Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரும்புலிகளின் வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

karumpuli.jpg

'ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.

இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.

வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.

கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.

இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.

இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற 'எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது.

இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.

இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார்.

இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள்.

18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள்.

இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே.

ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது.

விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000.04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25.04.2001இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடுகைச்சாத்திடப்பட்டத

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரரே ஈழம் தந்த உயிரே ............

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மேஜர் ஆதித்தன்

majaathiththan2.png

majaathiththan.jpg

ஆண்டு 1983, யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இரு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.

என்ர உயிர் போனாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கையாச்சும் ஓடித் தப்புங்கோ' பிள்ளைகளைப் பார்த்துக் கெஞ்சுகிறாள்.

பருந்துகளிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் பரிதவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் இரு குஞ்சுகளில் ஒன்றுதான் பின்னாளில் கரும்புலி மேஜர் ஆதித்தன். சின்னவயதில் இருந்தே வயதுக்குமீறிய பொறுப்புக்களையும், அவனது அளவைவிட பெரிய அளவில் துன்பங்களையும், துயரங்களையும் தன் தோள்களில் தாங்கி வளர்ந்தவன்தான் கரும்புலி மேஜர் ஆதித்தன். இவனைப் பற்றிச் சொல்லும்பொழுது வார்த்தைகள்கூட ஈரமாகும்.

சின்ன வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்துவிட்டான். உடலில் வலுவற்ற நிலையிலும் பிள்ளைகளுக்காக இயந்திரமாய் எஸ்ரேட்டில் கூலி வேலை செய்கிறாள் தாய். தமையன் ஒருவன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். சின்னண்ணனும் இவனைப் போலவே பாடசாலைக்குச் செல்லும் சிறுவன். இந்த நிலையில் நோயின் பிடி இறுக்கியதால் படுக்கையில் விழுந்துவிடுகிறாள் தாய். தங்களைக் காத்த தாயைக் காக்க இந்தச் சிறுவர்களால் என்ன செய்யமுடியும்? அண்ணனும் தம்பியும் சிந்திக்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். அண்ணன் எப்படியோ எங்கோ ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்துகொண்டான். இவனும் கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். நாட்கள் கழிகின்றன.

தாயின் நினைவுடனும், நெஞ்சு நிறையக் கனத்த சுமையுடனும் பொழுதைக் கழிக்கும் சுதாகரனுக்கு (ஆதித்தனுக்கு) அன்று ஒரு புதிய திருப்புமுனையான நாள். வேலை முடிந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கின்றார

Edited by nunavilan

கரும்புலிகள் தினம்

தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

july5m.jpg

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் தற்கொலைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.

விடுதலைப்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதல் 1987 யூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது.

கரும்புலி கப்டன் மில்லர்

முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது !

05-07-1987

capmiller.jpg

Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.

இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.

ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.

மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.

வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.

பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.

திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.

வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.

சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்

கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான்.

பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.

மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.

தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.

கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.

அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.

பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள்.

மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.

முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன.

தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது.

கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது.

அதைக் கேட்ட மில்லர் 'பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான்.

மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.

மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான்.

கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.

மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.

வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது.

மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..

வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இ;டத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.

தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள்.

இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.

மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்

Edited by குட்டி

மேஜர் கேடில்ஸ் (மகாலிங்கம் திலீபன்)

கண்டாவளை

14.05.1966 - 14.02.1987

majorkedills.jpg

maj_kedills.gif

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.

கண்டாவளையில் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1980 களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத் திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.

அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.

தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப் பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.

தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.

பின்புலம்: மேஜர் கேடில்ஸ்சின் 14வது ஆண்டு நினைவையொட்டி பெப்ரவரி, 2001 எரிமலை சஞ்சிகையில் பிரசுரமானது.

