Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் இன்றைய பணி: விடுதலைப்புலிகள் ஜனநாயகத் தலைமை ஏற்பதை உலகம் அங்கீகரிக்க செய்ய வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல.

சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர்.

ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தன சிங்கள அரசும் அதன் ஆயுதப்படைகளும்.

முதலாவது கிளர்ச்சியை அடக்கியவர் இன்றைய மகிந்த ராஜபக்ச கட்சியின் அப்போதைய தலைவர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. பின்னைய கிளர்ச்சியை அடக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணசிங்க பிரேமதாச.

1989 இல் ஜேவிபியின் தலைமை சிங்கள அரச படைகளால் அழிக்கப்பட்டதோடு அதன் கதை முடிந்தது என்றே கணிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஜேவிபி உயிர்ப்புப் பெற்றது. ஆனால் அதன் பயணப் பாதை இனவாத அரசியல் சார்ந்த ஜனநாயகப் பாதை என்று சொல்லிக் கொள்ளும் வகைக்கு இருப்பது என்னவோ தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரதிஸ்டம் தான்.

இருந்தாலும் ஜே வி பியின் வரலாறு.. ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னான வீழ்ச்சியும் சமீப பத்தாண்டுகளில் அவர்கள் கண்டுள்ள ஜனநாயக எழுச்சியும் தமிழ் மக்களின் அரசியல் ஏக பிரதிநிதிகளாக அரசியல் - இராணுவ பரிமானத்தோடு வளர்ந்திருந்து இன்று ஒட்டுமொத்த உலகால் இராணுவ பலத்தை இழக்கச் செய்யப்பட்டு நிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நல்ல மீள்வுக்கான உதாரணம் என்று கொள்வதில் தப்பில்லை.

அதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இனவாத அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல கோரிக்கை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போல் திடமாக உறுதியோடு போராடியவர்களும் யாரும் இலர். அவர்களைப் போல பேச்சு மேடைகளில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமின்றி தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தோரும் யாரும் இலர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயகத் தலைமையை ஏற்க முன்வருவதோடு அதனை ஜனநாயகத்தை உச்சரிக்கும் இந்த உலகம் ஏற்கவும் செய்ய வேண்டும்.

இந்திய தேசிய வாதத்தினால் ஆயுதக் கிளர்ச்சிகள் திட்டமிட்டு தெற்காசியப் பிராந்தியத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றமை ஒன்றும் ரகசியமான விடயம் அல்ல. இந்திய தேசியம் என்பது தமிழீழத்தின் உருவாக்கத்திற்கு உதவக் கூடிய ஒரு காரணி அன்று. அதன் வீழ்ச்சியே சோவியத் வீழ்ச்சியோடு பல சுதந்திர தேசங்கள் பிறந்தது போல தமிழீழமும் பிறப்பெடுக்க உதவும். அதுவரை தமிழர்கள் தெற்காசிய பிராந்தியத்தில் சாணக்கிய அரசியலை செய்ய வேண்டிய நிலை ஒன்று இருக்கிறது.

சிங்கள பேரினவாத அரசிற்கு.. இந்திய தேசியத்திற்கு வால்பிடிக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் எதனையும் அரசியல் ரீதியாக பெறவும் முடியாது சாதிக்கவும் முடியாது.

இந்தியாவில் பஞ்சாப்பில் சீக்கியர்களின் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் காஷ்மீரில் தனிநாட்டுக்கான முஸ்லீம்களின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் போராட்டம் பெரிய வெற்றிகளை சாதிக்காத தன்மையாக இருக்கட்டும்.. பலஸ்தீனத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கம் சிதறிடிக்கப்பட்டு பலமிழக்கச் செய்யப்பட்டதாக இருக்கட்டும் இவற்றின் பின்னாலான அந்தந்த போராளிகளின் நடவடிக்கைகள் என்பது வெறும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி விடுவதாக இருக்கவில்லை.

வீழ்ச்சிகளில் இருந்து துரித கதியில் மீண்டு அவர்கள் இன்று ஜனநாய வழியில் தமது மக்களை வழிநடத்திக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் சிறீலங்காவில் அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருப்பதுடன் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவதைக் கூட சிங்கள அரசுகள், கட்சிகள் மற்றும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் விரும்பவில்லை.

ஜே வி பியின் வீழ்ச்சியோடு அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்த சிங்கள அரசுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுடன் வாழ்ந்த மக்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க முன் வரவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது இனப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் அண்மையில் இன, மொழி ரீதியான பெயர்களுடன் கூடிய கட்சிகளின் இருப்பையும் உதயத்தையும் சட்டவிரோதமாக்கி இலங்கைத் தீவில் இருக்கும் சிறுபான்மை மக்களின் பல்லின அடையாளங்களையும் ஜனநாயக உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயன்று வருகின்றது.

