Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தற்போதய நிலைமை தொடர்பானதும்..., முடிவுசெய்யபடவேண்டியதும்.. -தேசபக்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் தற்போதய நிலைமை தொடர்பானதும்..., முடிவுசெய்யபடவேண்டியதும்.. -தேசபக்தன்.

16.07.09.

புலிகளின் தலைமை முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது என்பதும் தலைவர் பிரபாகரன் இதில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது புலம்பெயர்ந்த புலிகளின் தலைமை முழுவதற்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தே இருக்கிறது. இந்த தகவலை தமது முக்கிய அங்கத்தவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்கள். இது கே.பி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவதற்கு முன்பே நடந்தேறி ஒரு விடயமாகும். அடுத்த நாள் கே.பி. யின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து புலிசார்பு தொடர்பு ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டு ஒரு வாரம் துக்க நிகழ்விற்கு அறிவிப்பு விடுத்திருந்தது.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே புலம் பெயர் புலிகளின் பொறுப்பாளர்கள் இந்த செய்தியை மறுத்ததுடன், கே.பி. அவர்களை ‘துரோகி’ பட்டம் சூட்டவும் தொடங்கினார்கள். புதிய புதிய பெயர்களில் புலிகளது கட்டமைப்புகளும், நபர்களும் அறிக்கைகள் விட்டார்கள். இவர்களுடன் தமிழகத்திலிருந்து வைகோ, நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன்…. என்று பலரும் சேர்ந்து கேபி யை துரோகி என்றும், ஏதோ ஒரு உளவு நிறுவனத்திற்கு விலைபோனவர் என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனின் மறைவு சிறீலங்கா, இந்திய மற்றும் சர்வதேச அரசுகளுக்கும் மிகவும் விரிவாக தெரிந்திருக்கிறது. சிங்கள மக்கள் நன்கு அறிவார்கள். இப்படியாக அவர்களெல்லாம் திட்டவட்டமாக அறிந்திருக்கும் போது, புலம்பெயர் புலித்தலைமை தொடர்ந்தும் தமது தலைவரின் மறைவை தமிழ் மக்களுக்கு மறைப்பதன் மூலமாக எதைச் சாதிக்க முனைகிறார்கள் என்பது இப்போது பிரச்சனைக்குரிய விடயமாகிறது.

பல்வேறு தவறுகளுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் இயக்க்த் தலைவர் ஒரு போராளி. கடைசிவரையில் களத்திலே நின்று மரணித்;திருக்கிறார். அவருக்கு உரிய மறியாதை செய்வது அவசியம் என்பது அனைத்து புலி அங்கத்தவர்களதும் நெருங்கிய ஆதரவாளர்களதும் ஆதங்கமாகும். இதனைவிட, ஒரு குறிப்பிட்ட போராட்ட வழிமுறை தனது இலக்கை அடையத் தவறியது மட்டுமன்றி மாபெரும் பேரழிவை ஏற்படுத்தி ஓய்ந்திருக்கிறது. அத்தோடு இன்னமும் பெருந்தொகையாக மக்கள் வன்னியில் அகதி முகாம்களில் மிகவும் மோசமான நிலைமைகளில், தொடர்ச்சியான நெருக்குதல்களின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்கள். இன்னுமொரு பகுதி புலிகளின் போராளிகள் ஈழத்தில் தலைமறைவாக செயட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பல்வேறு தரப்பினரும் இன்று புலம் பெயர் தமிழர் மற்றும் புலம் பெயர் அரசியல் தலைமை போன்றவர்களிடம் இருந்து முக்கியமான திட்டவட்டமான செயற்பாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சிறீலங்கா அரசோ விடுதலைப் புலிகளை தோற்கடித்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் என்ன காரணங்களுக்காக போராட நேர்ந்தது போன்ற விடயங்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்;சம் கௌரவத்துடன் கூடிய ஒரு சமாதானம் பற்றி பேசுவதற்கு கூட யாருமே தயாராக இல்லை. இப்போதுள்ள விழிப்புணர்வு பெற்றுள்ள சர்வதேச சூழலை பயன்படுத்திக் கொண்டு ஏதாவது உருப்படியாக செய்தால் அன்றி, நிலைமைகள் இன்னமும் மோசமாக கட்டத்தை அடைந்து தமிழ் மக்களது பிரச்சனைகள் இன்னமும் பல பத்தாண்டுகள் பின்தள்ளப்படும். அப்போது சிறீலங்கா அரசின் தொடர்ச்சியான திட்டமிட்ட இன சுத்திகரிப்பு மற்றும் இன ஒழிப்பு செயற்பாடுகளினால் ஒருவேளை மகிந்த சொல்வது போல :சிறுபான்மை பிரச்சனை என்பது நாட்டில் இல்லாமற் செய்யப்பட்டு” விடவும் கூடும். ஆகவே இப்போது மயிர் பிளக்கும் விவாதங்களுக்கும் வியாக்கீனங்களுக்கும் கால அவகாசம் கிடையாது.

