Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு இந்தியக் கிரிக்கெட் குழு: தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இந்தியக் கிரிக்கெட் குழு: தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல்

மதுரை, ஆக. 31: இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் குழு செல்லத்தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஜோயல்பவுல் அந்தோணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முத்தரப்பு போட்டிகள் செப்.8 முதல் 13-ம் தேதிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை அமைப்புகளை வடபகுதியில் அனுமதிக்கவில்லை. சர்வதேசச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருள்களை இலங்கை பயன்படுத்தி வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளில் 12 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் லட்சக் கணக்காணோர் திறந்தவெளி சிறையில் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது.

எனவே, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்குச் செல்லத் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தாக்கலுக்கான வக்காலத்தில் 512 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

-தினமணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்ட செய்திகளைத் தரும் புகழ் பெற்ற Cricinfo இணையத்தளத்தில் இச்செய்தி வந்திருக்கிறது.

PIL filed to stop India from touring Sri Lanka

PIL has been filed with the Madras High Court seeking to stop the Indian team from visiting Sri Lanka for the tri-series citing alleged human rights violation against Tamils by the Sri Lankan government.

The petitioner, Joel Poul Antony, an advocate, said the international community would not respect India if it sent a team to play in Sri Lanka. The Madurai bench of the High Court issued notice to the ministries of Home, External Affairs and Youth and Sports Welfare as well as a private notice to the Indian board.

A 25-year war between the Sri Lankan government and the LTTE finally came to an end in May this year after the rebels, fighting to create a separate nation for Sri Lanka's minority Tamils, were defeated.

http://www.cricinfo.com/india/content/curr...ory/422906.html

இந்திய துடுப்பாட்ட அணி சிறிலங்கா செல்வதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்திய துடுப்பாட்ட வாரியத்துக்கும் அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.09.09) தொடக்கம் 14 ஆம் நாள் வரை வரை முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா, சிறிலங்கா, நியூசிலாந்து அணிகள் கலந்து கொள்கின்றன.

சிறிலங்கா சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பெங்களூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்திய அணிக்கு 11 ஆம் நாள்தான் முதலாவது போட்டி என்பதால் அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (09.09.09) கொழும்புக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த சட்டவாளர் ஜோயஸ்பவுல் அந்தோணி என்பவர், இந்திய துடுப்பாட்ட அணி சிறிலங்காவுக்குச் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

"எதிர்வரும் 8 ஆம் நாள் தொடக்கம் 14 ஆம் நாள் வரை முத்தரப்பு துடுப்பாட்ட போட்டி சிறிலங்காவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கின்றது.

சிறிலங்கா அரசு கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், குண்டுகளை பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது.

தற்போது தமிழர்கள் அந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்திய துடுப்பாட்ட அணியை சிறிலங்காவுக்கு அனுப்பினால் அனைத்துலக சமூகம் இந்தியாவை மதிக்காது.

எனவே இந்திய துடுப்பாட்ட அணியை அணியை சிறிலங்காவுக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.''

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

'கற்பு சூறையாடப்படுகிறது'

இந்த மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், துரைச்சாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சட்டவாளர் பீற்றர் ரமேஷ்குமார் முன்னிலையாகி வாதாடினார்.

அப்போது அவர், "இலங்கையில் தமிழர்களை நிர்வாணமாக்கி துன்புறுத்துகின்றனர். பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது. மராட்டியத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்பு பாகிஸ்தானில் நடந்த துடுப்பாட்டப் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவில்லை. அதுபோல் சிறிலங்காவில் தற்போது உள்ள நிலையை கருத்தில் கொண்டு இந்திய அணியை அங்கு அனுப்பக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

மத்திய அரசுக்கு அழைப்பாணை

அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.

அப்போது சட்டவாளர் பீற்றர் ரமேஷ்குமார், அடுத்த விசாரணைக்குள் துடுப்பாட்ட போட்டி முடிவடைந்து விடும் என்றும், எனவே விரைவில் எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த வழக்கில் முன்னிலையாகி வாதாட உச்ச நீதிமன்ற சட்டவாளர்கள் 513 பேர் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதாகவும், அதனையும் இந்த நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் உள்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர், மத்திய இளைஞர் நலன்-விளையாட்டுத் துறைச் செயலாளர் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி மத்திய அரசு சட்டவாளர் அருள்வடிவேல் சேகர், மத்திய அரசு அதிகாரிகளுக்கான அழைப்பாணையை பெற்றுக்கொண்டார்.

இந்திய துடுப்பாட்ட வாரியத்துக்கு மனுதாரரே அழைப்பாணை அனுப்ப அனுமதி அளித்த நீதிபதிகள், வாரியம் அழைப்பாணை பெற்றுக்கொண்ட தகவல் மனுதாரருக்கு தெரியவந்ததும் விசாரணைக்கு பட்டியலிடும்படி இந்த நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டனர்.

மூன்று நாட்களுக்குப் பின் விசாரணை

இதன்பின்பு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த மனுதாரர் தரப்பு சட்டவாளர் பீற்றர் ரமேஷ்குமார், இந்திய துடுப்பாட்ட வாரியத்துக்கு தந்தி மூலம் அழைப்பாணை அனுப்ப உள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதிகளிடம் அனுமதி கோர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஏராளமான சட்டவாளர்கள் நீதிமன்றத்துக்குள் இருந்தனர்.

Puthinam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.

வாரகிழமை போட்டி ஆரம்பிக்கிறது. 4 வாரத்துக்குள் போட்டி முடிந்து விடும். அதற்குப்பிறகு வழக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.