[கேடில்ஸ் அண்ணாவுடன் எம்வீட்டில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சந்தர்பம் சிறுவயதில் கிடைத்தது...அவர் கையில் கட்டி இருந்த கைகடிகாரம் சற்று வித்தியாசமானதும், பெரியதும்... கடைசியில் அந்தக் கைகடிகாரத்தை வைத்துத் தான் அவரை அடையாளம் கண்டதாக அறிந்து மிகவும் தாக்கம் அடைந்தேன்... நான் முதல் முதலில் பார்த்த போராளி என்றால் அது கேடில்ஸ் அண்ணா தான்...!

இந்த சந்தர்ப்பத்தில் மேஜர் கேடில்ஸ்க்கும், தமது உயிரை விடுதலைக்காய் அர்ப்பணித்த அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்...!!]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

blacktiger1.jpg

blacktiger7.jpg

blacktiger8.jpg

blacktiger9.jpg

blacktiger2.jpg

blacktiger3.jpg

blacktiger4.jpg

கரும்புலிகளின் நேர்காணல் :

கரும்புலி என்னும் பெயர் கொண்டு நாங்கள்

கடும்பகை தகர்க்கின்ற வெடிகுண்டு

Edited by senthil5000

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

karumpuligalnaal.jpg

anbukathir.jpg

arivumalar.jpg

eezhadevan.jpg

eezhapriya.jpg

ilampuli.jpg

ilango.jpg

ezhilanban.jpg

karuventhan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் நடவடிக்கை" யின் முக்கியத்துவம் என்ன?

Posted on ஆகஸ்ட் 29, 2008 by எல்லாளன்

‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”

கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.

தேசியத் தலைவரினால் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு துல்லியமான முறையிலே குறுகிய நேரத்தினுள் சிறப்பு கரும்புலி அணியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்களையும் அவர்களது போரிடும் ஆற்றலையும் வல்லமையையும் மீண்டும் ஒரு தடவை சிங்கள அரசிற்கும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளதாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் அனைத்துலகச் செய்தி நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

கரும்புலிகள் வசப்படுத்திய அந்த நிமிடங்கள்…

anurathapuracamp.jpg

அனுராதபுரம் வான்; படைத்தளத்திற்குள் திங்கள் அதிகாலை மூன்று மணியளவில் 21 பேர்களைக் கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் சிறப்புப் படையணியினர் ஊடுருவினர்.

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளையும் இயந்திர துப்பாக்கிகளையும் பயன்படுத்தி காவலரண்களிலும் வான்; தளத்தினுள்ளும் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படையினரின் மீது தாக்குதல்களை நடத்தி வான் படைத்தளத்தினை தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்தனர். அதன்பின்னர் புலிகளின் அணியினர், இளங்கோவுடன் ஒரு பகுதியாகவும் வீமனுடன் ஒரு பகுதியாகவும் இரு குழுக்களாகப் பிரிந்து வான் படைத்தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை அழிப்பதிலும் ரேடார் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.

அந்த வான்தளத்தினை திங்கள் முற்பகல் 11.00 மணிவரை தமது கட்டுப்பாட்டிற்குள் கரும்புலிகள் அணியினர் வைத்திருந்ததுடன் அனுராதபுரம் வான்படை தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வானூர்திகளையும் தாக்கியழித்தனர்.

அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல்-212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர்.

இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது

எம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02

எம்.ஐ-17 உலங்கு வானூர்தி – 01

பெல்-212 – 01

பீச் கிராப்ட்- 01,

மு-8 பயிற்சி வானூர்தி – 01

Pவு-6 பயிற்சி வானூர்தி – 03

ஆளில்லா வேவு வானூர்தி – 03

செஸ்னா வானூர்தி – 06

ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார்.

இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி, ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள், நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள்

அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

அனுராதபுர வான்படைத்தள தாக்குதலின் முக்கியத்துவம்

சிறிலங்கா அரசும் சிங்கள படைத்துறையும் விடுதலைப் புலிகளை போரில் வென்று வருவதாகவும் விரைவில் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் வன்னி பிராந்தியத்தினையும் சிங்களப்படைகள் கைப்பற்றும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கைகளை வெளியிட்டு தென்னிலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் மற்றும் அனைத்துலக சமூகத்தினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில்தான் இத்தாக்குதல் நடவடிக்கை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.