Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.

பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம் உட்பட அவர் எந்தளவு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று.

நமது பிரபு தேவா முதல் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களின் ரோல் மாடல் இவர் என்றால் மிகையல்ல, பலரும் இவரை மனதில் வைத்தே தங்கள் நடன ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இத்தனை பேரை தனது ரசிகர்களாக, ரோல் மாடலாக மாற்ற வைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இன்று இவர் நடனத்தின் பாதிப்பு இல்லாமல் நடனம் ஆடுவது என்பதே ரொம்ப சிரமம்.

தனது 9 வயதிலேயே ஆட்டத்தை துவங்கியவர், சிறு வயதிலேயே பலரை புருவம் உயர்த்த வைத்தவர். வெள்ளையர்களுக்கு கறுப்பர்கள் என்றாலே மட்டமான நினைப்பு தான், தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது. அப்போது இது உச்சத்தில் இருந்த போது தன் திறமையால் அவர்களையே தனக்கு வெறிப்பிடித்த ரசிகர்களாக மாற்றி காட்டியவர். நான் வெறிப்பிடித்த என்று கூறியது மிகைப்படுத்த பட்ட வார்த்தை அல்ல, சொல்ல போனால் அதை விட மிக குறைவான வீச்சை தரும் வார்த்தையே.

மைக்கேல் அரங்கில் வந்தால் ஆர்வம் தாங்காமல் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழும் ரசிகர்கள் கோடிக்கணக்கானவர்கள், மிகைப்படுத்தவில்லை. அவர் அரங்கில் ஆடும் போது முதலில் மெதுவாக ஒவ்வொரு ஸ்டெப் ஆக வைப்பார் ஆனால் அது வரை கூட தாங்க முடியாத ரசிகர்கள் அவரை ஆடக்கூறி கதறி அழுவார்கள், இதை நம்மில் பலர் பார்த்து இருக்கலாம் ஒரு சிலர் இதை போல காட்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம் (பார்க்காதவர்கள் இங்குள்ள வீடியோக்களை பார்க்கவும்). இதை பார்க்கும் போது நான் எப்போதும் நினைப்பது இப்படி கூட வெறித்தனமாக ரசிகராக மாற்ற வைக்க முடியுமா என்பது தான்.

எடுத்துக்காட்டிற்கு மைக்கேல் தனது ரசிகரிடம் நீ இவனை கொன்று விடு என்று கூறினால் பதில் கேள்வி கேட்காமல் செய்யக்கூடிய அளவிற்கு காட்டுத்தனமான ரசிகர்கள். ஒருவரை இந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்றால் மைக்கேல் எத்தனை பெரிய திறமைசாலியாக மக்களை கவருபவராக இருந்து இருக்க வேண்டும். இதில் வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லை. அனைவரையும் தனது இசையால் நடனத்தால் கட்டிப்போட்டவர். இவருக்கு தாறுமாறான பெண் ரசிகர்கள், இவர் பெண்கள் கூட்டத்தில் சிக்கினால் தனி தனியாக பிய்த்து விடுவார்கள், இவர் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். இவரின் ஒரு அசைவிற்காக கண்ணீருடன் காத்து இருப்பவர்கள், இவரின் ஆட்டத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு மயக்கமடைந்து விடுமளவிற்கு வெறித்தனமானவர்கள்(மேலே உள்ள வீடியோ ஒரு சிறு உதாரணம்).

i14375_mickel2.jpg

அவருடைய த்ரில்லர்(1982) ஆல்பம் வெளிவந்த போது அடைந்த சாதனைகள் (41 மில்லியன்) கொஞ்சநஞ்சம் அல்ல, இது உலக சாதனை அடைந்தது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாப் இசையில் புதிய பரிமாணத்தையே கொண்டு வந்தவர், இவருடைய பல நடனங்கள் குறிப்பாக காற்றில் கை வைத்து ஆடுவது, கயிறு இல்லாமலே கயிற்றை இழுப்பது, ஓடிய படியே நடப்பது (மிதப்பது), தொப்பி அணிந்து கண்களை மறைத்து ஆடுவது போன்றவை எவராலும் மறக்க முடியாது. நம் ஊர் மேடையில் ஆடுபவர்கள் கூட இதை போல செய்வதை பலரும் கவனித்து இருப்பீர்கள், இவை மட்டுமல்லாது தனது உடைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார், ராணுவ உடை, வெள்ளை கருப்பு உடை (உடன் க்ளவுஸ்), கற்கள் பதித்த உடை, ஜிகினா உடை என்று புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஆல்பங்கள் எடுத்த விதம் மிகவும் வித்யாசமாக இருக்கும், இதுவரை எவரும் பயன்படுத்தி இருந்திராத முறையில் கலக்கலான கிராபிக்ஸ் ல் இருக்கும்.