ஆனால் இந்த இந்த அவசரமான பனிகளை சரிவர தொடங்குவது என்பது, முன்னைய அத்தியாயத்தை மூடி அதனுடன் ஒரு திட்டவட்டமான கோட்டைக் கீறிக்கொள்வதால் மட்டுமே சாத்தியப்படும். அதனைச் செய்யாமல் கடந்த கால மாயைகளில் மக்களை வைத்திருப்பதும் சர்வதேச சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்று கற்பனை செய்வதும் முட்டாள்தனம். இதற்கு மேல் இப்படியான செயற்பாடுகளை செய்பவர்கள் தமிழர்களது அரசியல் தீர்வுகளுக்கான முன்னெடுப்புகளுக்கு தடையாக இருப்பவர்களாகவே கருதப்பட வேண்டியவர்களாவர். அப்படியானால், புலம் பெயர் புலித்தலைமை ஏன்; இப்படி செய்கிறது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்பின் தலைமையைப் பொருத்தவரையில் நாம் இரண்டுவிதமான போக்குகளை அவதானிக்க முடிகிறது.

முதலாவது வகையினர்- கே.பி மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இவர்களது நிலைப்பாட்டின்படி, தலைவரது மரணத்தை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது: அவருக்கு உரிய கௌரவத்தையும் மறியாதையையும் செலுத்துவது: அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் புலிகளது தோல்விக்கு காரணமாக அமைந்த தவறான போக்குகளை களைந்து கொண்டு போராட்டத்தை இன்னமும் வுPரியமாக முன்னெடுப்பதற்கு அவசியமன நிலைமைகளை தாம் தோற்றுவிப்பது. புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய கோரிக்கையை கைவிட்டு பன்முக அரசியலை ஊக்குவிப்பது: ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பது: வெளிப்படையான தன்மையையும், மக்களுக்கு பதில் செல்லவேண்டிய பொறுப்பையும் போராளிகள் கொண்டிருப்பது: போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும்.

இரண்டாவது வகையினர்- தம்மை, தமது கடந்தகால் நடவடிக்கைகளை பரிசீலனை செய்வதையே தவிர்க்க முனைகிறார்கள். தமது இயக்க தலைவரது மறைவை கூட தமது அங்கத்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்தாமல், தமது செயற்பாடுகளை அப்படியே தொடர்ந்து செல்லலாம் என்று கருதுகிறார்கள் போலத் தெரிகிறது.

இந்த இரண்டாவது தரப்பினர் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தாக வேண்டியுள்ளது. இப்படியாக செயற்படுபவர்களுள் பலதரப்பட்ட ஒன்றிற் கொன்று முரண்பட்ட நலன்களையும், அக்கறைகளையும் கொண்ட குழுக்களையும் நாம் வேறு படுத்தியாக வேண்டியுள்ளது. இவற்றில் ஒரு தரப்பினர் கடந்த காலத்தில் புலிகளது புலம் பெயர் அங்கங்களில் பொறுப்புக்களில் அங்கம் வகித்தவர்கள். கடந்த காலத்தில் இந்த தலைமையானது தமிழ் மக்களை ஒரு மாயையில் வைத்திருந்தனர்.

