Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்”

Featured Replies

ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ‘எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்’ என்று மார்தட்டும் ‘இந்து’ நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

1984 ஜூலை 24 ஆம் தேதி ‘இந்து’ நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.

“சென்னை-ஜூலை 13 - ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்’ வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் “வீடியோ கேசட்” மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.”

-என்று செய்தி வெளியிட்டது ‘இந்து’ ஏடு.

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான“உண்மைகளை” வெளியிட்ட “தரம் நிறைந்த” ‘இந்து’ பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, ‘மரணச் செய்தி’ வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, “இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்” - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான ‘கெடு’வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் ‘புளோட்’ இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் ‘இந்து’ ஏட்டின் வழியாக பிரபாகரன் “கொல்லப்பட்டார்”.

“இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!”

-என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது ‘Pirabhakaran Phenomenon’என்ற நூலில்.

பிரபாகரனின் இரண்டாவது “மரணம்”

1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை “மரணமடையச்” செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை‘மரணமடைய’ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

கொழும்பிலிருந்து வெளிவரும், ‘அய்லேன்ட்’ நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ‘ஏ.எஃப்.பி.’என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

“இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.”

“ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்”.

“சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.”

“இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்”

-இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் ‘இரண்டாவது மரணம்’ பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

“விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலி

  • தொடங்கியவர்

இந்த கட்டுரையை படித்தாலே புரியும். சிங்களவனும் இந்திய உளவுத்துறையும் எந்த அளவுக்கு கட்டுக்கதைகளை உண்மைபோல புனையும் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே பலமுறை தனது மரணச்செய்தியை கேட்டவர் தலைவர் பிரபாகரன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.