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இவரது மகன்களின் பெயர் வித்யாசமாக இருக்கும் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.

i14376_mickel3.jpg

பிரபலம் என்றாலே பிரச்சனை தான் என்பது போல இவருக்கு பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. பெப்சி விளம்பர நிகழ்ச்சிக்காக ஆடிய போது தீ விபத்து ஏற்பட்டு காயங்கள் ஆனது, இதற்க்கு பெரும் நஷ்ட ஈடு பெற்றார் ஆனால் அனைத்தையும் நன்கொடை செய்து விட்டார், அதன் பிறகு தான் தன் கருப்பு தோலை வெள்ளையாக மாற்ற காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெள்ளைக்காரனாக! மாறினார். பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கும், இயற்கையை மீறினால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கும் இவரே சிறந்த உதாரணம் இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். இவர் இந்த நிலைக்கு காரணமே இந்த தோலை மாற்றியதும் என்று என்று அனைவரும் கூறுகிறார்கள்.

அதன் பிறகு சிறுவனுடன் ஓரின சேர்க்கை பிரச்சனையில் மாட்டிக்கொண்டார், இதற்க்கு பல மில்லியன் டாலர்களை நஷ்டஈடாக கொடுத்தார், இதை போல செலவுகள் அவரை பெரும் சிக்கலில் தள்ளியது. சவுதியில் ஒரு நிகழ்ச்சி செய்ய பணம் வாங்கி விட்டு அவர் அதை செய்யாததால் அதிலும் பல சிக்கல்கள், பிறகு உலகையே அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் அடையும் வைக்கும் விதமாக முஸ்லிம் மதத்திற்கு மாறினார், உலகில் உள்ள பிரபலமான செலிபிரிட்டி ஒருவர் மதம் மாறியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் பெயர் உட்பட தன்னை மாற்றிக்கொண்டாலும் அவர் இறந்த பின்னும் உலகம் அவரை மைக்கேலாகவே நினைத்தது, இசைக்கும் நடனத்திற்கும் மதம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார், அவர் என்னாவாக மாறினாலும் அவரது ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பில் கொஞ்சமும் மாறமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

தற்போது கூட "இறுதித் திரை" என்று நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தார், இதற்காக அனைவரும் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் இறுதி திரை செல்லாமலே இறுதி பயணத்தில் கலந்து கொண்டு விட்டார் என்பது பலரையும் கண்ணீரில் ஆழ்த்திய நிகழ்ச்சி. கலந்து கொண்டு இருந்தால் உலகம் இருக்கும் வரை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மைக்கேல் இறந்த போது அவருக்கு BBC கொடுத்த முக்கியத்துவம் நான் எதிர்பாராதது, ஒரு நாள் முழுக்க வேறு எந்த செய்தியும் இல்லாமல் அவர் சமபந்த்தப்பட்ட விசயங்களையே கூறிக்கொண்டு இருந்தார்கள். இவர் இறப்பு செய்தியால் சோசியல் தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் BBC செய்தி தளங்கள் அதிக வருகையாளர்களால் திணறி விட்டன. தளங்களின் சர்வர்கள் திடீர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்து விட்டன. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல மைக்கேலை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள மற்றும் விவரங்களை அறிந்து கொள்ள ஓட்டு மொத்தமாக பார்வையாளர்கள் கூகிள் தேடுதலை நாடிய போது, கூகிள் தளமே ஸ்தம்பித்து விட்டது, தங்கள் தளத்தை திட்டமிட்டு தாக்குகிறார்களோ என்று சந்தேகம் வரும் அளவிற்கு பயந்து விட்டதாக கூகிள் நிறுவனம் கூறி உள்ளது.

மேற்க்கூறியதே போதும் மைக்கேல் ஜாக்சனின் புகழை நிரூபிக்க, அவர் எந்த அளவிற்கு உலகில் மிக முக்கியமான நபராக விளங்கி இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்ட. பிரபலம் ஆவது பெரிய விசயமில்லை ஆனால் அந்த பிரபலம் எப்படி மக்களை கவர்ந்து இருக்கிறார் என்பதே பெரிய விஷயம், அதில் மைக்கேல் எந்த நிலை என்று யாரும் கூறி தெரியவேண்டியதில்லை.

மைக்கேலின் மீது பல குற்றசாட்டுகள் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த திறமையாளர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உலகில் இனி இவரை போல பலர் வரலாம் ஆனால் எவரும் இவர் புகழை பெற மற்றும் மிஞ்ச முடியாது என்பது திண்ணம். மைக்கேலை பற்றி ஒரு இடுகையில் கூறி விட முடியாது அவ்வளவு சிறப்புகளை கொண்டவர், ஒரு ரசிகனாக அவருக்கு இந்த பதிவு சமர்ப்பணம். தனது கடைசி காலத்தில் பல இன்னல்களை சந்தித்த அவர் இனி அமைதியாக உறங்க பிராத்திப்போம்.

http://www.giriblog.com/2009/06/blog-post_29.html

தகவல்களுக்கு நன்றி...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.