பிரபாகரனை கடவுளாக்கி, அவருக்கு மறு கேள்வி கேட்காத கீழ்ப்படிவை “தேசபக்தி” என்று கற்பிதம் செய்தார்கள். அவர்களது மிகவும் நெருங்கிய, விசுவாசம் மிக்க அங்கத்தவர்கள்,ஆதரவாளர்களது அக்கறையான கேள்விகள் மற்றும அவதானிப்புக்களையெல்லாம் ‘தலை’க்கு இது தெரியாது என்று நினைக்கிறீர்களா என்று வாயை அடைக்கச் செய்தார்கள். இப்போது உண்மை நிலைமையை தெரிந்து கொண்டு கோபப்பட்டுப் போயுள்ள அங்கத்தவர்களை, ஆதரவாளர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதில் பிரச்சனை இருக்கலாம். கே.பி யின் அறிக்கையில் தலைவரது மரணம் பற்றிய செய்தி மட்டும் அல்ல, தமது கடந்த கால செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விடயமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

இதனை செய்வதானால், தற்போது புலம்பெயர் புலி அமைப்புக்களில் பொறுப்புக்களில் இருப்பவர்கள் தம்மிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் மற்றும் கணக்கு வழக்குகள் பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கும். இந்த பிரச்சனைகள் காரணமாகவே இவர்கள் பிரச்சனைகளை மூடிமறைத்து ஓட முனைவதாக தெரிகிறது. தவைவர் உயிருடன் இருக்கும் வரையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக்கி துதி பாடியவர்கள், அவர் மறைந்ததும் அவருக்கு அஞ்சலி செய்ய மறுப்பதுடன், அவரால் நியமிக்கப்பட்டவரையும் துரோகி என்று கூறுவதில் கபடத்தனம் தெரிகிறது.

இரண்டாவது காரணம், பினாமி சொத்துக்கள் பற்றிய பிரச்சனையாகும். புலிகள் அமைப்பானது மிகவும் கஸ்டமான நிலைமைகளின் கீழ், அமைப்பின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது எமது சமூகத்தின் ஆதிக்க சக்திகள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மறுத்தார்கள். ஆனால், புலிகள் ஒரு பலமான சக்தியாக தம்மை நிலைநாட்டிக் கொண்ட பின்போ, பல்வேறு தரப்பட்ட வஞ்சகப் புகழ்ச்சியாளர்களும், பிழைப்புவாதிகளும், மோசடியாளர்களும் புலிகளைச் சூழ்ந்து கொண்டுள்ளார்கள். புலிகள் அமைப்பினுள்ளும, அதற்கு வெளியிலும் புலி அங்கத்தவர்களும் ஏனைய உண்மையான தேசபக்தர்களும், விடுதலைப் போராட்டத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் தொடர்பான அக்கறையில் பலவிதமான போராட்டங்களை புலிகளின் தலைமைக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கையில், அந்த வெப்பத்தில் குளிர்காய புகுந்தவர்கள் இவர்கள்.

புலிகளது தலைமையும் கூட தமது செந்த அமைப்பினுள் நீண்டகாலமாக போரடிவந்த, போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய உண்மையான அக்கறைகளை எழுப்பிய போராளிகளை புறம் தள்ளிவிட்டு, இநத மாதிரியான வஞ்சகப் புகழ்ச்சி செய்யும், கொத்தடிமைக் கூட்டத்தை அரவணைத்துக் கொண்டது: உண்மையான புரட்சியாளர்களை, தேச பக்தர்களை கொன்று குவித்தது.இப்படியாயக உள்நுழைந்தவர்களது நோக்கமெல்லாம் எப்படி சுருட்டுவது என்பதாகவே இருந்தது. இவர்களது ஆலோசனையின் பேரிலேயே பல கோடி டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பல்வேறு நபர்களது பெயர்களில் பினாமியாக வாங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.

