங்கராச்சாரி கிட்ட ‘ஆசி’ வாங்கினதெல்லாம் வெளியே சொன்னா கேவலமா தெரியலையா? அத வெக்கமில்லாம

சொல்லிட்டுத் திரியுது

“வாத்தியார் மகன் மக்கு, டாக்டர் மகன் நோயாளி”ன்னு நம்ம சனங்க சொல்ற பழமொழி. இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ! ‘நான்

பெரியாரின் பேரன்’னு பீத்திக்கிட்டுத் திரியற நம்ம ஈ.வி.கே.எஸ்.க்குப் பொருந்தும். நான் ஜெயந்தி நடராஜனை காலேஜ் படிக்கும் போது சைட்

அடிச்சேன் அப்படின்னு முந்தி பேட்டிக் கொடுத்துக் கிட்டிருந்த மாலை நேரத்து இளங்கோவன், இப்ப எல்லை மீறி பேசறாரு. அவரு சொல்றாரு,

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஜனநாயகம் இல்லைன்னு ஜனநாயகத்தின் பேரால் இந்த காங்கிரஸ் கொள்ளை கூட்டணி தமிழ்நாட்டுல கட்சி

நடத்துற கூத்தத்தான் தினமும் பார்க்கிறோமே. கட்சிக்குள்ள இருக்கிற ஜனநாயகத்தைப் பார்த்தா ஊரே சிரிக்குது. இந்த அசடுக உலக

சனநாயகத்தைப் பத்திப் பேசுது.

அடுத்து இன்னொரு தமிழன் குமரி அனந்தன் பத்திப் பேசியாகணும். இந்த குமரிஅனந்தன், இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்

கைது செய்ய வேண்டும் அப்படின்னு திருவாயை மலர்ந்திருக்காரு. தான் பெத்த மகளை பி.ஜே.பி.யில சேத்துட்டு இவரு இங்க பதவிய

அனுபவிச்சிட்டு இருக்காரு. அந்தப் பதவிக்குக்கூட நேர்மையா இல்லை இவரு. பொதுவா தன்னோட கடையில இருக்கிற பொருளைப் பத்தி மிக

உயர்வா பேசறதுதான் வியாபாரியோட வழக்கம். ஆனா இவரோ தான் தலைவர் பதவி வகிக்கிற பனை வாரியத் துறையோட வளர்ச்சிக்கு மாறா, கள்

உடம்புக்குக் கெடுதி. கள்ளு இறக்குவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது என்று நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தவர். இதப்பத்தி யாராவது கேட்டா,

கள் இறக்குவது காந்தியோட கொள்கைக்கு விரோதமானதுன்னு தத்துவம் பேசறாரு. காந்தி, காமராஜர்னு கட்சி நடத்தி தொண்டர்கள்கிட்ட வசூல்

பண்ணின காசில சொந்தப் பேர்ல கட்டடம் வாங்கி அனுபவிச்சிட்டு இருக்கிற இந்த ‘யோக்கியவான்’ செத்துப்போன காந்தியை ஏன் இப்படி

இம்சிக்கிறார்னு தெரியலை. ஊர்ப்பக்கம் பாத்து போகச் சொல்லுங்க. இல்லைன்னா பனையேறும் தொழிலாளி இவர பொலி போட்டாலும்

போட்டுருவாங்க, ஜாக்கிரதை.

நம்ம வெங்கல பாலுவப் பத்தி சொல்லாம விட்டா நான் வெங்கல பாலு கோஷ்டின்னு இளங்கோவன் கோஷ்டி உண்ணாவிரதம் நடத்திரும். அதனால

அந்த கஷ்ட காலத்தை நாம ஏன் தேவையில்லாம இளங்கோவனுக்குக் கொடுக்கணும். நம்ம அண்ணன் சொல்றாரு, “ஈழத் தமிழர்கள் உயிரோடு

இருக்காங்கன்னா அதுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்”னு சொல்றாரு. அதான் நம்ம அமைதிப்படைங்கற பேர்ல போயி பண்ணுன

அழிச்சாட்டியங்கள இந்த ஒலகமே அறிஞ்சிச்சே. அத நான் வேற சொல்லணுமா?

இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13-வது விதிய அமல் படுத்தணும்னு இந்த வெங்கலம் சொல்றாரு.

இந்த ஒப்பந்தம் இலங்கையின் இறையாண்மைக்கும் மக்களுக்கும் எதிரானதுன்னு இலங்கையின் உச்ச நீதி மன்றமே இனவெறியோட

சொல்லியிருக்கு. தங்கபாலண்ணே சத்தமா சொல்லிடாதிங்க ‘கண்டம்ட் ஆப் கோட்டு’ன்னு ராஜ பக்சே உள்ள புடிச்சுப் போட்டுருவான். அப்புறம்

வாசன் கோஷ்டி, பாலு கோஷ்டி, ஜெயந்தியக்கா கோஷ்டி, சொர்ண (யசோதா)க்கா கோஷ்டின்னு உண்ணாவிரதமும் உண்ணும் விரதமும் மாத்தி

மாத்தி நடத்தினாலும் ஒண்ணுத்துக்கும் உதவாது. கொஞ்சம் அடக்கி வாசியுங்க, எல்லாம் உங்க நன்மைக்குத்தான்.

இன்னும் நெறைய பேரு இதுல விடுபட்டுப் போச்சி. பலநூறு பேரு தமிழ்நாட்டுல சாகறதுக்குக் காரணமா இருந்த பக்தவச்சலம் பேத்தி ஜெயந்தி,

அப்புறம் சுதர்சனம் நைனா, அப்புறம் தொடை நடுங்கி கராத்தே தியாகராஜன் இப்படின்னு நெறைய பேரு விடுபட்டுப் போயிட்டாங்க. எல்லா

காங்கிரஸ் தியாகிகளுக்கும் சேத்து பதில் சொல்றோம். இந்திரா காந்தி இறந்ததற்கு பதிலடியா டெல்லியில மூவாயிரம் சீக்கியர்கள்

கொல்லப்பட்டாங்க. அப்ப பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, ராஜீவ் காந்தி சொன்னாரு, “ஒரு பெரிய ஆலமரம் விழுகறப்போ சின்னச் சின்ன

அதிர்வுகள் இருக்கும்”ன்னு திமிரா பதில் சொன்னார். பல்லாயிரக் கணக்கான உயிர்களை ஈழத்துல அமைதிப்படை காவு வாங்கிச்சி. ராஜீவ் காந்தி

சொன்ன வசனத்தை ஈழத் தமிழர்கள் பதிலுக்குச் சொல்றதுக்கு பதிலா நீங்க மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்ன்னு சொல்லிட்டுத்

திரியறீங்க.

எது எப்படியோ பார்லிமெண்டுத் தேர்தல் வருது ஓட்டுக் கேட்க எங்க தெருவுக்கு நீங்க வந்துதான் ஆகணும். அப்ப எங்க வீடுகள்ல வெளக்கமாரும்

பிஞ்ச செருப்பும் தயாரா இருக்கும். அன்னிக்கு நீங்க பேசுன எல்லாத்துக்கும் கணக்குத் தீர்ப்போம். டில்லிக்கும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் இனி

நீங்க போகவேண்டிய வேலையே வராது.

தூ... மானங்கெட்ட காங்கிரஸ்காரங்களே... 

--

அன்பும் ,பகுத்தறிவுடனும்.

மகிழ்நன்.

+919769137032

தாராவி, மும்பை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.