தற்போது அந்தச் சட்டம் சட்டவிரோதமானது என்று சிங்கள சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலும்.. சிங்கள அரசின் உண்மையான செயலுரூபத்தை அதன் இந்த ஒரு ஜனநாயக பண்பழிப்புச் செயற்பாடே உறுதிப்படுத்தப் போதுமானதாக உள்ளது.

இந்த நிலையில்.. தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வீழ்ச்சி என்பது ஏற்படுத்தி இருக்கும் ஒரு சூனியத்துள் இருந்து அல்லது அரசியல் வெற்றிடத்தில் இருந்து அவர்களை மீட்டு வர வேண்டும்.. மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் முன் உதயமாவதே அதற்கு சிறப்பான வழி ஆகும். அதுவே சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சவாலாக அமைவதோடு தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகள் ஜனநாயக வழியில் வெல்லப்படக் கூடிய சாத்தியமான வழிமுறைகளை கையாண்டு முயற்சிகளை இதய சுத்தியோட மேற்கொள்ள உதவியாகவும் அமையும்.

சந்தர்ப்பவாத, காட்டிக்கொடுப்பு, ஆயுத அரசியல் செய்யும் சிங்கள அரசோடு ஒட்டிப் பிழைக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களிடம் எந்த தெளிவான தமிழ் மக்களிற்கு என்றான அரசியல் அபிலாசையும் கிடையாது.தமிழ் மக்களிற்காக பேரம் பேசக் கூடிய திறனும் அவர்களிடம் இல்லை.

அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கூட ஒரு உருப்படியான செயற்பாடின்றிய ஒரு வகை உறைநிலையில் இருக்கும் கட்சியாகவே தோற்றமளிக்கிறது. அக்கட்சியின் உறைநிலை சிதறும் போது அதன் அங்கத்தவர்களின் உண்மை முகமும் தெரிய வரும். அது நிச்சயம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல உதவாது. அந்த உறுப்பினர்களின் சொந்த அரசியல்.. எதிர்காலத்தை நிச்சயிக்கும் விதமாகவே அது பெரும்பாலும் அமையும்.

எனவே தமிழ் மக்களுக்கு இன்று வேண்டியது.. திறந்த வெளிச் சிறைகளில் அடைபட்டிருக்கும் 3 இலட்சம் மக்களின் விடுதலை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களுற்கும் ஒரு வலுவான ஜனநாயக அரசியற் தலைமை. அதை விடுதலைப்புலிகள் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில் களத்தில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஜனநாயக உலகின் முன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக வழியில் செயற்பட இலங்கைத் தீவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவ ஒரு கோரிக்கயை முன் வைத்து அதனை நடைமுறைச் சாத்தியமாக்க உதவக் கோர வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்க என்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர் செய்பவர்கள்.. சிறீலங்காவின் ஜனநாயக அழிப்பே நடந்து கொண்டிருக்கும் போது அதை ஊக்குவிப்பதுமின்றி கண்டும் காணாதது போலவும் இருக்கின்றனர். இவர்களின் இரட்டை வேடங்களையும் தமிழ் மக்கள் தோலுரித்துக் காட்டி அவர்களின், இந்த உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி தமிழ் மக்களின் உண்மையான அரசியல் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதை மீண்டும் மீண்டும் இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

அப்போதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது திட்டமிட்டு இந்திய தேசியத்தின் அழுத்ததால் உலகெங்கும் குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை அழிக்க முடியும். அதன் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக அரசியலுக்குள் செயலிறக்கி தமிழ் மக்கள் தமது நீதியான நேர்மையான விருப்புக்குரிய ஜனநாயக அரசியல் உரிமையை தன்னாட்சி உரிமையை வெற்றி கொள்ள முயற்சிக்க முடியும்.

அதைவிடுத்து எல்லாம் முடிந்து போய்விட்டது.. எனி என்ன இருக்கிறது.. என்று ஒட்டுக்குழுக்களின், காலம் காலமாக தமிழ் மக்களை கொன்ற பயங்கரவாத தடைச்சட்டம், சிறீலங்காவின் அவசரகாலச் சட்டத்திற்கு வாக்களித்தே வயிறு வளர்த்த நரைத்த தாடிகளைக் கொண்ட காட்டிக் கொடுப்பாளர்களை தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக சித்தரிக்க முயல்வது தமிழ் மக்கள் தம்மை தாமே மீள முடியாத படுகுழியில் தள்ளி அரசியல் தற்கொலை செய்வதற்குச் சமனானது.