இத்துடன் கூடவே இன்னொரு பிரச்சனையும் இதில் இருக்கிறது. புலிகளது தலைமையினால் இந்த திட்டங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டடதாகவும் ஒரு மையமான திட்டமிடலின் பேரிலும் இந்த முயற்சிகள் நடைபெறாமல், பல்வேறு நபர்களால், தத்தமது விசுவாசிகளுக்கூடாக இவை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கான கணக்கு வழக்குகள் அந்தந்த புலம் பெயர் நாட்டு கிளைகளில் கூட சரிவர கிடையாது. தளத்தில் இருந்த கணக்கு வழக்கெல்லாம் அழிந்து போயுள்ளன. இபபோது இந்த பெருந்தொகையான பணம் பேசுகிறது. இந்த சொத்து பத்து பற்றிய கணக்கு வழக்கு பற்றிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தலைவரை உயிருடன் வைத்திருப்பது அவசியமானது.

காரணங்கள் எப்படிப்பட்டனவாக இருப்பினும், எப்படிப்பட்ட எண்ணங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் செய்ற்படடாலும், எவ்வளவு தூரம் ஒவ்வொருவரும் நிலைமைகளின் பாரதூரமான தன்மைகள் தெரிந்தோ தெரியாமலோ செயற்பட்டாலும், இவற்றின் விளைவுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கப் போகின்றன. அதாவது, நமது தேசம் முன்னெப்பொழுதும் கண்டிராத ஒரு மோசமான இடரில் சிக்கியிருக்கிறது: காலம் தாழ்த்தாது உடனடியாகவே செயற்பட்டாக வேண்டியுள்ளது. இந்த நிலையில் எப்படிப்பட்ட காரணத்தினாலாலும், பிரச்சனைகளின் தீர்க்கமான தன்மைகளை உணராது, சொந்த நலன்களுக்காக மக்களது எதிர்காலத்துடன் விளையாடிக்கொண்டிருப்பது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகவே கருதப்பட வேணடியுள்ளது.

புலிகள் அமைப்பினுள் தோன்றியுள்ள இந்த இரண்டு போக்குகளில், கே.பி அவர்கள் சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்படும் போக்கானது ஆரோக்கியமானதாகும். இன்று தோன்றியுள்ள இடர்பாடுகளில் இருந்து மிஞ்சியுள்ள புலம் பெயர் அமைப்பையும் ஏனைய கூறுகளையும் அவர்களது வளங்களையும் உருப்படியான வேலைத்திட்டங்களை நோக்கி நகர்த்த இது முக்கிய பங்களிப்பாக அமையும்.

இரண்டாவது போக்கானது கஸ்ரோ மற்றும் பொட்டு ஆகியோரது விசுவாசிகளால் முன்னெடுக்கப்படுவதாகும். இதற்கு அரசியலில் எதிர்காலமே கிடையாது. அந்த வகையில் இதுவோர் Non Starter ஆகும். அமைப்பானது வெளிப்படையாகவும், முற்று முழுமையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்த தோல்விக்கு இட்டுச் சென்ற காரணங்களை கண்டறிந்து, அவற்றை களைவது, எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய எந்தவிதமான ஆரோக்கியமான முன்னெடுப்புகளுக்கும் முன்னிபந்தனையானது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்களை உண்மைகளினால் அறிவொளி ஊட்டுவதற்குப் பதிலாக மாயைகளிலும், கனவுகளிலும் லயிக்க செய்வது இவர்களது நோக்கங்களையே கேள்விக்குள்ளாக்குகிறது.