களத்திலும் புகலிடத்திலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களே இவை குறித்து சிந்தியுங்கள். விரைந்து ஒற்றுமையோடு, மாவீரர்களும், மாண்டு போன மக்களும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களின் உள்ளங்களுள் ஒழிந்திருக்கும் உணர்வுகளும் சொன்ன, சொல்லும் பாதையில் நடக்க ஒரே இலட்சியத்தோடு செயற்படுங்கள். இதுவே எமது இனத்தின் அரசியல் விடிவுக்கான இன்றைய முதற் தேவையும் கூட.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

source: http://kundumani.blogspot.com/

--------

அவசியம் கருதி இக்கருத்து இங்கும் இடப்பட்டுள்ளது. அவசியம் அற்றது என்று கருதின் யாழ் நிர்வாகம் இந்த மேலதிக இணைப்பை அகற்றிக் கொள்ளலாம்.

Edited by nedukkalapoovan

இலங்கை அரசியல் வரலாற்றிலும், குறிப்பாகத் தமிழர் வரலாற்றிலும் ஓர் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த 60 ஆண்டு காலத்தின் பாதிப் பகுதியை ஓர் கொடுமையான அனுபவம் காவு கொண்டுள்ளது. ஆசிய நாடு களிடையே மிக நீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டிருந்த இலங்கை அரசியல் கட்டுமானம், நாட்டில் மிக அதிகளவு காலத் திற்கு நீடித்த வன்முறை, பயங்கரவாதம் சார்ந்த அரசியல் என்பன அதனது மட்டத்திற்கு அரசையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது. அரசு இயந்திரமும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தனது அணுகுமுறையாக மாற்றிக் கொண்டது. இதனால் மொத்த சமூகமும் இராணுவ மயமாக்கப்பட்ட தோடு, அரசுக் கட்டுமானங்களில் இராணுவத் தலையீடும் செல்வாக்கும் மிக அதிகளவு வளர்ந்துள்ளது.

இவ்வாறு சமூகமும் அரசும் மாற்றமடைந்துள்ளமைக்கு தமிழ் மக்கள் மத்தியிலே மூன்று தசாப்தங்களாக கோலோச்சி வந்த ஜனநாயக விரோத, வன்முறை அரசியலே காரணமாக அமைந்தது எனில் மிகை ஆகாது. இந்த நிலைமைக்குக் காரணம், அரச கட்டுமானம் என்ற இயந்திரம் சிங்கள பேரினவாத அரசின் கருவி யாக தொழிற்பட்டமையாகும். இந்த மூன்று தசாப்த கால அரசியல் என்பது தமிழர்களின் வரலாற்றில் உச்சக்கட்டமாகும். குடியேற்றவாத சக்திகளினால் வழங்கப்பட்ட அரசு நிர்வாகம் பக்கச் சார்பாக செயற்பட்டு சிறுபான்மை இனங்களின், குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின், அரசியல், சமூக, பொருளாதார வாழ்வை ஒடுக்கி உள்ளதால் இனியும் அவ்வாறான அரசு நிர்வாகத்தின் கீழ் வாழ முடியாது என்று தீர்மானித்து, ‘தனித் தமிழ் ஈழம்’ என்ற கோரிக் கையை முன்வைத்தே வன்முறை சார்ந்த அரசியல் தொடரப்பட்டது.

ஆயுதம் தாங்கிய வன்முறை அரசியலுக்கான நியாயங் களாக 1976இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத் தையும் அதன் பின்னர் அத்தீர்மானத்தின் அடிப்படையில் 1977 இல் இடம்பெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவையும் ஆதாரமாக வைத்தே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்ப மாகியது. இந்த இரண்டு சம்பவங்களும், அதாவது, வட்டுக் கோட்டைத் தீர்மானம், 1977ம் ஆண்டின் தேர்தல் வெற்றிகள் என்பன அன்று செயற் பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைமைக்கு கிடைத்த ஆணையாகும். தமிழ் ஈழக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு மக்கள் ஆணை அதன் தலைமைக்கு வழங்கப்பட்டது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்த அமைப்பு தமிழர் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தமைக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவ்வாறு இருக்கவும் இல்லை. தமிழர் கூட்டணியின் செயற் பாடுகளை மிகவும் தீவிரமாக விமர்சித்து அதன் தலைமைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை, தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் தமிழ்பேசும் மக்கள் தமிழீழத்திற்கு ஆதரவான ஆணையைத் தமக்கு வழங்கியதாகக் கூறுவது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழ் ஈழக் கோரிக்கையை யாராவது பெற்றுத் தரவேண்டும் எனத் தமிழ் பேசும் மக்கள் தீர்மானத்தையோ ஆணையையோ வழங்கவில்லை. அதனைப் பெறுவதற்கான நம்பிக்கையான தலைமையைத் தேர்ந்தெடுத்து அதற்கே தமது வாக்குகளையும் வழங்கினார்கள்.