பொறுப்பிலுள்ளவர்களுக்கு நிலைமைகளை சரிவர கையாள முடியாமல் இருக்கலாம். அது அவர்களது தவறு மாத்திரம் கிடையாது. ஏனெனில் கடந்த காலத்;தில் “சொன்னதைச செய்யும சுப்பர்களாக” இருந்த ஒரே காரணத்திற்காகவே இவர்கள் இந்த பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டவர்களாவர். ஆதலால், இப்படியாக நேர்ந்து முடிந்ததற்கு இவர்களை மாத்திரம் யாரும் குறை கூறிவிட முடியாது. ஆனால் இப்போது நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டுள்ளதை அப்பட்டமாக ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதற்கு குறுக்கு வழிகள் எதுவுமே கிடையாது. இவர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணத்திலும் பல மோசடியாளர்கள் விடயங்களை தமது கைகளில் ஏந்திக் கொண்டு தத்தமது சொந்த நோக்கங்களுக்காக, தத்தமது சொந்த வேலைத் திட்டங்களுக்காக ஓடித்திரிகிறார்கள்.

இவற்றின் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானதாக அமையும என்பதை அனைவரும் தெட்டத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாற்று தீர்வுகளுக்கான முயற்சிகளை செய்வதற்கான கால அவகாசமும் என்றென்றைக்கும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஏற்கனவே தனியான அரசை அமைப்பதற்கு கிடைத்த சர்ந்தர்ப்பங்களை தமது கடந்த கால் தவறுகள் காரணமாக விடுதலைப் புலிகள் தவறவிட்டதை நாம் வெளிப்படையாகவே அறிவோம். இப்போது சமாதான முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை தமது சுயநலம் காரணமாகவோ அல்லது இயலாமை காரணமாகவோ மீண்டும் தவற விடுவதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களால் அனைத்து தேசபக்த் சக்திகளையும் ஒன்றிணைத்து இந்த இலக்குகளை நோக்கி நகர முடியவில்லையானால், உண்மையான தேச பக்தர்கள் விடயங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாக தெரியவில்லை.

முடிவாக…

அண்மைய போராட்டத்தில் அழிந்து போனது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமல்ல. தமிழ் மக்களில் போராட்ட தலைமையும் தான். இந்த வாதம் பலருக்கு உடன்பாடற்றதாக, மகிழ்ச்சியளிக்க மாட்டாதததாக இருப்பினும் கூட அதுதான் உண்மையான நிலைமையாகும். சரியாகவோ அல்லது தவறாகவோ, எமது சம்மதத்துடனோ அல்லது எமது அபிப்பிராயங்களை அறவே புறக்கணித்தோ, தமழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத்தான விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வந்தார்கள். இதனை நாம் மறுத்ததில்லை. புரட்சிகர சத்திகளது அக்கறையெல்லைம், எப்படி ஒரு பன்முக சக்திகளும் செயற்படவல்ல அரசியல் சூழலை உருவாக்குவதும், போராட்டத்திற்கான மாற்றுத்தலைமையை நிலைநாட்டுவதும் என்பதாகத்தான் இருந்து வந்தது. புலிகள் மாற்று சக்கதிகளை அழித்தொழித்தது உட்பட பல்வேறு காரணங்களால் எம்மால் புலிகளது ஏகபோக தலைமை என்ற நிலைப்பாட்டை நடைமுறையில் கேள்விக்குள்ளாக்க முடியவில்லை.

இப்படியாக புலிகள் தம்மை ஏகபிரதிநிதிகாளாக மக்களின் மேல் திணித்திருந்தார்கள். தேசிய விடுதலை என்ற பெயரால் செய்யப்பட்ட செயற்பாடுகளில் பெரும்பாலானவை இவர்களால்தான, பல மோரமான தவறுகளுடன் தானென்றாலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. யுத்தம், சமாதானம், சர்வதேச அங்கிகாரம் பற்றிய பிரச்சனைகள் எல்லாமே விடுதலைப் புலிகளை ஒட்டித்தான் நடைபெற்று வந்தன. இப்படியாக பலவந்தமாக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தலைமை அமைப்பானது இன்று யுத்தத்தில் முற்றாக அழித்தொழிக்;கப்பட்டிருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.