நாடு சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளுக்குள் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிய தமிழ் அரசியல் தலைமைகள் தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குக் காரணம், அரசியல் தலைமைகளின் பலவீனமா? அல்லது அடைய முடியாத கோரிக்கைகளை மக்கள்முன் எடுத்துச் சென்று அந்த மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பறித்து அரசியல் அதிகாரத்தை அமைக்க வாய்ப்பைப் பெற்றார்களா? தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம் சிங்கள அரசியல் தலைமைகளே என்ற ஒரே குற்றச்சாட்டு இத்தோல்விகளுக்குப் போதுமான சாட்சியமா? இலங்கையின் அரசியல் தலைமையைப் பல்வேறு கட்சிகளும் தலைவர்களும் அலங்கரித்த நிலையில், சகல அரசியல் தலைமைகளும் ஒரேமாதிரியான போக்கைக் கடைப் பிடித்தார்கள் என்று சப்பைக் கட்டுப் போடமுடியுமா? அல்லது தமிழ் அரசியல் தலைமைகள் தமது அணுகுமுறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி மாற்று வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்தார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்குப் பதிலைத் தேடும்போது தமிழ்த் தலைமைகள் சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி அனுகூலமான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திச் செயற்படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். இதுவே விடுதலைப்புலிகளின் அழிவுக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

கடந்த 60 ஆண்டு கால தமிழ் அரசியல் பரந்த, அகன்ற இலங்கைக்குள் தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் சமூக பொருளாதார அரசியலை நோக்கித் தனது அரசியலை நகர்த்தவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி, விடுதலைப் புலிகள் அமைப்பு என்பவற்றின் அஸ்த மனம் என்பது அதன் தமிழீழக் கோரிக்கையின் இயலாத் தன்மையைத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இந்த 60 ஆண்டு கால அரசியல் அனுபவங்களில் இருந்து தமிழ் மக்கள் மாற்றம் பெற வேண்டுமாயின் புதிய அணுகுமுறையை, புதிய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். போர்க்கால நிலைமைகளில் இருந்தும் அதன் அனுபவங்களில் இருந்தும் வெளிக்கிளம்பும் அரசியல் நடை முறை புதிய பாதையை உணர்த்தி நிற்கிறது. கடந்த காலத் தோல்வியின் அனுபவங்கள் காரணமாக எழுந்துள்ள தவிர்க்க முடியாத புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் மாற்றம் பெறுவதை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. இதுவே புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக உள்ளது. இந்த மாற்றங்கள் புதிய வகையிலான அரசியல் அணுகுமுறையை நிர்ப்பந்திக்கிறது. மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் பலம் முழுமையாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் என்பது வெறு மனே தமிழ் மக்களின் உரிமைகள் என்ற வரையறைக்குள் அடங்கிவிடமுடியாது. முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் காத்திரமான அரசியல் அகதிகளாக மாற்றம் பெற்றுள்ளார்கள். அம்மக் களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத் தேவைகள் கணிசமாக வளர்ந்துள்ளன. அத்துடன் அவை தனித்துவமான அடையாளங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலைமையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கான குரல் தமிழர்களின் குரலாக மட்டும் ஒலிக்க முடியாது. அது பரந்த ஏனைய சிறுபான்மை மக்களினதும் ஒருமித்த குரலாக மாற்றம் பெற வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் தோல்வி சிங்கள தேசியவாதத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சிறுபான்மை இனங்களின் எழுச்சியை தனது எண்ணிக்கைப் பெரும்பான்மையாலும் இனவாத அரசியலாலும் ஒடுக்கிவிட எண்ணுகிறது.

வளர்ந்துவரும் முதலாளித்துவ திறந்த பொருளாதார ஒழுங்கு முறை, இனவாத அரசியலுடன் கைகோர்த்துச் செல்ல முடியாது. சந்தைப் பொருளாதாரப் போட்டியில் பெரும்பான்மை, சிறுபான்மை, தமிழ், சிங்களம் போன்ற இன மொழி பேதம் அதன் சுமுகமான இயக்கத்திற்குக் குந்தகமாக அமைகிறது. இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்துடன் மிக இறுக்கமாப் பிணைக்கப்பட்டிருப்பதால் இலங்கை அரசின் ஆளுமை என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோ

  • கருத்துக்கள உறவுகள்

சிவலிங்கத்தின் கட்டுரையை இணைத்தமைக்கு நன்றிகள்.

http://www.puhali.com/index/view?aid=298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.